பிக்பாஸ் 3 : நாள் 52 (14.08.19)
பிக்பாஸ் 3நாள் 52 (14.08.19)
“எதிர் நீச்சலடி” பாடல் ஒலிக்க...ஒவ்வொருத்தரா எந்திருச்சு வந்து ஆடுனானுங்க. அபி உற்சாகமா ஆடுனாங்க. இந்த பாட்டுக்கு அபி அபிநயம் பிடிச்சு ஆடாதது அனிருத் செஞ்ச புண்ணியம். பசங்க பிரிச்சு மேஞ்சானுங்க. லாஸ் தனித்தவில்.
சாண்டி, கவின், தர்ஷன் 3 பேரும் உக்காந்திருந்தானுங்க.
தர்ஷன் கவின் கிட்ட “அடேய் நேத்து எல்லாம் முடிஞ்சப்பறம் அபி வந்து சாண்டிகிட்ட ‘இதுனால பட வாய்ப்புகள் எதுவும் குறஞ்சு போகுமா?’ன்னு கேட்டுச்சாம்டா”ன்னு சொல்ல, கவின் “ம்ம்க்கும், கேள்வியே தப்பு ! ‘பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்குமா?’ன்னு கேட்டிருக்கனும்.
இதுக்கு முன்னாடி இங்க வந்து போனவனுங்க என்னமோ தலைக்கு ரெண்டு ஹாலிவுட் படத்துல நடிச்சுட்டு இருக்குற மாதிரியும், நம்ம வெளிய போகும் போது போனி கபூர் பணப்பெட்டியோட நிப்பாருன்ற மாதிரியும் பேசக்கூடாது. வீட்டுக்கு போறதுக்கே விஜய் டீவியில கார் குடுப்பானுங்களான்னு தெரியாது. மொதல அதுக்கு வழி பண்ணுவோம்”னு பிலாசபி பேசி முடிச்சுட்டான்.
“இன்னைக்கு திருவி விட்டு திருவிளையாடல ஆரம்பிக்க யாரு சிக்குறா?”ன்னு வனி பாத்துட்டு இருக்கும்போது “நாந்தான் இருக்கேன்ல”ன்னு வந்து இடுப்பக் காட்டி “இங்க கிள்ளுங்க”ன்னு சொல்லுச்சு மது.
வனி : என்ன மது பைனல் கண்டெஸ்டண்ட் லிஸ்டுல இருக்க போலயே....
மது : ஆமா மேடம்.....எல்லாம் ஆண்டவன் குடுத்தது....
வனி : குடுக்கட்டும் குடுக்கட்டும் ! ஆமா....இந்த ஷெரின் நல்ல டஃப் கண்டெஸ்டண்டுன்னு நெனச்சேன் ஆனா தேறாது போலயே? பொழுதுக்கும் தர்ஷன் கூட தானானே கொட்டிட்டு இருந்தா தவுட்டுக்கு ஆகுமா? இந்தா.... டம்மி பீஸுனாலும் ஃபைனல் லிஸ்டுல நீ இருக்க பாரு.....
மது : எது....?
வனி : டு பி ஹானஸ்ட்.... ஒரு ஃப்ளோவுல சொன்னேன்....
மது : நான் வேணும்னா தர்ஷன் கிட்ட பேசவா?
வனி : உன் ஹைட்டுக்கு அவங்கிட்ட பேசுனா அவன் காதுக்கு போயி சேர செவன் டேஸ் ஆகும் பரவாயில்லயா?
மது : அதுவும் சரிதான்...
வனி : லிஸ்டுல ஒரு பொண்ணு இருக்குறது எவ்வளவு பெரிய விஷயம்? ஆனா இதுகளுக்கு தெரியலயே...
மது : ஆமா மேடம் ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....!
வனி : எனக்கு இது புரியல ஆனா இத அப்பிடியே இன்னைக்கு உன் மைண்ட்ல பிக்ஸ் பன்ணிக்கோ....சரியா? எங்க சொல்லு....!
மது : ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....!
வனி : ஆங்....! இன்னைக்கு எது நடந்தாலும் இத நீ விட்டுறாத.....//
கஸ்தூரி தன் காந்தக் குரலால் “அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே”ன்னு அந்தப்பக்கமா பாடிட்டு போக சாண்டி “அந்த அரக்கல்ல எடு”ன்னு அட்ராசிட்டி பண்ணிட்டு இருந்தாப்ல, பக்கத்துல சேரன் வேற.... ஆனா இவனுங்களோட சேர்ந்து அவரும் “கஸ்தூரிய ஜெயிலுக்கு அனுப்புவோம்”னு சத்தியம் பண்ணிக்கிட்டாரு.
