பிக்பாஸ் 3 : நாள் 69 (31.08.19)


பிக்பாஸ் 3நாள் 69 (31.08.19)


நாட்டுப்புற கலைஞர்கள் பில்ட் அப் சாங் பாட, ஆண்டவர் எண்ட்ரி. “கண்டதையும் பாத்து அழியுறோம் ஆனா இங்க அருமையான கலைகள் நாம பாக்காததால அழிஞ்சிட்டு இருக்கு”ன்னு கூத்து, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டத்தப் பத்தி சொன்னார். “நானும் என் படத்துல கிடைக்குற கேப்லயெல்லாம் இதப் பத்தி பேசிட்டுதான் இருக்கேன். நம்ம கலாச்சாரமே கலையால வளர்ந்தது”ன்னு விரிவா பேசுனார். “சரி...வெள்ளிக்கிழமை பொழுது எப்பிடி போச்சுன்னு பாப்போம்”னு சொல்லிட்டு உள்ள காமிச்சார்.
69ம் நாள்
“சரோஜா சாமான் நிக்காலோ”ன்னு அலற ஆளாளுக்கு ஆசுவாசமா எந்திரிச்சானுங்க. அதிசயமா வனிதாவ இழுத்துட்டு வந்து ஆடுனானுங்க. அதுவும் முன்ன பின்ன உருண்டு ரோடு போட்டுட்டு இருந்துச்சு. “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ” வரிக்கு அண்ணன் சேரன் அனாயாசக் குத்து போட்டார். முடிஞ்சதும் ஷெரின் கக்கூஸ்ல சாண்டி கூட “லெட்ஸ் டான்ஸு புள்ள”ன்னு தங்கு புங்குன்னு குதிச்சிட்டு இருந்துச்சு.
வெளிய ஷெரின், கவின், தர்ஷன், சாண்டி உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. கவின் “நான் வெளிய போயிடுவேன் ஷெரின். நீ இங்க உள்ளவங்கள ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உன் கடமைய செய்”னு சொன்னதும் ஷெரின் “ஏண்டா கடைசி வரைக்கும் என்னய என் விளையாட்ட விளையாடவே விடமாட்டீங்களாடா?ன்னு பாக்க, கவின் “ ஏன்னா நீ இந்த வீட்டு றெக்கையில்லா ஏஞ்சல்”னு சொல்ல, தர்ஷன் “யப்பா சாமி சாவடிக்காத....நீ போறதப் பத்தி கூட கவலையில்ல ஆனா 4 நாளா போறேன் போறேன்னு சொல்லி பேசுற பேச்சு இருக்கு பாரு....முடியலடா டேய்...”னு பொலம்பிட்டாப்ல.
அப்பறம் கவின், ஷெரின், லாஸ்.....!
ஷெரின் : கவின், பஜ்ஜி சாப்பிடலயா?
கவின் : வெளிய போறவனுக்கு பஜ்ஜி ஒண்ணுதான் கேடு.....அது என்ன வாழக்காய் பஜ்ஜியா?
ஷெரின் : இந்தா சாப்ட்டு பாரு....
கவின் : என்னத்த பஜ்ஜியோ....வெளிய போறதுன்னு முடிவாகிப் போச்சு....அப்பிடியே சட்னி தொட்டு குடு....
ஷெரின் : இந்தா கூச்சப்படாம சாப்புடு...
கவின் : வெளிய போனப்பறம் யாரு குடுப்பா பஜ்ஜி....? வெங்காய பஜ்ஜி இல்லையா?
லாஸ் : எக்ஸ்கியூஸ் மீ இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு கொள்ளலாமா? ஏன் பஜ்ஜிய தனியா தட்டுல வச்சு திங்கமாட்டியா? இது பஜ்ஜியா இல்ல பப்ஜியா ? கூட்டு சேர்ந்து கும்மியடிச்சிட்டு இருக்க? இந்தா ஒழுங்கு மரியாதையா என் பஜ்ஜிய எடுத்து தின்னு
கவின் : யாரு பஜ்ஜியா இருந்தா என்ன? பஜ்ஜி பஜ்ஜிதான....! குடு உன் பஜ்ஜிய ! உள்ள வனிதாகிட்ட கேட்டேன் ரெண்டு கைலையும் 12 பஜ்ஜிய வச்சுக்கிட்டு பஜ்ஜியே இல்லேன்னுடுச்சு
லாஸ் : உனக்கு பஜ்ஜி பிடிக்குமா? எனக்கு பஜ்ஜியே பிடிக்காது...
