பிக்பாஸ் 3 : நாள் 44 (06.08.19)
பிக்பாஸ் 3நாள் 44 (06.08.19)
சித்தப்பூ போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்.....
“கருத்தவல்லாம் கலீஜாம்” பாட்டு ! ஆளுக்கு முன்னாடி சல்பேட்டா லான்ல புது முயற்சியா எட்டுக்கால் பூச்சி மூணு கால்ல ஆடுனா எப்பிடி இருக்குமோ அப்பிடி (தள்)ஆடிட்டு இருந்தாங்க. பசங்க எல்லரும் நல்லாவே ஆடுனானுங்க.
சாக்ஷி ஷெரின் கூட உக்காந்து காலையில பஜனைய ஆரம்பிக்குற நேரமாப் பாத்து அந்தப்பக்கமா கவின் கூட உக்காந்திருந்த சாண்டி ஷெரின “வா இந்தப் பக்கம்”னு கூப்புட்டாப்ல. “இவ இம்சையில இருந்து காக்க வந்த இன்மையில் நன்மை தருவோனே இந்தா வாரேண்டா”ன்னு ஷெரின் சொல்ல,
சாக்ஷி : அவந்தான் கூப்டுறான்னா நீயும் வரேன்ற?
ஷெரின் : என்னன்னு கேட்டுட்டு வரேன்!
சாக்ஷி : நான் இப்பதான் கவின் கூட என்னோட ரெண்டாவது நாள் அனுபவத்த சொல்லிட்டு இருக்கேன் அதக் கேக்காம போறேன்ற?
ஷெரின் : அப்ப இப்ப வரை நீ மொத நாள் கதைய மட்டுந்தான் சொன்னியா?
சாக்ஷி : அதுலயே இன்னும் பாதி நாள் பாக்கி இருக்கு பேபி!
ஷெரின் : அட பேதியில போக....நீ ஆள விடு நான் போறேன்
சாக்ஷி : அப்ப என்னய விட்டுட்டு போறியா பேபி?
ஷெரின் : அட இருடி என்னன்னு கேட்டுட்டு வந்து உங்கிட்ட வெளக்கு வைக்கிறேன்!
ஆனா சாண்டி வேணும்னே சல்பேட்டாவ கடுப்படிக்கதான் கூப்ட்டாப்ல போல...ஷெரின வர சொல்லிட்டு அவங்க கிட்ட சும்மாதான் பேசிட்டு இருந்தாப்ல.
அப்பறம் முகின் ஒரு கூட்டத்தை கூட்டி “யப்பா நேத்து வரை எதுவும் பிரச்சனையில்லையே? இருந்தா சபையில சொல்லுங்க”ன்னு கேட்டான். “மாடு மாதிரி சாப்ட்ட தட்ட அந்தந்த இடத்துலயே வச்சுடுறானுங்க, காப்பி குடிச்சா கப்ப எடுத்து போட மாட்றானுங்க, குப்பையோட தட்டப் போட்டா சிங்க்ல அடச்சுக்கும்”னு கைதேர்ந்த தட்டு கழுவும் ஆயா மாதிரி பிரச்சனைய புட்டு புட்டு வச்சாங்க அபி.
“ஒழுங்கா யார் வேலை செய்யல, வெளையாடலன்னு அப்பப்ப பாத்து வைங்க அப்பறம் வெள்ளிக்கிழமை கேக்கும் போது வில்லங்கத்த கூட்டாதீங்க”ன்னு முகின் சொன்னான்.
உள்ள கிச்சன்ல அபி மதுகிட்ட “நீ பாட்டுக்கு அன்னைக்கு எல்லார் முன்னாலயும் நான் சேஃப் கேம் ஆடுறேன்னு சொல்ற.... என்னயப் பத்தி என்ன நெனைப்பாங்க?னு கோவிச்சுக்க, மது “யாரு நெனைப்பா?ந்னு கேக்க, “முகின் நெனைப்பான்னு வச்சுக்கோ!....அப்பிடியெல்லாம் பொதுவுல சொல்லாத. தனியா வந்து தாளிச்சு கொட்டு தட்டு தட்டா வாங்கிக்கிறேன். என் கேப்டனுக்கு முன்னாடி கேவலப்படுத்தாத”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே முகின் உள்ள வந்தான். உடனே அபி “வயித்த வலியில இருக்குற மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு நின்னுச்சு.
