பிக்பாஸ் 3 : நாள் 53 (15.08.19)
பிக்பாஸ் 3நாள் 53 (15.08.19)
“ஜன கண மண ஜனங்களை நினை” பாட்டு அலாரம். சுதந்திர தின பாட்டாம். இவிங்க அழிச்சாட்டியம் தாங்கல. நல்லவேளை எல்லா ஆகாவலிகளும் ஆட அரம்பிக்குறதுக்குள்ள பாட்டு முடிஞ்சது.
கிச்சன்ல விடிஞ்சதும் வனி ஆப்பரேஷன்ல இறங்குச்சு. மது வேற வாகா மாட்டுச்சு.
வனி : பாக்குறதுக்கு ஆள் பூனையா இருந்தாலும் செம்ம ஆக்டிங்க போட்டு ஆள கவுக்குது
மது : (Mind Voice : லாஸ இருக்குமோ?)
வனி : அபிய சொல்றேன்...
மது : ஓ...
வனி : ஸ்டைலா இருக்குறது ஓகேதான் ஆனா கொஞ்சம் மேலு வளையனும்ல
மது : (Mind Voice : ஷெரின சொல்றாங்க போல...)
வனி : நான் கஸ்தூரிய சொன்னேன்
மது : ஓ...
வனி : தமிழ் பேச்சு...தமிழ் கலாச்சாரம் எல்லாம் சரி! ஆனா அறிவு வேணுமே?
மது : (Mind Voice : கன்ஃபார்மா லாஸதான் சொல்றாங்க)
வனி : நான் உன்னதான் சொன்னேன்...
மது : அடிப்பாவி......அகலமான உடம்பு அம்புட்டும் வெஷம் இதுக்கு.....!
வனி : கவின் கொஞ்சம் கவனமான ஆளு தப்பு பண்ணாலும் கைல காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு எஸ்கேப்பாகிடுறான் ஆனா அபி அழுது அழுது அன்வாண்டட் லிஸ்டுலதான் சேருது....
மது : ம்ம்ம்ம்....
வனி : முதிர்ச்சியா யோசிக்குறதுனாலும் கொஞ்சம் அடுத்தவங்க சொல்றதையும் கேக்கனும்ல....அடுத்தவங்களுக்கு ஆதரவு குடுக்குறது ஓகே ஆனா சுத்தி நடக்குறதையும் பாக்கனும்...
மது : (Mind Voice : எழவெடுத்தவ இப்பவும் என்னயதான் சொல்றா...)
வனி : நான் ஷெரின சொன்னேன்....! (Thugh Life Music) //
இந்த உரையாடல கேட்டுட்டு லாஸ் வெளிய வந்து பசங்ககிட்ட “வனி வத்தி வைக்குது காலையிலயே”ன்னு சொல்ல, பசங்க “கொள்ளிக்கட்டை குடிசைய கொளுத்ததான் செய்யும் ஃப்ரீயா விடு”ன்னு ஜாலியாகிட்டானுங்க.
மது கிட்ட சேரன் “இனிமே தர்ஷன் கிட்ட பழகாத”ன்னு சொன்னார். மதுவும் “இல்ல சார் இனிமே அவன் கூட எனக்கென்ன பேச்சு....அதெல்லாம் பேச மாட்டேன்”னு சொல்ல, “இல்ல அதுக்கு சொல்லல, உன்னாலயெல்லாம் அடி தாங்க முடியாது அதுக்கு சொன்னேன்”னு சேரன் சொல்ல மதுவுக்கு இப்ப தெளிவா புரிஞ்சுச்சு.
