பிக்பாஸ் 3 : நாள் 50 (11.08.19)

பிக்பாஸ் 3நாள் 50 (11.08.19)


“எதிர்பாராததை எதிர்பாருங்கள்”னு சொல்றது சரிதான் போல....! ஒழுங்கா நாள் கணக்கு போட்டு வரிசையா எழுதிட்டு வந்தேன். இப்போ 48க்கு அப்பறம் 49 தான்னு எதிர்பார்த்தா, இல்ல 50வது நாள்னு சொல்றாய்ங்க....! என்ன கணக்கு வழக்கோ தெரியல...!

குல்லா இல்லாத நேரு ட்ரெஸ்ஸோட வந்தார் ஆண்டவர். “50 நாள் ஆச்சு இன்னும் ஒரு உள்ள ஒரு கொலையும் விழாதது ஆச்சர்யந்தான். மீதி இருக்குற 50 நாள்லயாவது அத எதிர்பாப்போம்”னு சொல்லிட்டு “வாங்க உள்ள போவோம்”னு போனார்.
“யப்பா டேய் 50 நாள் இருந்துட்டீங்கடா! இதுவே உங்களுக்கெல்லாம் வெற்றிதான்”னு சொன்னார் ஆண்டவர்.

காலர் ஆஃப் த வீக் : மதுவுக்கு

காலர் : வந்த கொஞ்ச நாள் ஒழுங்காத்தான் இருந்த ஆனா இப்ப நடிக்கிற மாதிரி இருக்கே? வாயத் தொறக்க மாட்டேங்கிறியே?

மது : (எங்குட்டு கத்துறது ! கட்டிலு கிட்டுலயெல்லாம் உடைக்குறானுங்க என் கபாலத்த உடைக்க மாட்டாய்ங்கன்னு என்ன நிச்சயம்....) அதெல்லாம் இல்ல பஞ்சாயத்து எதுவும் இல்ல....வனிதா வெளிய போயிருச்சு, கவினும் திருந்திட்டான் வீடே விக்ரமன் சார் படம் மாதிரி இருக்கு....ஹரி படம் மாதிரி மாறும் போது ஆக்ஷன் பிளாக்ல என்னய பாக்கலாம்.//

“சரி அப்பிடியே எல்லாரும் யாரு மொத 3 இடத்துக்கு வருவாங்க சொல்லுங்க?”ன்னார். மாத்தி மாத்தி சொல்லி கடைசில தர்ஷன், சாண்டி, மதுன்னு வந்துச்சு. மது லிஸ்ட்ல வந்ததெல்லாம் ஆச்சர்யந்தான்.

//ஆண்டவர் : என்ன கஸ்தூரி இவனுங்க கரெக்டா சொல்றானுங்களா? நீ என்ன சொல்ற?

கஸ் : இவங்க உள்ள இருக்குறத வச்சு சொல்றாங்க. ஆனா நம்மதான் வெளிய இருந்து பாக்குறோமே ! அது இவனுங்களுக்கு தெரியும். ஆனா நாம என்ன நினைக்கிறோம்னு தெரியாதுல....! தெரிஞ்சு என்ன பண்ணிடப் போறானுங்க? தெரியாம இவனுங்களா சொல்லிக்கிறது அவனுங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நமக்கு தெரியுது இப்பிடி பாக்...

ஆண்டவர் : அப்பிடியே பேசிட்டு இரு நான் வீட்டுக்கு போயி என் சார்ஜர எடுத்துட்டு வந்துடுறேன்....!

கஸ் : இவனுங்க சரியாத்தான் சொல்லி இருக்கானுங்கன்னு சொல்ல வந்தேன்...!
இருந்தாலும் கன்ஃபெஷன் ரூம்ல நடந்தது இவனுங்களுக்கு தெரியாதுல...எனக்கு தெரியும்

ஆண்டவர் : அதத்தான் நீ சலபேட்டா கிட்ட சொன்னியே?

கஸ் : நான் எங்க சொன்னேன் ? நான் அருள் வாக்கு மாதிரி அங்க இங்க சொல்லி இருப்பேன்....

ஆண்டவர் : ஹா...ஹா....ஹா....ஹா ! நான் இப்பிடித்தான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன் ஆனா என்னைக்காவது ஒரு நாள் உன்னய கிழிச்சுருவேன்.....ஹா ஹா ஹா!//

“50வது நாள் வின்னர்களுக்கு மெடல் குடுக்குறோம் மாட்டிக்கோங்க...இத நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம் எஞ்சாய்”ன்னார்.

