பிக்பாஸ் 3 : நாள் 47 (09.08.19)

பிக்பாஸ் 3நாள் 47 (09.08.19)


“சென்னை சிட்டி கேங்ஸ்டா” பாட்டுதான் அலாரம். எட்டாவது தெரு முக்குல எதையோ மிதிச்சிட்டு உதறுன மாதிரி சல்பேட்டா விக்கு விக்குன்னு ஆடிட்டு இருந்துச்சு. அப்டியே பாத்தா உள்ள லாஸ் சாண்டி கூட செம்ம ஸ்டைலா ஆடிட்டு இருந்தாங்க. சமீப காலமா சல்பேட்டா லாஸா நிக்குறா, லாஸா ஆடுறா, லாஸா பேசுறா........! ஆனா சல்பேட்டாவ சீந்துறதுக்குதான் ஆளில்ல.

தின நடவடிக்கையில கஸ்தூரி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸப் பத்தி வில்லுப்பாட்டு பாடனும். பத்த வைக்கிறேன்ற பேருல “கவின் பேருல வின் இருந்தாலும் அவன் மனசுல லாஸ்தான் இருக்கு”ன்னு கொளுத்திப் போட்ட போது சல்பேட்டா முகமோ ஜிஞ்சர் ஈட்டிங் மங்கோலியன் மங்க்கி மாதிரி போச்சு.

இந்த கஸ்தூரி என்னமோ ஸ்கூல் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த எஜுகேஷன் ஆபிசர் மாதிரியே ஏன் நடந்துக்குறாங்கன்னு புரியல. இவனுங்களும் இவிங்க ரவுடின்றத மறந்துட்டு இந்தம்மாவுக்கு போயி இப்பிடி பம்முறாய்ங்க. அத இம்ப்ரெஸ் பண்றதுக்காக குரங்கு சேட்டையெல்லாம் பண்ணிட்டு இருக்கானுங்க. இந்த முட்டா பிக்பாஸும் எதுக்கெடுத்தாலும் கஸ்தூரியவே எல்லாத்துக்கும் நடுவரா வேறப் போடுறாப்ல. வந்த உடனே கைல பிரஷ்ஷ குடுத்து கக்கூஸ கழுவ சொன்னாதான அதுவும் தன்ன ஒரு ஹவுஸ்மேட்டா உணரும்! அத விட்டுட்டு சாமுத்ரிகா பட்டு கட்டிக்கிட்டு கல்யாண வீட்ல உலாத்துற மாதிரி பொழுதன்னைக்கும் உலாத்திட்டு இருக்கு. இதுல இது உள்ள வந்தா கண்டெண்ட் கொட்டோ கொட்டுனு கொட்டும்னு குறி சொல்லிட்டானுங்க.

அப்பறம் சேரன், மது, கவின், கஸ்தூரி உக்காந்திருக்கும் போது கஸ்தூரி கவின் கிட்ட “ஏண்டா 4 பொண்ணுங்கள ஓட்டுறது உனக்கென்ன காமெடியா? பெரிய ஜேம்ஸ் பாண்டோ நீ? ஒரு பொண்ணு 4 பசங்கள ஓட்டுனா அது கமெடியாவா இருக்கும் காம நெடி அடிச்சிறாது? அப்ப நீ ஓட்டுனா மட்டும் சரியா வருமா? இன்னா மேன் நீ....”ன்னு சொல்ல உடனே உள்ள புகுந்த சேரன் “இல்ல இல்ல பய என்னமோ ஜாலி கேமாதான் ஆரம்பிச்சான் ஆனா ஃபினிஷிங்க் சோகமா போச்சு”ன்னு சொன்னாப்ல. கவின் மனசுக்குள்ள “அடேய் இன்னுமா உங்க வீட்டு உலையில என் அரிசி வேகுது? விடவே மாட்டய்ங்க போலயே”ன்னு ஓடிட்டு இருந்துச்சு.