வனி வெளிய எல்லாத்தையும் உக்காத்தி வச்சுக்கிட்டு “யூ ட்யூப்ல நம்மள வச்சு பிக்பாஸ் கிரிக்கெட்டுன்னு ஒரு வீடியோ இருக்கு நல்ல காமெடி....லாஸு உன்னய மாதிரி கூட நல்லா பண்ணி இருக்கானுங்க...நீ அவசியம் பாரு”ன்னு பாசமா சொல்ல, “வெளிய வந்து எல்லாத்தையும் பாக்கதான் போறோம். நாங்க பாப்போம் பாக்காம பாய விரிச்சு மல்லாக்க படுப்போம் உனக்கென்ன? அதெல்லாம் கிரிக்கெட்டையும் பாப்போம் கிறுக்கி போட்டதையும் பாப்போம்”னு பட்டுனு பேசிடுச்சு.
உள்ள வனி, ஷெரின், சேரன்....
வனி : இந்த லாஸ் ரொம்ப பண்றா...ஒன்னு சொல்ல விட மாட்டேங்குறா என்னய.....! நீயே சொல்லு ஷெரின், இப்ப உன் முடி இப்பிடி பறக்குது அத எடுத்துப் பின்னாடி போடுன்னா நீ என்ன சொல்லுவ?
ஷெரின் : உன் வேலையப் பாத்துட்டு போன்னு சொல்லுவேன்
வனி : (Mind Voice : ம்ம்க்கும்.....இதுக்கு அவளே பரவாயில்ல....) ம்ம்ம் பாத்தியா எவ்வளவு பாசமா சொல்ற...! ஆனா அவ “முடிய நீங்க சொன்ன மாதிரி பின்னாடி போட்டுக்குறோம்....தேங்க்ஸ்”னு திமிரா பேசுறா....டாமிட்!
சேரன் : நைனா என்னயவே எரிக்கிற மாதிரி பாக்குறா.....இதுல உன்னய எப்பிடி மதிப்பா....?//
அபி அங்க ஜெயில்ல பிக்பாஸ்கிட்ட “வெளிய விடுங்க பாஸு....அப்பிடியா பழகி இருக்கோம் நாம? நான் இல்லேன்னா உங்களுக்கு ஆளே இல்ல. எப்பிடியும் அடுத்த வாரம் என்னயதான் அனுப்புவானுங்க அப்ப எக்ஸ்ட்ரா ஒரு நாள் இருக்கேன்....இப்ப அனுப்பிருங்களேன்....முடியல”ன்னு கதறுச்சு
வெளிய சேரனும் மதுவும்....
மது : என்ன சார் மொகறை சரியில்ல ? சாப்ட்டதும் தூக்கம் வருதா?
சேரன் : தூக்கமா? லாஸ் என் கூட சாப்பிடலயேன்னு துக்கத்துல இருக்கேன் நீ வேற...
மது : அய்யோ அதுக்காக நீங்க இன்னும் சாப்பிடலையா?
சேரன் : இல்லையே சாப்ட்டேனே....
மது : குளிக்கலையா?
சேரன் : குளிச்சுட்டுதான சாப்ட்டேன்...
மது : அப்ப கவலையில கம்மியா சாப்ட்டிருப்பீங்க ரைட்டா
சேரன் : இல்லையே....வயித்துக்கு பத்தாம வனி அதுக்குன்னு ஒளிச்சு வச்சிருந்த 9 தோசையில இருந்து கூட 2 தோசை எடுத்து சாப்ட்டேனே....
மது : நான் வேணும்னா லாஸ் கிட்ட பேசி உங்க சோகத்த போக்கவா?
சேரன் : அந்த சோகம் அப்பவே போயிருச்சு
மது : பின்ன இப்ப எதுக்குதான் சோகம்?
