பிக்பாஸ் 3 : நாள் 64 (26.08.19)
பிக்பாஸ் 3நாள் 64 (26.08.19)
“ஜிகுரு ஜிகுரு
ஜிகுரு” பாட்டு அலாரம். ரொம்ப நாளைக்கப்பறம் லாஸ்கிட்ட நெளிவு, சுளிவு தெரிஞ்சது இது
கவின் “ஆ”ன்னு வாயப் பொளந்து பாத்ததுல இருந்து உறுதியாச்சு. ஷெரினும் முயற்சி பண்ணாங்க.
நேத்து கமல்னு
ஒருத்தர் வந்ததாகவோ, இவனுங்கள தனியா கூப்புட்டு கழுவி ஊத்துனதாவோ எந்த ஒரு அடையாளமும்
இல்லாம முன்ன என்ன பண்ணிட்டு இருந்தானுங்களோ அத விட்ட இடத்துல இருந்து கண்டினியூ பண்ணானுங்க.
ஷெரின்
& தர்ஷ்
ஷெரின் : என்னடா
தர்ஷா....? 2 நாளா நம்ம பக்கம் ஆளேயே காணோம்...? ரேமண்ட் மாடலாட்டம் அங்குட்டும் இங்குட்டும்
ரோந்து போயி உலாத்துவ.....ஈழத்தமிழ்ல கவிதை சொல்லி பெனாத்துவ....என்னாச்சு? நான் எதும்
தப்பு பண்ணிட்டேனா? சாரிடா சர்தார் சிலையே !
தர்ஷ் : அதெல்லாம்
ஒண்ணுமில்ல.....நான் உன் பக்கத்துல வந்தாலே வனிதாவுக்கு வயித்துக்கடுப்பாகுது...அதுக்கு
பெரிய வயிறு வேற...!
ஷெரின் : வயிறு
மட்டுமா ? வாயுந்தான்.
தர்ஷ் : எனக்கு
கூரு பத்தாதாம்...உன்னய கரெக்ட் பண்ணி பைனலுக்கு செலெக்ட் ஆகலாம்னு ஸ்கெட்ச் போடுறேனாம்.
எனக்கு மக்கள் சப்போர்ட் இல்லையாம்
வனி : இத மூணாவது
வாரமே வெளிய போன அந்த 300 கிலோ எருமை சொல்லுதா?
தர்ஷ் : இந்த
சேரன் வேற லாஸுக்கு விட்டுக்குடுன்னு முட்டுக்குடுக்குறாரு...கேட்டா அண்ணனாம், ஒரே
நாடாம்....!
ஷெரின் : ஏன்
அப்பா விட்டுக் குடுத்தா வியட்னாம் போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணுமா? இந்தாளு ஒரு இம்சை...இதுல
பெரிய டைரக்டர் வேற...
தர்ஷ் : ஷெரினு....
இப்ப தெரியுதா நான் எதுக்காக ஒர்ரின்னு...
ஷெரின் : விடு
! இவனுங்க சொன்னதயெல்லாம் ஷாம்பூ மாதிரி தலையில போட்டுக்காம.... சவ்வு மிட்டாயாட்டம்
வாய் வழியா முழுங்கி...குடல் வழியா இறக்கி வேற வழியா வெளிய விட்ரு....
தர்ஷ் : சரி
நீயாச்சும் சொல்லேன்....மாயக்கண்ணாடி மாயாஜாலப் படமா? //
ரொம்ப நாள்
கழிச்சு தின நடவடிக்கை...! குளிக்கிறதப் பத்தி சாண்டி மத்தவங்களுக்கு சொல்லிக் குடுக்கனுமாம்.
சாண்டின்றதால
இந்த செஷன் ஜாலியாப் போச்சு.
நேத்து வரைக்கும்
கவின் கூட உக்காந்து பேசிட்டு இருந்த லாஸ், நேத்து கமல் சார் சொன்னதுக்கப்பறம்....குளிக்கப்
போறதக் கூட கவின் கிட்ட சொல்லிட்டுதான் போகுது. நல்ல முன்னேற்றம். இத கண்ணாடி வழியா
பசங்க பாத்து காலாச்சுட்டு இருந்தானுங்க.
ஃபேக் நாமினேஷன்....இதுனால
என்ன பிரயோஜனம்னு தெரியல?
வனி, கவின்,
முகின் மற்றும் பிக்பாஸ் சீசன் 3ல் முதன் முறையாக ஷெரின் நாமினேஷன்.
லாஸ் &
கவின்
லாஸ் : லாஸு
லாஸு லாஸு அழகான லாஸு நான்....பீசு பீசு பீசு உனக்கான பீசு நான்....
