பிக்பாஸ் 3 : நாள் 46 (08.08.19)

பிக்பாஸ் 3நாள் 46 (08.08.19)


“புலி உறுமுது... புலி உறுமுது”ன்னு அலாரத்தப் போட்டு உறுமுனாப்ல பிக்பாஸ். சாண்டி, லாஸ், முகின், அபி எல்லாரும் அலுங்காம ஆடுனாங்க.

உள்ள கிச்சன்ல பசங்கள்ளாம் உக்காந்து வெங்காயம், முட்டைக்கோஸ் வெட்டிட்டு இருக்க, மது அவங்கள வேலை வாங்கிட்டு இருந்தாங்க. ரெண்டு நாளா மதுவோட சவுண்டு கொஞ்சம் சத்தமாத்தான் கேக்குது. காரணம் சரவணனுக்கு அப்பறம் இவனுங்களுக்கு கிடச்ச ஒரே சமையல்காரி மதுதான் ஆனா பாவம் அதுவும் சமையக்காரி கிடையாது. அம்மா, கலைஞர் இல்லாத மாநிலத்துக்கு எடப்பாடியார் தான் முதல்வர்ன்ற மாதிரி இங்க மது சீஃப் குக்கா இருக்கு. (ஆளும் குக்.....பாக்குற வேலையும் குக்கா!) இத சாண்டியும், கவினும் ஒரு பக்கமா உக்காந்து சிம்பு வாய்ஸ்ல பேசி கலாச்சுட்டு இருந்தானுங்க.

அம்பி கவின், சித்தப்பூ போன தைரியத்துல அவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த ரெமோவ ரெட் வைன் எழுப்பி விட்டான். சோஃபாவுல ஒருக்களிச்சு படுத்துக்கிட்டு லாஸ்கிட்ட “சொல்லுடி என் ராசாத்தி”ன்னு லவ்வுஸுக்கிட்டு இருந்தான்.

கவின் : லாஸ் சனிக்கிழமை என்ன நடந்துச்சு?

லாஸ் : உன்னய கமல் சார் கழுவி ஊத்துனாரு அதான் நடந்துச்சு...

கவின் : அன்னைக்கு அபி போகக் கூடாதுன்னு டேக் கட்டுன...எனக்கு கட்டி இருக்கலாமே? அப்ப நான் பாசம் இல்லையா?

லாஸ் : (Mind Voice : இவனக் கட்டலாம்னு ப்ளான்ல இருக்கேன் இவன் என்னடான்னா ஏன் டேக் கட்டலன்னு கேக்குறான்.....சொங்கி) அப்டில்லாம் இல்லடா டேய்.....! அபி போன வாரம் எனக்கு சப்போர்ட் பண்ணுச்சுல்ல அதுக்குதான் அபிக்கு கட்டுனேன்....! நான் ஸ்விம்மிங் பூல்ல டைவ் அடிப்பேன்; ஆனா உன்னய மட்டுந்தான் டாவடிப்பேன்....! பிளிவ் மீ டா!//

தலவாணிய செல்லமா கவின் மேலத் தூக்கிப் போட்டுட்டு ஓடிருச்சு லாஸ். இவிங்க காதல் பண்ற வரைக்கும் சல்பேட்டா அந்தப் பக்கமா வந்துரக்கூடாதுன்னு நமக்குத்தான் பதட்டமா இருந்துச்சு.

ஒரு ஆகாவலி டாஸ்க்க குடுத்து மொத்த ஆளுகளையும் ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு பத்தி விட்டார் பிக்பாஸ். கசக்கி போட்ட பேப்பர் பந்த குப்பத்தொட்டில போடனுமாம். ஆனா இங்கதான் ஒரு ட்விஸ்டு நேரா போயி குப்பத்தொட்டில போடக் கூடாது. எதிர் எதிரா ஆளுங்க நின்னு ஒவ்வொரு ஆளா தட்டி தட்டி கொண்டு போயி குப்பத்தொட்டில போடனுமாம். இதத்தான் “பொழப்பத்த அம்பட்டன் பூனைக்கு செரச்சானாம்”னு சொல்லுவாங்க. அதிசயமா ஒண்ணு மண்ணா விளையாடி ஜெயிச்சானுங்க.

முடிச்சிட்டு எல்லாரும் லான்ல உக்காந்துட்டானுங்க. உள்ள போன மது அங்க ஒரு பெரிய கிஃப்ட் பாக்ஸ் இருந்தத கவனிக்கல. வெளிய லாஸும், அபியும் பசங்கள உக்காரவச்சு அவங்கள நடனமாடி மகிழ்ச்சிப்படுத்திட்டு இருந்தாங்க. அலாரம் சவுண்டு கேட்டதும் விளையாண்டதுக்கு பரிசா கேக் குடுப்பானுங்கள்ள எப்பவும் அதாதான் இருக்கும்னு நெனச்சு ஓசி கேக் வாங்கித் தின்ன ஓவர் ஸ்பீட்ல ஓடிப்போனானுங்க.