சேரன் : எப்பயுமே எதுக்காச்சும் சோகமா இருந்தே பழகிட்டேன்....! அதான் டச்சு விட்டு போயிறக்கூடாதுன்னு சும்மா சோகப்பட்டுட்டு இருக்கேன்
மது : இது பெருஞ்சோகமாவுல இருக்கு....உடம்பப் பாத்துக்கோங்க சார்//
கஸ்தூரி தன் காந்தக்குரலால் “கருத்த மச்சான்” பாட்ட “பெரிய மச்சான்”னு மாத்தி தன் ஜெயில் அனுபவங்கள பிக்பாஸ் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. இவங்க பாடி அடுத்த 10வது நிமிஷம் ஷெரின் அவசர அவசரமா சாண்டிகிட்ட ஓடி வந்து......
“ சாண்டி என்னன்னு தெரியல அபிக்கு ரொம்ப முடியாம இருக்கு, இவ்ளோ நேரம் நல்லாத்தான் இருந்தா. திடீர்னு என்னாச்சுன்னு தெரியல. கேப்டன்ற முறையில என்னன்னு கேளு”ன்னு சொன்னாங்க.
சாண்டி நேரா சாவிய எடுத்துட்டு வந்து “அபிக்கு என்னாச்சு?”ன்னு கஸ்தூரிய கேக்க, “நான் பாட்டெல்லாம் பாடல”ன்னு கஸ்தூரி சொன்னதும் எல்லாரும் காரணம் புரிஞ்சா மாதிரி தலைய ஆட்டிக்கிட்டானுங்க. “அபி வெளிய வா....போனா பாயின்ட்தான் போகும். அது போனா போகட்டும் நீ வா”ன்னு சாண்டி கூப்ட்டதுக்கு அபி வர மறுத்தாங்க.
கஸ்தூரியோ “நீங்க நேத்து செஞ்சதுக்கு பிராயச்சித்தம் பண்றீங்கன்னு புரியுது ஆனாலும்”னு ஆரம்பிக்கும்போதே சாண்டி “உனக்கு புரிஞ்சதயெல்லாம் புண்ணாக்கோட கலந்து குடி. இங்க வந்து இங்க் தெளிக்காத”ன்னு சொல்ல, லாஸும் கஸ்தூரிய ரெண்டு காட்டு காட்ட, கஸ்தூரி கண்ண மூடி கோவத்த கபாலத்துக்கு ஏத்தி கண்ணத் தொறந்து பாத்தா........ அங்க யாருமில்ல போயிட்டானுங்க. ஜஸ்ட் மிஸ்ஸு.
சேரன் சாண்டிகிட்ட “யப்பா டேய் கதவத் தொறக்காதீங்கடா”ன்னு சொல்ல சாண்டியோ “விடுங்க அத நான் பாத்துக்குறே”ன்னு சொன்னதுக்கு “நல்லா பேப்ப....பிக்பாஸு கோவப்பட்டு ஜெயில தொறந்ததுக்கு தண்டனையா அபிக்கு பதிலா யாராச்சும் ஜெயிலுக்கு போங்கன்னு சொன்னா, நீங்க எப்பிடியாச்சும் என்னய அனுப்பிட்டு “ஆம்பள ஜெயிலுக்கு போயிட்டான்”னு மதுவுக்கு கணக்கு காட்டிருவீங்க. போங்கடா டேய் இந்த வெளையாட்டே வேணாம்”னு மறுத்தார்.
இத கேள்விப்பட்ட வனி வர்தா புயலா வெளிய வந்து “நீ கதவத் தொற அவள நான் வெளிய இழுத்துப்போடுறேன்”னு சொல்லி பூட்ட தொறக்க ஆரம்பிக்கும்போதே “இதுக்கு மேலயும் சும்மா இருந்தா சொம்பையாகிடுவோம்”னு நெனச்ச பிக்பாஸ், “அபி உங்க தண்டனைக்காலம் முடிஞ்சது”ன்னு அறிவிச்சு தன் மான மரியாதைய காப்பாத்திக்கிட்டார்.