கஸ்தூரி மதுகிட்ட “நீ பல மணி நேரம் கஷ்டப்பட்டு பண்ற வேலைய நான் பத்தே நிமிஷத்துல பண்ணிட்டு பேர் வாங்கிடுறேன்....ஐ டோண்ட் நோ ஒய்....வாட்டே வுமன் ஐ” நு பெருமை பீத்திக்க, ஷெரின் இந்தப்பக்கமா இருந்து “யாரும்மா அது? அந்த பொங்கல் செஞ்ச புண்ணியவதியா?”ன்னு கேக்க.....கஸ்தூரி “புஸ்”தூரி ஆனாங்க....!
கவின் கேமராகிட்ட வந்து....
“யோவ் கடல் நீருல கழிவுத்தண்ணிய கலந்த மாதிரி இந்த கஸ்தூரிய ஏன்யா இங்க கொண்டாந்து விட்ட? அவ 5 நிமிஷம் பேசுனா அண்டிராயர் நனையுது, 10 நிமிஷம் பேசுனா பழசெல்லாம் மறக்குது ! ஆல்ரெடி இங்க நாளுக்கொரு நாக் அவுட்டு, பொழுதுக்கொரு பஞ்சாயத்துன்னு சிறப்பாதான் போயிட்டு இருக்கு....கலவர பூமியில காக்காய்க்கு என்ன வேல? கூட்டிட்டு போயா மொதல்ல”ன்னு கதறுனான்
டாஸ்க் முடிஞ்சதுன்னு அறிவிப்பு வந்தது.....
சரி,சம்பவத்த ஆரம்பிப்போம். “டாஸ்க்க நல்லா பண்ண ரெண்டு பேரு யாரு?”ன்னு பிக்பாஸ் கேக்க, பெரிய குழப்பமில்லாம ஷெரின் & மதுன்னு முடிவாச்சு. “சரி வாரம் முழுக்க வரிஞ்சு கட்டி சிறப்பா வேலை பாத்தது யாரு?”ன்னு கேக்க பெரும்பாலும் தர்ஷன் பேரு வர, தர்ஷன், மது, ஷெரின்னு முடிவாச்சு. இவனுங்கதான் தலைவர் கேண்டிடேட்ஸ்.
இந்த தடவையும் சேரன நட்டாத்துல விட்டானுங்க....! துண்டில்லாததால தன் கையவே தலையில வச்சுகிட்டு உக்காந்துட்டாரு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
“ஓகே சுவாரஸ்யமா பண்ணாத 2 பேரு யாரு?”ன்னு கேட்டப்போ பதறி கண்ணு முழிச்ச சேரன் “இதுக்கு மொத பேரா இந்த எழவெடுத்தவனுங்களுக்கு என் பேருதான ஞாபகத்துக்கு வரும்....ஜெயில் பாக்க விட்டிருவானுங்களோ?”ன்னு ஓரே படபடப்பு.
அபி தேவையில்லாம ஆஜராகி “என்னய யாராச்சும் சொன்னா ஷூட் பண்ணிடுவேன்”னு சொல்லி ஞாபகப்படுத்த, “அப்ப நீதான்”னு எல்லாருமே முடிவு பண்ணிட்டானுங்க போல.
இந்த சம்பவத்துக்கு முன்னாடியே எல்லாரும்.....குறிப்பா மதுவும் கலந்துகொண்ட ஒரு டிஸ்கஷன்ல எந்த காரணங்களுக்காக ஜெயிலுக்கு அனுப்பனும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கானுங்க. அதுல இங்க்லீஷ் பேசுறது ஒரு பாயிண்டா இருந்திருக்கு. அத மதுவும் ஒத்துகிட்டு இருந்திருக்காங்க.
கவலையே படாம எல்லாரும் கஸ்தூரிய சொன்னானுங்க. “என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”ன்னு கேட்டதுக்கு “எல்லாம் எங்க நல்லதுக்குதான்”னு மைண்ட்ல நெனச்சுக்கிட்டு “தெரிஞ்சுக்கலாம்...தெரிஞ்சுக்கலாம்......கொஞ்சம் உக்காரு”ன்னு சொல்லிட்டு “அடுத்து யாருப்பா?”ன்னு கேட்டானுங்க. “ரைட்டு இந்த கஸ்தூரி கதகளி ஆட வேண்டிய நேரம் வந்தாச்சு போல.....நம்ம முழு ரவுடித்தனத்தையும் இன்னைக்கு இறக்குறோம்”னு முடிவு பண்ணி....”அபி, நான் அட்ராசிட்டி பண்ணி பாத்ததில்லையே ? அப்பிடியே தீக்கங்கா கக்குவேன்”னு காத்துகிட்டு இருந்தாங்க கஸ்தூரி.
