பிக்பாஸ் 3 : நாள் 55 & 56 (17.08.19)
பிக்பாஸ் 3நாள் 55 & 56 (17.08.19)
அந்த ஹலோ ஆப்
டாஸ்க்குல பஞ்ச் டயாலாக் பேசுனானுங்கள்ல....அதுல மது பேசுனதுல எதோ பஞ்சாயத்து போல.
அன்னைக்கு அது பேசுனத மட்டும் காமிக்காதப்பவே டவுட்டு இருந்துச்சு. சரி போரா எதாச்சும்
பேசி இருக்கும்னு பாத்தா ஒரு போர் வர அளவுக்கு பேசி இருக்கு போல. ஆனா அதுக்கப்பறமும்
இந்த ஆடுகாலிங்க நல்லா ஆடிப்பாடிட்டுதான இருந்தானுங்க? அது சரி ! இவனுங்க கொலை பண்ணதுக்கப்பறம்
கொக்கோ முட்டாய் தின்றவனுங்கதான ! வழக்கம் போல இவனுங்க அது பேசுனத வச்சு என்னத்தயோ
எழவக் கூட்ட கடைசியில அது வீட்டுக்கு போகனும்னு கைய அறுத்துக்குச்சு போல....! நம்மள்லாம்
ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு பாதியில போகனும்னா வெங்காயத்த கக்கத்துல வச்சுக்குவோம்.
இது என்னடான்னா கைய அறுத்துட்டு வந்து நிக்குது. சில்லி கேர்ள்.
ஆரம்பத்துல
இத ஒரு அறிவிப்பா பிக்பாஸ் சொன்னாரு. “விவாதத்துல தன்னோட கருத்த நியாயம்னு நிரூபிக்க
மது கைய அறுத்துக்கிச்சு. அது அறுத்தது கைய மட்டுமில்ல பிக்பாஸ் கண்டிஷனையுந்தான்.
தவிர இந்த பிக்பாஸையே அபிய அனுப்புற மாதிரி அசால்ட்டா ஜெயிலுக்கு அனுப்பி ஆயுள் கைதியாக்கும்
வாய்ப்பு இருப்பதாலும், அவங்கள வெளியேத்துறதத் தவிர எனக்கு வேற வழி தெரியல ஆத்தா”ன்னு
சொன்னார்.
இத ஒளிஞ்சு
இருந்து கேட்டுட்டு பின்னாடியே ஆண்டவர் வந்தார். “என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்கள்ல?
இவிங்க என்னமாச்சும் பண்ணி என் தாலிய அறுக்குறதே இவனுங்களுக்குப் பொழப்பா போச்சு. சரி!
மதுவ கூப்ட்டு மனுவ வாங்குவோம்”னு சொல்லி மதுவ கூப்ட்டார்.
மது கைல கட்டோட
வந்து நின்னுச்சு. “தட்டோட குடுத்த வெற்றிய இப்பிடி தட்டி விட்டு வந்து கட்டோட நிக்கிறியே
நியாயமா?ன்னு கேட்டார். “சரி என்ன காரணம்னு சொல்லு?”ன்னு கேட்டார்.
“உள்ள ஒரு பஞ்சாயத்து
ஓடுச்சு. அத உங்களுக்கு காமிக்குறானுங்களான்னு தெரியல. அதுல என்னய அசிங்கப்படுத்தி
பேசிட்டானுங்க. நான் இருந்தா அவனுங்க வெளிய போறேன்னு சொன்னானுங்க. அதுனால நான் கைய
அறுத்துக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வெளிய வந்துட்டேன்”னு சொன்னாங்க.
“அவனுங்க போனா
போயிட்டு போட்டும். ஏன் எல்லாரும் போயிட்டா தனியா இருக்க பயமா இருக்கும்னு நெனச்சுட்டியா?
