பிக்பாஸ் 3 :நாள் 42 தொடர்ச்சி & 43ம் நாள் (05.08.19)

பிக்பாஸ் 3நாள் 42 தொடர்ச்சி & 43ம் நாள் (05.08.19)


ஜெயில் வாசல்ல “அம்மா அம்மா நீ எங்க அம்மா”ன்னு வானத்தப் வெறிச்சு பாத்தபடி சோககீதம் வாசிச்சுட்டு இருந்தான் முகின். ஆறுதலா அபி, ஷெரின், சாக்ஷி 3 பேரும் பக்கத்துல உக்காந்து இருந்தாங்க. ஆண்டவர் அரட்டுனதுல கொஞ்சம் கிருத்துவம் பிடிச்சு இருந்த சல்பேட்டா, அபியப் பாத்து “ஊருக்குள்ள ஒரு சல்பேட்டா சைலண்டா இப்பிடி உக்காந்திருக்கேன்ற பதட்டமே இல்லாம பக்கத்துல உக்காந்து பராக்கு பாக்குறதப் பாத்தியா இவள! இருடி உன்னய செமிச்சு விடுறேன்”னு சொல்லிட்டு, “என்னா அபி முகின் கூட நான் பேசுறதுக்கு முக்குறியாமே ? என்னவாம்?”னு ஆரம்பிக்க, பக்கத்துல இருந்த ஷெரின் “ஆத்தீ இவ பைத்தியம் போல”ன்னு பீதியா நடக்குறத பாக்க ஆரம்பிச்சாங்க.

அபியோ “இப்ப இங்க என்ன பிரச்சனை போயிட்டிருக்கு நீ என்னடான்னா எகத்தாளம் பண்ணிட்டு இருக்க? முகினு கக்கூஸ்ல இருந்த அண்டாவக் காணோம்னு அழுகல, அவங்க அம்மாவ காணோம்னு அழுதுட்டு இருக்கான். நானே அவனுக்கு அரை அரை ஸ்பூனா அன்ப குடுத்து தேத்திட்டு இருக்கேன் இதுல உன் பஞ்சாயத்து வேறயா?ன்னு கேக்க, இத காதுல வாங்காத சல்பேட்டாவோ “நான் ஃப்ரீயாதான் இருக்கேன் இப்பவே முடிச்சுக்குவோம். நாளைக்கு நான் வேற பஞ்சாயத்துல பிசியாகிடுவேன்”னு சொல்ல, “ஏண்டி என் ஆளு கிட்ட நீ பேசுனா எனக்கு வராதா காண்டு? என்னைக்குமே அவன் என்னோட ஜேம்ஸு பாண்டு”ன்னு அபி பதற, ஷெரினோ “அக்கப்போரு பண்ணாம 2 பேரும் செத்த சும்மாதான் இருங்களேன்டி எருமைகளா”ன்னு எச்சரிச்சாங்க. அபி “ஆள விடுங்கடா நான் அங்குட்டு போயி அழுதுக்குறேன்”னு உள்ளுக்க போயிட்டாங்க.

முகின் “ஒருத்தன ஒரு 10 நிமிஷம் சோகமா ஃபீல் பண்ண விடுறீங்களாடி? அவ கூட பேசாத, இவ கூட உக்காராதன்னு உங்க தொயரம் பெருந்தொயரமா இருக்கு. சாக்ஷி, நீயெல்லாம் ஒரு கால் மணிநேரம் கட்டைய சாத்துனா காஷ்மீர் பிரச்சனையே முடிஞ்சிரும்....உன் வாழ்க்கையும் நல்லபடியா விடிஞ்சிரும். கொஞ்சம் யோசி”ன்னு முடிச்சுட்டு வானத்த வெறிக்க ஆரம்பிச்சுட்டான்.

“ஏன் பேபி நான் எதும் தப்பு கிப்பு பண்ணிட்டேனா?”ன்னு பாவமா சல்பேட்டா ஷெரினப் பாத்துக் கேக்க, “நீ ஒரு தப்பும் பண்ணல தாயி! மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்தாப்ல நீ எங்கூட சேந்ததுக்கு, எனக்குதான் நீ செருப்படி வாங்கிக் குடுக்கப்போற”ன்னு மைண்ட்ல நெனச்சுக்கிட்டு “நத்திங் பேபி யூ ஹேவ் டன் எ வெரி குட் ஜாப்”னு ஜகா வாங்கிட்டாங்க.