“உள்ள ஆம்பளப் பயலுக நட்பு அருமையா இருக்கு குறிப்பா கவின்-சாண்டி, முகின்-தர்ஷ்னு பாக்குறதுக்கே நல்லா இருக்கு”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே திடீர்னு “நம்ம நிழ்ச்சியோட சிறப்பு என்னன்னு பாத்தீங்கன்னா சார்....இது உலகத்தமிழர்கள் பங்கு பெறும் ஒரே நிழ்ச்சி சார்...இங்க பாத்தீங்கன்னா மலேஷியா, சிலோன், இந்தியா, தமிழ்நாடுன்னு எல்லா நாட்ல இருந்தும் ஆளுங்க இருக்காங்க சார்...இதப்பத்தி அவங்ககிட்டயே கேப்போம் சார்”னு மாடுலேஷன மாத்திட்டார்.

முகின் : ஊரே சேர்ந்து அனுப்பி இருக்கு
எங்கள....ஒழுங்கா விளையாடாமப் போனா ஊரே கழுவி ஊத்தும்...அது கண்டிப்பா பெரிய பொறுப்புதான்

தர்ஷ் : நானும் சாட்சி...

லாஸ் : அதனாலதான் நான் என்னோட ஆதரவ தர்ஷ்க்கு குடுக்குறேன்...

ஆண்டவர் : லூசே என் லாசே....! நீயும் அப்பிடி நெனச்சு விளையாடனும்னு அர்த்தம். சண்டை போட்டு விளையாடுன்னு சொன்னா தொரைக்கு சாக்ரிஃபைஸ் சோக்கு கேக்குதோ?//

“ஆனா பெண்கள் நட்பு பெரிய ராவடியா போயிடுச்சு. ஆனாலும் பேலன்ஸ் பண்றீங்க...சரி மக்கள் உங்கள பிரிக்க முடிவெடுத்துட்டாங்க, யாரு சேஃப்னு பாப்போம்”னு...... லாஸ் சேஃப்னு சொல்லிட்டு இடைவேளை விட்டுட்டு போனார்.

திரும்பி வந்து உள்ள காமிச்ச உடனே....

ஆண்டவர் : நான் இங்க பேசிட்டு இருந்தது கேட்டுச்சா?

ஹவுஸ்மேட்ஸ் : இல்ல சார்..

ஆண்டவர் : கொஞ்சம் கூட கேக்கலையா?

ஹவுஸ்மேட்ஸ் : இல்லையே...

ஆண்டவர் : என்ன கஸ்தூரி உங்களுக்கு கூட கேக்கலையா?

கஸ் : சார் கேட்ட மாதிரி இருந்தாலும் அது நமக்கு கேட்டாதான் கேட்ட கணக்குல வரும் இல்லையா? எனக்கு கேக்கலன்னு சொன்னாலும் உங்களுக்கு கேக்க...

ஆண்டவர் : இல்ல கஸ்தூரி நான் எதுவுமே சொல்லல அதனாலதான் கேக்கல.....நீ என்னய உயிரோட விட்டுடு....//

சாண்டி, கவின் கிட்ட பாட்டு ரெடியான்னு கேட்டார். சும்மா சொல்லக்கூடாது 2 பேரும் மெர்சல் பண்ணானுங்க....! செம்ம கானா...! இதுல லாஸ் பத்தி பாடும்போது “சேரப்பா பேசுனா ரொம்ப போருப்பா”ன்னு ஒரு வரிய போட்டானுங்க...! இத ஞாபகம் வச்சுக்கோங்க!

“பாட்டு பிடிச்சிருந்ததா?”ன்னு கேட்டார். “யாரு ரெடியா இருக்கீங்க?”ன்னு கேக்க, சல்பேட்டா மொத கையத் தூக்க “வெளிய ஆவோ சாக்ஷி”ன்னார். சல்பேட்டா அவுட்டு.

ஷெரின் கதறிக் கதறி அழுகை. எல்லார்கிட்டயும் சல்பேட்டா சொல்லிட்டு இருந்துச்சு. (அடியே அபி உனக்கெல்லாம் வந்த வாழ்வு. நீயெல்லாம் உள்ள இருக்க ம்ம்ம்ம்....) பாத்து நடந்துக்க அபி பேபின்னு அட்வைஸ் குடுத்தாங்க. கவின் கிட்டயும் ஒரு ஹக். அப்பறம் போட்டோ எடுத்தாய்ங்க. “சாகுறப்போ கூட அடுத்தவன இம்சை பண்ணாம சாகவே மாட்டானுங்க”ன்ற மாதிரி. தர்ஷன் கிட்ட “ஷெரின நான் யூஸ் பண்றேன்னு சொல்லி என்னய காயப்படுத்திட்ட. அவ்வ அவ்வா மனசு வலிக்குதுடா. இப்பிடி வார்த்தைய வுடாத. நான் மட்டும் இன்னைக்கு போகாம இருந்திருந்தா இந்த வாரம் முழுக்க இந்த பஞ்சாயத்த ஓட்டியிருப்பேன். பொழச்சுப் போ”ன்னு சாபம் விட்டுச்சு.