கூடவே கெளம்புன கஸ்தூரியப் பாத்துட்டு ஹவுஸ்மேட்ஸ் “அபியோட தண்டனைக்காலம் மட்டுந்தான் முடிஞ்சது”ன்னு அழுத்தி சொல்லிட்டு ஓடிட்டானுங்க. “வாய வச்சுட்டு சும்மா இருந்திருந்தா கூட நம்மளையும் கூட்டிட்டு போயிருப்பானுங்க. நம்மளும் வாயக் கொஞ்சம் கொறைக்கனும்....! நல்ல வேளை பாடுன பாட்டுக்கு அபி உயிருக்கு ஒண்ணும் ஆகல.....யப்பா அந்த கஞ்சியில பாதி இருந்துச்சே எங்கடா அது?”ன்னு துழாவ போயிட்டாங்க.
பசங்க எல்லாரும் இந்த சிறை உடைப்புல சேரனின் பங்கப் பத்தி பேசிட்டு இருக்கும்போது சேரன் டக்குன்னு உள்ள வந்து “தர்ஷன் சார், உங்கள உள்ள கூப்புடுறாங்க”ன்னு சொல்லி கூட்டிட்டு போனார். அதயும் பசங்க கலாச்சானுங்க.
உள்ள மது, வனி, சேரன், ஷெரின்...
சேரன் : பாத்தியா வனிதா இவிங்கள?
வனி : என்னவாம்?
சேரன் : இந்த ஆம்பளைங்கள்லாம் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு என்னமோ அவிங்கதான் கதவ ஒடச்சு அபிய காப்பாத்துன மாதிரி பேசிக்குறானுங்க...
வனி : ஏன் நானுந்தான் போயி தொறந்தேன்...
சேரன் : அதான.....உன்னய கணக்குல எடுக்காம ஆம்பளைங்க மட்டுந்தான் இதப் பண்ண மாதிரியும்.....நம்மள்லாம் சும்மா இருந்த மாதிரியும் பேசி சிரிக்குறானுங்க....சில்லி பாய்ஸ்
மது : சார் இது ஆம்பளைங்க போடுற டவுசராட்டம் இருக்கு இது யாரோடது?
சேரன் : என்னோடதுதான்....
மது : ஓ உங்களுதா ஞாபகம் இருந்தா சரி.....இந்தாங்க சார்.....//
பசங்க உள்ள “வந்தாய் அய்யா”ன்னு சனிக்கிழமை ஆண்டவருக்கு முன்னாடி பாடுறதுக்கு பாட்டு ரெடி பண்ணிட்டு இருந்தானுங்க.
கஸ்தூரி ரிலீஸ்....!
பசங்க சூப்பரா இந்த ஆண்கள் பெண்கள் பஞ்சாயத்துக்காக "எல்லாரும் ஒன்ணுதான்"னு சொல்றாப்ல ஒரு செம்ம குத்து கானா ரெடி பண்ணி பாடிட்டு இருந்தானுங்க. லாஸ் பசங்க கூட இருக்குறது அவனுங்களுக்கு ப்ள்ஸ்ஸா இருக்கு. ப்ரெஷ்ஷாவும் இருக்கு.
சபாஷ் சரியான போட்டி டாஸ்க்! மதுவுக்கு பிடிச்ச டாபிக். ஆண்கள் பெண்கள்னு ரெண்டு டீம்.....தலைப்புக்கு ஏத்த மாதிரி அவங்க அவங்க தன் இனத்துக்கு சப்பார்ட் பண்ணி பேசி ஜெயிக்கனும். மது “ஒரு பெண்ணானவள் பெண்தான் ஆணா இருந்தாலும்”ன்ற மந்திரத்த மனசுக்குள்ள ஆயிரத்தெட்டு தடவை சொல்லி வெறியேத்திக்கிட்டாங்க.
சேரன் பசங்க கூட உக்காந்திருந்தார். பிக்பாஸ் ஒரு பெரிய பஞ்சாயத்த எதிர் பாக்குறாருன்னு பச்சையா தெரிஞ்சது.
