பிக்பாஸ் 3 : நாள் 63 (25.08.19)
பிக்பாஸ் 3நாள் 63 (25.08.19)
ரகுபதி ராகவ்
ராஜா ராம்.....
ராம் ராம்.....ஹே
ஹே ராம்......
அப்பதான் வாட்ஸாப்
ஃபார்வர்ட் வீடியோ எதுவும் பாத்துட்டு வந்தாரான்னு தெரியல. வந்ததும் “இந்த பிக்பாஸ்
மேல இருக்குற ஆர்வம் சமுதாய நிகழ்வுகள்லயும் இருக்கனும். வனிதா வத்தி வச்சா கோவப்படுறீங்க.
சேரன் அழுதா சோகப்படுறீங்க. கஸ்தூரியப் பாத்தா மூட் அவுட் ஆகுறீங்க. லாஸப் பாத்தா குதூகலமாகுறீங்க.
ஆனா அங்க அமேசான் காடு பத்தி எரியுது, நீங்க என்னடான்னா ‘அந்த அரிய வகை மூலிகையும்
சேர்ந்து எரிஞ்சிருக்குமா?’ன்னு லந்து பண்ணிட்டு இருக்கீங்க. அப்டியெல்லாம் இருக்கக்கூடாது.
இனிமே யாராச்சும் மரத்த வெட்டுனா ஏன்னு கேளுங்க.....அவிங்க பதில் சொல்லமாட்டாய்ங்க
ஆனாலும் கேளுங்க”ன்னார். சரி கேட்டுரலாம்!
“ஒழுங்கா இன்னிங்க்ஸ்
விளையாடுங்கடான்னு உள்ள அனுப்புனா இன்பச் சுற்றுலாவுக்கு வந்த மாதிரி இம்சை பண்ணிட்டு
இருக்கானுங்க. விட்டா இந்த வீட்ட விட்டு வெளிய வரமாட்டானுங்க போல. அதுனால அவனுங்கள
கொஞ்சம் எழுப்பி விடுவோம். வாங்க உள்ள போவோம்”னார்.
ஸ்ரீ ரங்க ரங்க
நாதனின் பாதம் வந்தனம் செய்யடி.....
ஸ்ரீ தேவி ரங்கநாயகி
நாமம் சந்ததம் சொல்லடி.....
அகம் -அகம்
“மொத்தமா சொல்றதுக்கு
உங்ககிட்ட ஒண்ணுமில்ல அதனால ஒண்டிக்கு ஒண்டியா கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்கடான்”னு சொன்னார்.
சாண்டி
கூட்டமா கோவில்ல
போயி பொங்கல் வாங்கி சாப்பிடலாம். ஆனா கூட்டமா போயி பிக்பாஸ்ல கப்பு வாங்க முடியாது.
நீ இப்ப டான்ஸ் மாஸ்டர். குரூப் டான்ஸர் இல்ல.....! அதுனால ஒழுங்கா தனியா விளையாண்டு
ஜெயிக்கப் பாரு சரியா....!
கவின்
பையன் என்ன
பண்றான்னு கேட்டா “அமெரிக்காவுல ஆப்பிள் கம்பெனியில வேலை பாக்குறான், எஞ்சினீயரிங்க்
படிச்சுட்டு மீம் கிரியேட்டரா இருக்கான், டாக்டருக்கு படிச்சுட்டு அமைச்சரா இருக்கான்
இல்ல ஒண்ணுமே படிக்காம பிரதமரா இருக்கான்”ற மாதிரி சொல்லனும் அத விட்டுட்டு “பையன்
பார்ட் டைமா பார்வதியையும், புல் டைமா பூமிகாவையும் டாவடிச்சுட்டு இருக்கான்”னு சொன்னா
மானம் மரியாதை தங்குமா? தெளிவான பையந்தான் நீ ஆனா அத பிக்பாஸ் விளையாட்டுல காட்டு....லாஸுகிட்ட
மட்டும் காட்டிட்டுத் திரியாத ஓகேவா....!
லல்லலல்லலா....லால்லலலலலா....
மடை திறந்து
தாவும் நதி அலை நான்........