லக்ஸுரி பட்ஜெட் ஃபுல் பாயிண்டும் கிடச்சது ஆனா சல்பேட்டாவும் ஷெரினும் சப் டைட்டிலுக்கு வேலை வச்சதால 250 பாயிண்ட் அவுட். மீதி உள்ள பாயிண்டுக்கு பலசரக்க வாங்குவோம்னு போர்ட எடுத்து கஸ்தூரி எழுத சோஃபால இருந்து மது, சல்பேட்டா ரெண்டு பேரும் பொமரேனியன் மாதிரி கத்திட்டு இருந்தாங்க. முடிஞ்சப்பறம் சல்பேட்டா வந்து “ஏ மது.... நான் பிரட் போடு ப்ரட் போடுன்னு சொன்னேன். நீ கத்திக்கிட்டே இருந்ததுல அவங்க காதுல விழலே...நீ சிக்கனு சிக்கனு சிக்கனு சிக்கனுன்னு கதறிகிட்டே இருந்தா நான் சொன்னது எப்பிடி கேக்கும்"னு ஏதோ ஒரு பார்பேரியன் பாடி லேங்குவேஜ்ல பேசிட்டு இருந்துச்சு. மதுவோ அப்பிடியா நடந்து போச்சு? எனக்கெதுவும் தெரியலயே ! நான் எப்பவும் போல சல்பேட்டா கவினப் பாத்து கதறிட்டு இருக்குன்னு நெனச்சேன். அடுத்த தடவ சரி பண்ணிக்கலாம்”னு சொன்னதும் கஸ்தூரி வந்து....
கஸ் : நீ சொன்ன எதயாச்சும் நான் எழுதாம இருந்தேனா மது ?

மது : இல்லயே !

சல்பேட்டா : இந்த மது சிக்கனு சிக்கனு சிக்கனுன்னு கத்துச்சு....

கஸ் : அப்ப நீ சொல்லாத எதயும் நான் எழுதுனேனா?

மது : இல்லையே !

சல்பேட்டா : இந்த மது சிக்கனு சிக்கனு சிக்கனுன்னு கத்துச்சு....

கஸ் : நீ சொல்லாதத எழுதாம இருக்கத் தெரிஞ்ச எனக்கு நீ சொன்னத எழுதத் தெரியாமயா இருக்கும்?

மது : ஈஸ்வரோ ரக்ஷித்....! (Mind voice : 2 நாளா நான் உன்னய அறிவாளின்னு வேற நெனச்சுட்டேனே....)

சல்பேட்டா : இந்த மது சிக்கனு சிக்கனு சிக்கனுன்னு கத்துச்சு....//

அடுத்து தலைவர்களுக்கான போட்டி பெரிய வெள்ளை ஸ்க்ரீன்ல 3 பேரும் தனித் தனி கலர்ல பெயிண்ட் அடிக்கனும் கடைசியா எந்தக் கலர் அதிகமா இருக்கோ அந்த ஆளுதான் தலைவர். சாண்டி தலைவரானார்.

சேரன் அவுட்டு....”விடு நீ இது வரைக்கும் வந்ததே பெருசு”ன்ற மாதிரி போயிட்டாரு. அப்பறம் உள்ள கஸ்தூரி தேவையே இல்லாம சேரனக் கூப்ட்டு “சாரி சார் உங்கள சொல்லாம விட்டதுக்கு”ன்னு சொல்ல “விடுங்க அதுல என்ன இருக்கு? இதெல்லாம் என் வீர வாழ்ககையில சகஜம். தலைவரானா ஒரு வாரம் நாமினேஷன்ல இருந்து தப்பிக்கலாம், ஏதோ இவிங்க கரச்சல்ல போன வாரம் என்னய நாமினேட் பண்ண மறந்துட்டாய்ங்க.....இந்த வாரம் கண்டிப்பா லிஸ்டுல இருப்பேன்”ன்னு சொல்லிட்டு ஸ்லோ மோஷன்ல போயிட்டார்.

அப்பறம் குக்கிங் டாஸ்க் 2 டீமா பிரிஞ்சு, இருக்குற பொருள வச்சு போர்டுல இருக்குற டிஷ்ஷ செய்யனும். ஒரு டீம் கஸ்தூரி, இன்னொரு டீம் தர்ஷன். சக்கரைப் பொங்கல் செய்யனுமாம்.

