பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3நாள் 50 (12.08.19)


இன்னைக்கு தான் 50வது நாளாம். அப்ப உன்னய பெரிய மனுஷன்னு நம்பி நேத்து 50வது நாள்னு போட்ட நான் லூசு அப்பிடித்தான? ஏண்டா டேய் ஆண்டவர வேற குழப்பி வச்சிருக்கீங்க. காலண்டர கிழிக்க மறந்துட்டானுங்க போல மாக்கான்ஸ்!

ஆக இன்னைக்குதான் 50வது நாள்....

“யாரடி நீ மோகினி” பாட்டோட தொடங்குச்சு. கஸ்தூரி வீம்பா வெஸ்டர்ன் ஸ்டெப்ஸ போட்டு சாண்டிய வெறுப்பேத்துனாங்க. நம்மளையும்! சல்பேட்டா இல்லேன்ற உண்மை அப்போதான் உரைச்சது. கவினோட அருமை கக்கூஸ்ல இருக்குறப்பதான் தெரியும்ன்ற மாதிரி.... சிங்கிளா பல ஜந்துகளின் ஸ்டெப்ஸப் போட்டு நம்மள மகிழ்விச்ச சல்பேட்டாவோட அருமை கஸ்தூரி காலத் தூக்கி ஆடும்போதுதான் தெரிஞ்சுது. தர்ஷன், ஷெரின் கூட சேட்டை பண்ணி ஆடிட்டு இருந்தான்.

சாண்டியும், கவினும் மக்கள் குறைதீர்ப்பு நாள்னு ஒண்ணு நடத்துனானுங்க. குறையே அவனுங்க மேலதானாம். “க்ளீனிங் பண்ண கவினும், சாண்டியும் வரதே இல்ல”ன்னு மது புகாரினாங்க. “அத சரி பண்ணிடலாம்”னு சாண்டி சொன்னார். லாஸ் “இந்த ஆட்சியில ஒரு குறையும் இல்ல நல்லா ஜாலியா இருக்கு”ன்னு சொன்னாங்க.

வழக்கமா கட்டில், டேபிள குத்துற முகின் வெளிய தனியா உக்காந்து தன் தலையில குத்திட்டு இருந்தான். “அய்யோ அடுத்து அபியக் காமிப்பானுங்களே”ன்னு நெனைக்குறதுக்குள்ள அபிய காமிச்சானுங்க. முகின் அங்க கப்ப வெளக்க போட வந்தான். அவங்கிட்ட அபி “சாப்டியா? நல்லா சாப்டியா?”ன்னு கேக்க அவனும் தோராயமா மண்டைய ஆட்டிட்டு போயிட்டான். இதப்பாத்த ஷெரின் “என்ன அபி அம்பி மூஞ்சியே சரியில்ல என்னன்னு கேட்டியா?”ன்னு கேக்க. “எதுக்கு குத்து வாங்கவா? இதுக்கு மேல தெம்பு இல்ல ஆள விடுங்கடி”ன்னு சொல்லிடுச்சு அபி.

சொல்லிட்டு நேரா ஸ்மோக்கிங் ரூம்ல உக்காந்து அழ ஆரம்பிச்சுடுச்சு. அது பொண்ணா இல்ல தண்ணிக் கேனான்னு தெரியல. இவ்ளோ தண்ணி ஒரு மனுஷனுக்குள்ள எப்பிடி இருக்க முடியும்? இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள். அடுத்து ஸ்மோக்கிங் ரூமுக்குள்ள போற ஆளு பேண்ட், பாவடை நைனையாம இருக்க துணிய தூக்கிட்டுதான் நடக்கனும் போல. ஒரு ஆளு அழுகலாம் ஆனா லிட்டர் கணக்குலையா அழுகுறது?

ஷெரின் முகின் கிட்ட “என்னடா மறுபடியும் பஞ்சாயத்தா?ன்னு கேக்க இல்ல சேம் பஞ்சாயத்துதான்னு முடிச்சுட்டான்.

நாமினேஷனுக்கு வந்தானுங்க.....

கஸ்தூரிய நாமினேட் பண்ண முடியாதாம். சரி மத்தவனுங்கள பண்ணுவோம்னு உள்ள ஒவ்வொருத்தரா போணானுங்க. அதிசயமா கவினும், சாண்டியும் சேரன நாமினேட் பண்ணல. ஆனா சேரன் கவின பண்ணார். பெரும்பாலும் முகின சொன்னானுங்க. அபி வரலேன்னாதான் ஆச்சர்யம்.

அபி உள்ள போயி உக்காந்துச்சு...

பிக்பாஸ் : அபி யாராச்சும் காரணத்தோட நாமிணேட் பன்ணுங்க

அபி : அபிராமி

பிக்பாஸ் : வேற பேரு சொல்லுங்க

அபி : எனக்கு வேற பேரு இல்ல....சர்டிபிகேட் நேம், வீட்ல கூப்டுறது எல்லாமே இதான்

பிக்பாஸ் : உங்கள நீங்களே நாமினேட் பன்ணிக்க முடியாது

அபி : ஊரே என்னய நாமினேட் பண்ணுது....ஆனா என்னய நான் நாமினேட் பண்ண முடியாதா?

பிக்பாஸ் : முடியாது மெண்டலே...