உண்மையாவே சல்பேட்டாவுக்கு பதிலா இந்த அபிய அனுப்பி இருக்கலாம். அடுத்த வாரமாச்சும் அனுப்பி விட்டுருங்கப்பா. வீடான வீட்ல எப்பப் பாத்தாலும் ஊலு ஊலுன்னு அழுதுகிட்டே இருக்கு. 3 நாளைக்கு முன்னால அதுகிட்ட கட்டி உருண்டுட்டு இப்ப என்னடான்னா செத்ததுக்கு அழுத மாதிரி குமுறிக் குமுறி அழுதுச்சு. ஆனா இது எதுக்குமே சல்பேட்டா அசரலயே....! அது கண்ணுல இருந்து கடுகளவு கன்ணீர் வரல......சல்பேட்டாடா!

வெளிய வந்த சல்பேட்டாவ வெல்கம் பேக் சொன்னார் ஆண்டவர். சல்பேட்டா அப்பா வந்திருந்தார். “ப்ரவுட் ஆப் மை பேட்டா சல்பேட்டா”ன்னார். குறும்படம் காமிச்சாரு. அப்பறம் “உள்ள நண்பர்களப் பாரு”ன்னு காமிச்சார். எல்லாரும் பை சொல்ல கவின் “சாரி மச்சாஆஆன்”னு சொன்னான். “அப்பா இருக்காருன்னு சொன்ன அவருகிட்டயும் சாரின்னு சொல்லிடு”ன்னான். “எதுக்கு சாரி சொல்றார்?”னு கேட்டார் பெரிய சல்பேட்டா. “ஹர்ட் பண்ணிட்டேன் அதுக்கு”ன்னான் கவின். “நீங்க கேம்தான விளையாண்டீங்க சோ நோ சாரி”ன்னார் பெரிய சல்பேட்டா. அப்பறம் “டாட்டா பை பை” சொல்லி அனுப்பி விட்டாச்சு.

சல்பேட்டா போயிடுச்சு.....! இது உண்மையாவே எனக்கு பெரிய வருத்தம்ப்பா.....! அது ஆடுன வித விதமான ஆட்டங்கள், பாடுன பாட்டு, செனத் தவளை அழுகை........டோட்டலி மிஸ்ஸிங்க் சல்பேட்டா!

அடுத்த வாரம் பாக்கலாம்னு ஆண்டவர் அப்பீட்.

உள்ள காமிச்சானுங்க. தர்ஷ், சாண்டி, கவின், மது பேசிட்டு இருந்தாங்க. “சல்பேட்டா சரியான போல்டு. தவ்ளோண்டு தன்ணி கூட வரலயே கண்ணுல”ன்னு சொன்னான். “ஆனா அபி ஏன் இப்பிடி பக்கெட்ல நெப்புறா கண்ணீர? அவ்ளோ சண்டை போட்டுட்டு இப்பிடி அழுதா என்னான்னு நெனைக்கிறது?”ன்னான்.

இங்குட்டு அபி ஷெரின் கிட்ட “நான் என்ன அவன் லட்சியத்த கெடுத்தேன். அப்பிடி எதுவும் சொல்லவே இல்ல. பழகுனது தப்பா. கவின் மட்டும் சாரி கேக்குறான். சாண்டி நல்லா பாட்டு பாடுறான். நீ ஏன் அழுகுற? சாக்ஷிக்கு யாரும் ஓட்டுப்போடல. நான் வெளிய போவேன். ஆனா போக மாட்டேன்னு நெனைக்கல”ன்னு இப்பிடி சம்பந்த சம்பந்தமில்லாம பேசிட்டு இருந்துச்சு. இதக் கேட்ட ஷெரின் “போச்சு சல்பேட்டா காலி பண்ணி அடுத்த செகண்ட் இவ குடி வந்துட்டா. இப்பிடியே போனா இந்த வீட்ல இருந்து நான் நேரா கீழ்ப்பாக்கந்தான் போகனும் போல. இனி இந்த லூசுங்க கூட இருக்க முடியாது. இவனுங்கள நாமினேட் பண்ணவும் முடியாது. நானே என்னய நாமினேட் பண்ணிக்கிற மாதிரி ஆவண செய்யவும்”னு அழுதாங்க ஷெரின்.