கவின் : 8வது பஜ்ஜி சாப்பிடும் போதாச்சும் இது  உனக்கு நியாபகம் வந்துச்சே....சந்தோஷம் //
லாஸுக்கு ஷெரின் கிட்ட பஜ்ஜி வாங்கி தின்னதுல பய மேல பயங்கர கோவம். இத கவனிச்ச ஷெரின் “என்னடா கவினு செம்ம அடி வாங்குற போல”ன்னு கலாச்சுட்டு இருந்தாங்க.
இது ஒண்ணு போதாதா நம்ம பயலுக்கு....
கவின் : என்ன லாஸு...எல்லாரும் வெங்காய பஜ்ஜி போட்டா நீ பொசசிவ் பஜ்ஜி போடுற?
லாஸ் : அப்பிடி இல்ல....நீ அவகிட்ட பிச்சையெடுத்த மாதிரி இருந்துச்சு....தப்புன்னா விடு
கவின் : நான் அவ பஜ்ஜிய சாப்ட்டா உனக்கு பத்தி எரியுது பாத்தியா? இதான் அது?
லாஸ் : எது?
கவின் : அதான் அது.....! நான் அப்பிடி பண்ணதுல உனக்கு இப்பிடி இருக்குன்னா அப்ப அதுக்கு அதான் அர்த்தம்
லாஸ் : சரியா வெளங்கலையே?
கவின் : அதான் அதான்னு நான் அன்னைக்கு சொன்னது இதான்.....அதான் உனக்கு புரியுற மாதிரி சொன்னேன்...
லாஸ் : புரியுற மாதிரி? இது ? சர்தான்....! //
ஷெரின் உள்ள பெட்டியில பேக் பண்ண பக்கத்துல உக்காந்து தர்ஷன் பாட்டு பாடிட்டு இருந்தான். அப்பறம் ரெண்டும் சட்டைய தூக்கிப் போட்டு வெளையாண்டுட்டு இருந்துச்சுங்க...
அப்பறம் சாண்டி, ஷெரின், கவின், தர்ஷன் எல்லாம் உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. ஷெரின் சாண்டிகிட்ட இங்கிலீஷ்ல கேள்வி கேட்டு சிரிச்சு விளையாடிட்டு இருந்தாங்க. நல்லா இருந்துச்சு.
நைட்டு நடு ராத்திரியில.....சாண்டி லாஸுக்கு அட்வைஸ் ஆம்லேட் போட்டுக் குடுத்துட்டு இருந்தாப்ல. “வெளிய போனா உங்கப்பாரு உன்னய மெச்சிக்குவாரான்னு பாரு ! ஒழுங்கா எங்கூட சுத்திட்டு இருந்த பையன். இப்ப உன்னய சுத்திட்டு இருக்கான். உன் காதல கட்டுப்படுத்தி கவின காப்பாத்து”ன்னு பக்குவமா பேசுனார். அதோட வெள்ளிக்கிழமை முடிஞ்சது.
அகம் – அகம்
நாட்டுப்புற கலைஞர்கள் கிட்ட “உள்ள யாரு சிறப்பா பண்ணா?”ன்னு கேட்டதுக்கு “சாண்டிதான் பெஸ்டு....இதுக்காக மீசைய எடுத்துட்டாரு”ன்னு சொன்னதும் ஆண்டவரும் மூக்குக்கு கீழ சொறிஞ்சுக்கிட்டே “அப்ப நானுந்தான்”னு டைமிங் அடிச்சார்.
அப்பறம் கலைஞர்கள் வேண்டுகோளுக்கிணங்க வில்லுப்பாட்டு பாடுனார்.
“சரி...இப்ப மக்களுக்கு முன்னாடி சொல்லுங்க ஏன் நீங்க தகுதியான ஆளு?”ன்னு சொன்னார்.