அபி : ஆனா நான் வீட்டுக்கு போகனுமே...

பிக்பாஸ் : அதுக்குதான் எல்லாரும் உன்னய நாமினேட் பண்ணுவானுங்களே அப்பறம் என்ன?

அபி : அதனாலதான் நான் போறேன்னு சொல்றேன்...

பிக்பாஸ் : அதத்தான நானும் சொல்றேன்....

அபி : எல்லாரும் என்னயவே நாமினேட் பண்றாங்கள்ல அது எனக்கு பிடிக்கல அதனால போறேன்னு சொல்றேன்...புரியுதா?

பிக்பாஸ் : அட ராமா....! நீ போணும்னாலே உன்ன யாரச்சும் நாமினேட் பண்ணனும்ல?

அபி : அதான் எல்லாருமே பண்றாங்களே....

பிக்பாஸ் : ஆமா அப்பதான நீ போக முடியும்?

அபி : அதுக்குதான் இப்பவே நான் போறேன்றேன்...

பிக்பாஸ் : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......முடியல !
உங்கிட்ட மட்டும் சொல்றேன் எனக்கு சுகர் இருக்கு.....கால்ல விழுந்து கேக்குறேன் யாரயாச்சும் நாமினேட் பண்ணிட்டு கிளம்பு...!//

லாஸ், கவின், முகின், மது, அபி நாமினேஷன்.

50 வது நாள் கொண்டாட்டத்துக்கு பிரியாணி வந்துச்சு. நல்ல சோறு சாப்ட்டு நாளானதுனால நல்லா வெளுத்துக் கட்டிட்டு கெடச்ச கேப்ல கட்டைய சாத்துனானுங்க எல்லாரும்.

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க். ஹோட்டல் சர்வெண்ட்ஸாட்டம் வேஷங்கட்டனும். வரப்போற கெஸ்ட்ட நல்லா கவனிக்கனும் அவங்க குடுக்குற ரேட்டிங்க வச்சுதான் லக்ஸுரி பட்ஜெட் பாயிண்ட்ஸ். எல்லாரும் கெஸ்ட வரவேற்க தயாரா இருக்க.....உள்ள வந்தது வாரியர் வனிதா !

அவசர அவசரமா எல்லாரும் வனிதா வெளிய போனப்ப வனிதாவ பத்தி என்ன சொன்னோம்ன்றத ஞாபகப்படுத்திக்கிட்டானுங்க.....! சாண்டி & கவின் மட்டும் கூலா இருந்தானுங்க.

“கோயிலா விட்டுட்டுப்போன இந்த வீட்ட குட்டிச்சொவராக்கி வச்சுருக்கீங்களேடா பாவிகளா.....நான் வந்துட்டேன்ல இனி எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்”னு சொல்லி எல்லாரையும் கூப்ட்டு உக்கார வச்சு....

“கஸ்தூரி எதுக்கு தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மாலை மாத்துனீங்க? தர்ஷன் உனக்கு பிச்சை போட்டுதான் மெடல் வேணுமா? அப்பா பொன்ணு உறவெல்லாம் உள்ள வேணுமா? லாஸ்லியா யாருன்னு கண்டுபிடிக்கனும்? மது நீ ஸ்ட்ராங் ! உன்னயெல்லாம் பெரிய மனுஷன்னு நம்பி இவனுங்கள விட்டுட்டு போனா இப்பிடியா பன்ணுவ சேரன் ?”

இப்பிடி நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய நெறைய..................!

வனிதா வாய் மூடவே இல்ல ! ரொம்ப உத்து கவனிச்சு பாத்ததுல 4, 5 தெலுங்கு பிக்பாஸ் பிரச்சனையெல்லாம் பத்தி பேசுனா மாதிரி தெரிஞ்சுது.

வனிதாவப் பாத்து லாஸத் தவிர சேரன் உட்பட எல்லாரும் ஏன் பியர் கைல்ஸப் பாத்த பாம்பு மாதிரி பம்முறானுங்கன்னு தெரியல. வனிதாவோ இருக்குற பிட்ட போட சொன்னா, இருபது பிட்ட சேர்த்து போடுது! அதென்னமோ வெளிய இருந்து வந்துட்டாலே உள்ள இருக்குறவனுங்கள ரட்சிக்க வந்த வாடிகன் போப் மாதிரியே ஏன் நடந்துக்குறானுங்கன்னு தெரியல. லாஸும், தர்ஷனும் எந்த நிமிஷமும் வனிதா வாய சாத்துற வாய்ப்பு பிரகாசமா இருக்கு. நமக்கோ இது ரொம்ப எரிச்சலா இருக்கு.

இந்த வாரம் முழுக்க வனிதா இருக்கும்போல! எதுக்கும் காதுக்கு ஊத்துற சொட்டு மருந்து ஒன்னு வாங்கி வைக்கனும். புள்ள குட்டிகள 9 மணிக்கே தூங்க வைக்கனும். ஷோ முடிஞ்சதும் “நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்”னு போஸ்ட் போடனும்.



நேத்து நைட்டு டீவிய ஆஃப் பண்ணது.....! ஆனா ஆஃப் பண்ண டீவியில இருந்து இன்னும் வனிதா வாய்ஸ் கேக்குது......அப்ப அதான பிரண்ட்ஸ்!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)