பிக்பாஸ் 3 : நாள் 68 (30.08.19)


பிக்பாஸ் 3நாள் 68 (30.08.19)


“லாலா கடை சாந்தி” பாட்டோட அன்னைக்கு நாள ஆரம்பிச்சானுங்க. வனிதா எல்லாருக்கும் ஜும்பா சொல்லிக்குடுக்கனுமாம். “அப்டியெல்லாம் அந்தாளு சொன்னத செஞ்சுட்டா நமக்கு என்ன மரியாதை?”ன்னு சொல்லிட்டு வனி “ஜும்பாலாம் முட்டி செத்தவன் ஆடுறது....முட்டிய பேக்குறவன் ஆடுற ஆட்டம் சொல்லித்தரேன் அது பேரு வம்பா” அப்டின்னு ஒரு அரிய வகை ஆட்டத்த அறிமுகப்படுத்துனாங்க. அத முகின வச்சு டெமோ காமிச்சு ஆடி முடிச்சானுங்க.
கட் பண்ணா கவின் & லாஸ். கவினுக்கு இப்ப ரெண்டு பிரச்சனை. ஒண்ணு இந்த வாரம் தான் வெளிய போயிருவோம்னு தீவிரமா நம்புறான். ரெண்டு போறதுக்குள்ள இந்த புள்ளைய “ஐ லவ் யூ” சொல்ல வச்சிரனும். இல்லேன்னா உள்ள இருக்கும்போதே உள்ளடி வேலை பாத்து காதல் ஜோதிய அணைக்கப் பாப்பானுங்க. இதுல அந்தப் புள்ளைய தனியா இங்க விட்டுட்டு போனா எல்லாரும் வியாக்யானமா பேசி அது வெளிய வந்ததும் “யாரு நீ”ன்னு கேக்க வச்சுருவானுங்க. அப்பறம் கக்கூஸ்ல நின்ன காட்சிகள நடிச்சுக்காட்டி நியாபகப் படுத்த வேண்டியதாப் போயிரும். (கருமம் இவனுக்காக மூன்றாம் பிறை ரெஃபரன்ஸெல்லாம் எடுக்க வேண்டியதா இருக்கு) சோ அந்தப் பத்தட்டத்துல பயத்தோட சுத்திட்டு இருக்கான்.
கவின் : காஃபிக்கு நன்றி....
லாஸ் : என்னங்க நன்றியெல்லாம் சொல்றீங்க ? உங்க அப்பா உங்க அம்மாவுக்கு நன்றி சொல்லுவாரா என்ன....(வெக்கம்)
கவின் : உனக்கென்ன சேரனோட செல்லப்பொண்ணு.....ஆனா எனக்கு பாரு காலுல புண்ணு
லாஸ் : அதான் மாத்திரை கொண்டாந்திருக்கேனே....! ஆமா ஏன் எழவு விழுந்தா மாதிரி இருக்க? பக்கத்துல பப்பாளி நான் இருக்க உனக்கென்ன சோகம்?
கவின் : இன்னைக்கு பப்பாளி நீ கிடைப்ப....ஆனா வெளிய போனா தக்காளி யாருடா நீன்னு கேப்பியே அதான் இப்பவே தனியா இருக்கப் பழகிக்கிறேன்
லாஸ் : கண்ணு இல்லாம கூட இருப்ப ஆனா பொண்ணு இல்லாம இருக்க முடியாது உன்னால....அதுனால நல்லவன் மாதிரி நடிக்காத. இப்ப என்ன உங்கூட கதைக்கக் கூடாது, பாக்கக் கூடாது, பழகக் கூடாது, பப்பாங்கித்தனம் பண்ணக்கூடாது அவ்வளவுதான சரி இனிமே எதுவும் கிடையாது......போ....(அழுகை...)
கவின் : (Mind Voice : என்ன பொசுக்குன்னு இப்பிடி சொல்லிட்டா? சிம்பதி ரொம்ப சிந்திருச்சோ ?) லாஸு என்ன கண்ணுல தூசா? நான் வேணும்னா ஊதி விடவா?
லாஸ் : தூசியா? டேய் நான் அழுகுறேண்டா அஞ்சு காசு மூஞ்சி....
கவின் : (Mind Voice : சரி லைட்டா போட்டுப் பாப்போம்) நான் ஒண்ணும் ஹர்ட் பண்ணலயே?
லாஸ் : ஹர்ட் தான் பண்ற ! எங்கூட பேசாமாட்டேன்னு சொல்லி ஹர்ட் பண்ற....
கவின் : (Mind Voice : அப்பாடி ட்ராக்லதான் இருக்கா!) அப்பிடி இல்ல லாஸு....
