பிக்பாஸ் 3 : நாள் 50 தொடர்ச்சி & 51ம் நாள் (13.08.19)

பிக்பாஸ் 3நாள் 50 தொடர்ச்சி & 51ம் நாள் (13.08.19)


“என்ன சேரன் சார் ரொம்ப நல்லவனா காமிச்சு என்ன நடக்கப் போகுது? தப்பு நடக்கும் போது நாலஞ்சு நாக்காலியக் கொண்டி அடிச்சாதான ஃப்ரேம்ல இருக்க முடியும்?”னு வனிதா சொல்ல, சேரனோ “ரொம்ப அப்பிடி உள்ள போனா நம்மள மதிக்க மாட்றானுங்க அதான்”னு சொன்னார். “நீங்க பெரிய ஐட்டங்காரன்னு ஊருக்குள்ள பேசிக்குறானுங்க. இங்க என்னடான்னா தட்டு கழுவிட்டு இருக்கீங்க. என்ன நடிக்கிறீங்களா?ன்னு கேட்டதும் சேரன் “மாணிக்கம்..... மாணிக் பாட்ஷாவா மாற வேண்டிய நேரம் வந்துருச்சுன்னு நெனைக்கிறேன்”னு நெஞ்ச தூக்குனார்.

பெட்ரூம்ல அபி, ஷெரின், லாஸ், வனி
வனி “இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா?”ன்னு கேக்க ஷெரினோ “பலான பலானது நடக்குது! என்னத்தன்னு சொல்றது?”ன்னு சலிச்சுக்க. வனி “பெண்கள யூஸ் பண்ணி ஆண்கள் ஜெயிக்குறாங்க....அதுக்கு அபி மாதிரி சில பெண்களே துணை போறாங்க...சோ சேட்! அவன நீ வேணாம்னு சொல்லுவியா அவனப் போயி தொங்குற?”ன்னு அபிகிட்ட கோவப்பட்டாங்க.

வெளிய பசங்க ஜாலியா “வாங்கண்ணா வணக்கங்கண்ணா”ன்னு பாடிட்டு இருந்தானுங்க.

//வனி சம்பவம் 1 :

அபி : வனிக்கா வனிக்கா ! நீங்க பூட்ட ஒடச்சு என் அறிவுக்கண்ண தொறந்ததும் தான் தெரியுது....நான் எல்லா பழியையும் என் மேல ஏத்துக்கிட்டேன்னு

வனி : எஸ் அஃப்கோர்ஸ் ! நீ ஒரு லூசு, நீ அப்பிடித்தான் பண்ணுவ!

அபி : நான் என்னமோ அவன் கையப் புடிச்சு இழுத்த மாதிரி பேசுறாங்க

வனி : நீ எங்க கையப் புடிச்சு இழுத்த.....காண்டம் விளம்பரம் மாதிரி கட்டிப்பிடிச்சு பொரண்ட....

அபி : ஓ மை காட்...! அது ஜஸ்ட் ஒரு ஹக்!

வனி : போடி டொனால்டு டக்கு ! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குழந்தை பொறந்து அத கட்டிலுக்கு கீழ ஒளிச்சு வச்சு வளக்குறீங்கன்னு வெளிய எல்லாருக்கும் தெரியுண்டி....

அபி : யூ மீன் பேபி? நோஓஓஓஓஓ!

வனி : இதுக்கெல்லாம் காரணமே நீதான்னு நீலகிரி கலெக்டர் மாநாட்டுல கூட பேசிக்கிட்டாங்கடி

அபி : அக்கா இந்தப் பழிய நான் போக்கனும்

வனி : அதுக்கு மொத வேலையா காலையில முகின தாக்கனும்.....காதக் கொண்டா.....

அபி : புரிஞ்சது.....! இந்த மிஷின மார்னிங் ஒரு மக் மில்க்க குடிச்சுட்டு ஷார்ப்பா ஸ்டார்ட் பண்ணிடுறேன்

வனி : அப்பறம் அபி, டு பி ஹானஸ்டா ஒண்ணு சொல்றேன் !

அபி : என்ன?

வனி : டு பி! //

51ம் நாள்

“வந்தாள் மகாலக்ஷ்மியே”ன்னு பாட்டு போட்டதும் வனிதாவ காட்டுனது காட்டுமிராண்டித்தனம். கக்கூஸ்ல “அழுகையும் அபிநயமும் எனதிரு கண்கள்”னு வாழ்ற அபி, வனிதாவுக்கு இந்தப் பாட்டுக்கு அபிநயம் பிடிச்சு ஆடி காட்டிட்டு இருந்தாங்க. அபி ஆடுறதும், வனி அத ரசிக்குறதும்.....வாரே வா !