முகின் : என்ன இங்க சண்டை?
மது : சண்டை இல்ல சும்மா நாங்க ரெண்டு பேரும் சத்தமா பேசிக்கிட்டோம்
முகின் : ஏன் சத்தமா பேசிக்கிட்டீங்க?
அபி : அப்பதான நீ வந்து “என்ன இங்க சண்டை?”ன்னு கேப்ப
முகின் : அதான் நீங்க சண்டையே போடலயே?
மது : பாத்தியா உனக்கே தெரியுது! அப்பறம் ஏன் லூசு மாதிரி வந்து “என்ன இங்க சண்டை?”னு கேட்ட?
முகின் : ?????????????????????
முகின் அபிய உள்ளக் கூட்டிட்டு போயி “ஒழுங்கா என்ன பேசுனேன்னு சொல்லு இல்ல செவுள திருப்பிருவேன்”னு சொல்ல, “என்னயப் போயி சேஃப் கேம் ஆடுறேன்னு சொல்றா? அப்பிடி ஆடுறவளயா நாலாபக்கமும் நாமினேட் பண்ணுவாங்ய? மனசாட்சி இல்லாம பேசுறா...நீ என்னடான்னா எப்பப் பாத்தாலும் நான் பேசுறதுதான் தப்புன்னு சொல்ற. என்னயப் பாத்தா தப்பு தப்...... (முகின் தன் கை காப்ப ஏத்தி விட...) சரி....நானும் அப்பப்ப தப்பாதான் பேசுறேன் போல....விடு ! நீ போயி உன் கேப்டன் வேலையப் பாரு போ”ன்னு சமாளிச்சு அனுப்புனாங்க!
சோஃபால கவின் கூட உக்காந்து சாண்டி “ஆட்டத்திலே மகா ராஜா ராஜா.....அவ்வ அவ்வா மனசு துடிக்குது....அவ்வ அவ்வா மனசு துடிக்குது”ன்னு அட்டகாசமா பாடிட்டு இருக்கும்போது சல்பேட்டா அந்தப் பக்கமா கிராஸ் பண்ணி வெளியப் போச்சு.
வெளிய தம்மடிக்குற ரூம்ல ஒரு வினோத சத்தம்! அந்தப்பக்கம் வந்த ஷெரின் உள்ள எட்டிப்பாத்தா அங்க சல்பேட்டா.....
ஷெரின் : நீதானா பேபி ? செனத் தவளை சிரிக்குற மாதிரி சத்தம் கேட்டுச்சு உள்ள எட்டிப்பாத்தா நீ உக்காந்திருக்க...என்ன மிமிக்ரி பண்றியா?
சாக்ஷி : என் அழுகை உனக்கு செனத் தவளை மிமிக்ரி மாதிரி இருக்கா?
ஷெரின் : அய்யோ ஏன் அழுகுற?
சாக்ஷி : இந்த வீட்ல நான் வாயத் தொறந்தாலே யுக்தின்றானுங்க! எனக்கு அவ்வளவா இருக்கு புத்தி? அந்த சாண்டிப் பய நான் அந்தப் பக்கம் இந்தப்பக்கம் போகும் போது வரும்போதெல்லாம் பாட்டுப் பாடி ஈவ் டீசிங் பண்றான்.
ஷெரின் : என்ன பாட்டு?
சாக்ஷி : (அழுதுகிட்டே ராகத்தோட ) அவ்வ....அவ்வா மனசு துடிக்குது....அவ்வ அவ்வா மனசு துடிக்குது....
ஷெரின் : பேபி.....போதும் நிறுத்து! எந்த சூழ்நிலையிலயும் இனிமே நீ பாட்டுப் பாட மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு...ப்ளீஸ்! அப்பறம் கொல கேசுல உள்ள போயிருவ
சாக்ஷி : (Mind Voice : எனக்கு எதிரி வெளிய இல்ல....)
ஷெரின் : சாண்டி கிட்ட வேணும்னா பேசுறியா?
சாக்ஷி : (Mind Voice : எவ்வளவு ட்ரிக்ஸா என்னய கோத்து விட்டு அடி வாங்க வைக்கப் பாக்குறா) இல்ல நேரம் வரும் போது நானே சாண்டிகிட்ட பேசிக்குறேன். ஆனா கவின் தான் சாண்டிய தூண்டி விடுறான் போல அதுனால கவின் கிட்ட பேசுறதுக்கு வேணும்னா ஏற்பாடு பண்றியா?
