பிக்பாஸ் 3 : நாள் 61 (23.08.19)


பிக்பாஸ் 3நாள் 61 (23.08.19)


புதுப்பேட்டை “வரியா” தீம் சாங். பசங்க சும்மா பட்டய கெளப்புனானுங்க. லாஸும் சேந்து அவனுங்களோட ஆடுனது சும்மா அம்சமா இருந்துச்சு. இன்னைக்கு மொத்த எபிசோடுலயும் உருப்படின்னா அது இது மட்டுமே.
இந்த கஸ்தூரி நேத்து லக்ஸுரி பட்ஜெட்ல “கெலாக்ஸு....கெலாக்ஸு”ன்னு கதறும்போதே டவுட் இருந்துச்சு. காலையில டிபனுக்கு கெலாக்ஸ பாலுல போட்டு பகிர்ந்து குடுத்துச்சு போல. பசங்க வெளிய எடுத்துட்டு வந்து உக்காந்து கொமட்டிட்டு இருந்தானுங்க. உள்ள சேரனும், லாஸும் கூட “இதெல்லாம் சாப்புடுற பொருள்தானா? இல்ல பர்கோலக்ஸ் மாதிரி எதும் பேதிப் பொருளா? பாக்கும்போதே இவ்வளவு கன்றாவியா இருக்கே?”ன்னு பொலம்பல்.
பிக் பாஸ் ஊழியர் : பிக் பாஸ்.....பிக் பாஸ்
பிக் பாஸ் : என்ன? ஏன் இவ்வளவு பதட்டமா ஓடி வறீங்க?
பி.பா.ஊ : கக்கூஸ் கேமரா மேன் கோமாவுக்கு போயிட்டாப்ல
பி.பா : ஷோ நடந்துட்டு இருக்கும் போது வேற எங்கயும் போகக் கூடாதுன்னு தெரியும்ல ? அப்பறம் ஏன் போனாரு?
பி.பா.ஊ : யோவ் லூசு...! அவன் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டான்யா
பி.பா : அய்யோ என்னாச்சு?
பி.பா.ஊ : என்ன ஆச்சா ? ஒரு நாள்......ஒரே நாள் அந்தம்மா வந்து நிக்குற கேமரா பின்னாடி நீ நின்னு பாரு புரியும்....
பி.பா : எந்தம்மா?
பி.பா.ஊ : அதான்யா கஸ்தூரி ! உள்ள அதுகிட்ட எவனும் பேசலேன்னு கேமரா முன்னாடி வந்து எங்கள படுத்துது.
பி.பா : உங்களையுமா?
பி.பா.ஊ : ஏன் உன்னையுமா? இதெல்லாம் கூட பரவாயில்ல, இப்ப சரோஜா தேவி மாதிரி “லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்” பாடி ஆடுறேன்னு பண்ணுச்சு பாரு ஒரு பெர்பார்மன்ஸ்.....அதுல போனவந்தான்யா கோமாவுக்கு.....!
பி.பா : சோ சேட்...
பி.பா.ஊ : சேடா? இது ரொம்ப பேட்! இங்க பாரு ஒழுங்கா ஒரே இடத்துல ஆடாம ,பாடாம, அசையாம இருக்குற மாதிரி கஸ்தூரிக்கு ஒரு டாஸ்க்க குடு....இல்லேன்னா கஸ்தூரிய குண்டுகட்டா காம்பவுண்டுக்கு வெளிய தூக்கிப எறிய சொல்லி  நம்ம பொம்பள ஹல்க் வனிதாவுக்கு டாஸ்க்க குடு....!
பி.பா : நல்ல யோசனை...
பி.பா.ஊ : இல்லேன்னு வச்சுக்க உன்னய தூக்கி வீட்டுக்குள்ள போட்டுருவேன் அப்பறம் நீதான் அதுகிட்ட மாட்டுவ பாத்துக்க....! //
வெளிய சேரன் கூட கஸ்தூரி ஜெயில் வாசல்ல வெயில்ல உக்கந்திருக்க சேரன் வாய் “அடிக்குது வெயிலு”ன்னு முனுமுனுக்க, அத கரெக்டா கேட்ச் பண்ண கஸ்தூரி “முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது”ன்னு மூடா கண்டினியூ பண்ண, சேரன் தலையில கைய வச்சுக்கிட்டார். “எழவு எதுக்குமே வாயத் தொறக்க விட மாட்டேங்குது. மழை நேரத்துல வர மலேரியா கொசு மாதிரி 2 வாரமா இந்தக் கொசுத் தொல்லை தாங்கல......எங்க போனாலும் பின் தொடர்ந்து வருது.....யோவ் பிக்பாஸு சேவ் அஸ்ஸு”னு அவரு நெஞ்சுக்குழி நெக்குறுகுச்சு.
