பிக்பாஸ் 3 : நாள் 62 (24.08.19)


பிக்பாஸ் 3நாள் 62 (24.08.19)


·         முன்குறிப்பு – வேலைப் பளு காரணமா இது இன்னுமொரு அட்மின் பதிவு.....! காலையில விடியக்கால வேலைக்குப் போகனும்.
எடிட் ரூம்ல இருந்து ஆண்டவர். “இங்கதான் உள்ள இருக்குற திருவாத்தானுங்க பண்ற எல்லா மொள்ளமாரித்தனத்தையும் ஒழுங்கா எடிட் பண்ணி ஒரு மணி நேரத்துக்கு தராங்க. இங்க நான் இருந்தா இவனுங்க பண்ற பஞ்சாயத்துக்கு பாய பிராண்ட ஆரம்பிச்சுடுவேன்”னு சொன்னாரு.
அப்பறம் “இந்த டீம்ல சைக்காலஜிஸ்ட், வக்கீல், போலீஸ், எஞ்சினியர், மெக்கானிக், வெல்டர், ப்ளம்பர் எல்லாரும் இருக்காங்க. அதுனாலதான் நானும் வந்தேன். மத்த மொழியில இருக்குற பல விஷயம் இங்க இல்ல..... தவிர்த்துட்டோம் தெரியுமா? இல்லேன்னா இவனுங்க ஆளுக்கு ஒரு குழந்தையோட வெளிய வந்திருப்பானுங்க. அப்பறம் மைய்யம் சார்பா நான் விக்ரம், நாயகன், சலங்கை ஒலின்னு குழந்தைக்கு பேரு வச்சிருக்கனும்.  இருக்குற பஞ்சாயத்துல இது வேறயா? அதான் தவிர்த்துட்டோம்”னு சொன்னார்.
யாரோ என்னமோ திட்டிட்டானுங்க போல....”விமர்சனங்கள ஏத்துக்குறோம் ஆனா உங்க இஷ்டக் கூந்தலுக்கு ஷோ நடத்த முடியாது”ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். “நீங்க நெனைக்கிற மாதிரி இங்க ஒண்ணும் நடக்கல”ன்னு சொன்னார். அப்ப ஏதோ நடக்குது போல.
“சரி வெள்ளிக்கிழமை என்ன பண்ணானுங்கன்னு பாப்போம்”னு சொல்லி காமிச்சார்.
62ம் நாள்
“போராடினால் நாம் வெல்லலாம்”னு பாட்டு போட்டு எழுப்புனாரு பிக் பாஸ். அதிசயம பசங்களோட கேப்டன் சேரன் சார் உக்காந்திருந்தாரு. கஸ்தூரி கபால்பதி தியானம் பண்ணத பாத்துட்டு மீராவோட கம்பேர் பண்ணி கலாச்சுட்டு இருந்தானுங்க பசங்க. சேரனும் கொஞ்சம் குஜாலா கலாச்சுட்டு இருந்தார்.
அப்பறம் யமஹா கம்பேனிக்காரனுங்க ஏதோ அவனுங்க பைக்க மார்கெட்டிங்க் பண்ணனும்னு பசங்க & லாஸ மாடலா மாத்தி போட்டோ எடுக்க சொன்னானுங்க. வனிதாவும் ஷெரினும் போட்டோ எடுத்தாங்க. தர்ஷன் வின்.
தர்ஷன் ஷெரின் கிட்ட போயி “உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”னு சொன்னதுமே ஷெரின் வெக்கப்பட்டு சிரிக்க, தர்ஷனும் சிரிக்க அங்கயே அவங்க சண்டை முடிஞ்சது. அப்பறம் தர்ஷன் “வெட்டுக்கத்தி வனிதா உன் கேப்டன்சி சரியில்லன்னு சொன்னதால ஏற்கனவே கொல காண்டுல இருந்தேன். சரி உன் பேரக் காப்பாத்தனுமேன்னு வேல பாத்துட்டு இருந்தா நீயும் வந்து கச கசன்னு கசக்குனதும் கண்ட்ரோல விட்டுட்டேன்”னு தன் நியாயத்த விளக்குனதும் எல்லாம் சரியாப் போயிடுச்சு. செம்ம க்யூட்டா இருந்தது அவங்க கெமிஸ்ட்ரி. இதுல கெட்டு நாசமாப் போனது வனிதாவோட ப்ளான் தான்.