முதல் தலைப்பு : சரியான முடிவெடுப்பதில் சிறந்தவர் ஆணா பெண்ணா ?
சேரன் மீரா மேட்டர்ல சரவணன் எடுத்த சரியான முடிவ பத்தி சொன்னார்.
இதுல இவிங்க கத்துன கத்துல யாரு ஜெயிச்சான்னு தெரியல....
ரெண்டாவது தலைப்பு : தலைவர் பதவிய சிறப்பா செஞ்சது யாரு?
மது இதுல சாண்டி ஒழுங்கா பாத்திரம் வெளக்கலன்னு சொல்ல. இது கேப்டன்சிக்குள்ள வராது, தனி நபர் கேடுன்னு சொல்லிட்டானுங்க. ஆனா கேப்டனா இருந்தும் பர்னிச்சர உடச்சதால பொறுப்பில்லாத ஆம்பளைங்கன்னு சொல்லிட்டானுங்க.
இதுல பெண்கள் ஜெயிச்சாங்க.
மூணாவது தலைப்பு : தைரியமா கருத்துகளை எடுத்து வைப்பது யாரு?
அதிசயமா இதுல வனிதா ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணாங்க.
ஆண்கள் ஜெயிப்பு.
நாலாவது தலைப்பு : சமையல் செய்வதில் சிறந்தவர் யார்?
இதுல பெண்கள் தான் சிறந்தவர்கள்னு ஆண்கள் ஒத்துக்கலேன்னா இனி கஸ்தூரிதான் சமையல் செய்வாங்கன்னு ஒரு கூரிய ஆயுதத்த பயன்படுத்தி பெண்கள் ஜெயிப்பு. கஸ்தூரி மைண்ட்ல “எல்லா பக்கிகளும் நம்மள கலாய்க்குறதுல காமராஜர் யுனிவர்சிட்டில டிகிரி வாங்கி இருப்பானுங்க போல”ன்னு நெனச்சுக்கிட்டாங்க.
அஞ்சாவது தலைப்பு : நட்பு பாராட்டுவதில் சிறந்தவர் யார்?
கயமுயன்னு கத்தி ஓஞ்சானுங்க. திடீர்னு வனி எந்திருச்சு தர்ஷன் கிட்ட அவ்ளோ பேருக்கு முன்னாடி “தர்ஷ் உங்கிட்ட பர்சனலா ஒண்ணு சொல்றேன். உன் காதல குத்தி, கிழிச்சு, வேக வச்சு, தொவச்சு காயப்போட்டாதான் வலி புரியும்.....கொளுத்திப் பாரு கற்பூரம் எரியும்”னு என்னத்தயோ சம்பந்தமில்லாம ஆரம்பிச்சு.....கவின், சாண்டி, தர்ஷ், லாஸ்னு எல்லார்கிட்டயும் ஒரு ரவுண்டு ஏறு வாங்குச்சு. அப்பறம் சுதாரிச்சு “அய்யோ நான் சொன்னது காதல இல்ல காடாத்துணிய”ன்னு சமாளிச்சு சைடு வாங்குச்சு.
அபியும் முகினும் வெளிய உக்காந்து பேசுனாங்க. முகின் அழுக அழுக அபிக்கு தாங்கல. “ஏண்டா முகினு கட்டிப்பிடிக்க முடியாத நேரத்துல இப்பிடி கன்ணீர் விட்டு கதறுறியே ஃபூல்”னு ஃபீல் பண்ணுச்சு.” உன்னயத் தொட்டாலே தொயரத்த கூட்டிடுறாய்ங்க. சரி விடு யாரு கண்ணு பட்டுச்சோ....! நான் ஞாயித்துக்கிழமைய தாண்டுனா எப்பிடியும் என்னய ஜெயிலுக்கு அனுப்புவானுங்க. நைட்டா அந்தப் பக்கம் வா....! இருட்டுல பஞ்சாயத்த பேசி முடிப்போம்”னு சொல்லிட்டு ஸ்மோக்கிங் ரூம் போயிடுச்சு.
