பிக்பாஸ் 3 : நாள் 38 தொடர்ச்சி & 39ம் நாள் (01.08.19)
பிக்பாஸ் 3நாள் 38 தொடர்ச்சி & 39ம் நாள் (01.08.19)
//சல்பேட்டா : என்னா பேச்சு பேசுறான் பாத்தியா? கொஞ்சமாச்சும் நன்றி இருக்கா இவனுக்கு? என்னா ஷெரினு சைலண்டா இருக்க?
ஷெரின் : (Mind Voice : உனக்கெல்லாம் வாயே வலிக்காதா?) இங்க பாரு நீ சொல்றது சரிதான் ஆனா அவனையும் நெனச்சுப் பாக்கனும்ல?”
சல்பேட்டா : நான் அவனத்தான நெனச்சுக்கிட்டு இருக்கேன் அவந்தான் என்னய நெனைக்க மாட்டேங்குறான் அதான கேசே. அட லூசு ஷெரினே உனக்கு இன்னும் என் பஞ்சாயத்தே புரியலயா?
ஷெரின் : சரி விடு, அடுத்தவங்க ஒப்பீனியன எடுத்துக்கிட்டு நீ என்ன பண்ணப் போற? நீயா யோசிச்சு ஒரு எண்டு கார்ட போடு
சல்பேட்டா : அவன ஏன் நாமினேட் பண்ணேன்னு கேக்குறான் ஷெரினு! என் மைண்டுல எப்பவும் அவன் பேருதான் ஓடிட்டு இருக்கு. அன்னைக்கு கூட கிச்சன்ல சரவணன் கிட்ட ‘அண்ணே முறுகலா ரெண்டு கவின், தொட்டுக்க கொஞ்சோண்டு கவின் தொவையல் போதும்’னு சொன்னேன்னா பாத்துக்க. அப்பிடி அவன் பேரு எனக்கு ஆழமா பதிஞ்சிருக்கு. அதனாலதான் நாமினேஷனுக்கு பேர் சொல்லுங்கன்னு சொன்னதும் அவன் பேரு வந்திருச்சு. ஆக்சுவலா நான் சொல்ல வந்தது உன் பேருதான்.
ஷெரின் : அடி சண்டாளி.....!
ரேஷ்மா : அதான் அவன் க்ளீனா சொல்லிட்டான்ல உங்க காதல் கட்ட மண்ணு குட்டி சொவரா போச்சுன்னு, அப்பறம் ஏன் இன்னும் அத யோசிக்குற ஃப்ரீயா விடு....
சல்பேட்டா : தல கெட்டப்ப போட்டுட்டு த்ரிஷா கெட்டப்ல இருந்த லாஸ் கிட்ட பேசுறான். ஏன் வீரம் படத்துல தமன்னா கூட நடிக்கலையா ? அப்ப எங்கிட்ட வந்தும் பேசி இருக்கனும்ல? எங்க காம்பினேஷ்னல வீரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு...
ரேஷ்மா : என்னது உங்க ரெண்டு பேரு காம்பினேஷனா? சோகத்துலயும் கொஞ்சம் யோசிச்சுப் பேசு.....நீங்க போட்டது கெட்டப்பு
சல்பேட்டா : (Mind Voice : ஆத்தீ கோவமாயிட்டா...) (அழுகையோட) ஆனாலும் என் வாழ்கை...
ரேஷ்மா : ஏய்....என்ன நானும் பாத்துட்டே இருக்கேன் என்னமோ உலகத்துல உனக்கு மட்டும் ஊத்திக்கிட்ட மாதிரி பொலம்புற.....நாங்க பாக்காததா? மணி ஆகிடுச்சு தூங்கப் போகனும். எப்பிடியும் இந்தப் பஞ்சாயத்த நீ சனிக்கிழமை வரைக்கும் முடிக்க மாட்ட! நாளைக்கு கண்டினியூ பண்ணு....நாளை புது தினம்னு நெனச்சுக்கோ....தலவாணிய கட்டிப்பிடிச்சுகிட்டு படுத்துக்கோ.//
//அபி & முகின் (ஸ்மோக்கிங் ரூம்)
ஆபி : (அழுகையோ அழுகை) இந்த மதுவயெல்லாம் கேள்வி கேக்கலேன்னு யாரு அழுதா? ஊரே கவின் மேட்டர கைல எடுத்து பேசுது ஆனா மது மொட்டக் கடுதாசி கூட எனக்குதான் போடுறா! என் பர்சனல்ல பாறங்கல்ல தூக்கி போடுறதுல அவளுக்கு அப்பிடி ஒரு பேரானந்தம்.