இங்க இதெல்லாம் இருக்கும், இப்பிடியெல்லாம் இருக்கும்னு தெரிஞ்சுதான வந்த? கபடிப் போட்டியில
வந்துட்டு கைய ஒடிக்கிறான், காலக் கடிக்கிறான்னு சொன்னா சரியா வருமா? அதுக்கு மொதலயே
வரமாட்டேன்னு சொல்லி இருக்கனும்! பேசுறதெல்லாம் பத்மாவத் (பத்மாவதின்னு சொல்லக்கூடாதுல)
மாதிரி வீரமா பேசுற ஆனா ரவாபாத் மாதிரி ரத்தக் கறையோட வந்து நிக்குற? வெரி ஒர்ஸ்ட்டும்மா!”
ன்னு சொன்னார். அதுக்கு மது “நானெல்லாம் நல்ல குடும்பத்துல இருந்து வந்த ஆளு. உள்ள
இருக்குறது பூராம் அறுந்து சுத்துற வாலு. என்னய நிரூபிக்க வேற வழி தெரியல. அதான் இப்பிடி
பண்ணேன்”னு சொன்னாங்க.
“இப்பிடி நிரூபிச்சு
கெட்டிக்காரத்தனத்த இல்ல முட்டாத்தனத்த காமிச்சிருக்க!
தவிற பூரா பயலுகலும் பிக்பாஸ் பாக்குறானுங்க. குழந்தைகள் கூட! (அப்பிடியா? இதுல நான்
பிக்பாஸ் பாக்குறேன், எழுதுறேன்னு சொன்னதுக்கு எங்க வைகையறால இருந்து 100 நாள் என்னய
ஒதுக்கி வச்சிருக்கானுங்க. இருங்கடா டேய் வச்சுக்குறேன் உங்கள!) அப்பிடி பாக்குற ஷோவுல
இப்பிடி பண்ணி தவறான முன்னுதாரணமா ஆகிட்டியே சரியா இது? உன் குடும்பத்த விடவா உன் கருத்து
பெருசா போயி இப்பிடி அறுத்துகிட்ட?”ன்னு நறுக்குன்னு கேக்க, “அப்பிடியெல்லாம் தன் குடும்பம்னு
பாத்தா ஒரு தலைவன் உதிக்க முடியாது ஆண்டவரே”ன்னு மது சோசலிஸம் பேச ஆண்டவர் சட்டுன்னு
காண்டானார். “நான் உன் மேல உள்ள அக்கறையில பேசுறேன். ஆனா நீ கவின் கிட்ட இழுக்குற மாதிரி
எங்கிட்டயும் ஒரண்டை இழுக்குற பாக்குற. அதுக்கு நான் ஆளில்ல. சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்
இனிமே அறுத்துக்குறதும் அறுத்துக்காததும் உன் பஞ்சாயத்து”ன்னு சொல்லிட்டு “உள்ள உன்
நண்பர்கள் கிட்ட பேசுறியா?”ன்னு கேட்டுட்டு உள்ள காமிச்சார்.
