பிக்பாஸ் 3 : நாள் 48 (10.08.19)
பிக்பாஸ் 3நாள் 48 (10.08.19)
ஆண்டவர் வந்தார். புது ட்ரெஸ் போல....! ஆனா மஞ்சள் எங்க வைக்குறதுன்னு தெரியாம சட்டைப்பை, கை கஃப் ல மட்டும் மஞ்சள் வச்சாப்ல ஒரு காஸ்ட்யூம்.
“நட்புல 3 ரகம் உண்டு ஆனா உள்ள ரகத்துக்கு மூணா இருக்காய்ங்க. இதுல இருக்குறது போதாதுன்னு புதுசா ஒன்னு உள்ள போயி உறியடிச்சிட்டு இருக்கு. புதுவரவு தவிர்க்க முடியாதது....நான் அரசியலப் பத்தி பேசல”ன்னார். நாமளும் அத நம்பிட்டோம். “சரி வெள்ளிக்கிழமை இந்த வீணாப்போனவனுங்க என்ன பண்ணாங்க”ன்னு பாப்போம்னு சொல்லிட்டு உள்ள காமிச்சார்.
48ம் நாள்
“எங்க வீட்டு குத்துவிளக்கே”ன்னு அலாரம். சாண்டி புண்ணியத்துல எல்லாரும் ஆடுனத பாக்க முடிஞ்சுது. இல்லேன்னா பீர் குடிச்ச ப்ராய்லர் கோழி மாதிரி சல்பேட்டா சைடு வாங்கி ஆடுறத மட்டுந்தான் பாத்திருக்க முடியும். தேங்க் காட்....!
உள்ள சேரன் தகப்பன் சாமியா மாறி வளர்ற ஆம்பளப் பசங்களுக்கு உருண்டை சோறு ஊட்டி விட்டார். “நல்லா சாப்புடுங்கடா...அப்பதான் அடுத்த வாரம் என்னய மறக்காம நாமினேஷன்ல லிஸ்டுல கொண்டு வர முடியும்”னு நெனச்சிருப்பாரு. பசங்க எல்லாரும் கஸ்தூரியோட சமையல ஓட்டிட்டு இருந்தாய்ங்க. “நான் அந்தம்மாவுக்கு ஒரு சாம்பார், ரசம் அளவுக்காவது செய்யத் தெரியும்னு நெனச்சேன் ஆனா அப்பிடி பேப்பர்ல கூட எழுதிப் பாத்தது இல்ல போல. சட்டில சுட சொன்னா வாயிலதான் சுடுது வடை”ன்னு சாண்டி கலாய்ச்சாப்ல. மது அத ரசிச்சாங்க. “அப்பாடி எப்பிடியோ அது SSLC பெயிலு....நாம எட்டாவது பாஸு. இதுக்காண்டியாவது இன்னும் ஒரு 3 வாரத்துக்கு நம்மள வச்சிருப்பாய்ங்க”ன்னு மதுவுக்கொரு நிம்மதி.
சரி தின்னுட்டு சும்மாதான சுத்துறாய்ங்க. அடுத்த பஞ்சாயத்த ஆரம்பிச்சு இவிங்க பிசியாகுறதுக்குள்ள ஒரு டாஸ்க்க போடுவோம்னு சொல்லி “வாங்கடா வந்து பேஷன் ஷோ நடத்துங்க”ன்னு சொன்னார் பிக் பாஸ். கஸ்தூரி நடுவராம். ஜோடி ஜோடியா பூனை நடை நடக்கனுமாம். ஜோடின்னு சொன்னதும் ஒரு 3 பேரு மூஞ்ச்சில பல்பு எரிஞ்சுச்சு. அபி-முகின், லாஸ்-கவின், தர்ஷன்-ஷெரின். சல்பேட்டாவுக்கு சாண்டி, சேரனுக்கு மது.
“என்னடா நாராயணா சட்டை சட்டை இல்லாம வர?”ன்ற மாதிரி தர்ஷன் சொக்கா போடாம ஷெரின் கூட “பாடிகாட்டும் முனீஸ்வரனா” வந்தான். எல்லாரும் சிறப்பாதான் பண்ணாங்க. ஆண்கள்ல தர்ஷன், சல்பேட்டா நடந்த நடைக்கு பெண்கள்ல அது வின்னர். அப்பறம் எல்லாருக்கும் புது துணிமணி குடுத்தாரு பிக்பாஸ்.
வெளிய ஷெரின், மது, சேரன்....
ஷெரின் : இந்த சல்பேட்டாவ பாத்தீங்களா...
மது : ஏன் என்னாச்சு?
ஷெரின் : பெரிய இம்சங்க அவளோட...நானே 2 நாளா மேலுக்கு முடியாம இருக்கேன்...நேத்து எங்கிட்டயே வந்து அவ தேஞ்ச ரெக்கார்ட போடுறா..