வனி சம்பவம் 2 :

//அபி : நான் முகினோட பொங்கலுக்கு வடையா இருந்திருக்கேனே தவிர என்னைக்குமே அவன் முன்னேற்றத்துக்கு தடையா இருந்ததே கிடையாது

மது : அப்பறம் என்ன ‘இதுக்கு’ அன்னைக்கு கமல் சார் சொன்னப்ப “இனிமே நான் அப்பிடி தடையா இருக்க மாட்டேன்”னு சொன்ன?

அபி : அன்னைக்கு எவிக்ட் ஆகிடுவேன்னு நெனச்சேன்

சேரன் : நீயென்ன LKG – Bல யா படிக்கிற ? நல்லது எது கெட்டது எதுன்னு நீதான் பாத்து பழகனும். நாங்க எவ்வளவுதான் சொல்றது. பிரண்டுன்னு சொல்ற ஆனா அவன் குனிஞ்சா குதிரை ஏறுர, உக்காந்தா உப்பு மூட்டை ஏறுர

கஸ்தூரி : (கூட்டத்துல குனிஞ்சு) அப்ப நின்னா என்ன ஏறுரா?

சேரன் : எவண்டா அது...? முன்னாடி வாங்கடா அசிங்க அசிங்கமா ஏறுறேன்...

மது : முகின யாராச்சும் கேளுங்கப்பா....

வனிதா : சாப்டீங்க ஒரே தட்டுல, கோவத்துல குத்துன பெட்டுல அவ லவ்வுன்னு சொன்னப்ப வெட்டல ஆனா அவதான் உனக்கு தடைன்னு சொன்னப்ப எதாச்சும் சொன்னியால?

முகின் : ஓகே நான் சொல்றேன்...

பெண்கள் #$%%6^&**(()__+++_))(**&^&^%%$$#@!2!!@#$%^&*()__+++_))((*&^^%$$#@!!@#$%^&*(())___)_))((*&&^^5%$$##@!!@#$%^^&&**((((0)))((8&^%$##@@@$%^&*()))(*&^%$#@!@#$%^&*()(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*() (மெல்ல அமைதியாக...)

முகின் : ஓகே நான் சொல்றேன்...

பெண்கள் #$%%6^&**(()__+++_))(**&^&^%%$$#@!2!!@#$%^&*()__+++_))((*&^^%$$#@!!@#$%^&*(())___)_))((*&&^^5%$$##@!!@#$%^^&&**((((0)))((8&^%$##@@@$%^&*()))(*&^%$#@!@#$%^&*()(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*() (மெல்ல அமைதியாக...)

சாண்டி : அவன யாராச்சும் பேச விடுங்க பெண்ணினமே....அவனும் அவன் மேல தப்பில்லன்னு சொல்லனும்ல

வனி : அப்பிடியெல்லாம் அவன் ஏன் சொல்றான்? தப்பு தப்பு அதெல்லாம் அவன் சொல்லக்கூடாது

தர்ஷன் : ஏன் சொல்லக் கூடாது? டேய் முகினு நீ ஒடச்சு விடுடா அபி என்ன என்ன சொன்னான்னு...

மது : தர்ஷா நீயும் ஷெரினும் கூடதான்....ம்ம்கும்.... அக்கும்....பக்கும் அதயெல்லாம் நாங்க கேக்குறோமா?

தர்ஷ் : எட்டிப் பாத்தாலும் உனக்கு என் முட்டி தெரியாது! உன் ஹைட்டுக்கு நாங்க என்ன பண்ணோம்னு நீ பாத்த?

அபி : ஷட் அப் யூ நான்சென்ஸ்.....! அடியே இப்ப எதுக்கு முகின எல்லாரும் அக்யூஸ் பண்றீங்க?

முகின் : நான் ஆரம்பத்துலயே சொன்னேன்.....நான் பிரண்டாதான் பாக்குறேன்னு

சேரன் : அடேய் நானெல்லாம் மூஞ்சியே பாக்காம பின்னாடி திரும்பி நின்னுகிட்டு என் ஆளுன்னு நெனச்சு 6 வருஷமா ஒரு ஆம்பளப்பய கூட பேசிட்டு இருந்த 80’ஸ் கிட்டுடா...பிரண்டுன்னு சொல்லி இப்பிடி பிக்காளித்தனம் பண்றீங்களேடா பாவிகளா

அபி : ஏண்டா முகினு என்னடா சொன்ன என்னயப் பாத்து அப்பிடி என்னடா நான் உங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்...சொல்லுடா..... சொல்லுடா சொப்பு வாயா....