அகம் டூ அகம்
ஷெரின் தலைமையில தகராறு இல்லாம இந்த வாரம் போனத சுட்டிக்காட்டி பாரட்டுனாரு. அப்பரம் சேரன “என்ன சேரன், பெட்ரோமாக்ஸ் லைட்டு வாடகைக்குப் போயிடுச்சு போலயே....ஒரு வழியா கேப்டனாகிட்டீங்க வாழ்த்துகள்”னு சொன்னார்.
அப்பறம் இன்னைக்கு தனித் தனியா கொஞ்சம் ரைடு எடுத்தார்.....
சாண்டி – “கஸ்தூரிய சத்துணவு ஆயான்னு சொல்லி கேலி பண்ணி சத்துணவு ஆயா பேர கெடுத்துட்ட”ன்னு சொல்லி சங்கடப்பட்டார். “அடுத்த வீட்டு பிள்ளைய தன் பிள்ளயா நெனச்சு பொங்கிப்போட்டு பாடம் சொல்லிக்குடுத்த அவங்க மாதா இல்ல ஜெகன் மாதா”ன்னு சொன்னார். (ஜெகன் யாருன்னு தெரியல) சாண்டி “நானும் சத்துணவு ஸ்டூடண்ட்தான்”னு சொன்னதும் கொஞ்சம் சாந்தமானார். சாண்டி மன்னிப்பும் கேட்டுக்கிட்டார். “சரி இனிமே கஸ்தூரிய கலாய்க்கனும்னா டைரக்டா கலாய் ஆனா அதுக்காக மத்தவங்களா அசிங்கப்படுத்தாத”ன்னு சொன்னார்.
கவின்  – “அடேய்.....! தூங்கமா கொள்ளாம பேசுறீங்க சரி ஆனா அது என்ன மைக்க ஆஃப் பண்ணிட்டு பேசுறது? இதுல இந்த டெக்னிக்க அந்த புள்ளைக்கும் சொல்லிக்குடுத்து கெடுத்து வச்சிருக்க? இதுனால லக்ஸுரி பட்ஜெட் வேற 500 காலி. ஒழுங்கா ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க”ன்னு எச்சரிச்சார். ஒரு விளக்கப்படம் வேற காமிச்சார்.
லாஸ் – “என்னம்மா உங்கப்பாரு உனக்காக சாப்புடாம உக்காந்திருந்தப்ப போகலயே ஏன்?”னு கேட்டதுக்கு லாஸ் “நான் அவர நாமினேட் பண்ண குற்றவுணர்ச்சியில இருந்தேன் அதான் அவரப் பாக்க சங்கடப்பட்டு போக யோசிச்சேன். மத்தபடி அவரு சொன்னத கேட்டு மாத்திக்க முயற்சி பண்றேன்”ன்னு சொன்னாங்க.
அடுத்து கஸ்தூரி வனிதா டாஸ்க் பஞ்சாயத்து...
“வாத்துன்னு எதுக்கு சொன்ன?”ன்னு கேட்டதுக்கு இல்லேன்னு மறுக்க வனியோ “அவங்க என்னய சொன்னது உண்மைதான் ஆனாலும் நாந்தான் ஸ்கிரிப்ட் பண்ணலாம்னு மசாலா போட்டு சண்டைய இழுத்தேன்”ன்னு சொன்னாங்க.
“சரி யார ஒர்ஸ்டு பெர்பார்மன்ஸா சொல்லலாம்?”னு கேட்டதுக்கு எல்லாருமே கஸ் & வனி பேர சொன்னாங்க. “சரி என்ன தண்டனை குடுக்கலாம்?”னு கேட்டதுக்கு சாண்டி சொன்ன வனி & கஸ் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துக்கிட்டு ஆனா பேசாம இருக்கனும்னு சொன்னத ஆண்டவர் ரசிச்சார்.
ஷெரின் அழுகையப் பத்தி கேட்டார். “அது சின்ன சண்டே சார்”னு சொன்னதுக்கு “இன்னைக்கு சாட்டர்டேதானே?”ன்னு ஆண்டவர் அடிச்ச டைமிங்ல கிரேசி மோகன் ஆப்சென்ஸ் தெரிஞ்சது.
“ரைட்டு....இனிமேலாச்சும் எல்லாரும் கேம் விளையாட ஆரம்பிங்க. ஆளாலுக்கு ஒரு ஆளோட சுத்திட்டு இருக்காதீங்க. எவிக்ஷன் யாருன்னு நாளைக்கு சொல்றேன்”னு சொல்லிட்டு ஆண்டவர் அப்பீட்......! நானும்!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)