பிக்பாஸ் 3 : நாள் 64 தொடர்ச்சி & 65 (27.08.19)
பிக்பாஸ் 3நாள் 64 தொடர்ச்சி & 65 (27.08.19)
நேத்து நடந்த
“நான் ஏன் தகுதியான ஆள்?” டாஸ்க் தொடர்ந்தது.
லாஸ்
லாஸ் : இதுவரைக்கும்
இந்த வீட்ல நான் எடுத்த எல்லா முடிவும் என் சுயநினைவோட நானே எடுத்தது. வனிதா பேச்சக்
கேட்டு வம்புக்கு போறது, கஸ்தூரி பேச்சக் கேட்டு கட்டைய எடுத்து சாத்துறது, மது பேச்சக்
கேட்டு முக்கி முக்கி அழுகுறதுன்னு நான் யாரு பேச்சையும் கேக்குறதுல்ல. இவ்வளவு ஏன்?
“மகளே மகளே”ன்னு சுத்தி வர எங்கப்பன் சேரனையே என் கூட சேத்துக்க மாட்டேன். தவிர ரெண்டு
தடவ நாமினேட் ஆகியும் வெளிய போகல. அதனால நான் தகுதியான ஆள்தான்.
தர்ஷ் : சேரன
நாமினேட் பண்ணிட்டு வந்து நாள் பூராம் ஒப்பாரி வச்சியே, அதே மாதிரி எல்லா முடிவையும்
எடுத்த பின்னாடி தப்பு பண்ணிட்டேன்னு தரையில விழுந்து அழுதேன்னா அது எப்பிடி வின்னருக்கு
அழகு?
லாஸ் : நான்
எந்தச் சூழ்நிலையிலும் நைனாவ நாமினேட் பண்ணக்கூடாதுன்னுதான் நெனச்சேன் ஆனா அந்தாளு
அப்பிடி நடந்துக்கலையே? மது விஷயத்துல வெவரமா பேசாம வெண்டைக்காயதான நறுக்கிட்டு இருந்தாப்ல!
அதான் நாமினேட் பண்ணேன். இன்னேலருந்து அந்த எமொஷனல் விளையாட்டுக்கு எண்ட் கார்டு போட்டேன்.
இனி இந்த லாஸ் ஆடப்போற ஆட்டத்த மட்டும் பாரு.
சேரன் : நைட்டு
சொல்லிட்டு காலையில நாமினேட் பண்ற, உன் மேல நம்பிக்கை இல்லையே? நம்ப முடியாத ஆளு எப்பிடி
ஜெயிக்க முடியும்?
லாஸ் : நீ ஒழுங்கா
மதுவ திட்டி இருந்தா நான் ஏன் உன்னய நாமினேட் பண்றேன்? அத விட்டுட்டு நீ என்னய ஏறிட்டு
இருக்க. நாமினேட் பண்ணாம விட்டிருந்தா விசும்பிகிட்டே வந்து பழைய சோத்த ஊட்டிவிட்ருப்ப.
அதான் நாமினேட் பண்ணி ஒரு வாரம் கதற விட்டேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சேரன்
சேரன் : ரெண்டு
சீசனா இருந்த சிஸ்டமே சரியில்ல. அத மாத்தலாம்னு முடிவு பண்ணிதான் இந்தக் களத்துல இறங்குனேன்.
ஒரு குடும்பத்துல ஒருத்தன் எப்பிடி இருக்கனும்?னு என்னய பாத்துக் கத்துக்கனும் எல்லாரும்.
சண்டைய தடுத்து விடுறது, க்ளீனிங்க்னு வந்தா கில்லியா இருக்குறது, பாசம்னு வந்தா பல்லியா
இருக்குறது, இப்பிடி இந்த வீட்ல எனக்கு நிகர் எனக்குதான். அப்பிடி வேற யாரும் இருந்தா
நாக்கு மேல பல்லப் போட்டு பேசுங்கடா பாப்போம்.
தர்ஷன் : நானும்
கேக்குறேன் முக்கிய பிரச்சனையில முக்காம இருந்துட்டு....சாவகாசமா சத்தம் போடுறதெல்லாம்
ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா?
சேரன் : தம்பி,
மதுகிட்டயெல்லாம் மனுஷன் பேசி புரிய வைக்க முடியாது. ஆண்டவரையே அலற விடுற ஆளு அது.