“எல்லாரும்
ஹாய் சார், ஹாய் மது”ன்னு சொல்ல! மதுவோ “சேரனும் கஸ்தூரியும் மட்டுமே என் மேல கல்லெறியும்
தகுதி உள்ள ஆளுங்க. சோ இனிமே அவங்கதான் நல்லவங்க. நான் அவங்க கைல மட்டுந்தான் முத்தம்
குடுப்பேன்”னு சொல்லிட்டு. “சேரன் சார் & கஸ்தூரி தவற தட்டி கேளுங்க, நல்லா வெளியாடுங்க,
ஜெயிச்சுட்டு வாங்க”ன்னு சொன்னாங்க. “சேரன் என்ன சொல்றீங்க?”ன்னு ஆண்டவர் கேட்டதுக்கு
“மது செஞ்சது தப்பு. அதுக்கு கத்திய எடுத்து வனி வாய லைட்டா கீறி விட்ருக்கலாம். இவனுங்க
சேட்டைக்கு அறுத்துக்கனும்னா இன்னேரம் நான் உடம்பு பூராம் கீறி கீறி வரிக்குதிரை மாதிரி
ஆகியிருப்பேன். ஆனா இது ஒரு தவறான முன்னுதாரணம். இது தவறு”ன்னு சொன்னார் சூப்பர் சேரன்
சார். (சூப்பர் சேரன் சார்.....சூப்பர் சேரன் சார்......இனிமே நான் உங்கள இப்டித்தான்
கூப்டுவேன்)
கஸ்தூரி என்னத்தயோ
உளற ஆரம்பிக்க ஆண்டவர் “சரி சரி டயமாகிடுச்சு வனி நீ எதும் சொல்லுறியா?”ன்னு கட் பண்ணி
கேக்க வனியோ “சார் நீங்க எப்டி இருக்கீங்க?”ன்னு கேக்க ஆண்டவர் “எல்லாம் உங்கப்பன சொல்லனும்”ன்ற
மாதிரி பாத்துட்டு “உன் மேல மத்தவன் மண்ணள்ளி போட்டா கூட கம்மியாத்தான் போடுவான் ஆனா
நீ உன் மேல லோடு லோடா போட்டுக்குற”ன்னு மனசுல நெனச்சுக்கிட்டு. “ரைட்டு ! கேப் வந்துருச்சு.
மது நீ கெளம்பு”ன்னு அனுப்பி விட்டார்.
“உலை கொதிச்சா
பரவாயில்ல இந்த வீட்ல அனு உலையே கொதிக்குது. எப்பாப் பாத்தாலும் “ஓ”ன்னு கத்திட்டே
இருக்கானுங்க. சண்டை போட்டாலும் மத்தவனுக்கு கேக்குற மாதிரி கத்தனும்ல? இவனுங்க கத்துறது
இவனுங்களுக்கே கேக்காத அளவு அட்மாஸ் எஃபெக்ட்ல கத்துறானுங்க. வாங்க சட்டைய பிடிச்சு
என்னன்னு கேப்போம்” அதுக்கு முன்னாடி....
55ம் நாள்
“பூம் பூம்
ரோபோடா” பாட்டோட எந்திருச்சானுங்க. காலியான மது பெட்ல ஆரம்பிச்சுதான் கேமரா பேன் ஆச்சு.
அப்போவே மது வெளிய போயிட்டாங்க போல. ஆனா வழக்கம் போல எல்லாரும் ஜாலியாதான் இருந்தாங்க.
சேரன், காஸ்தூரி உட்பட.
அப்பறம் ஒரு
சாக்லேட் டாஸ்க் வந்துச்சு. டீமா பிரிஞ்சு சாக்லேட்ட அடுக்கனுமாம். என்னமோ நேரத்த உருட்டுனானுங்க.
இதுல வனி டீமுக்கு ஏதோ சரியாப் படலன்னு சொல்லி “டேய் பிக்பாஸ் கவுண்டிங்க நிப்பாட்டுடா”ன்னு
சொல்ல, அப்பறம் அதோட டீம்தான் ஜெயிச்சுச்சு. என்னைக்குமில்லாத திருநாளா சூப்பர் சேரன்
சார் ரொம்ப ஜாலியா இருந்தார். டாஸ்க் முடிவுல எல்லாத்துக்கும் சாக்லேட் ஊட்டி விட்டார்
குறிப்பா ஷெரின், தர்ஷன், வனிக்கு. (இந்த குழந்த மனசுள்ள மனுஷன போயா நான் காலாய்ச்சேன்....?
என் கைய கருக்கிக்கனும்) வெளிய போயி மது இத பாக்காம இருக்கக் கடவது. இல்லேன்னா கத்தி
சூப்பர் சேரன் சார் மேல பாயும் அபாயமுண்டு.