லாஸ்
ஊரே சேர்ந்து
உன்னய உள்ள அனுப்பிவச்சா நீ என்னடான்னா கவின் கூட சேர்ந்து ஊறுகாய் போட்டுட்டு இருக்க
! இது நியாயமா? இத சேரன் சொல்ல வந்தா அவரு கூட சேர மாட்டேன்னு போயிடுற. கவினே வேணாம்னு
சொன்னாலும் அவன் கையப் பிடிச்சுட்டு விட மாட்டேங்குற. உனக்கெல்லாம் வெளியா அர்மியெல்லாம்
வச்சிருக்கானுங்க. அவனுங்களுக்கு கேப்டனா இருந்து எல்லையோரத்துல நிப்பேன்னு பாத்தா
கவின் கூட சேர்ந்து செவெத்தொரம் நின்னுட்டு இருக்க....! ஒழுங்கா ஊரு பேரக் காப்பாத்தப்
பழகு!
சேரன்
சேரன்...நல்லா
விளையாடுறீங்க....நல்லாத்தான் விளையாடுறீங்க.....நல்லாவே விளையுடுறீங்க....இனிமேலும்
நல்லாவே விளையாடுங்க வாழ்த்துகள்....!
ஷெரின்
உன்னய என்னத்த
சொல்ல ? இப்ப வரைக்கும் சுத்தமாத்தான் இருக்கு. எதுக்கும் இன்னும் வேகமா வெற்றிய நோக்கிப்
பாயும் தோட்டாவா இரு...ஆல் த பெஸ்ட்.
ஹர ஹர ஹர ஹர
மஹாதேவ்.....!
ஓம் சிவோஹம்....ஓம்
சிவோஹம்....ருத்ர நாமம் பஜேகம்......
வனி
ஆண்டவர் : உன்னய
மறுபடியும் விளையாடுறதுக்குதான் உள்ள அனுப்புனோம். விளையாட்ட சுவாரஸ்யமாக்க நீ என்ன
ஷெர்லாக் ஹோல்ம்ஸா? ஆமா மூஞ்சிய ஏன் கக்கூஸ் போற மாதிரி வச்சிருக்க?
வனி : அஞ்சு
விரலும் ஒன்ணில்ல....! எல்லாரும் நைசா இருப்பாங்களா என்ன? நான் கொஞ்சம் ரஃப் &
டஃப்பு. சும்மா போற போக்குல அங்க இங்க எதாச்சும் சொல்லுவேன். அதுக்கென்னவோ வாரம் வாரம்
அங்க வரவனுங்க என்னய ஓட்டுறானுங்க.....பேச விடாம கை தட்டுறானுங்க....வாட்ரா திஸ்?
கமல் : முடிச்சுட்டியா?
கெளம்பு உங்கிட்ட பேசுறதுக்கு சேரனயே அழுக சொல்லி கேட்டுரலாம்...போ போ
முகின்
நல்லாதான் விளையாடுற
ஆனா அன்லிமிட்டட் அன்பு குடுக்க யாரச்சும் எப்பவுமே வேனும்ன்ற. சரின்னு வந்தா....சேரக்
கொண்டி அடிக்குற. அப்பறம் எப்பிடி வருவானுங்க? அது சரி ‘அ’ கை தான ‘அ’ கும். அதான்ப்பா
அடிக்கிற கைதான் அணைக்கும். ரைட்டு வெளிய போயி அந்த வேலைய பாக்கலாம். இப்ப இங்க வந்த
வேலையப் பாரு
ஒரு மைனா மைனாக்
குருவி மனசாரப் பாடுது....
மாயங்கள் காட்டுது
ஹோ ஹோய்....
தர்ஷன்
தம்பி எப்பிடியும்
நீதான் ஜெயிப்ப போல. இருந்தாலும் சொணங்காத. சாண்டி கூட ஒதுங்காத. கப்ப கைல எடுத்துட்டு
வரதுக்கு வழியப் பாரு
கஸ்தூரி
(Mind
voice : இப்பிடியே இத பாத்துக்கிட்டே இருந்துடலாமா? பேச ஆரம்பிச்சா என்னய பிதுக்கிரும்.