மொத்த பிக்பாஸ் டீமும் மொத ஷோ படத்துக்கு எதும் போயிட்டானுங்களான்னு தெரியல. ஒரு டாஸ்க்கும் இல்லாம ஒரு கண்டெண்டும் குடுக்காம எல்லாரும் சும்மா சுத்திட்டு இருந்தானுங்க.
உள்ள கூட்டிப் பெருக்கிட்டு இருந்த தர்ஷன வம்பிழுக்குறேன்னு ஷெரின் அவன் மடிச்சு வச்சத கலைச்சுப் போட தர்ஷன் கோவப்பட்டுட்டான். “உன் கைய கால வச்சுக்கிட்டு செத்த சும்மா இருக்கியா?”ன்னு ஷெரின கேக்க, ஷெரினோ “நா அப்டிதா பண்ணுவே....நா கேப்டன் தெரியும்மா ?”ன்னு கொஞ்சிட்டு ஓட,  தர்ஷன் சொடக்கு போட்டு “இந்தா ஒழுங்கா மடிச்சு வச்சுட்டுப் போ”ன்னு சொன்னதும் ஷெரினும் டென்ஷனாகிடுச்சு “டேய்....சொடக்கு போடாத எனக்கு அது பிடிக்காது”ன்னு சொல்ல தர்ஷன் மறுபடி மறுபடியும் அதப் பண்ண ஷெரின் கோவமா வெளிய போயிடுச்சு. இத அங்க இருந்து பாத்த ஒரே ஆள் சேரன் தான்.
சேரன் : டேய்....பொம்பளப்பிள்ள கிட்ட அப்பிடி தூக்கி எறிஞ்சு பேசாதடா. பக்குவமா பேசு. அப்பதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்
தர்ஷன் : சார் நீங்களா இது.....?  லவ் மேட்டர்ல லாங் ஜம்பெல்லாம் தாண்டுறீங்க? பெரிய வித்தக்காரனா இருப்பீங்க போலயே?
சேரன் : அப்பறம் மாயக்கண்ணாடியெல்லாம் எடுக்கனும்னா இதெல்லாம் இல்லாம எப்பிடி?
தர்ஷன் : சார் நான் அன்னைக்கே கேட்டேன். மாயக்கண்ணாடி மாயஜாலப் படமான்னு சொல்லவே மாட்டேங்குறீங்களே ?
சேரன் : (Mind Voice : ஸ்ஸ்ஸப்பா.....இவன் வேற !  தெரியாம கேக்குறானா ? இல்ல கலாய்க்குறானான்னே தெரியல) அத விடு நீ ஷெரின சில் பண்ணு...//
இப்ப கேப்டன் போட்டி....! சேரன கேப்டனாக்கியே தீரனும்னு இந்திய எலெக்ஷன் கமிஷன் மாதிரி செயல்பட்டுச்சு பிக்பாஸ் டீம். எல்லாரும் வந்து குலுக்கு சீட்டு எடுத்து அதுல எத்தன தடவ யாரு பேரு வருதுன்னு பாக்கனுமாம். யாருக்கு மொத 5 சீட்டு வருதோ அவங்க நோகாம கேப்டனாகிடுவாங்களாம். கும்புட்ட சாமி எதுவும் கைவிடாம சேரன் கேப்டன் ஆனாரு. இன்னைல இருந்து அவரு கேப்டன் சேரன்.
லாஸ் தர்ஷன் கிட்ட “அடேய் தர்ஷா ஷெரினப் போயி சமாதானப்படுத்து”ன்னு சொல்லுச்சு. “ஏன் என்னாச்சு லாஸு? ஷெரின் கோவமா இருக்கா?”ன்னு தெரியாத மாதிரி கேட்டான் தர்ஷன். “உன் உயரத்துக்கு ஒரு கைப்பிடியாச்சும் மூளை இருக்கனும். ஆனா உனக்கு இருக்குற மாதிரி தெரியல. போ போயி என்னன்னு கேளு”ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.