ஷெரின் : எது ஏற்பாடு பண்ணவா? ஆனாலும் உனக்கு ஊக்கம் ஜாஸ்திடி...
சாக்ஷி : நம்மள பிரிக்க ப்ளான் பண்றானுங்க போல பேபி..
ஷெரின் : எத எதயோ பண்றானுங்க பக்கிப் பயலுக அந்த நல்ல காரியத்த மட்டும் பண்ணவே மாட்றானுங்க....
சாக்ஷி : (Mind Voice : ஆத்தீ கோவப்படுறா....) (மறுபடியும் அழுதுகிட்டே ராகத்தோட ) அவ்வ அவ்வா மனசு துடிக்குது....அவ்வ அவ்வா மனசு துடிக்குது....
காதைப் பொத்திக்கிட்டு ஷெரின் ஓட்டம்....
லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்
லான்ல தூக்கி வீசுற காயின பொறுக்கி வச்சுக்கனும். யாரு அதிக பாயிண்டோ அவங்கள அடுத்த வாரம் நாமினேஷன் பண்ண முடியாது. அடுத்தவங்க காயின ஆட்டயப் போடலாம். ஆளாளுக்கு நல்லா பொறுக்குனாங்க. அதுல தர்ஷன் ஒரு காயினுக்கு சல்பேட்டா கூட சண்டை போட...சல்பேட்டா கவின் மாதிரி நெனச்சு தர்ஷன “அடுத்த தடவ என் கூட சண்டை போட்டா கிக் யூ ஆஃப்”னு சொல்ல! தர்ஷன் பொங்கிட்டான் உள்ள கவின் காதுல படுறாப்ல “தக்காளி சல்பேட்டாவுக்கு இருக்குடி....பக்கத்துல வரட்டும் பாடையில ஏத்துறேன்”னு சொன்னது வெளிய சல்பேட்டாவுக்கு போயிடுச்சு போல...உள்ள வந்து தர்ஷன் கால்ல விழாத குறையா “நான் ஒரு பைத்தியந்தான ! என்னய மன்னிச்சு விட்ரு”ன்னு சொல்லிட்டு இருந்துச்சு.
இதுல சரவணன், தர்ஷன், சாண்டி முதல் 3 இடத்த பிடிச்சாங்க. இப்பதான் பிக்பாஸ் சித்தப்பூவ உள்ள கூப்ட்டு வெளிய போகச் சொல்லிட்டாரு. லைட்டா டவுட்டான சாண்டியும் கவினும் குசுகுசுன்னு பேசிட்டு இருக்கும்போதே எல்லாரையும் மெயின் ஹாலுக்கு வர சொல்லி சரவணன் போனத சொன்னாப்ல பிக்பாஸ். கவினும், சாண்டியும் உண்மையா அழுது தீர்த்தானுங்க. மது சைடு பிட்டு போட்டாங்க. ஒரு கட்டத்துல மது பெர்பார்மன்ஸ் பயங்கரமா இருந்தது. மத்தவங்களுக்கு பெருசா ஃபீலிங் இல்ல. அப்பறம் எல்லாரும் கவினயும், சாண்டியையும் சமாதானப் படுத்துனாங்க. சல்பேட்டா இந்த சகுனத்த சரியா பயன்படுத்திக்கலாம்னு நெனச்சு கவின் பக்கத்துலயே உக்காந்திருந்துச்சு.
“சரி இப்பிடி சோகத்தோட சோகமா ஒரு டாஸ்க்க குடுப்போம்”னு சொல்லி கடைசி வரை கூட இருக்கும் நட்பு”ன்னு ஒரு டாஸ்க்க குடுத்தானுங்க. இவனுங்களும் என்னேன்னமோ பேசி அழுதானுங்க. “சரவணன் மேட்டரப் பத்தி சனிக்கிழமை தெரிஞ்சுக்கோங்க”ன்னு சொல்லிட்டார் பிக்பாஸ்.
எல்லாரும் தூங்குனதுக்கப்பறம் மது சாமி போட்டோவுக்கு முன்னாடி உக்காந்து “என்னாச்சு? சரவணன் எங்க? இந்த வீடு ஏன் வெளங்காம இருக்கு?” அப்பிடி இப்பிடின்னு குறி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதோட நிறைவு. ஆண்டவா....!
Comments
Post a Comment