முகின் : அழுகாத அபி...... எல்லாம் சரியாகிடும்....நீ ரிலாக்சா 2 தம்மப் போட்டு வா....! வரும்போது வாயில ஹால்ஸ் போட்டுட்டு வந்துரு.
அபி : ஒரு தடவ கட்டிப்பிடிச்சுட்டு போயிருக்கலாம் இவன் ஒரு வீணாப் போனவன்//
//சேரன் & மது (மெயின் ஹால்)
சேரன் : அபிய யாரோ நோண்டி விட்டாய்ங்க போல அழுது தீர்க்குது.
மது : அப்பிடியா சார்...அதுக்கு பாவம் என்ன பிரச்சனையோ! ஏன் சார் அந்த கேள்வி கேட்டதுல எதுவும் பிரச்சனையா?
சேரன் : தெரியலயே....இப்டியெல்லாம் யாரு கேள்வி கேக்குறா? தேவையா இது ?
மது : (Mind Voice : யாரா ? யோவ் அது நாந்தான்யா) அது தப்பான கேள்வியா சார்?
சேரன் : கேள்விதான் ஆனா தப்புன்னு சொல்ல முடியாது
மது : அப்ப கேட்ருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?
சேரன் : கேக்கலாம் ஆனா தப்பா எதுவும் கேட்டு பிரச்சனையாக கூடாது
மது : அது ஒண்ணும் தப்பான கேள்வி இல்லையே?
சேரன் : தப்புன்னு சொல்ல முடியாது ஆனா ஆது ஒரு கேள்வியா போயிருச்சுல அதான் யோசிக்க வைக்குது
மது : இருக்குறததான கேட்ருக்காங்க....தப்பு மாதிரி தெரியல
சேரன் : இருக்குறதுதான் ஆனாலும் கேட்டது தப்பா இல்லேன்னாலும் நெனச்சுக்க வேண்டியது அபி பொறுப்பு
மது : இல்ல சார் அந்த கேள்வியால மனசு புண்பட வேண்டிய அவசியம் இல்லலேல்ல?
சேரன் : புண்பாடாது ஆனா கேள்விய பாத்தேன்னா அவங்க யோசிச்சு அழ காரணமா இருக்கலாம்
மது : அப்ப கேட்டது தப்புதான் சார். கேள்வி தப்பானதுதான்
சேரன் : இல்ல கேள்வியும் தப்பில்ல....கேட்டதும் தப்பில்ல
மது : ஞே........//
39ம் நாள்
“இருமணம் கொண்ட திருமண வாழ்வில்” பாட்டு.....யாரும் ஆடுற மூடுல இல்ல ஆனா எடிட்டர் வேலை சிறப்பா இருந்துச்சு. குளிச்சுக் கெளம்பி டூட்டிக்கு போற மாதிரி கரெக்டா பஞ்சாயத்த கண்டினியூ பண்ணாய்ங்க.
தினத்தந்தி சிந்துபாத் லைலா கதைக்கு ட்ஃப் குடுக்கும் ஒரே கதை கவினோட காதல் கதைதான்.
கவின் :
“வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு” மோடுக்கு இப்பதான் வந்துருக்கான் பய. “கடனடைக்க காசு வந்திருச்சு அதுனால ஆளுக்கு 500 ரூபா வாங்கிட்டுக் கூட என்னய நாமினேட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுங்க”ன்னு சொல்லிட்டான். “வை ராஜா வை உன் வலதுக் கையை வை”ன்னு ‘மேகி’ ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆரம்பிச்ச சல்பேட்டா இன்னைக்கு “எத்தன ஜென்மம் எடுத்தாலும் உன்னய அடையாம விட மாட்டேன்”னு ‘நீலாம்பரி’ ரம்யா கிருஷ்ணன் மாதிரி பேசுறா. கண்டிப்பா என்னய காலி பண்ற திட்டத்துல இருக்கா....இதுக ரெண்டுகிட்டயும் மாட்டிக்கிட்டு நம்மளால முடியாது. இருக்குற வரைக்கும் இடைக்காட்டு சித்தர் மாதிரி இருந்துட்டுப் போயிடுறேன். வந்த ரெண்டாவது நாள் சாண்டி சொன்னாப்ல.....ரெண்டு நாளைக்கு முன்னாடி சித்தப்பூ சொன்னாப்ல கேட்டேனா? இப்ப இங்க வந்து நிக்குது....போதுண்டா”ன்னு சொல்லிட்டு உக்காந்துட்டான்
லாஸ் :
அதே அவஷ்யமில்ல ஆட்டிட்யூட்.....! ஆனா அவஷ்யமில்லாத ஆட்டிட்யூட்! எதிர்பார்த்த மாதிரி சேரனயே “என் கூட கதைக்காத”ன்னு சொல்லிடுச்சு. “கவின் கூட எனக்கு பிடிச்ச வரைக்கும் பேசுவேன் அத யாரும் தடுக்க முடியாது. சாக்ஷி மேக்ஷின்னு யாராச்சும் ஊடால வந்தா உள்ள விட்டு அடிப்பேன்”னு சொல்லிட்டு மைக்க கடாசிட்டு கக்கூஸுக்கு போயிடுச்சு.