சரி காது கேக்காத மாதிரி சொல்ல வந்தத ஒப்பிச்சிட்டு அனுப்பி விட்ருவோம்) என்ன கஸ்தூரி
வெளிய இருந்த கெத்து இல்லையே உள்ள நல்லா மொத்து வாங்குற போல? சரி என்னமோ பண்ணு கெளம்பு
காலர் ஆஃப்
த வீக்
காலர் 1 : தர்ஷன்,
ஆரம்பத்துல நல்ல பையனா இருந்த. இப்ப சாண்டி குரூப் கூட சேர்ந்து நாசமாப் போற மாதிரி
இருக்கு....ஏன்?
தர்ஷன் : இல்ல
இனிமே அப்பிடி நாசமாப் போக மாட்டேன்
காலர் 2 : கவின்,
எப்பப் பாத்தாலும் சாண்டி கூடவே சுத்துற...தனியா எதாச்சும் பண்ணாதான நல்லா இருக்கும்
கவின் : பண்ணிட்டாப்
போச்சு...
அம்மா என்றழைக்காத
உயிரில்லையே...
அம்மாவை வணங்காது
உயர்வில்லையே.....
அன்னைக்கு இவனுங்க
பேசுன இவனுங்க குருமார்கள் இன்னைக்கு இவனுங்ககிட்ட பேனாங்க...
வனிக்கு மட்டும்
பி.வாசு லைன்ல கிடைக்கலையாம் (எப்பிடி கிடைப்பாரு?)
சேரனுக்கு கே.எஸ்.ரவிக்குமார்
லைன்ல வந்தார். சேரன செட்டப் பிரிச்சு தூக்கிட்டு வருவோம்னு ஒரு இயக்குனர் படை கதறிட்டு
இருந்தானுங்க. அவனுங்கள திட்டுனாரு. அப்பறம் சேரனோட சேர்த்து எல்லாரையும் பாராட்டுனாரு.
இதக் கேட்டுட்டு ஆண்டவர் ரவிக்குமார பாராட்ட ஒரே ஆனந்தம்.
தந்தத் தந்தத்
தானத் தந்தா.....
தென்றல் வந்து
தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல.......
சரி எவிக்ஷனுக்கு
வருவோம்.
இந்த வாரம்
இங்க யாரு எவிக்ட் ஆவாங்கன்னு மராத்தி பிக்பாஸ் காரனுங்களுக்குக் கூட தெரியும். வேற
யாரு நம்ம கஸ்தூரிதான். 10 நிமிஷத்துல வெளிய வந்துட்டாங்க. கதவே இன்னைக்கு கஸ்தூரி
வெளிய போகுதுன்னு தெரிஞ்சதும் கபால்னு தொறந்துடுச்சு.
வெளிய வந்து
கஸ்தூரி வழக்கம்போல கதாகாலட்சேபத்த ஆரம்பிச்சது. ஆண்டவரோ அல்லையப் பிடிச்சுக்கிடாப்ல.
“உள்ள நண்பர்கள பாரு”ன்னு ஆண்டவர் அப்ரூட்டா கட் பண்ணிட்டார். உள்ள எல்லாருக்கும் ஹாய்
சொல்லி பாய் சொல்லி முடிச்சிக்கிட்டாங்க.
“சரி சீக்ரெட்
ரூமுக்கு எதும் போறியா?”ன்னு கேக்க கஸ்தூரி “இல்ல நான் டிவிட்டருக்கே போயிடுறேன் சிவாஜி”ன்னு
கெளம்பிடுச்சு.
“வர வாரம் எவிக்ஷன்
இல்ல ஆனா உள்ள இருக்குற உத்தமனுங்களுக்கு இது தெரியாது. என்ன கூத்து பண்றானுங்கன்னு
பாப்போம்”னு சொல்லிட்டு பை பை சொன்னார்....நம்மளும் டாட்டா பை பை...!
ஜனனி ஜனனி....ஜகம்
நீ...அகம் நீ....
ஜகத்தாரணி நீ
பரிபூரணி நீ......
·
வேற
ஒண்ணுமில்ல....! நேத்து ராஜா கன்செர்ட் போயிட்டு வந்ததால எழுதும்போது இடையில வந்து
போன பாட்டையெல்லாம் அப்டியே எழுதியாச்சு. யாரும் குழம்பிக்க வேணாம். மத்தபடி பாடல்கள்
அனைத்தும் இளையராஜா காப்புரிமைக்கு உட்பட்டவையே.
Comments
Post a Comment