டாஸ்கப்ப லேட்டா வந்ததால சேரன் லாஸ சொன்னார். ஷெரின் “இல்ல பாத்ரூம் ஒழுங்கா க்ளீன் பண்ணல அதுனால ஹவுஸ் கீப்பிங் ஆளுங்கதான்”னு சொன்னாங்க, இதுக்கு லாஸ் “ஒரே நேரத்துல ரெண்டு வேலை பாக்க அவனுங்க என்ன அயர்ன் மேனா? அவங்க ஆர்டினரி மேன் தான் சோ ரிஜக்டட்”னு சொல்ல, விடுவானா நம்ம கவின் “ அப்ப இங்கிலீஷ் பேசுனதுக்கு அபிய அனுப்புவோம்னு ஆரம்பிச்சு விட்டான் ஆட்டத்த....!
அண்டாக்குள்ள அனுகுண்டு போட்டாப்ல அபி கவின பாக்க.....
மது முன்னாடி வந்து
மது : இங்கிலீஷ் பேசுறதுக்கெல்லாம் ஜெயிலுக்கு அனுப்பனுமா என்ன?
கவின் : பின்ன காலகேயர் பாஷை பேசுற வரைக்கும் வெயிட் பண்ணுவோமா? ஆல்ரெடி இங்கிலீஷ் பேசி பயிண்டெல்லாம் பறந்து போகுது ! ஆமா இந்த டிஸ்கஷன் அப்ப நீயுந்தான இருந்த? அப்பயெல்லாம் ஊலு ஊலுன்னு தலையாட்டிட்டு இப்ப வந்து ஏன் கூத்து கட்டுற?
கஸ் : ஹலோ என்னய ஏண்டா சொன்னீங்க?
சேரன் : ஆங்கிலம் பேசுனது தப்புதான!
அபி : ஏண்டா அப்பிடி என் மூஞ்சில என்னதாண்டா எழுதி இருக்கு? என்னய என்னமோ பரோல் கைதி மாதிரி 10 நாளைக்கு ஒரு தரம் உள்ள அனுப்பிடுறீங்க?
கவின் : இல்ல மச்சஆஆஆன் இது என் கருத்து அவளோதான்
அபி : நல்லா கக்குன உன் கருத்த....
கஸ் : ஹலோ என்னய ஏண்டா சொன்னீங்க?
வனி : என்ன சப்புன்னு இருக்கு? எங்க இந்த மதுவ? ஆங்..... (ஹஸ்க் வாய்ஸ்ல மெல்ல சைகை காட்டி) மது....மது....., ஒரு பெண்ணானவள் பெண்தான்....அந்த மேட்டர்....ம்ம்ம்
மது : (ஞாபகம் வந்தபடி) ஏய்..... ஆமாண்டா ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....!
எல்லாரும் : என்னது?
மது : ஆமா ஆண்கள் இதுவரை ஏன் ஜெயிலுக்கு போகல?
சாண்டி : அதான் சேரன் போனாரே
மது : (Mind voice : என்னயா யோவ் எல்லா கேட்டகிரிலயும் வர....) சரி நீங்கள்லாம் ஏன் போகல?
தர்ஷ் : யாரும் சொல்லல.... போகல...
கஸ் : ஹலோ என்னய ஏண்டா சொன்னீங்க?
மது மசக்களி ஆடிட்டு இருக்கும்போதே சாண்டி முன்னாடி வந்து “கேப்டனா என் தீர்ப்பு கஸ்தூரி & அபின்”னு சொல்லி முடிச்சதும் அத அப்பிடியே ஏத்துக்கிட்டார் பிக்பாஸ்.
கஸ் : ஹலோ என்னய ஏண்டா சொன்னீங்க?
அபி : இந்தா....! அவ்ளோதான் ! வா ஜெயிலுக்கு போகலாம்....உனக்கு ஜெயில சுத்திக் காட்டுறேன் வா...! என்னய விட எவனுக்கும் அந்த ஜெயிலப் பத்தி நல்லா தெரியாது.
வெளிய சேரன் கிட்ட மது...