சாக்ஷி :
சல்பேட்டாவுக்கு கவின் வேணும் அவ்ளோதான். ஒரு கட்டத்துல கூட இருந்த ஷெரினும், ரேஷ்மாவுமே சாக்ஷிகிட்ட
//ரேஷ் & ஷெரின் : எங்களப் பாத்தா லூசு மாதிரி தெரியுதா? நாங்களும் ரெண்டு நாளா சொல்லிட்டே இருக்கோம். நீ என்னடான்னா சொன்னதயே சொல்லிட்டு இருக்க?
சல்பேட்டா : அடியேஎ நீங்க 2 பேரும் அவன கட்டி தூக்கிட்டு வந்து என்னய காதலிக்க வைப்பீங்கன்னு பாத்தா......அவன கையக் கழுவுன்றீங்க! லந்தா உங்களுக்கு? அவனுக்கென்ன லைன்ல லாஸ் நிக்குது.....எனக்கு எதுத்தாப்ல சேரன் தான் இருக்காரு....
ஷெரின் : இதோட இத நிப்பாட்டு.....சின்னப்புள்ளத்தனமா சண்டை போட்டுட்டு இருக்கீங்க. இது வயசுக்கு வந்தவைங்க பொழங்குற இடம். ஒழுங்கு மரியாதையா பஞ்சாயத்த முடி.
சல்பேட்டா : நான் எங்க முடிக்கிறது? அவந்தான் மொத்தமா முடிச்சுட்டானே...
கவின் கிட்ட போயி
சல்பேட்டா : நாம மொத இருந்து ஆரம்பிக்கலாமா? ஹாய் ஐ ஆம் சாக்ஷி....கையக் குடு
கவின் : இதோட 327 தடவயாச்சு.....(கையெடுத்து கும்பிட்ட படி) என்னால முடியல.....என்னய வுட்டுடு....உன் குடும்பமே நல்லா இருக்கும்!
சரவணன் கிட்ட
சல்பேட்டா : நான் அவன காலி பண்றேன்னு சொல்றான். இப்ப கூட என்னால அவளுக்கு பழி பாவம் வந்து சேருமாம்.
சரவணன் : காலி பண்ணா நல்ல வாடகைக்கு வேற ஆள குடி வைக்கலாம் விடு
சல்பேட்டா : லாஸயெல்லாம் நான் இதுவரை நாமினேட் பண்ணதே இல்ல
சரவணன் : விடு....அடுத்த வாரம் பண்ணிக்கலாம்.....காபி சப்டுறியா?
சல்பேட்டா : இந்தாளு என்னய கலாய்க்குறான் போல....//
கூட இருந்த ஹவுஸ் மேட்ஸுக்கே கூட இது எரிச்சலாகிடுச்சு. பாட்டு மட்டும் இடையில இடையில இருந்திருந்தா இது நீதானே என் பொன் வசந்தம் படத்தோட ரெண்டாவது பார்ட்னு சொல்லிரலாம். அவ்வளவு சோர்வா இருக்கு. இதுதான் கடைசிக் கப்பு தண்ணி இதுக்கு மேல கழுவ தண்ணி கிடையாது. நமக்கும் எழுத தம்மு கிடையாது.
இன்னைக்கும் இதான் கண்டெண்டுன்னா தயவு செஞ்சு ஆளுக்கு 2 காரணம் சொல்லி என்னய நாமினேட் பண்ணிடுங்க.....நான் கெளம்புறேன்.
Comments
Post a Comment