உள்ள லாஸ் கிட்ட அபி அழுதுகிட்டே (அழுகும்போது அபி அறை குறையா ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண மைக்கேல் ஜாக்சன் மாதிரி இருக்காங்கன்றத யாராச்சும் கவனிச்சீங்களா?) “ஓலப்பாயில தண்ணிய ஒழுகவிட்டாப்ல இவளுக்கு பொழுதுக்கும் நய நயன்னு யாரயாச்சும் சொரண்டனும். ஏண்டி இப்பிடி பண்ற?ன்னு கேட்டா போதும்! சட்டுனு ஹர்ட் ஆகிட்டேன்னு ஹார்ட்ட பிடிச்சுகிட்டு உக்காந்துக்குறா! நானும் புகை போட்டு, வலை போட்டு, கொக்கி போட்டு இன்னும் என்னென்னமோ போட்டு அவன படாத பாடு பட்டு பிராக்கெட் போட்டு பிடிச்சு வச்சா அது பொறுக்காம மருந்தடிக்க வந்துட்டா. அங்க பாரு அம்மா வெளிய போன சோகத்துல அங்கலாய்ப்பா இருக்கானே, ‘நெஞ்சோடு கலந்திடு உறவாலே’ன்னு டாப்ஸ மட்டும் போட்டுக்கிட்டு சோனியா அகர்வால் மாதிரி சோகத்த தணிக்க ஒரு பாட்டப் பாடி பர்பார்மென்ஸ் பண்ணலாம்னு பாத்தா. என்னய கெளப்பி விட்டுட்டு அவ அவன் கூட உக்காந்திருக்கா. இவனாச்சும் அயோக்யப்பய எந்திருச்சு வந்தானாப் பாத்தியா? நாமினேஷன் பண்ணி அனுப்பி விட்டுட்டு இப்ப என்னவோ அவார்டு ரேஞ்சுக்கு அங்க அழுதுட்டு உக்காந்திருக்கான். ஏன் என் மடியில படுத்து அழுதா அழுகை வராதோ? அத விடு, அவதான் என்னய வம்பிழுக்குறாளே, இவன் பொசுக்குன்னு எந்திரிச்சு என்ன ஏதுன்னு கேக்க வேணாம்? எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்”னு மூக்க சிந்திட்டு இருந்தாங்க. லாஸ் வழக்கம் போல “நீ அவங்கிட்ட தனியா கதை”ன்னு சொல்லிட்டிருந்தாங்க.

அபி உள்ள பெட்டுக்கு கீழ உக்காந்து அழுக அங்க வந்த முகின் ஒண்ணுமே தெரியாத மாதிரி “என்னாச்சு பேபி?”ன்னு வந்து அபி பக்கத்துல உக்காந்து “ஏன் அழுகுற?”ன்னு கேக்க “அடேயப்பா உனக்கு ஏன்னு தெரியவே தெரியாது? ஏண்டா டேய் உனக்கு ஆறுதலா இருக்குமேன்னு உன் பக்கத்துல உக்காந்தா அவ என்னய அந்தப் பேச்சு பேசுறா ஒரு வார்த்தை கேட்டியா ?வந்துட்டான் இப்ப! போடா டேய்”னு விரட்ட, கடும் கோவம் வந்து முகின் சும்மா செவனேன்னு இருந்த கட்டில உடச்சுட்டான். அபி பயந்து போயி “டேய் இப்ப எதுக்குடா நீ கட்டில உடச்ச?”ன்னு கேக்க “கோவமா இருந்தா கட்டில இல்ல உன் கைய கால கூட உடப்பேன்”ற மாதிரி முகின் பாக்க “ஆகா ரொம்ப கோவத்துல இருக்கான் போல! குனிஞ்சு அழுகுறது கோடி நன்மை”ன்னு புரிஞ்சுக்கிட்டு குனிஞ்சுஅழுக ஆரம்பிச்சுட்டாங்க.

இந்த சத்தம் கேட்டு “என்ன ஏதுன்”னு வெளிய முனுமுனுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. சல்பேட்டா சைலண்டா சேரன் கிட்ட....

சாக்ஷி : என்ன சார் உள்ள சத்தம்...

சேரன் : முகின் ஏதோ அபிகிட்ட பேசிட்டு இருக்கான் போல

சாக்ஷி : ஓ...! என் பேரு எதும் அடிபடுதா?

சேரன் : ஏன் நீ எதும் பண்ணியா?

சாக்ஷி : நான் ஏன் சார் பண்றேன்? முகின் கிட்ட நான் பேசக்கூடாதான்னு ஒரு பேச்சுக்கு கேட்டேன். அதுக்குப் போயி.....