இது முடிஞ்சதும்
ஷெரினும் அபியும் லான்ல படுத்துக்கிட்டு பேசிட்டு இருந்தாங்க. ஷெரின் “தர்ஷன் இஸ் எ
ஸ்மார்ட் பாய். சில விஷயங்கள அவங்கிட்ட பேசி இருக்கேன் அது அந்த ஏழடி ஏணிக்கு புரியுதானு
தெரியல. கனவுல வந்து கதகளி ஆடுறான் நாட்டி பாய். அன்னைக்கு அவன் மேல ஒரு கோவம் இருந்துச்சு.
அவன் என்னய பத்தி யோசிக்கலையோன்னு ஆனா அவன் நல்லவந்தான் எனக்கு புடிச்ச வல்லவந்தான்”னு
சொல்ல அபியோ “அடுத்த எபிசோட் ஆரம்பிக்குது போல. நம்ம கதை தனியா இருந்தாதான் நம்மள நோண்டுறானுங்க.
அப்டியே ஷெரின் கதையோட நிழலுல நம்மளுத முகின் கூட ஆரம்பிச்சு ஓட்டிரலாம்”னு ஒரு எண்ணம்
வந்திருக்கும். “அடேய் முகினு ஐ ஆம் கமிங்”னு மனசுக்குள்ள ஆனந்தக் கூச்சல் போட்டிருக்கும்.
56ம் நாள்
“கொலம்பஸ் கொலம்பஸ்
விட்டாச்சு லீவு” பாட்டு. வீக்கெண்டாம்!
சாக்லேட் வந்துச்சு
அள்ளிப்பிரிச்சு தின்னானுங்க.
என்னைக்குமில்லாம
இன்னைக்கு ஆண்டவர் சேர்ல உக்காந்டுக்கிட்டார்.
அகம் - அகம்
உள்ள போனதும்
வனி கிட்ட “உனக்கு ஒரு சான்ஸ் குடுத்தேன். அந்தப் பிள்ளைய வாழ்த்தி வழியனுப்பவன்னு
பாத்தா சண்டைய டிபன் பாக்ஸ்ல கட்டிக் குடுத்து வீட்ல போயி வச்சு சாப்டுன்னு அனுப்புற
இதெல்லாம் நல்லாவா இருக்கு? அதென்ன கமல் சார்கிட்ட சொல்லி கதவத் தொறக்குறேன்னு? நான்
சொன்னேனா? எங்கிட்ட கேக்காம இப்பிடி சொன்னா என்னமோ நான் உன்னய உள்ள வழியனுப்பி எல்லாரையும்
ஊமக்குத்து குத்திட்டு வான்னு சொன்னாப்ல ஆகிடுமா இல்லையா! அவன் அவன் விளையாட்ட அவன்
அவன விளையாட விடு. எல்லார் விளையாட்டையும் நீ விளையாடாத. நீ உள்ள போயி அங்க இருந்த
சமநிலைய கொலச்சு விட்டுட்ட. உண்மைய சொல்லு ஆண் பெண் பஞ்சாயத்துக்கு காரணமே நீதான்.
ஞாபகம் இருக்கா “பெண்ணானவள்” ? எல்லாம் அதுல ஆரம்பிச்சதுன்னு பொறிஞ்சார்.
வனி சொன்ன சமாதானம்
எதும் நிக்கல. மக்கள் வேற அது பேச முற்படும் போதெல்லாம் கை தட்டி கடுப்பேத்துனானுங்க.
அடுத்து வனி
வரவு வரமா? சாபமான்னு கேக்க...
