பிக்பாஸ் 3: நாள் 66 (28.08.19)
பிக்பாஸ் 3நாள் 66 (28.08.19)
“கட்டிக்கிற
முன்ன நாம ஒத்திகைய பாக்கனுண்டி”ன்னு பாட்டப் போட்டுட்டு கவினயும், லாஸையும் தனித்தனி
ஷாட்டா காமிச்சது தெள்ளவாரித்தனம்.
கிராமத்து டாஸ்க்கு
தொடர்ந்துச்சு.....
கவின்
& லாஸ்
லாஸ் : கவிராஜன்.....கவிராஜன்
! உன் பேரு கவிராஜனாமே ? இனிமே நான் உன்ன அப்பிடித்தான் கூப்புடுவேன்
கவின் : எப்பிடியோ
கூப்டு....
லாஸ் : உன்
மூஞ்சியும், மொகறையும் பாத்தா ஏதோ பெரிய பிட்டு வச்சுருக்க போல.....போட்டு விடு
கவின் : உங்கிட்ட
சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது?
லாஸ் : சரி
சொல்லு
கவின் : அத
எப்பிடி என் வாயால சொல்லுவேன்?
லாஸ் : சரி
சொல்லாத....
கவின் : உங்கிட்ட
சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது?
லாஸ் : அப்ப
சொல்லித் தொலையேண்டா என் சப்பாத்தி....
கவின் : அத
எப்பிடி என் வாயால சொல்லுவேன்?
லாஸ் : திரிகோணமலை
கெட்ட வார்த்தை எல்லாம் தெரியுமா? தெரிஞ்சுக்கனுமா?
கவின் : அதாவது
நான் 3 வருஷமா ஒரு காம்ப்ளிக்கேட்டட் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்...
லாஸ் : நீ அப்பிடி
இல்லாம இருந்தாதான் உலகம் அழிஞ்சிருக்கும்.....இதெல்லாம் உன் வாழ்கையில பிரதமர் ஃபாரின்
போறாப்ல ஒரு அங்கமாகிடுச்சு....கவலைப்படாத அதெல்லாம் சரி பண்ண முடியாது.
கவின் : அதில்ல
அது ஒரு மாதிரி காம்ப்ளிக்கேட்டட் ரிலேஷன்ஷிப்....
லாஸ் : (Mind
Voice : ஏதோ ஆண்டிய கரெக்ட் பண்ணி இருப்பான் போல) சரிடா இப்ப அதுக்கு என்னடா பண்ணனும்ன்ற?
கவின் : ஆனா
இப்ப அது இல்ல..... நாசமாப்போச்சு. அந்த ஆளு என்னய வேணாம்னு சொல்லிட்டுப் போயிடுச்சு
லாஸ் : (Mind
Voice : ஆண்டி கழட்டி விட்டிருச்சு போல....) சரி இந்தக் கதைய இப்ப எதுக்குடா சொல்ற?
கவின் : உங்கிட்ட
சொல்லாம வேற யாருகிட்ட சொல்றது?
லாஸ் : ஸ்ஸப்பா....டேய்
! உனக்கு நாளு கல்யாணம் ஆகி 400 புள்ளைங்க இருந்தாலும் எனக்கு பிரச்சனையில்ல போதுமா?
மத்தத வெளிய போயி பேசிக்கலாம்....எவனச்சும் பாத்தா எக்குத்தப்பா போட்டு விட்டுடுவானுங்க....வா
அப்பிடியே எல்லாருக்கும் முன்னாடி கேசுவலா சுத்துவோம்....! //
இதுக்கடுத்து
நடந்ததெல்லாம் திருக்குறள் மாதிரி ஒண்ணே முக்கால் அடி அளவுக்குதான்
//சொல்லிக்
குடுத்த தெருக்கூத்தை – இப்பதறுகள்
கூத்தாடிப்
படுத்துனாய்ங்க நம்மளை//
அவ்வளவுதான்.
சேரன் டீம் வின்னு. அடுத்து ஓப்போ போன்ல ஆளுக்கு 5 போட்டோ எடுத்து அத கதையா கோர்க்கனும்.
அண்ணன் சேரன விட கதை சொல்ல யாராலயாச்சும் முடியுமா? அவருதான் வின்னர்.
நடு ராத்திரியில
சாண்டி தன்னந்தனியா தன் குழந்தைய நெனச்சு தனியா பெனாத்திட்டு இருந்தாப்ல. அவ்வளவுதான்.
இப்பிடியெல்லாம்
எபிசோட் இருந்தா எப்பிடி தொழில் பாக்குறது ?
# அடேய் பாசிச
பிக்பாஸே.....!
Comments
Post a Comment