முகின் : (சேரத் தூக்கியபடி) அடிங்க.....

எல்லாரும் டர்ராகிட்டானுங்க.....அபிய அப்பிடியே பார்சல் பண்ணி வெளிய கொண்டு போயிட்டானுங்க.

வனி : டு பி ஹான்ஸ்டா ஒன்ணு சொல்லவா?

மது : (பதட்டமா) என்ன ?

வனி : ஹானஸ்ட்! //

உள்ள பெட்ரூம்ல சாண்டி, கவின், முகின், சேரன், வனி இருந்தாங்க. “அன்னைக்கு எந்த உரிமைல கட்டில ஒடச்ச?”ன்னு வனி கேக்க “அது உரிமைல இல்ல அவ பேசுன கோவத்துல”ன்னு சொன்னான். சேரன் குறுக்க வந்து “ஆனா என்னய அப்பிடி இடிக்காத, என் கண்ணத்தக் கடிக்காதன்னு அந்தப் பொண்ணுகிட்ட நீ சொல்லல”ன்னு சொல்ல, முகினோ “நான் சொன்னேன்”ன்னு சொன்னதுக்கு சேரன் “இல்ல நீ சொல்லல”ன்னு சொல்ல கவினும், சாண்டியும் “அவன் அந்தப் பிள்ளைகிட்ட சொன்னேன்னு சொல்றத நீங்க எப்பிடி சொல்லலேன்னு சொல்றீங்க?”ன்னு பாயிண்டா கேக்க, அவரு பாட்ஷாவா மாறுன லட்சணம் பல்லிளிச்சது.

கஸ்தூரிக்கு இப்பதான் புரிஞ்சுது “ஏண்டா இவ்ளோ வயலண்டான ஆளுகளாடா என் கூட ரெண்டு நாள சைலண்டா இருந்தீங்க? ஆத்தீ....கரணம் தப்பி இருந்தா மரணமாகி இருக்குமே? இனி உங்க கூட பழக்க வழக்கம் வச்சுக்கிட்டாதானடா....? வனிதா போகும்போது அது பெட்டிக்குள்ள உக்காந்து எஸ்கேப்பாகிட வேண்டியதுதான். அது லக்கேஜ் ஒரு ரயில் கோச் மாதிரிதான் இருக்கும் பிரச்சனையில்ல. மொத இங்க இருந்து தப்பிக்கனும்”னு மனசுல உறுதி எடுத்திருப்பாங்க.

முகின் அழுதத பாத்து சாண்டி ஒரு கட்டத்துல வனிகிட்ட “தேவையில்லாம நோண்டி விட்டு இப்ப உனக்கு தின்னது செரிச்சிருக்குமே”ன்னு நேரடியாவே கோவப்பட்டாப்ல. கவினும் மதுவ கட்டி ஏறுனான்.

வெளிய கஸ்தூரி, லாஸ், ஷெரின் 3 பேரும் அபிய ஆறுதல் படுத்த முயற்சிக்க. கஸ்தூரி வழக்கம்போல கதாகாலட்சேபத்த ஆரம்பிக்க அபியோ “அம்மா கஸ்தூரி அங்குட்டு போறியா”ன்னு சொல்லிட்டு லாஸ் & ஷெரின் கிட்ட ஒப்பாரி வச்சாங்க. “நான் தோத்துட்டேன் போல. வீட்டுக்கு அனுப்புங்கடா டேய்”னு எப்பவும் போல அழுகை.

பசங்க எல்லாரும் முகின் பின்னால நின்னானுங்க. பாக்கவே அவ்ளோ சந்தோஷம். மது மாதிரி ஆட்கள் ஆம்பளை பொம்பளைன்னு பிரிச்சு பேசுறப்போ இந்தப் பக்கம் இப்பிடி நிக்கிறதத் தவிர வேற வழியும் இல்ல. “நீ கோவத்த மட்டும் கட்டுப்படுத்து நாங்க நிக்கிறோம் உங்கூட”ன்னு தர்ஷன் சொன்னப்போ புல்லரிச்சது.