சேரன் : என்னவாம் எலிசபெத்து ராணிக்கு?
ஷெரின் : மேலுக்கு முடியாத ஆளுகிட்ட “எதுவும் சாப்பிடுறியா? ஹார்லிக்ஸ் போட்டுத் தரவா? சாத்துக்குடி பிழிஞ்சு தரவான்னு கேக்குறத விட்டுட்டு.... “என்ன பிரச்சனை பேபி எங்கிட்ட பேசமாட்ற...எதுவும் ஹர்ட்டா”ன்னு கேக்குறா....எழவெடுத்தவ...!
சேரன் : அது எப்பவும் அப்பிடிதான்....! யாரும் கிடைக்கலேன்னு அன்னைக்கு ஃப்ரிட்ஜுகிட்ட போயி “என்ன எங்கிட்ட பேசமாட்டேங்குற?”ன்னு கேட்டுட்டு இருந்துச்சு....
ஷெரின் : வந்த நாளுல இருந்து ஒரு டாஸ்க்க சிறப்பா பண்ணோம், கேப்டனாக முயற்சி பண்ணோம்னு என்னய எதாச்சும் பண்ண விடுதா.... அத மோட்டிவேஷன் பண்ணிப் பண்ணியே என் முட்டி செத்துப்போச்சு....! பொழுது விடிஞ்சா போதும் பக்கத்துல உக்காந்து பொலம்ப ஆரம்பிச்சுடுறா....! பின்ன எப்பிடி வெளங்கும் அந்த நாளு?
சேரன் : இப்பயெல்லாம் எதாச்சும் சொன்னோம்னா உடனே சோகமா அவ்வ அவ்வான்னு பாட ஆரம்பிக்குது.....நமக்கு சங்கடமா போயிருது!
ஷெரின் : அவ்வளவு கழுவி ஊத்தியும் இப்ப மதுதான் என்னய மம்மி மாதிரி கவனிச்சுக்குது...இது என்னடான்னா ஏன் பேச மாட்டேங்குறன்னு வந்து பகுமானம் பண்ணுது...! 2 நாளா அதுகிட்ட பேசல...வந்து ஒரு வார்த்தை என்னன்னு கேட்டுச்சா பாருங்க! இப்ப எவனச்சும் எதாச்சும் சொல்லட்டும் ஒடனே ஒப்பாரி வைக்க ஓடி வருவா...! வரட்டும் வண்டை வண்டையா கேக்குறேன்//
இந்தப்பக்கம் சல்பேட்டா & கஸ்தூரி (நம்ம Mind Voice : ரெண்டு பேரும் பேசிக்கிறீங்களாக்கும்.....உலகம் அழிஞ்சிரும்.....)
கஸ்தூரி : என்ன சல்பேட்டா நீயும், லாஸும் நாமினேஷன் யாரு போனா நல்லா இருக்கும்?
சல்பேட்டா : சேரன் அண்ணா...
கஸ்தூரி : முட்டா சல்பேட்டா....அந்தாளு நாமினேஷன்லயே இல்ல...
சல்பேட்டா : ஓ....எப்பவும் இருப்பாரே அந்த ஞாபகத்துல சொல்லிட்டேன்...! ரெண்டு பேருமே போகக் கூடாது அப்பதான் சுவாரஸ்யமா இருக்கும்
கஸ்தூரி : (கஸ்தூரி Mind Voice : எது நீ இருந்தா சுவாரஸ்யமா இருக்கும்.....என்னா ஊக்கம் இருக்கனும் உனக்கு) என் உள்ளுணர்வு என்ன சொல்லுதுன்னா.....உனக்கு பல உண்மைகள் தெரிய வரும்னு சொல்லுது ( நம்ம Mind Voice : என்ன கருமமான வாக்கியம் இது....?)
சல்பேட்டா : (புரிஞ்சாப்ல) ஆமாம் ஆமாம் யூ ஆர் ரைட்.....
கஸ்தூரி : இன்னைக்கு உன் டவுசர் கொஞ்சம் பெருசா இருக்கு போ போயி நல்ல குட்ட டவுசரா எடுத்து போட்டுக்கோ//
சாண்டிய உள்ள கூப்ட்ட பிக்பாஸ் கவினோட சேர்ந்து அபி, லாஸ், சல்பேட்டா 3 பேருக்கும் தனிதனியா பாட்டு ரெடி பண்ண சொன்னார். “ஓகே குருநாதா”ன்னு சொன்ன சாண்டிய “போயிட்டு வா சிஷ்யா”ன்னு பிக்பாஸ் சொன்னது ஸ்வீட் சர்ப்ரைஸ்.
ஆண்டவர் வந்து அகம் டூ அகம் போனார்.