முகின் – என் பேருலயே MGR இருக்கு அதுனால நான் நல்லா வருவேன்னு எங்கப்பா சொன்னார். அவரு பேருல MGR இல்லேன்னாலும் அவரும் நல்லா வரனும்னு ஆசப்படுறேன். அவரும் ஜெயிக்கனும், நானும் ஜெயிக்கனும்.
சாண்டி : இந்த சைக்கோக்கள சந்தோஷமா வச்சிருந்த ஒரே காரணம் போதாதா? இதுக்கு மேல வேற என்ன வேணும்?
கவின் : அடி வாங்குனது நானு கப்பு எனக்குதான். இவ்வளவு அடி எவனும் வாங்குனதில்ல. வார வாரம் நாமினேட் ஆனாலும் இன்னும் உள்ள இருக்கேன் அதுனால ஜெயிக்க வாய்ப்பு இருக்குன்னு நெனைக்கிறேன்.
வனி : வெற்றி தோல்வியெல்லாம் பிரச்சனை இல்ல. உங்களப் படுத்துறதுக்கு இது எனக்கு செகண்ட் சான்ஸ். என்னய நீங்க தோக்கடிக்கலாம், புறக்கணிக்கலாம் ஆனா என்னய மறக்கவே முடியாது.
ஷெரின் : என்ன தகுதி இருக்குன்னு எனக்கே தெரியல எல்லாருக்கும் முடி வெட்டி விட்டிருக்கேன், கும்முன்னு ட்ரெஸ் போட்டு ஜம்முன்னு ஆடியிருக்கேன், சல்பேட்டாவால ஸ்லைட்டா சைக்கோவா வேற மாறிட்டேன் இதுக்கெல்லாம் எதாச்சும் மக்கள் பாத்து செஞ்சா தேறுவேன். இல்லேன்னா பெங்களூருக்கு பஸ் ஏறுவேன்.
தர்ஷன் : ஒரு வின்னர் கிட்ட கேக்குற கேள்வியா இது? அங்கீகாரத்துக்கு வந்தேன் அது கெடச்சிருச்சுன்னு நெனைக்கிறேன்.
சேரன் : ஒரு நாடு நல்லா இருக்கனும்னா வீடு நல்லா இருக்கனும். வீடு நல்லா இருக்கனும்னா தலைவன் நல்லா இருக்கனும். தலைவன் நல்லா இருக்கனும்னா நாடு அமைதியா, அகிம்சையா இருக்கனும். அந்த தலைவனா நான் உள்ள இருக்கேன் நீங்க வெளிய இருக்கீங்க.
ஆண்டவர் : சேரன் பாயிண்டுக்கு வந்துருங்க ப்ளீஸ்....
சேரன் : நன்றி வணக்கம்
லாஸ் : நான் எங்குட்டு ஜெயிக்க ? நான் எடுத்தது முழுக்க முழுக்க தப்பான டெசிசன் தான் ஆனாலும் அது எல்லாம் சொந்தமா சுய நினைவோட நானே எடுத்தது. இது போதாதா நான் ஜெயிக்க?
பாப்புலாரிட்டி ரேட்டிங் குடுத்தீங்களே எந்த அடிப்படையில குடுத்தீங்க 3 பேரும் ? குறிப்பா 6,7,8 இடங்கள எப்பிடி குடுத்தீங்க?
சேரன் :
6 ஷெரினுக்கு குடுத்தேன். ஆளு அழகா அங்கிட்டும் இங்குட்டும் சுத்திட்டு இருந்தாலும் எப்பப் பாத்தாலும் பொங்கல் சாப்ட்ட எஃபெக்ட்லயே மந்தமா இருக்கு அதான் 6 குடுத்தேன்
7 முகினுக்கு. 8 வாரமா என்ன பண்றதுன்னே தெரியாம சுத்திட்டு இருக்கான் அதனால 7.
8 கவினுக்கு. அவனுக்கு குடுக்காம யாருக்கு குடுக்க? நான் குடுக்குறதுக்கு முன்னாடி போர்டே அவங்கிட்ட போயிடுச்சு.