லாஸ் : ஆமா....என்னய பாத்தும் பாக்காமப் போயி ஹர்ட் பண்ற !
கவின் : பாத்தும் பாக்காம நான் போக மாட்டேன்....பாக்காம வேணும்னா போவேன்....
லாஸ் : என்ன கருமண்டா இது? பஞ்ச்சா? சிரிக்காத....சில்றத்தனமா இருக்கு ! ஆனா ஒண்ணுடா இந்த வீட்டுக்குள்ள அடச்சு வச்சு உன்னையெல்லாம் அன்பானவன்....அடங்காதவன்....அசராதவன்னு என்னய நம்ப வச்சானுங்க பாரு...! நீ சேரனுக்கே பிடிக்காத பீசு...ஆனா உன் பின்னாடி சுத்துறேன் இந்த லாஸு. எல்லாம் காலக்கொடுமை
சாண்டி : டேய்....சூரியனுக்கே சூடு பிடிச்சிரும் போல....! அடங்குங்கடா. அப்பிடியே வெயிலுக்கு ஒண்டி ஒண்டி கதவோரமா பல்லி மாதிரி இருக்கீங்க...இதுக்கு மேல ஒண்டுனா வெளியதான் போகனும்...அப்பிடியே போயிடுங்க....ஒரு சட்டி சோறாவது மிச்சமாகும்.
அப்பறம் லாசு எல்லாருக்கும் முன்னாடி வந்து நின்னு “இந்த வீட்லயே நாந்தான் ரூல்ஸ ஒழுங்கா ஃபாலோ பண்றேன். எப்பிடியெல்லாம் மைக்க யூஸ் பண்ணக்கூடாதுன்னு உங்களுக்கு உணர்த்தத்தான் அப்பிடியெல்லாம் நடந்துக்குறேன்” அப்டி இப்டின்னு சுய பகடி செஞ்சுட்டு இருந்துச்சு. சொல்லிட்டிருக்கும் போதே “லாஸ்லியா மைக்க ஒழுங்கா மாட்டுங்க”ன்னு பிக்பாஸ் அனவுன்ஸ் குடுத்து அசிங்கப்படுத்துனாரு. லக்ஸுரி பட்ஜெட் 1600 கிடைச்சிருச்சாம். அப்பறம் ஆளாளுக்கு அது வேணும்...இது வேணும்னு கத்தி கத்தி மளிகை சாமான் லிஸ்ட முடிச்சானுங்க.
தர்ஷன் & சேரன் பெட்ரூம்ல
சேரன் : ஏண்டா தர்ஷா.....இவ்வளவு நீளமா இருக்கியே ? அவசரத்துக்கு ஒரு பொருள குனிஞ்சு எடுக்க முடியாதுல...நிமிருறதுக்கு கொள்ள நேரமாகுமே?
தர்ஷன் : அதான் ரெண்டு தடவ பெஸ்டு பர்பார்மன்ஸ் வாங்கியாச்சே இன்னும் என்ன சார்?
சேரன் : இதான் உங்கிட்ட........அப்டியே கப்பு கப்புன்னு பிடிப்ப....! ஆனா இப்ப அதில்ல
தர்ஷன் : வேற என்ன ? வெங்காய சாம்பார்ல பருப்பு வேகலையா?
சேரன் : அதில்லடா....என் மகளுக்கு என்னாச்சு?
தர்ஷன் : அவளுக்கென்ன? 5 தரம் சாப்புடுறா, 10 தரம் மேக்கப் போடுறா, 7 தரம் கக்கூஸ் போறா ஆனா அங்க உக்காந்து அவங்கூடதான் பேசுறா....ஒரு நாளும் அவ உள்ள போயி பாத்ததில்ல....
சேரன் : என்ன ஏதுன்னு கேக்குறதில்லையா?
தர்ஷன் : ஏன் நீங்கதான் கேளுங்களேன்....! அது என்ன எப்பப் பாத்தாலும் எவன் எது பண்ணாலும் எங்கிட்டயே கேக்குறீங்க? வனிதா வாய் ஏன் இப்டி இருக்குன்னு எங்கிட்ட கேக்குறீங்க? நானா நெளிச்சு விட்டேன்....இல்ல பெருசா கிழிச்சு விட்டேனா? அது ஏன் என்னயப் பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்டீங்க?