கஸ்தூரிய வெல்கம் பண்ணிட்டு. “உள்ள இருக்குறவங்களப் பத்தி சொல்லு”ன்னு சொன்னதும் ஒன் வேர்டுல என்னென்னமோ உளறுனாங்க. அப்பறம் கஸ்தூரியப் பத்தி மத்தவங்க சொல்லுங்கன்னு சொன்னதும் “மொத்ததுல இது தேறாத கேசு”ன்னு சொன்னானுங்க.
இந்த கஸ்தூரி கிட்ட யாரும் பேச்சுக்குடுக்காம இருந்தா நல்லா இருக்கும். அதிமேதாவியா காட்டிக்கிறேன் பேர்வழின்னு பெரிய ரப்சரக் குடுக்குறாங்க. ஆண்டவருக்கே அல்ஜீமர் வந்துரும் போல.....!
“உள்ள யாரு ஹீரோ, வில்லன், ஜீரோன்னு சொல்லு”ன்னு சொன்னதுக்கு மெண்டல் மாதிரி தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் மாலை மாத்திக்கோங்கன்னு எதோ உளர சேரனும் மதுவும் ஆகா இது மெண்டலேதான்னு கன்பர்ம் பண்ண மாதிரி பாத்தாய்ங்க. கவினுக்கு ஜீரோ....பெண்கள் கவுக்குறாராம். சும்மா சும்மா அதையே சொல்லி நோண்டுறதுக்கு ஒரு நாளைக்கு வாங்கப் போறாங்க. சாண்டி வில்லனாம். “உங்கிட்ட கேட்டதுக்கு நாந்தான் நவரத்னா ஆயில நாக்குல தேச்சுக்கனும்”ன்ற மாதிரி பாத்தார் ஆண்டவர்.
அப்பறம் முகின் கேசுக்கு வந்தார். “என்னயா கட்டிலு, சேரயெல்லாம் சேதப்படுத்துற?”ன்னு ஆரம்பிச்சார். அப்பறம் அபிய எழுப்பி “வளர்ர பையன கெடுக்காத. சரியா சொல்லு இது நட்பா காதலா?”ன்னு கேக்க “ம்ம்கும் இதுக்கு மேல எப்பிடி ஓப்பனா சொல்றது? லவ்வுதாங்க இது”ன்னு உடச்சிடுச்சு. முகினோ “அதுக்கு நான் லவ்வரு எனக்கு அது நண்பரு”ன்னு சொல்லிட்டான். “சரி ஒழிங்க”ன்னு ஆண்டவரும் விட்டுட்டார். அபி கக்கூஸ்ல போயி அழுதுச்சு லாஸ் ஆறுதல் சொன்னாங்க. அப்பறம் சேரனும், மதுவும் கூப்ட்டு “வந்த வேலைய பாரு”ன்னுமுகினுக்கு அட்வைஸ் பண்ணாங்க.
மறுபடியும் ஒரு விளையாட்டு...
யாரு யாருக்கு யாரு ஏஞ்சல், யாரு சாத்தான்னு கிரீடம் வைக்கனுமாம். இதுல தர்ஷனும், ஷெரினும் சல்பேட்டாவுக்கு சாத்தான் கொம்பு மாட்டுனதுதான் ஹைலைட்டு. கஸ்தூரி இதுலயும் நம்ம பொறுமைய கற்பழிச்சாங்க. கடைசியில எங்க வீட்டு குத்துவிளக்கேன்னு காலையில போட்ட பாட்டுக்கு விளக்கம் குடுத்த மாதிரி ஷெரின் அந்த வீட்டு தேவைதன்னு முடிவாச்சு.
“கேப்டன்சி போட்டி தீர்ப்பால தீரா சோகத்துல இருக்கீங்களா சேரன்?”னு கேட்டதுக்கு “ஆமாம் ஆனா பெயிண்ட யாரு கம்மியா அடிக்குறாங்களோ அவங்கதான் வின்னர்னு பிக்பாஸ் சொன்னதா நெனச்சுக்கிட்டு மனசத் தேத்திக்கிட்டேன்”னு சொன்னரு சேரன்.
சேரன் அன்னைக்கு குறி சொன்னதுல எவனுக்காச்சும் பஞ்சாயத்து இருக்கான்னு கேக்க அபி கையத்தூக்கி “அவரு முகினுக்கு சொன்னது தப்பு அவன் யாருக்கும் ஃபேக் வாக்குறுதி குடுக்கல”ன்னு சொன்னத முகின் அங்கயே “இல்ல இல்ல அவரு இனிமேலும் யாருக்கும் குடுக்காதன்னுதான் சொன்னாரு”ன்னு மறுத்தான்.
“சரி எப்பிடியோ நாசமாப் போங்க நான் நாளைக்கு வந்து யாரு எவிக்ட்னு சொல்றே”ன்னு போயிட்டார் ஆண்டவர்.
Comments
Post a Comment