மது : என்ன சார்....அந்தப் பொண்ணு கடுங்கஷ்டத்துல இருக்கா....அவளப் போயி....! நீங்களும் அவ ஜெயிலுக்கு போனதுக்கு ஃபீல் பண்றீங்க போல...? தலையில கைய வச்சுட்டு உக்காந்திருக்கீங்களே...?
சேரன் : என்னது அவ ஜெயிலுக்கு போனதுக்கா? அடியேய் ஒரு வாரமாச்சும் நல்லா வெளையாண்ட லிஸ்டுல என் பேரு வருதா? நானே அந்த சோகத்துல இருக்கேன்.... இதுல வந்துட்டா இவ வேற !
மது : உனக்கு உன் கவலை....
சேரன் : அப்பிடியே ரீஃபிள் பேனா ஸ்ப்ரிங்காட்டம் குதிக்காத....அபி மனசு வலின்னா அது அவ பிரச்சனை அதுகெல்லாம் ஜெயிலுக்கு அனுப்பாம இருக்க முடியாது....நீ அவள காப்பாத்துறேன்னு போயி இவனுங்க என் பக்கம் குச்சிய நீட்டி இருப்பானுங்க....நல்ல வேளை!
மது : அப்பறம் மனிதனாகப் பிறந்து வளர்ந்துல என்ன பிரயோஜனம்?
சேரன் : பிறந்தேன்னு சொல்லு....வளர்ந்தேன்னெல்லாம் சோகத்துல கூட சொல்லாத....! நீ அங்குட்டு போ நான் ஒரு பொஷிஷன்ல உக்காந்து கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டு வரேன்
கஸ் : மது....! ட்ரெஸ் மாத்திட்டோம் ! நீ ஏன் கத்திட்டு இருக்க....? காம் டவுன்! களி வந்தா உள்ள அனுப்பு
அபி : முடிஞ்சா பெட்டிஷன் போட்டு உள்ள வந்து பாரு....//
மது மறுபடியும் கவின் கிட்ட போயி மூக்குப் பொடி போட்ட மந்திக்கொரங்காட்டம் துள்ளி குதிச்சு ஆரம்பிக்க, தர்ஷன் வந்து “டேய்...வாடா அது பாட்டுக்கு பாட்டு பாடட்டும்”னு கூப்ட்டு உள்ள போயிட்டான்
மது வேகமா வந்து தர்ஷன் கிட்ட
மது : ஆமா நான் அவங்கிட்ட பேசிட்டு இருக்கும்போது அவன ஏன் கூப்ட்டு போன?
தர்ஷன் : அவன் உள்ள வரணும்னா அவனதான கூப்பிட முடியும்...? உன்னய கூப்ட்டா அவன் எப்பிடி வருவான் குள்ள புஸ்கா?
வனி : (சைகையில.... ஒரு பெண்ணானவள்)
மது : ஆமா.... ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....!
பசங்க தலைய சொறிய....
மது : இந்த வீட்ல அடிமைத்தனம் பண்றீங்க.....கமல் சார் வந்து கதவத் தொறந்தா நான் போறேன் மொதல...
கவின் : இது பெரும்பேச்சா இருக்கே...! இந்தாங்க இந்த ஆண் பெண் பஞ்சாயத்தெல்லாம் இல்லங்க....இங்க மேட்டரே வேற...!
ஷெரின் : இறந்து புதைந்த 4 பொண்ணு மேட்டர ஏன் இழுக்குற? நாளைக்கு தர்ஷன் மட்டும் எங்கிட்ட மூஞ்சிய காட்டட்டும்....உன் மூஞ்சிய திருப்பிடுறேன்.
தர்ஷ் : அபியே அங்க களிய கரச்சு குடிச்சுட்டு கட்டில்ல கவுந்து தூங்கிட்டா! நீ இன்னும் சலம்பிட்டு இருக்க?
லாஸ் : இந்தா...அதுல நானும் சம்பந்தப்பட்டிருக்கேன்...சும்மா சத்தம் போட்ட ஷார்ப்பா சங்க அறுத்துருவேன்...! தப்பு பண்ணா மக்கள் வெளிய அனுப்புவாங்க.....நூ நோரு மூஸுக்கோ!
மது : வனி மேடம் வந்தன்னைக்கு சொன்னாங்க எல்லா ஆண்களும் உன்னய மாதிரி இங்க பெண்கள யூஸ் பண்றாங்கன்னு
வனி : மது ! நான் சொன்னது உனக்கு புரியலன்னு நெனைக்கிறேன் நான் பொண்ணுங்க மேல தப்புன்னு சொல்ல வந்தேன்...டு பி ஹான்ஸ்ட்....நீ மாட்டிக்கிட்ட பங்கு!