கஸ்தூரி டீம் சந்திராயன் விஞ்ஞானிகள் மாதிரி ரொம்ப மும்முரமா இருந்தாங்க. “வெல்லத்த கரைச்சுக்குடு”ன்னு கஸ்தூரி சொன்னதும் “ஆங்....அதான் எனக்குத் தெரியுமே”ன்னு சொல்லிட்டு வெல்லத்த எடுத்துட்டு போயி மைக்ரோவேவ் அவன்ல வச்ச அபிராமிக்கு அர்ஜுனா விருது பரிந்துரைக்கலாம் தப்பில்ல.
சாம்பாருக்கு போடுற கடலை பருப்பெல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் செஞ்சாங்க கஸ்தூரி “எனக்குத் தெரிஞ்சு பாகிஸ்தான்லதான் பாசிப்பருப்பு போட்டு பொங்கல் செய்வாங்க வேணும்னா நீங்க போட்டுக்கோங்க”ன்னு கஸ்தூரி அட்வைஸ் குடுத்துட்டு இருந்தாங்க. சல்பேட்டா அது பங்குக்கு கைல கெடச்ச விம் பார் மாதிரி எதையோ உள்ள போட்டுச்சு. பஸ்ஸர் அடிச்சப்பறம் சட்டிய தொரந்து பாத்தா அது கலர் கழனித் தன்ணி மாதிரி எதோ ஒரு கருமமா இருந்துச்சு.

அடுத்து தர்ஷன் டீம் வந்து, சொன்ன மாதிரி சக்கரை பொங்கலயே செஞ்சுட்டானுங்க. இதுல மது தர்ஷன் டீமுக்கு சொல்லிக்குடுத்ததா சேரன் புகார் சொல்லி மூஞ்சிய தூக்கிக்கிட்டாரு. தர்ஷன் டீம் வின்னு. தோத்த டீம் மொத்தமும் தர்ஷன் டீம் பொங்கல பிரிச்சு மேய, சேரனோ “தோத்தக் கவலை கொஞ்சமும் இல்லாம அவிங்ய பொங்கலயே லைன்ல நின்னு வாங்கித்திங்குற இந்த சமூகம் எப்பிடி என் திருமணம் படத்தப் பாத்து திருந்தும்?”னு அறச்சீற்றம் கொண்டார்.

“உண்மைய சொல்லு இல்ல சொன்னத செய்” வேற ஒன்ணுமில்ல Truth or Dare-இன் தமிழாக்கமாம். உங்க தமிழார்வத்துல தீய வைக்க.
அபிக்கு வந்தப்போ முகின் கிட்ட கடைசி நாள் ஸ்பீச் குடுன்னு தர்ஷன் சொல்ல “ஐ லவ் யூ”ன்னு 1873 வது தடவையா சொல்லி “உனக்காக காலமெல்லாம் காத்திருப்பேன்.... உன் கரண்ட் காதல் புட்டுக்க ப்ரே பண்ணுவேன்”னு சொன்னாங்க.

சேரனுக்கு வந்ததும் “உங்க எல்லாரையும் பத்தி உண்மைய சொல்றேன் கோவிச்சிக்கக் கூடாது”ன்னு சொல்லிட்டு குறி சொல்றவன் மாதிரி உக்கந்துக்கிட்டு ஒவ்வொருத்தரயா பாத்து ஒன் வேர்டுல கருத்த சொன்னார்.

அப்பறம் கஸ்தூரி தர்ஷன் கிட்ட எதுக்கு உள்ள வந்தன்னு கேக்க “கடனடைக்க வந்தேன்...இப்ப் கப்படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு சொன்னான்.

லைட்டெலாம் அனஞ்சுப்போச்சு......வெளிய இருட்டுக் கூடிப் போச்சு......எல்லாரும் தூங்கிட்டாங்க.....அமைதி....அமைதி....அமைதியோ அமைதி.....அமைதிக்கெல்லாம் அமைதி.....! ஆனா தூரத்துல ஒரு மோகன கானம்...ஈரமில்லா அந்தக் காத்தக் கிழிச்சிக்கிட்டு வருது அந்த பாடல்...! அது ஒரு காதலின் வலி.....!

அவ்வ அவ்வா மனசு துடிக்குது....அவ்வ அவ்வா மனசு வலிக்குது......

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)