தனியா உக்காந்திருந்த முகின் கிட்ட அபி வந்துச்சு. “யப்பா டேய் இன்னும் ஒரு 20 பக்கெட்டுக்கு அழுகும் போல”ன்னு நம்ம பயத்துல இருக்கும்போது....
அபி : முகின் ! “உன் முன்னேற்றத்துக்கு நான் தடையில்ல” இந்த ஓரே ஒரு வாக்கியத்த மட்டும் சொல்றதுக்குதான் காலையில ஆரம்பிச்சேன்....! கட்டையில போறவனுங்க விட்டானுங்களா? இன்னைக்கு உன் கையால என் கபாலத்த பொளக்க வச்சிருப்பானுங்க.....! இப்போ இங்க நம்மள சுத்தி யாருமில்லேன்ற தைரியத்துலதான் வந்தேன். நான் இப்போ இங்க நிக்குறத மட்டும் வனிதா பாத்தான்னா அவ்ளோதான், உன்னய கொல கேசுல உள்ள அனுப்பிருவா என்னய பொணமா வெளிய அனுப்பிருவா....அதுனால யாரும் பாக்குறதுக்கு முன்னாடி சாரி கேட்டுட்டு ஓடிடுறேன்.......சாரி!

சாண்டி,கவின்,முகின் 3 பேரும் பிக்பாஸ் 3 பாட்டு ரெடி பண்ணி பாடிட்டு இருந்தானுங்க.

டாஸ்க் தொடர்ந்துச்சு...

கக்கூஸ்ல உக்காந்து வனி முகின் கிட்ட “காதல் வேணாம்னு ஒரு பாட்டு பாடு”ன்னு சொல்ல “வேணாம் மச்சான் வேணாம்”னு முகின் ஆரம்பிக்க அபி அவசரமா வெளிய ஓடிடுச்சு.

“என்ன மேனேஜரே நான் இருக்கும் போது ஈயே இங்க இல்ல இப்போ இவ்ளோ ஈ இருக்கே?”ன்னு வனி சேரன கேக்க, “நீ இருந்தப்போ நிம்மதி கூடதான் இல்ல....அதுக்கென்ன பண்றது?”ன்னு மனசுல நெனைச்சுக்கிட்டு....”யப்பா சாண்டி ஈ இருக்கக் கூடாது பண்றத பண்ணு”ன்னு சொன்னத பசங்க உக்காந்து கலாய்ச்சுட்டு இருந்தானுங்க.

அப்பறம் வனிய மகிழ்ச்சிப்படுத்த லாஸும், முகினும் பாடுப்படி ஆடுனானுங்க.

டாஸ்க் தற்காலிக நிறுத்தி வைப்பு...

உள்ள கஸ்தூரி வனிகிட்ட

கஸ் : வனி இந்த முதிர்ச்சியான பேச்சும், அறிவும் உங்கள எங்கயோ கொண்டு போயிடும்

வனி : அப்டியா ? சின்ன வயசுல இருந்தே நான் அப்டிதான்....எங்க ஏரியா கலவரத்துக்கெல்லாம் நாந்தான் காரணமா இருப்பேன்

கஸ் : ஆனா கொஞ்சம் வால்யூம குறைச்சுக்கலாம்

வனி : குறைச்சுக்கோ யாரு வேணாம்னா? உனக்கு குறைச்சு வைக்கவா?

கஸ் : பாத்தியா எவ்வளவு அழகா பேசுற.....நான் அப்டியே ரசிக்கிறேன் உன்னய...ஆனாலும் கொஞ்சம் சத்தம் போடாம பேசலாம்

வனி : சத்தமே போடாம பேசலாமா...... வறியா...என்ன சொல்ற? வா பேசுவோம்

கஸ் : இப்பிடி பஜாரி மாதிரி பேசிதான் வெளிய போன சனியனே! கேட்டா வியாக்யானம் பேசுறியா? போடி போடி.....(வேகமா போர்வைய பொத்திட்டு தூங்கிடுச்சு)

வனி : ஆனா கஸ்தூரி டு பி ஹான்ஸ்டா ஒன்ணு சொல்றேன்

கஸ் : (போர்வைக்குள்ள இருந்தபடி) என்ன?

வனி : ஒன்ணு ! //

அப்பறம் எல்லாரும் தூங்க போயிட்டானுங்க. ஆனா வனி மட்டும் அபி & ஷெரின் கிட்ட “லாஸ நம்பாதீங்க. அவதான் பசங்கள நாமினேஷனுக்கு தூண்டி விடுறா. பசங்க சப்போர்ட் கிடைக்கும்னுதான் அவ அவனுங்க கூட சுத்துறா பாத்து சூதானமா இருந்துக்கோங்க”ன்னு புகை போட்டுட்டு இருந்துச்சு. கலவரம் இன்னைக்கு அடங்கினதோட முடிஞ்சது.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)