மது : ஆகா தனியா சிக்கிட்டேன் போல....//
சாண்டியும் ஒரு கட்டத்துல மதுவ “இல்லவே இல்லாத பிரச்சனைய அன்னைல இருந்து கொண்டு வந்துட்டே இருக்க....இது சுத்தமில்ல”ன்னு கத்திட்டு பசங்க வெளிய போயிட்டானுங்க
இவ்வளவு அமளி துமளி நடந்த நேரத்துல சேரன் அமைதியா உக்காந்து வெண்டைக்காயையும், வெங்காயத்தையும் கத்திக்கும், காய்களுக்கும் வலிக்காம நறுக்கிட்டு இருந்தாரு.....! பின்ன பசங்க எல்லாம் வெளிய போனப்பறம் சேரன் மதுகிட்ட வந்து “ஆண்கள் இங்க உன்னய அடிமைப் படுத்துறாங்களா? அப்ப நானுமா?”னு கேக்க, மது “சப்பு சப்பு”ன்னு சவுண்டோட முகத்த அங்குட்டும் இங்குட்டும் திருப்பிக்கிச்சு.
“தர்ஷன் செம்ம கேமாடுறான்....ஷெரின சட்டப் பாக்கெட்ல வச்சிருக்கான்”னு நாளைக்கு கண்டெண்டுக்கு மதுவ கரெக்ட் பண்ணிட்டு இருந்துச்சு வனி.
வெளிய அழுத கவின பசங்க சமாதனப்படுத்திட்டு.... லாஸோட உக்காந்து உள்ள வனி, சேரன், மது பேசுறதுக்கு வெளிய இருந்து டப்பிங்க் குடுத்து விளையாண்டுட்டு இருந்தானுங்க.....! செம்ம சீக்வென்ஸ் அது! அதுவரை இருந்த எல்லா சீனும் மறந்து போயி மனசு விட்டு சிரிக்க வச்சானுங்க!
இத பாத்த அபி “அடேய் டப்பிங் வெளையாட்டா?”ன்னு கண்டுபிடிச்சு கேக்க, கவின் அமைதியா “அடேய் கேம முடிங்க காக்கா பாக்குது”ன்னு கஸ்தூரிய கண்ணக் காட்ட ,அமைதியானானுங்க பசங்க.....
மது திரும்ப ஜெயிலுக்கு வந்து அபிகிட்ட “உனக்காக நான் தொண்டத் தண்ணி வத்த கத்தி கத்தி சண்டை போட்டுட்டு இருக்கேன்.....சண்டாளி நீ மட்டும் காலையில முகின பாத்ததும் முத்தம் குடுக்க ஓடுன....மொத டெட் பாடி நீதான்”னு சொல்லிட்டுப் போச்சு....!
பின்ன உள்ள படுக்கப்போன மதுகிட்ட வனி.....
வனி : என்ன மது டயர்டாகிட்டியா?
மது : ஆமா மேடம்
வனி : டு பீ ஹான்ஸ்ட் பெண்கள் இப்பிடி டயர்டாகுறதத்தான் ஆண்கள் அட்வாண்டேஜா எடுத்துக்குறானுங்க...
மது : என்ன மேடம் சொல்றீங்க?
வனி : ஒரு பெண்ணானவள்....
மது : ஆமா மேடம் ஆமா...... ஒரு பெண்ணானவள் பெண்தான் அது ஆணா இருந்தாலும்....! சாரி மேடம் என் கடமைய மறந்து நான் டயர்டாகிட்டேன்...
வனி : நோ பிராப்ளம்.....இப்ப தூங்கு காலையில உன் கடமையை செய்ய ஆரம்பி......//
வனிக்கு இன்னைக்கும் வயிறு நெறஞ்சிடுச்சு....!
எல்லாரும் தூங்குனப்பறம்.....எதுக்குன்னே தெரியாம பல மணி நேரமா வெட்டிட்டு இருந்த 20 மூட்டை வெங்காயத்தையும், வெண்டைக்காயையும் டிஸ்போஸ் பண்ண இருட்டுல இடம் தேடி அலஞ்சுட்டு இருந்துச்சு ஒரு உருவம்........
Seriously your writing is ultimate and awesome, could not stop laughing while reading 😀😀
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி....!
Delete