பிக்பாஸ் 3 : நாள் 58 (20.08.19)


பிக்பாஸ் 3நாள் 58 (20.08.19)


“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” பாட்டு. சூப்பர் சேரன் சார் அண்ணாந்து ஆகாசத்தப் பாத்து தன்னோட பழைய ஞாபகங்கள பொரட்டிட்டு இருந்தாரு. “அடேய் பதறுகளா இந்தப் படத்தப் பத்தியெல்லாம் கேள்வியாவது பட்டிருக்கீங்களா? நான் எடுத்த காவியம்டா இது.....! இங்க என்னடான்னா எட்டாங்கிளாஸ் பையன கலாய்க்குற எனக்கு மாதிரி கட்டயக் குடுத்துட்டு இருக்கீங்க? இருங்கடி வெளிய போயி உங்க கேரக்டர்கள வச்சே வெளங்காதவன்னு சிம்புவ ஹீரோவா போட்டு படம் எடுக்குறேன். அப்பயாச்சும் திருந்துங்க”ன்னு சத்தமா பேசுறதா நெனச்சு  மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருந்தார்.
நம்ம கச கச கஸ்தூரியோ படம் எடுத்த டைரக்டர விட்டுட்டு கேமராகிட்ட போயி “பிக்பாஸ் என்னா லிரிக்ஸு, என்னா பாட்டு யப்ப யப்ப யப்பா என் பழைய ஞாபங்கள் வந்து என்னய எக்குத்தப்பா தாக்குது...நன்றி ஃபார் நாஸ்டால்ஜியா”ன்னு பொலம்பிட்டு இருந்துச்சு. எல்லாம் கேமராவுக்கு கை இல்லேன்ற தைரியம்.
லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் ! “அம்மா நான் போயிட்டு வரேன்” இதான் டாஸ்க் பேராம். (என்னங்கடா இது தெலுங்கு பட டைட்டிலாட்டம்?). எல்லாரும் பள்ளிக் குழந்தைகளா மாறி அந்தந்த கதாபாத்திரத்துல இருக்கனுமாம். கஸ்தூரி டீச்சர். சூப்பர் சேரன் சார் ப்ரின்ஸிப்பல்.
கட்டில்ல படுத்திருந்த பெரிய சைஸ் பெட்டு ஒண்ணு பள்ளிச் சீருடைய போட்டுக்கிட்டு பப்பரப்பான்னு நடந்து வந்தா மாதிரி வனிதா வரும் அழகப் பாக்க என் ரெண்டு கண்ணு போதாம என் மனைவியோட ரெண்டு கண்ணையும் சேத்து நாலு கண்ணுல பாத்தும் நடந்து வந்தது முழுசா தெரியல.
கவுண்டர் சொன்னாப்ல தர்ஷன் நெஞ்சு முடி ரேஞ்சுக்கும் அவன் ஹைட்டுக்கும் அவனுக்கு யூனிபார்ம் போட்டுவிட்டா டீச்சர் இடுப்புல அவன் உக்கார முடியாது....அவன் இடுப்புல டீச்சர் உக்காந்துதான் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் சாப்டனும். சாண்டியோ மூணா மடிஞ்சு நாலா நின்னாப்ல.
நாட்டாம டீச்சர் மாதிரி எதுவும் வரும்னு பாத்தா கடலோரக் கவிதைகள் ஜெனிபர் டீச்சரா நெனச்சுக்கிட்டு லூசு ஒண்ணு டிஸ்ப்ளே குடைய தூக்கிக்கிட்டு டீச்சரா வந்துச்சு. அதப் பாத்துட்டு “டீச்சர்னு சொல்லிட்டு சத்துணவு ஆயாவ கூட்டிட்டு வரானுங்க”ன்னு சாண்டி அடிச்ச கவுண்டர் செம்ம.
மத்தபடி லாஸ் & ஷெரின் ரெண்டும் துள்ளுவதோ இளமை பார்ட் - 2 ஷூட்டுக்கு தயாரா இருக்காங்கன்றத செல்வராகவன் கருத்தில் கொள்ளலாம்.