தவிர இந்த இடத்துல நான் டைரக்டர்னு சொல்லிக்கிறதுல பெருமைப்படுறேன். மக்கள் ரசனை நமக்கு தெரியாதா என்ன? (அப்பறம் எப்பிடி திருமணம் எடுத்தீங்க?)
முகின்
ஒண்ணும் பெருசா யோசிக்கல. பிடிச்ச ஆளுங்கள வரிசைப்படுத்தி குடுத்துட்டேன் அவ்வளவுதான்.
வனி
பாசிட்டிவ் - நெகடிவ், இன்பம் – துன்பம், இரவு – பகல், மேடு – பள்ளம் இப்பிடி வாழ்க்கையில எல்லாமே ரெண்டு. எதுக்கு குடுத்தேன்னு சொன்னா எதுக்கு வேணும்னாலும் குடுக்கலாம்னு தோணும்போது அத அப்பிடியே செய்யனும்னு சொல்லி குடுத்து கேட்டிருக்கேன்.....
ஆண்டவர் “எங்கிட்டயேவா?”ன்ற மாதிரி பாத்தாரு. வனி கடைசி வரை புரியுற மாதிரி பதில் சொல்லல.
“கடைசி 3 இடத்துல இருக்கியே உனக்கு எதும் பிரச்சனையில்லையா?”ன்னு கவின் கிட்டயும் தர்ஷன் கிட்டையும் கேட்டார்.
கவின் : இதுல என்ன இருக்கு? எனக்கே தெரியும் நான் வேலைக்காக மாட்டேன்னு. ஒரு வேலை ஜெயிச்சுட்டா என் மனசாட்சியே என்னய அசிங்கமா கேக்கும். அதனால நோ வருத்தம்
ஆண்டவர் : ஆனா உன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மக்களுக்கும் பிடிச்சிருந்தா இன்னும் 2 வாரம் தாங்குவ.
தர்ஷன் : வனி எனக்கு இன்னும் கடைசி நம்பர் குடுக்கும்னு நெனச்சேன். அது சொல்றத எல்லாம் எவனாச்சும் சீரியஸா எடுத்துக்குவானா?
“சரி யார எவிக்ட் பண்ணலாம்னு சொல்லுங்க பாப்போம்”னு ஆண்டவர் கேட்டதுக்கு 2 பேர தவிர மத்த ஆளுங்க எல்லாம் வனிதாவ சொன்னாங்க. ஷெரின் மட்டும் “வனிய அனுப்பிட்டு இவனுங்க என்னத்த திம்பானுங்கன்னு தெரியல?”ன்னு கலாச்சாங்க.
“அப்ப யாரயாச்சும் உள்ள கூப்புடலாம்னா யார சொல்லுவீங்க?”ன்னு கேட்டதுக்கு மோகன் நைனாவ சொன்னானுங்க (ஏண்டா இருக்குற பொம்பளப் புள்ளைங்கள எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டு அவர உள்ள கூப்ட்டா எப்பிடிடா வருவாரு?)
அப்பறம் “மப்பட்ட வச்சு எவிக்டர்ஸ் ஃபைனல் ஸ்பீச் குடுங்க”ன்னு சொன்னார்.
ஷெரின் ரொம்ப அழகா மப்பட்ட வச்சு செம்ம க்யூட்டா பேசுனாங்க.
கவின் சாண்டிக்காக ஒரு பாட்டுப் பாடுனான். இந்தப் பயலுக்குள்ளையும் என்னமோ இருக்கு. கலக்கிட்டான். அவன்லாம் இருக்கட்டும் கடைசி வரைக்கும்.
வனி அந்த பொம்மைய பிடிச்சு இருந்த ஸ்டைலே கொடூரமா இருந்துச்சு பொம்மை கொரவளைய நெறிச்சு.....அது பேசுற மாதிரி இல்ல கைய எடுன்னு கத்றுன மாதிரி இருந்துச்சு....வழக்கம் போல எதையோ உளறுச்சு. ஆண்டவர் அந்த பொம்மைய பேசவே விடலையேன்னு வருத்தப்பட்டாரு.
சர்தான் நாளைக்கு வந்து எவிக்ஷன் சொல்றேன்னு சொல்லிட்டு சர்ருன்னு போயிட்டார்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)