கத்திப் பேசுனதுக்கே கைய அறுத்துகிட்ட ஆளுகிட்ட நீதி நியாயம் பேசி இருந்தா கையில அறுத்தத
கழுத்துல அறுத்துருக்கும் அப்பறம் கொல கேசுல நான் உள்ள போறதா? இந்த பிஸாத்து பிக்பாஸ்
ஜெயிலுக்கு போயிடக் கூடாதுன்றதுக்கே பின்லேடன் லெவெலுக்கு ப்ளான் பண்ணுவேன்.....உன்மையான
ஜெயிலுக்கு போயிடுவேனா என்ன? அதுபோக மீரா விஷயத்துல கவுந்தடிச்சு காலுல விழுந்தாலும்
அது என்னய மதிக்கப் போறதில்ல சோ பேசி வேஸ்ட். சரவணன் விஷயத்துல அங்கயே உக்காந்து இன்னும்
அசிங்கமா திட்டு வாங்குறதுக்கு பேசாம எந்திருச்சு போறதுதான் புத்திசாலித்தனம் அதான்
போனேன். போதுமா இல்ல இன்னும் முக்கனுமா?
கவின் : டைரக்டரா
காமிச்சுக்குறது இல்லன்னு சொல்லிட்டு எங்கிட்டையும் சாண்டிகிட்டையும் அத சொல்லிக் காமிச்சது
சில்றத்தனம் இல்லையா?
சேரன் : வந்த
நாளுல இருந்து உங்க கேங்குல சேர்ந்து கர்லா சுத்தலாம்னு பாத்தா என்னய பக்கத்துல விடாம
பத்தி விட்டீங்க அதெல்லாம் எனக்கு வலி அன்னைக்கு அழுது அழுது எனக்கு பிடிச்சது சளி.
அப்பவே முடிவு பண்ணேன் உங்ககிட்ட நான் டைரக்டராதான் நடந்துக்கனும்னு. நீயெல்லாம் ஒரு
அஸிஸ்டெண்ட் டைரக்டர்னு சொல்லிக்குற ஒரு நாளாச்சும் மாயக் (தர்ஷன பாத்துட்டு) இல்ல
ஆட்டோகிராப் படத்த எப்பிடி எடுத்தேன் கொண்டேன்னு பேசி இருக்கியா? பின்ன எப்பிடி உங்கிட்டையெல்லாம்
பேசுறது?
லாஸ் : இம்புட்டு
பேசிட்டு அன்னைக்கு கவின் சாண்டின்னு எல்லாத்துக்கும் ஊட்டி விட்ட ! என்ன ஜெல் ஆகப்
பாக்குறியா?
சேரன் : இவனுங்க
கூட ஜெல் ஆகுறதுக்கு ஜெர்மனியில ஜிஞ்சர் பீர் வித்துப் பொழச்சுக்குவேன். அதெல்லாம்
இல்ல.
ஷெரின் : அப்பான்ற
! பொண்ணுன்ற ! ஆனா நாமினேட் பண்ணுவேன்ற ! என்னதான் சொல்ல வர?
சேரன் : அவ
என் பொண்ணுதான் ஆனா போட்டியப்ப இல்ல. அவ வெற்றி அவ கையில ஆனா அவ கையோ கவினோட கையில....!
தனியா நின்னு ஜெயிச்சா அவ எனக்கு மக....ஜெயிக்கலேன்னா எனக்கு அவ மக....!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வனிதா
வனி : எனக்கே
தகுதி இல்லேன்னா வேற யாருக்கு இருக்கு? தர்ஷன்லாம் ஒரு ஆளா எனக்கு? அவன மாதிரி கர்லா
சுத்தவா? கட் பனியன் போடவா? தாடி வளர்த்து காட்டவா? சொல்றா...சொல்லு என்ன பண்ணனும்?
ஏய்.......தனியா நின்னு அடிப்பேன். தண்ணியில தயிரக் கரைச்சு குடிப்பேன். கேளுங்கடா
உங்க கேள்விய
கவின் : மொத
மொத தர்ஷன் கிட்ட அடிவாங்கத் தெரிஞ்சேல்ல அப்ப ஒரு சாரி கூட கேக்காம அவன சாரி கேக்க
வச்ச.....வெளிய போயிட்டு வந்தப்பறம் கூட அது உனக்கு தோணல ஏன்?