சமையக்கட்டுல மது, கஸ்தூரி....
கஸ்தூரி : மது, இன்னும் நம்மள பத்தி இங்க யாருக்கும் சரியா தெரியலன்னு நெனைக்கிறேன்....இப்பிடித்தான் 5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாளு...
மது : அந்த கரண்டிய கொஞ்சம் எடுத்துக் குடுங்க.....
கஸ் : ம்ம்ம்ம் இந்தா ! 5 மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள்
மது : அந்த சட்டிய கொஞ்சம் இந்தப்பக்கம் நகட்டுங்களேன்....
கஸ் : ம்ம்ம்ம் எடுத்துக்கோ! 5 வாரத்துக்கு முன்னாடி ஒரு நாள்
மது : இதுல கொஞ்சம் உப்பு இருக்கான்னு பாருங்க....
கஸ் : ம்ம்ம்ம் சரியா இருக்கு..
மது : என்னமோ சொல்லிட்டி இருந்தீங்களே?
கஸ் : 5 நிமிஷத்துக்கு முன்னாடி ஒண்ணு சொல்ல ஆரம்பிச்சேன்....என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சு....சந்தோஷமா இப்ப?//
வனி, கஸ்தூரி....
கஸ் : வனி, எப்பப் பாத்தாலும் என்னய ஏன் உள்ள வந்த ? ஏன் உள்ள வந்தன்னு கேக்குறியே ஏன் ?
வனி : (Mind Voice : நான் மட்டுமா ஊரே கேக்குறானுங்க....) நீ மட்டும் என்னய பஜாரின்ற?
கஸ்தூரி : சரி, நீயே சொல்லு நான் ஏன் உள்ள வந்தேன்?
வனி : நாய் தொறத்துச்சுன்னு உள்ள ஓடி வந்திருப்ப! என்ன லந்தா? நீ ஏன் வந்தன்னு நீ சொல்லு மூதேவி....
கஸ்தூரி : நான்......நான் இங்க உள்ள சிஸ்டத்த சரி பண்ண வந்தேன்...
வனி : சிஸ்டத்த சரி பண்ணுவியா? எப்பிடி சக்கரை பொங்கல்ல கடல பருப்ப போட்டா? இங்க பாரு, நான் இந்த வாரம் வெளிய போயிருவேன்.....இவனுங்கள பத்தி உனக்கு இன்னும் சரியாத் தெரியல....தூங்குறப்போ தூக்கிட்டு போயி தண்ணில இறக்கிருவானுங்க பாத்துக்கோ....//
வனி வெளிய வந்து பசங்ககிட்ட “என்னடா இந்த கஸ்தூரி பெரிய காட்டேரியா இருக்கு? அக்காகிட்டயே ஆக்டப் போடுது?”ன்னு சொல்ல ஏற்கனவே காண்டுல இருந்த பசங்க கஸ்தூரிய வனிகிட்ட கலாய்க்க ஆரம்பிச்சுட்டானுங்க. இத தூரத்துல இருந்து கஸ்தூரி பாத்துட்டு இருந்தாங்க.
கூடவே சேரனும் ! “இந்த வனிய நம்பி பசங்கள அதுகிட்ட திட்டி வச்சிருக்கோம். இது என்னடான்னா அவனுங்க பக்கம் நின்னு பப்ஜி வெளையாடிட்டு இருக்கு. நம்மள எதுவும் போட்டு விட்டா அடுத்த வாரம் முழுக்க அலைய விட்ருவாய்ங்களே”ன்னு பதறிப்போயி பாத்துட்டு இருந்தார்.
நாள் முடிவுல வனிதாவுக்கு வத்திக்குச்சி வனிதான்ற பட்டம் கெடச்சது.
Comments
Post a Comment