சாண்டி : ரெண்டுமே
! அவங்க வந்ததும் ஆட்டம் சூடு பிடிச்சது வரம். ஆனா வந்ததுல இருந்து எல்லார்கிட்டயும்
கொளுத்திப்போட்டு குடிசைய கொளுத்தி கொழுந்து விட்டு எரிய வச்சது சாபம்
லாஸ் : கண்டிப்பா
சாபம் ! வெளிய உள்ளவங்க என்ன நெனைக்கிறாங்கன்னு சொல்றாங்க. அத தெரிஞ்சு நாங்க என்ன
பண்ணப் போறோம்? அத வெளிய போயி பாத்துக்குறோம். இவங்க கொளுத்திப் போடல ஆனா மத்தவங்க
கொளுத்திக்குறதுக்கு வழி பண்றாங்க.
தர்ஷன் : கொளுத்திபோடுறதுல
கோல்டு மெடல் வாங்குன ஆளு போல இது. முடிஞ்சு போன முகின் பிரச்சனைக்கு மறுபடியும் மூக்கு
வாய் வச்சு இழுத்து விட்ருச்சு. இதுக்கு போரடிக்குறப்பயெல்லாம் போர் நடத்தி வேடிக்கை
பாக்குது.
வனி : சார்
கொளுத்திப் போடுறதுன்னு சொல்றதெல்லாம்......(மக்கள் கைதட்டு.....)
வனி : சார்
நான் என்ன சொல்ல வரேன்னா....(மக்கள் கைதட்டு.....)
வனி “இப்ப என்னவாம்
இவனுங்களுக்கு? ஏன் கைதட்டுறானுங்க? வெளிய
வந்தேன் பூரா பயலுகளையும் பிழிஞ்சு மதியான சோத்துக்கு ரசமா வச்சு குடிச்சுருவேன்”ற
அளவுக்கு மனசுக்குள்ள கோவத்த வச்சுக்கிட்டு.....வெளிய ஆண்டவர்கிட்ட “ஏன் சார் கை தட்டுறாங்க?”ன்னு
வெள்ளந்தியா கேட்டாங்க.
“எல்லாம் நீ
செஞ்ச திருவிளையாடல்தான்”னு ஆண்டவர் சொன்னார். அதுக்கப்பறம் வனி குனிஞ்ச தல நிமிரல.
இதுக்கு பதிலா எத்தனை தலைய உருட்டப் போகுதோ தெரியல.
அடுத்து சூப்பர்
சேரன் சார் கிட்ட வந்தார் “என்ன சேரன்? மேனேஜர் கேரக்டர பிச்சுட்டீங்க சூப்பர்”னு பாரட்டுனார்.
“சார் மது போயிடுச்சு. அதுக்கு போட்டியில சப்போர்ட் பண்ண எனக்குதான அடுத்த தலைவர் வாய்ப்பு?”ன்னு
கேக்க நினச்சிருக்கலாம் சுப்பர் சேரன் சார். இது என்னோட கணிப்புதான். “ஆனா சேரன் சரவணன்
சொன்ன மாதிரி டைரக்டர்ன்றத வெளிய காமிச்சுட்டீங்களே? பசங்க ஜாலியா பாடுனதுக்கு ஒரு
மிகப்பெரிய டைரக்டர இப்பிடி பண்ணலாமன்னு கேட்டீங்களே?”ன்னு கேக்க சூப்பர் சேரன் சார்
“ஆமா சார், அது தப்புதான் அப்பிடி சொல்லி இருக்கக் கூடாது மன்னிச்சுகோங்க”ன்னு மன்னிப்பு
கேட்டார். சூப்பர் சேரன் சார் ஃபார் எ ரீஸன் !
அடுத்து சாண்டிய
“சாண்டி, கேப்டனா இருந்து காமெடி பண்ணலாம் ஆனா காமெடி கேப்டனா இருக்கக் கூடாது. நீ
எல்லாருக்கும் தலைவர்ன்றத மறந்துட்டு 5 பேருக்கு மட்டும் தலைவரா நடந்துக்கிட்டதால வந்த
பிரச்சனதான் இது”ன்னு சாட்டைய சுழட்டுனார்.