க்ளாஸ் ஆரம்பிச்சது. கஸ்தூரி கொமட்டல் வர மாதிரி கொனட்டுறதுல பெரிய எக்ஸ்பெர்ட் போல. அஷ்ட கோணலா மூஞ்சிய (க்யூட் எக்ஷ்பிரஷனாம்) வச்சிக்கிட்டு அனத்திட்டு இருந்தாங்க.
இந்த கெடா மாடுகள குழந்தைங்க மாதிரி பண்ண சொன்னா பூராம் தெய்வத்திருமகள் விக்ரம் ரேஞ்சுக்கு பர்பார்மென்ஸ்ல இருந்தானுங்க. வெளிய இருந்து எந்த டாக்டராச்சும் இவனுங்கள பாத்தா சங்கிலியோட பிக்பாஸ் செட்டுக்கு போயிடுவாப்ல.
குள்ளக் குள்ள வாத்து ரைம்ஸ் சொல்லிக் குடுத்து மத்தவங்களப் பாட கூப்ட்டாங்க டீச்சர்.
ரொம்ப பொறுப்பா ஸ்கூல் விடப்போற நேரத்துல மூச்சுபயிற்சி சொல்லி குடுத்து பெர்பார்மென்ஸ் பில்ட் அப் குடுத்தார் பிரின்ஸிப்பல். பிரேக் விட்டானுங்க.
வெளிய தனியா உக்காந்திருந்த கஸ்தூரி கண்ணு சொருகி தூங்க, பிக்பாஸ் துப்பாக்கி சத்தத்த போட்டார். உள்ள இருந்த வனிதா “டீச்சரத் தேடுங்கடா....எங்கயோ சந்துல தூங்குதுடா”ன்னு கத்த சூப்பர் சேரன் சார் வெளிய போனா அங்க கஸ்தூரி பேந்த பேந்த முழிச்சிட்டு உக்காந்திருந்துச்சு...
சேரன் : என்ன டீச்சர் தூங்குனீங்களா?
கஸ் : நான் எதுக்குங்க தூங்குறேன்? நானே என்ன சிலபஸ் எடுக்கலாம்னு கண்ண மூடி யோசிச்சிட்டு இருக்கேன்
சேரன் : அப்டியே தூங்கிட்ட?
கஸ் : இல்லங்க....அமைதியா அப்பிடியே கண்ண மூடி, மூளைய தூண்டிவிட்டு, மூக்கு வழியா டர்ருன்னு சத்தம் குடுத்து.....
சேரன் : அதுக்கு பேருதான தூக்கம்?
கஸ் : இந்த வீட்டுல அத தூக்கம்னா சொல்லுவீங்க?
சேரன் : இல்ல தூக்கு போட்டுக்குறதுன்னு சொல்லுவோம். சரி விடு....ஜொள்ளு வடிஞ்சிருக்கு வாயத்தொட
கஸ் : அது....... வாய்ப்பாடு சொன்னேன் அதுனால வடிஞ்சது...
சேரன் : நான் எதும் அசிங்கமா சொல்றதுக்குள்ள நானே உள்ள போயிடுறேன் //
மறுபடியும் க்ளாஸ் ரூம். “ள்ளக் குள்ள வாத்து பாட்டுப் பாட “வனிதா வாத்து வாத்து பாட்டுப் பாட வாங்க”ன்னு கஸ்தூரி கூப்ட்டாங்க.
கஸ்தூரி வனிதாவதான் வாத்துன்னு சொல்லுச்சுன்றது எல்லாருக்கும் பச்சையா தெரிஞ்சுச்சு. வனிதாவுக்கு தெரியாம இருக்குமா? “என்னய டீச்சர் வாத்துன்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேக்கனும் இல்லன்னா ஸ்டூடண்ட்ஸ் ஸ்டரைக்”னு சொன்னதும் எல்லாரும் ஜெர்க்.
கஸ்தூரி “அதெல்லாம் நான் அப்பிடி சொல்லவே இல்ல இப்ப நீ அந்த ரைம்ஸ சொல்லிதான் ஆகனும்”னு சொன்னதும் வனிதா சேரன் கிட்ட போயி “பஞ்சாயத்த முடிங்க”ன்னு சொன்னதும் சேரனும் கஸ்தூரிய கூப்ட்டு “நீ சொன்னது அப்டிதான் இருந்துச்சு. நீ இத முடி அப்பறம் பேசிக்குவோம்”னு சொல்ல, ஷெரினும் தன் பங்குக்கு மத்தவங்ககிட்ட கருத்து கேட்டு வச்சுக்கிட்டாங்க.