சேரன் : அதில்லடா....நம்ம நேரடியா போயி கேட்டா அவ்வளவு மரியாதையா இருக்காதுல்ல
தர்ஷன் : தெரியுதுல....அப்டியே ஃப்ரீயா விடுங்க....இப்ப என்னய ஆள விடுங்க//
கக்கூஸ்ல ஷெரின் சாண்டிக்கு சிகையலங்காரம் பன்ணிட்டு இருந்தாங்க. அந்த ப்ளாக் ஸ்கர்ட்டுல அப்பிடியே க்ரீன் ட்ரெண்ட்ஸ் ஹேர் ஸ்டைலிஸ்ட் மாதிரியே இருந்தாங்க. அங்க வந்து தர்ஷன் குறும்பு பண்ண அதுக்கு கோ ஆப்பரேட் பண்ணிட்டு இருந்தாங்க ஷெரின். கக்கூஸுக்கு உள்ள போன தர்ஷனோட கக்கூஸ் லைட்ட ஆஃப் பண்றேன்னு சொல்லிட்டு மாத்தி வனிதா இருந்த கக்கூஸ் லைட்ட ஆஃப் பண்ணாங்க ஷெரின். அதுக்கு உள்ள இருந்து வந்த வனிதா வாய்ஸ் வீட்டு வாசக்கதவு வரைக்கும் கேட்டுச்சு.
பெட்ரூம்ல வனி & சேரன்
வனி : சேரன் சார்....! கவின் டோட்டலா மாறிட்டான் போலயே?
சேரன் : ஆமா ஆமா....! எதுக்கு வந்தோம்ன்றதயே மறந்துட்டு அந்தப் புள்ளைக்கு மருந்தடிச்சிட்டு இருக்கான்.
வனி : இல்ல அதுக்கு சொல்லல....அது உங்க பொண்ணு ! கண்ணு முன்னாடி தன் பொண்ணு கூட ஒருத்தன் இப்பிடி சுத்திட்டு இருந்தா எந்த அப்பனும், அவன கூப்ட்டு கழுத்த சேத்து அடிச்சு, கைய கால முறிச்சு விட்ருப்பான். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம் !
சேரன் : (Mind Voice : ரைட்டு.....! சனியன் பனியன் போட்டு விட பாக்குது...வலுக்கவனமா விலகனும்) அதெல்லாம் தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைங்க....அவங்களுக்கு தெரியாதா? அத விடு நேத்து உங்கப்பா பொறந்த நாளுக்கு ஃபீல் பண்ணிட்டு இருந்த? ஆமா உங்கப்பால்லாம் உன்னய அடிப்பாரா?
வனி : என்னது அடிப்பானாவா? அடிச்சு மட்டும் இருக்கனும்.....இன்னேரம் தமிழ் திரையுலகம் விஜயகுமார இழந்திருக்கும்! அடிப்பானாவாம்ல.....நல்லா அடிப்பானே....ஹாங்
சேரன் : (Mind Voice : இதப் பெத்து வளத்ததுக்கு லாஸ் மாதிரி ஒரு லூச பெத்து வளர்க்கலாம்....! என்ன ......கருமத்த இந்த கவின மட்டும் சகிச்சிக்கனும்)
அப்பறம் தர்ஷன், லாஸ், சேரன் 3 பேரும் ஜாலியா சண்டை போட்டு விளையாடிட்டு இருந்தானுங்க. தர்ஷன போடான்னு சொல்லிட்டு கவின அவருன்னு மரியாதையா சொன்னத கேலி பண்ணதும் கவினையும் லாஸ் வாடா போடான்னு கூப்ட்டு வெளையாண்டுச்சு. வெக்கமே இல்லாம வேப்பங்கொலைய பாத்த வெள்ளாடு மாதிரி அந்தப் பொண்ணு சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு திரியுறான் கவின். இன்னைக்கு “எக்ஸ்க்யூஸ் மீ” ன்னு 246 தடவை லாஸும், “லாஸ்லியா மைக்க ஒழுங்கா மாட்டுங்க”ன்னு 317 தடவை பிக்பாஸும் சொன்னாங்க.
இங்கிட்டு தர்ஷனும், ஷெரினும் ஒரு ஷெட்யூலப் போட்டு கடலை போட்டுட்டு இருந்தாங்க.
தர்ஷ் : என்ன ஷெரின் சாப்புடுறியா?
ஷெரின் : இல்ல....சட்டை தொவச்சுட்டு இருக்கேன்
தர்ஷ் : என்னய சாப்ட்டியான்னு கேட்டியா?
ஷெரின் : சரி கேக்குறேன்....என்னய சாப்ட்டியா?
தர்ஷ் : உன் தமிழ்ல தீய வைக்க. அதாவது என்னய....ஐ மீன் தர்ஷன சாப்டியான்னு கேட்டியா?
ஷெரின் : நீதான தர்ஷன்?
தர்ஷ் : ஆமா நாந்தான் தர்ஷன்....என்னய சாப்ட்டியான்னு கேட்டியா?
ஷெரின் : சரி கேக்குறேன்....என்னய சாப்ட்டியா?
தர்ஷ் : அடிப் போடிங்க.....