வனி : என்னது
நான் சாரி கேக்கனுமா? டேய் எதுக்கு சாரி? யாருக்கு சாரி? புடவை பேரு சாரின்றதால அத
நான் கட்டுறது கூட இல்ல. நான் கேக்கனுமா சாரி....நல்ல கதைடா இது! நான் பண்ணது உனக்கு
தப்பா தெரிஞ்சா லாஜிக் படி நீதாண்டா எங்கிட்ட சாரி கேக்கனும். அத விட்டுட்டு......வந்துட்டான்
வெட்டிப்பய
தர்ஷ் : இவ்வாளவு
வியாக்யானம் பேசுற நீ மூணாவது வாரமே வெளிய போயிட்ட....மறுபடி உள்ள வந்து இப்ப நாமினேஷன்ல
இருக்க ? அப்ப நீ ஏதோ தப்பு பண்ணி இருக்கன்னுதான அர்த்தம்?
வனி : அதெல்லாம்
பேசாத...நானெல்லாம் சாதாரணப் பெண் இல்ல......சீறிபாயும் சிங்கப்பெண் ! பல பெண்களுக்கு
முன்னுதாரனமா இருப்பேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சிறப்பா கேள்வி
கேட்டது யாருன்னு ஓட்டெடுப்பு நடத்தி வனிதான்னு முடிவு பண்ணானுங்க. அவங்க அடுத்த வார
கேப்டன் டாஸ்க்ல பங்குபெற நேரடித் தகுதி பெற்றாங்க.
65ம் நாள்
“புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது”ன்னு தேவர் மகன் பாட்டோட முழிச்சானுங்க. வெளிய கிராமத்து செட்டு.
உண்டியல் டாஸ்க்
ஒண்ணு வந்துச்சு. ஆளுக்கொரு உண்டியல் & 3 காயின் குடுப்பானுங்களாம். இவனுங்க அதுபோக
இன்னும் நெறைய காயின் சேக்கனுமாம்.
அப்பறம் அடுத்த
டாஸ்க் !
ஊருக்குள்ள
பல பேரு பயங்கரமா கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு வாழ்றாங்க ஆனா நீங்க பகுமானமா இங்க உக்காந்து
பாஸ்தா சாப்ட்டுட்டு இருக்கீங்க ! நீங்களும் 2 கிராமமா பிரிஞ்சு கஷ்டப்பட்டு வாழுங்கன்னு
சொன்னாரு பிக்பாஸு......ஆனா இந்தாளு பயங்கரமான லூசு !
வனி, முகின்,
லாஸ், சாண்டி / கவின், தர்ஷன், ஷெரின், சேரன். இதான் டீம்!
அப்பறம் பொம்மலாட்டம்
சொல்லிக்குடுக்க ஒருத்தர் வந்து இவனுங்களுக்கு சொல்லிக்குடுத்தார். அத சாயங்காலம் ரெண்டு
டீமும் பண்ணனுமாம்.
அவரு சொல்லிக்குடுக்க
சொல்லிக்குடுக்க வனிதா “இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா? டாஸ்க்குன்னா இன்னேரம் ஒரு பரபரப்பு,
பல்லுடைப்பு, கைகலப்புன்னு கலகலப்பா இருக்க வேணாம்? பொம்மைய வச்சு விளையாட நான் என்ன
ப்ரீ கேஜி பிள்ளையா? போங்கடா போக்கத்தவனுங்களா”ன்னு மைண்ட்ல சொல்லிக்கிட்டாங்க.
அப்பறம் நைட்டு
ரெண்டு டீமும் ஆளுக்கொரு பொம்மலாட்டக் கதை சொன்னானுங்க. இதுல வனி டீம்தான் வின்னு.
நைட்டு ரெண்டு
டீமும் நிலா சோறு சாப்ட்டானுங்க.....அதோட எண்ட் கார்டு.
இதுக்கு மேல
அம்மா சத்தியமா ஓரு மண்ணும் இல்ல. கண்டெண்டுக்கும் இவனுங்களுக்கும் 200 காத தூரம் இருக்கும்
போல....! நாளைக்கும் இப்பிடியே இருந்தா குண்டலகேசியில இருந்துதான் கன்டெண்ட் எடுக்கனும்.
Comments
Post a Comment