பிக்பாஸ் 3 : நாள் 42 (04.08.19)

பிக்பாஸ் 3நாள் 42 (04.08.19)


முன் குறிப்பு : கடுகளவு கூட காமெடி இல்லாத, என் அட்மின் எழுதுன பதிவு இது.

சில விஷயங்கள ஆராயக் கூடாது அனுபவிக்கனும்ன்ற மாதிரிதான் இந்த எபிஸோடும். காட்டு மொக்க எபிஸோட்.

ஆண்டவர் வந்தார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ன்னார். “அதே போலதான் உள்ள இருக்குறவனுங்க பஞ்சாயத்துக்கு அவனுங்க மட்டுந்தான் காரணம். ஆனா இது தெரியாம மத்தவனுங்கள நாமினேட் பண்றானுங்க ஃபன்னி கய்ஸ்”னார்.

அகம் – அகம்

காலர் ஆஃப் த வீக் : லாஸுக்கு

உள்ள எதுக்கு வந்த? உருப்படியா எதும் செய்யுறாப்ல இல்லையே?

லாஸ் : ஓம்....நான் வேற மைண்ட்ல இருக்கன். இனிமே ஒழுங்கா விளையாடுவன். (ம்ம்க்கும்)

வந்ததும் வராததுமா சரவணன் தானா சிந்திச்ச மாதிரி “சார் நாங்க எல்லாரும் நாங்க போட்ட கெட் அப் நடிகருங்க மாதிரி உங்ககிட்ட கேள்வி கேப்போமாம். அதுக்கு நீங்க பதில் சொல்லுவீங்களாம்”னு சொன்னார். ஆண்டவரும் “சரி வேற எப்பிடிதான் பொழுத ஓட்டுறது? கேட்டுத் தொலைங்க”ன்னார்.

சரவணன்/கேப்டன் : நடிகர் சங்கத்துல பொறுப்பேத்து எதாச்சும் உருப்படியா பண்ணலாம்ல?

ஆண்டவர் : (ஏன் அத நீ பன்ணலாம்ல?) நான் அப்பா ஸ்தானத்துல இருந்து பசங்கள பொறுப்புக்கு கொண்டு வந்து வெளிய இருந்து ஆதரவு தரேன்

சாண்டி/சிம்பு : பர்ஸ்ட்டு யாரு வரான்றது முக்கியமில்ல லாஸ்ட்டு யாரு பஃர்ஸ்டு வரான்றதுதான் முக்கியம் இந்த டயலாக் எப்பிடி?

ஆண்டவர் : (நீ வந்தாலே பெரிய விஷயமா இருக்கே...இதுல ஃப்ர்ஸ்டு வந்தா என்ன லாஸ்டு வந்தா என்ன) அது சரிதான், பாக்குற ஆங்கிள்தான் மேட்டர்! நீ வாசிச்சா உன் சொத்து நான் வாசிச்சா என் சொத்து!

மது/ சரோஜா தேவி : எம்.ஜி.ஆர், சிவாஜி படத்த ரீமேக் பண்ணா எந்த படங்கள பன்ணுவீங்க?

ஆண்டவர் : (ப்ரொட்யூசர் கெடச்சா எத வேணும்னாலும் பண்ணலாம்) நாடோடி மன்னன், தேவர் மகன்

மத்த கேள்வியெல்லாம் அட்டு வேஸ்டு (ஆமா ஆமா மேல இருக்குறதெல்லாம் IAS கேள்விங்க....போங்கடா டேய்.)

“சரி இப்ப நான் ஒண்ணு சொல்றேன். ரெண்டு ரெண்டு பேரா ஜோடியா உக்காருங்க...பக்கதுல இருக்குறவரா நீங்க மாறிக்கிட்டு பதில் சொல்லுங்க”ன்னார். (ஆண்டவரே சத்தியமா முடியல....!)

மாறி மாறி லூசு மாதிரி பதில் சொன்னானுங்க.

“சரி எவிக்ஷனுக்கு வருவோம்”னு மேட்டருக்கு வந்தார். கவின், சாக்ஷி & ரேஷ்மா, அபிக்கு கை விலங்குகள மாட்டி சாவியத் தேடுங்கன்னார். தடவிக்கிட்டே திரிஞ்சானுங்க. அப்பறம் ஆண்டவரே “டேய் விட்டா நாளைக்கு வரைக்கும் தேடுவீங்க”. அப்டின்னு க்ளூ குடுத்தார் சாவி கிடச்சது. கவின், சாக்ஷி கைவிலங்கு தொறந்துச்சு. கவின் காப்பாற்றப்பட்டார்.

சாக்ஷி “என்னய விட்டுடுங்க நான் வீட் போகனும் சார்”னு கொஞ்சுச்சு. “இதென்ன ஸ்கூலா மணியடிச்சதும் வீட்டுக்கு போக? உக்காரு பேசாம”ன்னு சொல்லிட்டார்.

ரேஷ்மா அவுட்டு. “இந்தக் கருமத்துக்குதான் நியூட்ரலா இருந்தேன். என்னய உசுப்பேத்தி விட்டு ரெண்டு நாள் சவுண்டக் குடுத்தேன். இதோ வெளிய அனுப்பிட்டானுங்க”ன்ற மாதிரி இருந்தாங்க.

முகினுக்குதான் அள்ளு இல்ல. “ஆகா நம்மளத்தான போகஸ் பன்ணுவாங்ய...! இப்ப இவ வெளிய போறதுக்கே நாமதான் காரணம்ன்ற மாதிரி கதை எழுதிருவாங்யளே. சரி, பதறி அழுது பர்பார்மென்ஸ போடுவோம்”னு சொல்லி அடிக்கு அடி அழுதான்.

ரேஷ்மா வெளிய போயிட்டாங்க. மறுபடியும் முகின் அழுகாச்சி. அபிக்கு ஓவர் டைம் இருக்கு போல. அழுக அழுக அன்ப ஏத்திக்கிட்டே இருக்கனும். இவன் எவ்ளோ நேரம் அழுவான்னு வேற தெரியல.

வெளிய வந்த ரேஷ்மாவுக்கு குறும்படம் காமிக்கப்பட்டது. “பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு குடுக்கதான் உள்ள வந்தேன். (அது எப்ப குடுத்தாங்க....?) குடுத்துட்டேன். அவ்ளோதான் கிளம்புறேன்”னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆண்டவரும் அப்ப சரி நானும் கிளம்புறேன்னு கிளம்பிட்டார்.



ப்ரொமோல முகின் எதோ சேர உடச்சுக்கிட்டு இருக்கான். கண்டெண்ட் எதாச்சும் இருக்கும்....இருக்கனும்! பாப்போம்!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)