சேரன் : அடிப் பாதகத்தி...உன் வேலைதானா இது? அப்பறம் ஏன் உன்னயப் போட்டு சாத்தாம அந்தப் பிள்ளைகிட்ட சத்தம் போடுறான்?

சாக்ஷி : எது என்னயப் போட்டு சாத்தவா? யோவ் பெரிய மனுஷனாச்சேன்னு உன் பக்கத்துல வந்து பட்டறைய போட்டா எனக்கு அடி வாங்கி குடுப்ப போல....இதுக்குதான் இந்த கவின் பய கூடவே இருக்கனும்ன்றது, நான் எவ்ளோ சைக்கோத்தனம் பண்ணாலும் சைலண்டா அவன் வந்து சாரி கேப்பான். அதெல்லாம் ஒரு காலம். இவிங்க என்னடான்னா ஒரு கேள்வி கேட்டதுக்கே கட்டிலு, சேரயெல்லாம் உடைக்கிறானுங்க.//

முகின சமாதானமாக்க பசங்க எல்லாம் அவன வெளிய கூப்ட்டு வந்தானுங்க. இங்குட்டு மது சரவணன் கிட்ட “எதுக்கு வந்தோம்ன்றதயே மறந்துட்டு எப்பிடி சார் எல்லாரும் காதல் பண்றத முழு நேரத் தொழிலா பாக்குறானுங்க? தெனமும் இன்னைக்கு எவ எவன் கூட இஷ்க்காகி இம்சையக் கூட்டுவாங்க்யன்னா அலையுறது? வேற எதாச்சும் வேலை பாக்க முடியுதா இந்த வீட்ல? சமைக்குற பஞ்சாயத்து, வீடு கூட்டுற பஞ்சாயத்துன்னு வனிதா இருந்த வரைக்கும் வெரைட்டியா பல பஞ்சாயத்துகள பாத்த வீடு இது...இன்னைக்கு என்னடான்னா எழவு வீடு மாதிரி இருக்கு”ன்னு சலிச்சுக்கிட்டாங்க.

முகின் எல்லார்கிட்டயும் நடந்தத சொல்லிட்டிருந்தான். சொல்லிட்டு போனதும் கவின் “பாத்தியா சாண்டி எல்லாம் நம்மாளு சல்பேட்டாவால வந்தது. ஊருக்குள்ள யாரு சந்தோஷமா இருந்தாலும் சல்பேட்டாவுக்கு சுகர் ஏறிக்கும். எப்பிடி காயின கலச்சு விட்டுச்சு பாத்தியா? அப்ப என் வாழ்க்கையில எப்பிடி சடுகுடு ஆடியிருக்கும் சல்பேட்டா, யோசிச்சுப்பாரு!”ன்னு சொல்லிட்டு இருந்தான்.

ஷெரின் வந்து அபிகிட்ட “நீயாச்சும் கொஞ்சம் பெரிய பொன்ணு மாதிரி நடந்துக்கோ. இப்பதான் சல்பேட்டா திருவிளையாடல்ல இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். மறுபடியும் நீ ஆரம்பிக்காத, அவ இன்னும் எங்கூட மட்டுந்தான் வம்பிழுக்கல. அவள ஒரு பைத்தியமா நெனச்சுக்கோ அவ சொன்னதுக்கெல்லாம் நீ ரியாக்ட் பண்ணாத”ன்னு அட்வைஸ் குடுத்தாங்க.

இந்தப்பக்கம் கக்கூஸ்ல சல்பேட்டா கிட்ட மது “ஒரு நாள் முழுசா ஆகல கமல் சார் சொல்லி அதுக்குள்ள செகண்ட் இன்னிங்க்ஸ ஆரம்பிச்சுட்ட....வெளிய போனா உன்னய எல்லாரும் சாக்ஷின்னு கூப்டனும் சல்பேட்டான்னு கூப்ட்றக் கூடாது சரியா? அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோ”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

“இவள்லாம் இந்த சல்பேட்டாவுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி ஆகிடுச்சு....ம்ம்ம்ம்...நாளைக்கே “கல்ச்சுரல் டிஃபரன்ஸ கொண்டு வராத”ன்னு இவளுக்கு ஒரு ஸ்கெட்ச்ச போடுவோம்”ன்னு பொறுமையா யோசிச்சுக்கிட்டே கைய கழுவுனாங்க.

இவ்வளவு ரணகளத்துலயும் குதூகலமா ஷெரினும், தர்ஷனும் ஒரு கார்னரா பாத்து உக்காந்து காபி மக் வெளையாட்டு வெளையாடிட்டு இருந்தாங்க. அத ஜன்னல் கண்ணாடி வழியா கவினும், சாண்டியும் பாத்து கலாச்சுட்டு இருந்தானுங்க. ஊருக்குள்ள எவன் வண்டி பஞ்சரானாலும் இவிங்க வண்டி மட்டும் ஸ்மூத்தா ஓடுது.