“டேய் கோயிந்தசாமி கதவத் தொறடா” ரேஞ்சுக்கு கதவத் தட்டிட்டு இருக்கும்போதே...லாஸ் அந்தப் பெட்டிய பாத்துட்டு “அடேய் சோத்துத் தண்டங்களா இங்க இருக்குடா கிஃப்ட்டு”ன்னு கத்த....பெட்டிய தூக்கிப் பாத்தா நம்ம குத்துவிளக்கு கஸ்தூரி.

நியூ எண்ட்ரி கஸ்தூரியப் பத்தி சொல்லனுமா என்ன? 90’ஸ் கிட்ஸ்கள் கிட்ட கேட்டா கோடு போட்ட 2 குயர் நோட்டு முழுக்க எழுதிக் குடுப்பானுங்க. சமீப வருசமா சமூக வலைதலங்கள்ள “சர்ச்சைக்கிளப்பி”யா இருக்காங்க. இதெல்லாம் போக பாக்க இன்னும் அப்பிடியே இருக்காங்க. இந்த தகுதி போதாதா பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரதுக்கு?

கஸ்தூரி உள்ள வந்ததும் சேரன் கிட்ட நீ”ங்க இருக்குற நம்பிக்கைலதான் நான் உள்ள வந்தேன்”னு சொன்னாங்க. “என்னயல்லாம் நம்புற அளவுக்கு லூசா நீ?”ன்ற மாதிரி பாத்தார் சேரன்.
சாண்டிய பாராட்டுனாங்க. அபியப் பாத்துட்டு “என் 7 வயசுப் பையனுக்கு உன் மேல கிரஷ்”னு சொன்னதும் அபிக்கு ஆனந்தம் தாங்கல (பையன் மைக்கேல் ஜாக்சன் ரசிகன் போல....). லாஸ ரொம்பவே சிலாகிச்சாங்க. கூடவே கவினையும். சல்பேட்டாக்கிட்ட நேரா போயி “உங்கிட்ட நெறைய கேள்விகள் கேக்கனும்”னு சொன்னதும், சல்பேட்டா “சரிதான், இந்த சல்பேட்டாவ சாக்கப் பொத்தி அடிக்க ஆள அனுப்பி விட்டிருக்கான் பிக்பாஸ்....அலர்ட்டா இருடி சல்பேட்டா”ன்னு போச்சு மூஞ்சி.

பசங்க எல்லாரும் “ஏங்க உங்களுக்காச்சும் சமைக்கத் தெரியுமா? மது ஒரு போலி சமையல்காரி போல என்ன பண்றதுன்னு தெரியாம தயிர் சாதத்துலயே 5 வகை பண்ணுது. நாங்களும் எவ்வளவு நாள்தான் ஊறுகாய நக்கிட்டே திரியுறது. ஏதாச்சும் செஞ்சு காப்பாத்துங்க ப்ளீஸ்”னு கெஞ்சுனானுங்க.

“மீரா வெளிய போச்சு தெரியும்ல?”ன்னு சேரன் கேக்க “யோவ் மீராவ தெரியாதா? அந்தக் கேசுல இருந்துதான் உன் கைய யூஸ் பண்ணவே மாட்டேங்குறியே......! பேண்டுக்குள்ளயே இருக்கே...கையி”ன்னு லந்தக் குடுத்தாங்க.

ஷெரின் இன்னைக்கு 2 இடத்துல டைமிங்ல பிண்ணுனாங்க! ஃபர்ஸ்டு : “ஏன் உள்ள வந்தீங்க?”ன்னு கஸ்தூரி கேட்டதுக்கு “தர்ஷனுக்காக”ன்னு சொல்லி பல்பு குடுத்தது, அடுத்து சேரன் “கஸ்தூரி வந்தாச்சு இனி கேம் சேஞ்ச் ஆகும்”னு சொன்னதுக்கு “ஆமா.... இதுவரைக்கும் கேம கிளு கிளுன்னு விளையாடி தள்ளிட்ட. இப்ப கேம் சேஞ்ச் ஆனதும் அப்பிடியே அறுத்துத் தள்ளிடுவ”ன்னு மனசுல நெனச்சுக்கிட்டு “அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல சார். வரும் போது நாமளே புதுசுதான். இப்ப யாரு புதுசா வந்தாதான் என்ன”ன்னு உடச்சாங்க. சூப்பர்பு!