வெளிய உக்காந்து டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட லாஸ கூப்ட்டாங்க கஸ்தூரி. “ஆங்கிலம் நானா ஆய்....நான் தமிழ்ல இதே பாட்ட பாடுறேன்”னு சொல்லிட்டு “மினுக்கும் மினுக்கும் மின்மினிகள்”னு அழகா பாடுச்சு லாஸ். அடேய் சிலபஸ் மேக்கர்ஸ் நோட் பண்ணுங்கடா....நோட் பண்ணுங்கடா...!
ஸ்கூல் பெல் அடிச்சது. வெளிய வனி, கஸ்தூரி, சேரன்....
கஸ் : நான் உங்கள வாத்துன்னு சொன்னத உருவ கேலியா எடுத்துக்கிட்டீங்களா?
வனி : என் சைஸுக்கு இருந்தா அது வாத்து இல்ல....வால்வோ பஸ்ஸு
கஸ் : அப்ப உங்க புத்திசாலித்தனத்த பத்தி கேலின்னு நெனச்சுட்டீங்களா?
வனி : (Mind Voice : இவளுக்கு அடி கேக்குது போல) நான் நெனைக்கிறது இருக்கட்டும்...நீ என்ன நெனச்சு சொன்ன?
கஸ் : நான் உங்கள வாத்து மடச்சி வனிதான்னு சொல்ல வரல....
வனி : பின்ன...
கஸ் : வனிதா வாத்து மடச்சி இல்லன்னு சொல்ல வந்தேன்...
வனி : இல்லன்னு சொல்லும்போதும் வாத்து மடச்சி வனிதான்னுதான் சொல்லுவியா?
கஸ் : “வனிதா எது இல்ல?”ன்னு யாரும் கேட்டா வனிதா வாத்து மடச்சி இல்லேன்னு தெரியனும்ல...
சேரன் : இல்ல அப்பிடி சொல்லக்கூடாது கஸ்தூரி....
வனி : சேரன் சார்....ஒரு 5 நிமிஷம் குடுங்க. ஆளில்லா இடமாப் பாத்து இவள அடிச்சு தின்னுட்டு வந்துடுறேன்.....! என் கோவத்துக்கு இந்த ட்ரெஸ்ஸு தாங்காது கிழிஞ்சிரும்....இரு நான் போயி ட்ரெஸ்ஸ மாத்திட்டு வந்து வச்சுக்குறேன் வார் ஆஃப் த வேர்ல்ட ! //
இங்குட்டு சேரன் ஷெரின் கிட்ட.......
சேரன் : ஷெரின் பாத்தியா ரெண்டையும்? ரெண்டுக்கும் யாரு வாத்துன்னு பிரச்சனையாம்? காலக்கொடுமை
ஷெரின் : சார் வாத்து மீன்ஸ் டொனால்ட் டக் தான ?
சேரன் : யம்மா...நீ வேற.....இது என்ன டிஸ்னி சேனலா டொனால்ட் டக்கு வர? அது சொன்னது வெறும் டக் தாம்மா
ஷெரின் : சாரி சார்...நான் இப்பதான் தமில் கத்துக்கு இருக்கே....
சேரன் : நீ கமல் சார்னு நெனச்சு எங்கிட்ட பேசிட்டு இருக்க! நான் வந்த மேட்டரே வேற...! பாத்தேல்ல ரெண்டும் கேம விட்டு வெளிய போனத? அப்டியே ஃபிக்ஸ் பண்ணிக்கோ....ஒர்ஸ்ட் பர்பார்மென்ஸ் யாருன்னு வந்தா ரெண்டையும் போட்டு விட்டுரு....! எங்க சொல்லு வனிதா, கஸ்தூரி...ம்ம்ம்! மறந்தும் என் பேரு வரக்கூடாது சரியா....?//
எல்லாம் உள்ள உக்காந்திருந்தானுங்க. வனிதா மட்டும் பெட்ரூம்ல. சட்டுனு எல்லார் முன்னாடியும் வந்து நின்ன கஸ்தூரி “நான் வனிதாவ வாத்துன்னு சொன்னத நீங்க எப்பிடி எடுத்துக்கிட்டீங்க?”ன்னு கேக்க, இத உள்ள இருந்து கேட்டு வனிதா “அடிப்பாதகத்தி இதப் போயி அவனுங்ககிட்ட கேட்டா அவனுங்க ஜாலியா எடுத்துக்கிட்டோம்னு தான சொல்லுவானுங்க”ன்னு பதறிப்போயி வெளிய ஓடிவந்து.....