43ம் நாள்

“டார்லிங்கு டம்பக்கு”ன்னு அலாரம் அலற சல்பேட்டா சாமியாடுன மாதிரி ஆடிட்டு இருந்துச்சு. அபி செருப்பு கிருப்பயெல்லாம் பறக்க விட்டு ஹாலுக்கு ஓடியாந்து கண்ணா பின்னான்னு குதிச்சிட்டு இருந்தாங்க (நார்மலா இருக்காங்கலாம்). காலையில அலாரத்துக்கு ஆடுனா டபுள் பேட்டான்னு பிக்பாஸ் சொல்லி இருக்காப்ல போல. என்ன பஞ்சாயத்தா இருந்தாலும் ஆடுற வேலைய ஒழுங்கா செய்யுறானுங்க.

தின நடவடிக்கையில ஷெரினு ஜிப்ரீஷ் சொல்லிக்குடுக்கனுமாம் ! அத சும்மா பேச சொன்னாலே அப்டிதான் இருக்கும். இத ஷெரினே வேற சொன்னாங்க.

அப்பறம் கக்கூஸ்ல வச்சு அபியும் சல்பேட்டாவும் கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க. “முகின் கூட சுத்திக்கிட்டு என் கிட்ட மூஞ்சிய தூக்குனாலும், பேபி ஓ பேபி நீதான் என் பெஸ்டு தோழி. கையக்குடு நம்ம பிரச்சனையெல்லாம் இதோட காலி”ன்னு சொன்ன கையோட வந்து நாமினேஷன்ல அபி பேர சல்பேட்டா சொன்னதுதான் ராஜதந்திரம்.

இந்த வார நாமினேஷன் அபி, சாக்ஷி, சரவணன், லாஸ்.

இத பிக்பாஸ் சொன்னதும் லாஸ் சட்டுன்னு எல்லார் முன்னாடியும் வந்து நின்னு “முல்லைக்கு தேர் குடுத்தான் பாரி; போன வாரம் பொதுவுல உங்ககிட்டயெல்லாம் தப்பா பேசுனதுக்கு ஐ ஆம் வெரி சாரி”ன்னு மன்னிப்பு கேட்டது ராஜராஜ தந்திரம்.

அதிசயமா எல்லாரும் டைனிங் டேபிள்ல ஒன்ணா உக்காந்து சாப்டானுங்க. இதயெல்லாம் போட்டோ எடுத்து வைங்க பிக்பாஸ்.

அப்பறம் ஒரு டாஸ்க். கலைச்சு போட்ட ஏர்டெல் ஆஃபர கரெக்டா சேக்கனும். 3 டீமா பிரிஞ்சு விளையாண்டானுங்க. தர்ஷன் டீம் ஜெயிச்சுச்சு. ஓசி கேக் வந்துச்சு....அடிச்சு பிடிச்சு சாப்ட்டானுங்க.

சரவணன உள்ள கூப்ட்ட பிக்பாஸ் “அன்னைக்கு பஸ்ல பொம்பளைங்கள இடிச்சதா சொன்னதுக்கு மன்னிப்பு கேக்க சொன்னோம். நீங்களும் கேட்டீங்க ஆனா யோசிச்சுப் பாத்தா பேசிக்காவே நாங்க பெண்கள கண்களா மதிக்கிறவனுங்க. நீங்க கூட ரெடி ஸ்டெடி போ ஷோவெல்லாம் பாத்திருப்பீங்களே? அந்த அளவு கடமை, கட்டுப்பாடோட பெண்களின் கண்ணியத்த காப்பாத்துறதுல எங்க அறிவ செலுத்துறோம். அதுனால உங்க மன்னிப்ப எங்களால ஏத்துக்க முடியல சோ நீங்க வீட்ட விட்டு வெளிய போங்கன்னு பொசுக்குன்னு சொல்லி, பை, பொருட்களையெல்லாம் நாங்களே வெளிய வந்து தரோம் நீங்க யாருகிட்டயும் சொல்லிக்காம பொறவாசல் வழியா வெளிய போங்கன்னு சொல்லிட்டார்.

“உள்ள இருக்குறவனுங்கள விட இந்த பிக்பாஸ் பெரிய லூஸா இருப்பான் போல”ன்னு மனசுல நெனச்சுக்கிட்டு சித்தப்பூ கதவ தொறந்ததோட முடிஞ்சு போச்சு.

Comments

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)