லாஸ்கிட்ட “வெளிய இருந்து பாக்கும் போது நீ ஹா ஹா ஹாசினி மாதிரி பைத்தியம்னு நெனச்சேன்....ஆனா உள்ள வந்து பாக்கும் போதுதான் நான் நெனச்சது தப்பு...... நீ ஹா ஹா ஹாசினி இல்ல.....தொடரி பட கீர்த்தி சுரேஷ்னு சோ சாரி”ன்னு வருத்தப்பட்டாங்க.

மதுவக் கூப்ட்டு “இந்த கலாச்சார கைபாமயெல்லாம் கண்டபடி போடாத. ஏன்னா நம்ம புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம். ஏன்... நானேக் கூட காலையில குட்ட டவுசர் போடுவேன்....! நம்ம இன்ஸ்டா பேஜயெல்லாம் பாத்தா பதறிடுவ”ன்னு பயமுறுத்துனாங்க.

மறுபடியும் கெடச்ச கேப்புல கவின் லாஸ் கூட லவ்ஸு....”அபிக்கு டேக் கட்டுனதுக்கு என்னய தப்பா நெனைக்காத. நீதாண்டா என் நெஞ்சை தட்டும் சத்தம்; இதப் புரிஞ்சுக்காம போனா அது உன்னோட குத்தம்”னு சொன்னாங்க லாஸ். “யப்பா இந்த வாரம் சல்பேட்டா வெளிய போயிட்டா இந்த சுதந்திரத் தினம் எனக்கும் சேர்த்துதான்”னு கவினுக்கு ஒரே குஷிதான்.

இந்த வாரம் நல்லா விளையாண்ட மூணு பேரு : சாண்டி, லாஸ், சேரன். இந்த வாரம் ஜெயில் கிடையாது. ஆனா கஸ்தூரி சொல்ற 5 பேரு 5 வேலைய செய்யனும். ஷெரின் உக்கி போடனும், மது தர்ஷனுக்கு குடை பிடிக்கனும், அபி யாரு கக்கூஸ் போனாலும் வெளிய நின்னு பாட்டுப்பாடனும், சல்பேட்டா தலகீழா நிக்கனும், கவின் மூக்கால “மன்னித்து விடு”ன்னு எழுதனும். இந்த ஐடியாவ ரூம் போட்டு யோசிச்சவனுக்கு தண்டனையா கபீம் குபாம் சாரி கும்பி பாகம் குடுக்கனும்.

கவின் சாண்டிய சைடுல கூட்டிட்டுப் போயி “அண்ணே இவங்கள சைலண்டா வாட்ச் பண்ணனும்”னு சொல்ல சாண்டி “எனக்கென்னமோ வெளிய கெட்ட பேரு வாங்குனவங்களுக்குதான் தண்டனை குடுக்குறாங்கன்னு நெனைக்கிறேன்”னு சொல்ல.....”அப்ப சல்பேட்டாவுக்குதான் எல்லா தண்டனையும் குடுக்கனும்”னு கவின் சொல்ல....”அதான் குடுத்தாச்சே!”ன்னு சாண்டி சொன்னதும் கவின் ஒழப்பிட்டான்.

சிறப்பு அந்தஸ்த்த இழந்த மாதிரி சல்பேட்டா சுத்திட்டு இருந்துச்சு. கஸ்தூரி எல்லார்கிட்டயும் நல்லா பேசுனாலும் சல்பேட்டாவ மட்டும் கண்டுக்கல. சல்பேட்டாவுக்கும் இது தெரிஞ்சுது; லாஸ் கூட கஸ்தூரி கலகலன்னு கதைக்கும் போதெல்லாம் சல்பேட்டாவுக்கு எரிஞ்சுது! இதோட விளைவு வரும் நாட்கள்ல தெரிய வரலாம்.

கிச்சன்ல சல்பேட்டா கிட்ட கஸ்தூரி “ஐ லவ் யூ சல்பேட்டா”ன்னு சொல்ல, “இப்போதான் என்னய பாக்குறீங்க அப்பறம் எப்பிடி ஐ லவ் யூன்னு சொல்றீங்க?”ன்னு புத்திசாலித்தனமா சல்பேட்டா கேக்க, “வந்த 2வது நாளே லவ்வு வருது சில பேருக்கு. ஆனா நான் மட்டும் வந்ததும் சொல்லக் கூடாதா?”ன்னு கஸ்தூரி பதிஉ சொல்ல, சல்பேட்டா மூஞ்சியெல்லாம் சாணி ஃபேஷியல்.



இதோட முடிஞ்சது ! ஆனா இவனுங்ககிட்ட கண்டெண்ட் எடுக்குறதுக்குள்ள....

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)