இந்திய டீமுக்கு கேப்டனானப்ப தோணி கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டாப்ல. சேரனுக்கு அவ்வளவு சந்தோஷம். சாதிச்ச சந்தோஷத்துல சாவிக்கொத்த வாங்கிக்கிட்டாப்ல. கேப்டன் வெரப்புல வெளிய வந்து பாத்தா கவினும், லாஸும் மொட்ட வெயில்ல கிட்ட கிட்ட படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. பொறுக்காத பிக்பாஸ் ஷூட்டிங் ஆர்டர குடுக்க ஹிப் ஹாப்பான் மியூசிக் மாதிரி இரச்சலா சுட்டுத்தள்ளுச்சு துப்பாக்கி.
சேரன் “மகளே! தலைவராகி தஸ் மினிட் கூட ஆகல அதுக்குள்ள கேசா? எந்திரி எந்திரி” ன்னு சொல்ல தலை வலிக்குதுன்னு கை காட்டுனாங்க லாஸ். “நைட்டு பூராம் அந்த அயோக்யப் பயலோட அமெரிக்கப் பொருளாதாரம் பேசுனா அப்டிதான் வலிக்கும். வா வா உள்ள வந்து படு”ன்னு பாசமா கூப்ட்டாரு.
கொஞ்ச நேரம் கழிச்சு லாஸ் & கவின்....
கவின் : சாதாரண மகளா இருந்த நீ இப்ப கேப்டன் மகளாகிட்ட வாழ்த்துகள்...
லாஸ் : ஆனா என்னய கண் முழிச்சு பாத்துக்குறது கான்ஸ்டெபிள் கவின் தான
கவின் : ஆனாலும் கேப்டன் மகளெங்க? இந்த கான்ஸ்டெபிள் கவின் எங்க? இது சரியா வராது
லாஸ் : டேய் கிறுக்குப்பயலே என்ன வசனப் போட்டியா நடக்குது இங்க? பெரிய நேவி கேப்டன் அவரு.....!  அந்தாளே நாளைக்கு வெளிய போயிருவோமோன்னு  விரக்தியில இருக்காப்ல. அப்டியே போகலேன்னாலும் இன்னும் 4 நாளுல அந்தாளு கேப்டன் பதவி போயிரும்....! இதுக்கு இவ்வளவு பில்டப்பு...ஓரே அப்பு...வேற மேட்டருக்கு வா!
கவின் : உன் பிறந்தநாளுக்கு கேக்கெல்லாம் வெட்டுவியா?
லாஸ் : தின்னி மாடே உன் ரொமான்ஸ் இதானா? கேக்குதான ? 4 கிலோ வாங்கித் தரேன் போதுமா?
கவின் : அதுக்கு கேக்கல....! எப்பிடி செலிபிரேட் பண்ணுவீங்கன்னு கேட்டேன்
லாஸ் : நான் எங்க செலிபிரேட் பண்ணேன்? அதெல்லாம் பண்ணதே இல்ல. ஓரே ஒரு தடவ என் காலேஜ் மேட் வீட்டுக்கு கேக் வாங்கிட்டு வந்து வெட்டுனான் அவ்வளவுதான். ஆனா போகும்போது என்னய பாத்து சிரிச்சான் ஏன்னு தெரியல. உனக்கு தெரியுமா?
கவின் : ம்ம்கும்...என்னய பாத்து இந்த ஊரே சிரிக்குது. உன்னய பாத்து ஒருத்தன் சிரிச்சதுக்கு நீ காரணம் கேக்குற? விடு பைத்தியமா இருந்திருப்பான். //
உள்ள வனிதா & ஷெரின்
ஷெரின் : வனி இந்த உலகமே ஏன் இப்பிடி இருக்கு?
வனி : என்ன தர்ஷன் மேட்டரா?
ஷெரின் : ஆமா...! திடீர்னு இன்னைக்கு என்ன புண்படுத்திட்டான்
வனி : (Mind Voice : ஆகா....செம்ம மேட்டர். சும்மா ஒரு வாரத்துக்கு பத்தி எரிய வைக்கலாம். ஆனா கமல் வந்தா இவளுக நான் கொளுத்திப் போடுறேன்னு போட்டு விட்டுருவாளுகளே! அங்க வேடிக்கை பாக்க வரவனுங்களும் கையத்தட்டி கடுப்பேத்துவானுங்க.....இருந்தாலும் மெல்ல கேமராவுக்கு கேக்காத மாதிரி பேசுவோம்) நான் அவன் பொறந்தப்பவே சொன்னேன் அவன் அப்டிதான்னு. அவன் மாறிட்டான் ஷெரின். என்னய அன்னைக்கு எதிர்த்துப் பேசும்போதே தெரிய வேணாமா?