அபி – முகின்

அபி : யப்பா முகினு, என்னமோ நான் உன் கையப் பிடிச்சு நிப்பாட்டுன மாதிரி பேசுறானுங்க...

முகின் : இத சரியா எடுத்துக்கிட்டா சரி! தப்பா எடுத்துக்கிட்டா தப்பு...!

அபி : ரொம்பத்தான் பேசுறாங்ய....உன்ன திசை திருப்புறேன்னு ! போ போ போயி வெளையாடு

முகின் : என்ன சொன்ன சரியா கேக்கல (பக்கத்து சேர்ல வந்து உக்காந்துட்டான்)

அபி : (ரைட்டு இன்னைக்கும் எதயோ உடைக்க ப்ளான் பண்ணிட்டான் அது நம்ம மண்டையா இருக்குறதுக்குள்ள ஓடிரலாம்) இல்ல நீ நல்லா வெளையாண்டா உனக்கு நல்லது, எனக்கு நல்லது, நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது, உங்க ஊருக்கு நல்லது அத சொல்ல வந்தேன். வயிறு கலக்குது போயிட்டுவந்துடுறேன்//

அங்குட்டு கஸ்தூரி ஷெரின் & மதுகிட்ட.

கஸ் : 2 சீசனா ஒரே டார்ச்சர். மக்கள் எல்லாரும் மேடம் நீங்க போங்க பிக்பாஸுக்கு........நீங்க போங்க பிக்பாஸுக்குன்னு. நமக்கு இருக்குற வேலைக்கு இதுக்கெல்லாம் டைமே இல்லன்னு விட்டுட்டேன் ஆனா இந்த சீசனுக்கு மக்கள் முதல்வன் அர்ஜுன் வீட்டுக்கு வந்தாப்ல என் வீட்டுக்கு வந்து என்னய இங்க அனுப்பி வச்சாங்க. நானும் கழுதைய போயி ஜெயிச்சுட்டு வருவோம்னு வந்துட்டேன்.

ஷெரின் : Mind Voice : அடிச்சு விடு.....சோகமா இருக்குற நேரமாப் பாத்து சப்ளா கட்டை போடுற....செய் செய்!//

சேரன் சாண்டிய கூப்ட்டு “சம்பந்தமில்லாம என்னய ஏம்பா லந்தக் குடுக்குறீங்க? நான்லாம் யாரு தெரியுமா? என்னயப் போயி கிண்டல் பண்ணலாமா? உலகமே என்னய பாத்துட்டு இருக்கு. ரசிகர்கள் எல்லாம் கொந்தளிச்சு பஸ்ஸ எரிச்சுட்டா என்ன பண்ணுவ? இனிமே அப்பிடி பண்ணாத”ன்னார். சாண்டியும் “விளையாட்டுக்கு பண்ணதுதான் சாரி”ன்னு வந்துட்டார்.

இத கவின் கிட்ட சாண்டி சொல்லி “நீயும் போயி சாரி கேட்டுரு”ன்னு சொன்னதும். சேரன் கவின் கிட்ட சாண்டிகிட்ட சொன்ன அதயே சொன்னார். கவின் அத காதுல வாங்காம “சாரி”ன்னு சொல்லிட்டு வந்துட்டான்.

இத மதுகிட்ட சொல்லிட்டி இருந்தானுங்க பசங்க. சேரன் ரெண்டாவது தடவையா சில்றத்தனத்த காட்டுறாரு. ஆனா பசங்க மன்னிப்பு கேட்டு பெரிய மனுஷங்களாகிட்டானுங்க.



சோர்ந்து போன ஷெரின் கூட தர்ஷன் உக்காந்திருந்தான். “நீ ஏண்டா சல்பேட்டா என்னய யூஸ் பண்ணுதுன்னு சொன்ன?”ன்னு ஷெரின் கேக்க “ஏன்னா அவ உன்னய யூஸ் பண்ணா அதான் சொன்னேன்”னு சொன்னான். “ஒரு வேளை நான் சொன்னது தப்பா இருந்திருந்தா இன்னைக்கு அவ வெளிய போயிருக்க மாட்டா”ன்னு சொன்னான். ஷெரினும் “அதும் சரிதான் அவ இருந்திருந்தா இன்னும் 2 நாள்ல பஞ்சாயத்து வந்திருக்கும்”னு சொன்னதோட முடிந்தது நாள்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)