ஷெரின் : சரி விடு.....! வாயத்தொற ஊட்டி விடுறேன்//
ஊட்டிவிட....இத வனிதா பாஸிங்ல பாத்துட்டு போனாங்க.
அப்பறம் தலைவர் டாஸ்க். 3 பேரும் பாப்புலாரிட்டி படி நம்பர் வரிசை அமைக்கனும். ஒருத்தர் மத்தவங்க குடுத்த வரிசைய நியாபகம் வச்சிக்கிட்டு குறைந்த நேரத்துல அத ஒப்பிக்கனும். வனி ஜெயிச்சு கேப்டனானாங்க. இதெல்லாம் பிக்பாஸோட ஸ்கெட்ச்சுன்னு சாண்டிக்கே தெரியும் போது நமக்கு தெரியாதா என்ன? அடேய் பிக்பாஸு ஏமிரா இதி ? வெரி ஒர்ஸ்ட்ரா ரே...!
ஷெரினுக்கு பாப்புலாரிட்டி கம்மின்னு வனி சொன்னதுல ஷெரினுக்கு கொஞ்சம் மனத்தாங்கல் போல....தர்ஷன் தான் சரி பண்ணனும்.
அப்பறம் ஃப்ரூட்டி டாஸ்க் ரெண்டு டீமா பிரிஞ்சு கட்டைய மாட்டிக்கிட்டு கயித்த ஆட்டி ஆட்டி பாட்டில்ல இருக்குற ஃப்ரூட்டிய குடிக்கனுமாம். ஏதோ கழைக்கூத்தாடி கிட்ட ஐடியா கேட்டிருப்பானுங்க போல.
எல்லாரும் குடிக்க. அருவியில நனஞ்ச எருமையாட்டம் ஃப்ரூட்டில குளிச்சாங்க வனிதா.
ஷெரின் டீம் வின்னு.
அப்பறம் பசங்க எல்லாம் சேந்து சிக்கனுக்காக சாகும் வரை உண்ணாவிரதம்னு சொல்லி ஸ்டோர் ரூம் முன்னாடி போரட்டம் பண்ணானுங்க. “புதிய இந்தியா பொறக்குறதுக்கு நமக்கு வயித்தவலி வர்ற கணக்கா இவனுங்க சிக்கன் சாப்புட சுகர் பேஷண்ட் என்னயும் போராட்டத்துல உக்கார வைக்குறானுங்க”ன்னு ஃபீலிங்கோட உக்காந்திருந்தார் சேரன்.
இந்த தடவ ஒரு வீக்கான பிக்பாஸ உக்கார வச்சிருக்கானுங்க போல. இவனுங்க என்ன சொன்னாலும் அந்தாளு கேக்குறாப்ல. என்ன கேட்டாலும் குடுக்குறாப்ல. சிக்கனு வந்துச்சு “சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சுருக்கேன்”னு சிச்சுவேஷன் சாங்கோட. ஆனா இதுக்கு வனிதா ஏன் க்ரெடிட் எடுத்துக்கிச்சுன்னு தெரியல. இவனுங்களும் திங்குற அவதியில இத கவனிக்காம விட்டுட்டானுங்க.
நைட்டு லான்ல....
வனி : ஏன் சார்  உண்மையாவே உங்க பொண்ணும் கவினும் காதலிக்கிறாங்களா சார்?
சேரன் : தெரியும்....நான் ஆமான்னு சொன்னா “எந்த மானமுள்ள அப்பனும் தூக்கு மாட்டிக்குவான்”னு சொல்லப் போற சரியா?
வனி : அட அதில்லங்க...சும்மா கேட்டேன்
சேரன் : என் படத்துல கூட இவ்வளவு சீக்கிரம் காதல் வராது? ஷோ முடிஞ்சதும் வாசல்ல வச்சு தாலி கட்டுவான் போல...
லாஸ் : உங்ககிட்ட எதுவும் சொல்லலயா?
சேரன் : டேட் முடிவு பண்ணதும் சொல்லுவாங்க...!
வனி : இந்தாளு வேற...! ஏங்க..... ஏன் இப்பிடி பண்றன்னு கேக்கலையா?
சேரன் : ஏன் நான் மானம் மரியாதையோட இருக்குறது உனக்குப் பிடிக்கலையா? விடு விடு....! அப்பான்ற உரிமைக்கு 10,000 ரூபா மொய் செஞ்சுட்டு சாப்ட்டு வருவோம் அவ்வளவுதான்....! சரி நான் உள்ள போறேன்...//
எவிக்ஷனும் இல்ல....கன்விக்ஷனும் இல்ல....ஆண்டவருக்கு வேலையும் இல்ல...! ஆனாலும் இன்னைக்கு ஆண்டவர் டே....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)