ஷெரின் : இல்ல அவன் கோவப்படுறதுக்கு உரிமை இருக்கு
வனி : அதுக்காக அப்பிடி உன்னய பேசக்கூடாதுல்ல?
ஷெரின் : அப்பிடி பேசலாம்....ஆனாலும் அதுக்கு நான் ஃபீல் ஆகக் கூடாதுல்ல?
வனி : ஃபீல் ஆகக் கூடாது ஆனா கவலப்படலாம்ல?
ஷெரின்: கவலப்படலாம் ஆனா அப்பிடி கோவப்படக் கூடாதுல்ல
வனி : கோவப்படக்கூடாது ஆனா மரியாதை குடுக்கனும்ல
ஷ்ரின் : மரியாதை குடுக்க வேணாம் ஆனா எதாச்சும் பண்ணாம இருக்கலாம்ல....எனக்கு எதுவுமே புரியல
வனி : (Mind Voice : அடி மைதா மாவே...! வேலை மெனக்கட்டு உன்னய ஏத்திவிட வந்தா....என்னய சுத்தல்ல விடுறியே....) எனக்கும் எதும் புரியல...ஆனா பொழைக்கிற வழியப்பாரு....அதுனால அப்பப்ப இந்த வனிதா சொல்றதக் கேளு //
இத தர்ஷன் வெளிய இருந்து பாத்துட்டு....ஷெரின் கிட்ட பேசாமயே போயிட்டான்.
பிக்பாஸ் டீம் தூங்கி எந்திரிச்சுட்டானுங்க போல....
ரெண்டு டீமா பிரிஞ்சு ரெண்டு ரெண்டு பேருக்கா டாஸ்க். கேப்டன் சேரன் நடுவர்.
மாவுல காயின் பொறுக்குறது, மூக்குல பஞ்சு எடுக்குறது, குதிச்சு குதிச்சு பந்த வெளிய கொட்டுறது, லட்டு திங்குறதுன்னு ரஃப் & டஃப் டாஸ்க் குடுத்தானுங்க. சாண்டி டீம் ஜெயிச்சது.
இந்த கேப்புல லாஸ் தன் விரலுல அடிபட்டதா காமிக்க, கவினும், சேரனும் அதுக்கு துடிக்க, இதப்பாத்த சாண்டி சிலுவைய கும்புட்டுக்கிட்டார்.
அடுத்து நிப்பான் பெயிண்ட் டாஸ்க்கு. ரெண்டு டீமா பிரிஞ்சு ஒளிச்சு வச்ச கார்ட எடுத்து பாட்டு வரிக்கேத்த மாதிரி கார்ட பிராண்டுக்கேத்தாப்ல ஒட்டனும்.
சாண்டி டீம் சட்டுன்னு முடிச்சிட்டானுங்க.
கஸ்தூரி “பாட்டு வரிகள பாட்டாதான் பாடுவேன்”னு அடம்பிடிட்டு ஸ்வரம் பிடிச்சு, சுருதி பிடிச்சு பாடி முடிக்கிறதுக்குள்ள பஸ்ஸர் அடிச்சிருச்சு. “ஏங்க பாட்டு வரிய சொன்னா போதாதா? பாடியே ஆகனுமா?”ன்னு கவின் கேக்க “மக்கள் டீவில பாக்குறாங்க நான் பாடலேன்னா கோவிச்சுக்க மாட்டாங்களா?”ன்னு கஸ்தூரி கேக்க, “கரெக்ட்....இப்ப கண்டிப்பா கொல வெறியாகியிருப்பானுங்க”ன்னு சொல்லிட்டு போயிட்டான்.
சாண்டி டீம் வின்னு. அப்பறம் கஸ்தூரிய எல்லாரும் கலாச்சுட்டு இருந்தானுங்க.
ஆக்சுவலா வனி தர்ஷங்கிட்ட க்ளீனிங் டீம் சரியா வேலை செய்யலேன்னு சொன்னதால காண்டுல இருந்த தர்ஷன் அத ஷெரின் கிட்ட காட்டிட்டானாம் இத சேரன் ஷெரின் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. “ஓ அப்பிடியா விஷயம் ? ஆனாலும் அவன் சொடக்கு போடாம இருந்திருக்கலாம்”னு ஷெரின் சொன்னதோட முடிஞ்சுது. ஆண்டவா....வா...வா !

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)