வனி : இந்தாம்மா இப்ப என்னய நீ குண்டுன்றியா?
கஸ் : (இதுக்கு ஆமான்னுதான் சொல்லனும் ஆனா சொன்னா கடிச்சுருவாளே) அப்பிடி சொல்ல வரலயே !
வனி : சொல்லிப்பாரு....!  3 குழந்தை பெத்தவ நானு 18 வயசுல பையன் இருக்கான். ஆனா இன்னும் என்னய இலியானா இடுப்பழகின்னுதான் எல்லாரும் சொல்றாங்க. நீ வீம்புக்கு என்னய அசிங்கப்படுத்தப் பாக்குற யூ ப்ளடி கன்னிங் கஸ்தூரி
கஸ் : இல்ல நான் சொன்னத நீங்க உருவ கேலியா எடுத்துக்கிட்டீங்களா இல்ல அறிவு கேலியா எடுத்துக்கிட்டீங்களா?
வனி : அடியேய் கருப்பாயி என்ன கிண்டலா? எப்பிடி எடுத்துக்கிட்டாலும் அது எனக்கு அசிங்கந்தான! இது என்ன ட்விட்டர்னு நெனச்சியா கலாய்க்க? கரப்பான் பூச்சிய நசுக்குற மாதிரி நசுக்கிருவேன் நசுக்கி....! எங்கடா இங்க இருந்த தோசைக் கல்ல ? //
அப்பறம் ஸ்கூல் மெரீச சொல்லுங்கன்னு சொன்னானுங்க. கவின் அஞ்சாங் கிளாஸ்லயே ஐ லவ் யூ எழுதி இப்ப மாதிரியே அப்பயும் மாட்டிக்கிட்டானாம். ஷெரின் 9வது படிக்கும்போது ஒருத்தன சைட் அடிச்சு அவன 10த் பெயிலாக்கிடுச்சாம். சாண்டி வழக்கம்போல லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் கதை. தர்ஷன் என்னமோ மாட்டு மூத்திர கதை சொல்லி மொக்க போட்டான்.
மிட் நைட்டுல தர்ஷன் கிட்ட வந்து சூப்பர் சேரன் சார்.....
சேரன் : லாஸும், ஷெரினும் சூப்பரா டாஸ்க் பண்ணாங்கடா. அதுலயும் உன் ஆளு செம்ம
தர்ஷன் : சாண்டியும் நல்லாதான பண்ணாரு சார்
சேரன் : அது ஓவர் ஆக்டிங் டா....! அண்ணனும் நல்லா பண்ணேன்ல ? மாயக் கண்ணாடிக்கப்பறம் நான் நல்லா பண்ண கேரக்டர் இந்த பிரின்ஸிப்பல் கேரக்டர்தான்.
தர்ஷன் : மாயக் கண்ணாடி மாயா ஜால படமா சார்? பேரே சொல்லுதே...
சேரன் : ஸ்ஸ்ஸப்பா....அத விடு...! ஆனா அண்ணன் பர்பார்மன்ஸும் இன்னைக்கு நல்லா இருந்துச்சுல்ல?
தர்ஷன் : ஆமா ஆமா...இருந்துச்சு
சேரன் : ஹாங்....அத அப்பிடியே ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அடுத்த வாரம் பெஸ்ட் பர்மார்மன்ஸ் யாருன்னு கேப்பானுங்க....! ஆனாலும் உன் ஆளு செம்மடா....! குட் நைட் டா ! //
ஓவர் ஓவர்....!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)