அடுத்து கவின்
“ என்னடா கவினு, காதல் பிரச்சனையில இருந்து இப்ப ஹ்யூமன் ரைட்ஸ் பஞ்சாயத்தெல்லாம் டீல்
பண்ற போல?”ன்னு கேக்க, “ஆமா சார், இவளுக ஆண் பெண்ணு பேசும்போது நம்மள நாமதான காப்பத்திக்கனும்
அதான் அப்பிடி பண்ணேன்”னு சொல்ல. “அது என்னடா வந்த ரெண்டாவது நாளே கஸ்தூரிய காக்கான்னு
சொல்லி கேமராகிட்ட வந்து கழிசடைன்னு திட்டி வச்சிருக்க?”ன்னு கேட்டார் கவின் மனசுக்குள்ள
“ஆண்டவரே உண்மைய சொல்லுங்க நான் சொன்னது தப்புன்னு?” கேட்டுகிட்டு “இல்ல ஆண்டவரே அது
தொல்ல தாங்கல. அதுனால நாங்க 4 நாளா தூங்கல”ன்னு சொன்னான்.
இப்ப கஸ்தூரி
“என்ன கஸ்தூரி வெளிய ட்விட்டர்ல பெரிய ரவுடி நீ. ஆனா உள்ள இந்த சாத்து சாத்துறானுங்களே?”ன்னு
கேக்க “சார் இங்க பூராம் கற்பூரமா இருக்கானுங்க. பக்குன்னு பத்திக்கிறானுங்க. அதே மாதிரி
அன்பு, பாசமே இல்லாம இருக்கானுங்க”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே வனி மறிச்சி “அதெல்லாம்
அன்னைக்கு இந்த மாடு ஸ்விம்மிங் பூல் குழிக்குள்ள விழுந்தப்போ பசங்கதான் வந்து தூக்குனானுங்க”ன்னு
பசங்களுக்கும் பாசம் இருக்குன்னு ப்ரூஃப் பன்ணாங்க. ஷெரினோ “பசங்க கற்ப்பூரந்தான் ஆனா
கஸ்தூரிதான் கழுத”ன்னு சொன்னாங்க.
அடுத்து அபிகிட்ட
வந்தாரு. “யம்மா தமிழ் ராப்பெல்லாம் நல்லா பாடுற. நல்லா பேசுற. ஆனாலும் இந்த அழுகைய
கொறைக்கலாம்ல, இந்த அழுகை நாடு தாங்காது. உனக்கு அநீதி இழைக்கப்பட்டதெல்லாம் ஓகே ஆனாலும்
ப்ளீஸ் அழாத. அது உனக்கு நல்லதோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப நல்லது”ன்னார். “மக்கள் உன்னய
தப்பா எதும் நினைக்கல. கண்ணத் தொட, சிரி”ன்னு சொன்னார்.
அப்றம் ஜெயில்
விஷயத்துல அபிக்கு நடந்தது அநீதி. இனிமே அது நடக்காம இருக்கட்டும். இது பாய்ஸ் வெர்ஸஸ்
கேர்ள்ஸ் நிகழ்ச்சி இல்ல அதனால அவங்க அவங்க விளையாடுங்க என்ன ஷெரின்னு கேக்க “சரிதான்,
யார் என்ன சொன்னாலும் நான் என்னோட விளையாட்ட நான் மட்டுந்தான் விளையாடுறேன்”னு சொன்னாங்க.
“வனி கேட்டுக்கிட்டியா?”ன்னு கேட்டுட்டு.....
“ரைட்டு மதுவ
அனுப்பிட்டோம்னு ரொம்ப ஆடாதீங்க, எவிக்ஷன் இருக்கு. எல்லாம் நல்லா இருங்க. நாளைக்கு
வந்து நையப்புடைக்கிறேன்னு போயிட்டார் ஆண்டவர்.
Comments
Post a Comment