கவின் : லாஸு
போதும்...நான் என் லட்சியத்த நோக்கி போகப்போறேன்...
லாஸ் : எங்க
கக்கூஸுக்கா? உன்ன நாமினேட் பண்ணதுக்குக் காரணமே நாந்தான்....சாரிடா
கவின் : உன்னக்
காப்பாத்த எங்கிட்ட இருந்து பிரிக்குறதுதான் சிறந்த வழின்னு உங்கப்பா கேப்டன் சேரன்
கணக்குப் போட்டு என்னயக் கவுத்துறாரு....
லாஸ் : இரு
இரு அந்தாள ஒரு நாளைக்கு நிமுத்துறேன்....நீயும் கொஞ்சம் கேம கீம வெளையாடு...எனக்காக
சண்டை போடாத....
கவின் : நான்
முன்ன மாதிரி இருக்க மாட்டேன்....சட்டைய பாத்தியா கேம் ஆன்னு எழுதி இருக்கு பாரு...இனிமே
தீயா வெளையாடுவேன்...நீயும் அப்பிடியே விளையாடு....மத்தத வெளிய போயி பாத்துக்கலாம்.
வெற்றிவேல்....! சொல்லேண்டி வீரவேல்னு.....! //
வசந்த்
& கோ டாஸ்க் ! ரெண்டு டீமா பிரிஞ்சு....கவுத்திப்போட்ட போர்டுல ஒரே மாதிரி இருக்குற
படத்த மேட்ச் பண்ணனும். யாரு கொறஞ்ச நேரத்துல பண்றாங்களோ அவங்க வெற்றி....! ஷெரின்
டீம் வெற்றி !
இந்த மாதிரியெல்லாம்
டொக்கு டாஸ்க்க வச்சுக்கிட்டு கேம வெளையாடு கேம வெளையாடுன்னா என்னத்த வெளையாடுறது?
குடுக்குறது பூராம் குழு டாஸ்க்கு இதுல இண்டிவிஜுவாலிட்டி தெரியனும்னு சொன்னா நியாமாவா
இருக்கு? பிக்பாஸ் ஒரு சில்றப்பய !
அடுத்து ஃபைனல
நோக்கி பாய வைக்கும் டாஸ்க்காம். ஒவ்வொருத்தரா வந்து “நான் ஏன் வெற்றி பெற தகுதியான
ஆளு”ன்னு சொல்லனுமாம் அத மத்தவனுங்க மறுக்கனுமாம். அதயும் மீறி அவன் சொன்னத மறுக்க
முடியலேன்னா. அவன் அடுத்த வார தலைவராம். “இதுலயும் ஜெயிச்சு மேஜராகுறாண்டா இந்த சேரன்”னு
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டார் கேப்டன் சேரன் சார்.
கவின்
கவின் : நான்
நட்புக்கு கோவில் கட்டும் கொத்தனாரு. நட்புக்காக பட விஜயகுமாரு. எங்கூட சண்ட போட்ட
எல்லாரும் வெளிய போயிட்டானுங்க அப்ப என்ன அர்த்தம் நான் சரியா வெளையாடுறேன்னு அர்த்தம்
அதனாலதான் சொல்றேன் காத்தவராயனுக்கே ஓட்டுப் போடுங்க....
சேரன் : 10
வாரமா உன்னால இந்த வீட்டுக்கு கெடச்ச நன்மை என்ன?
கவின் : நைட்டு
பூராம் தூங்காம பொம்பளப் புள்ளைங்களோட விடிய விடிய பேசி இந்த பூந்தோட்டத்துக்கு காவல்காரனா
இருந்திருக்கேன்....போதாதா ?
சாண்டி : நட்புக்கு
மரியாதை சரி....உனக்கு மரியாதை வேணும்னா தனியா எதாச்சும் செய்யனும்ல?
கவின் : இனிமே
அதத்தான பண்ணப் போறேன்...சட்டயப் பாத்தியா கேம் ஆன்
தர்ஷன் : காலர்
சொன்ன மாதிரி சாண்டி கூடவே இருக்கியே?
கவின் : தனியா
எங்கடா இருக்க விட்டீங்க? எப்பவும் பஞ்ச்சாயத்து அப்ப ஆறுதல் தேடி அவங்கிட்டதான் ஓடுனேன்...அப்ப
அப்டிதான் இருக்கும்
வனி : சல்பேட்டா
வாழ்க்கைய கெடுத்த கேட்டா நட்புன்ன....அப்பறம் லாஸ் வாழ்க்கைய கெடுத்துட்டு இருக்க
இதுவும் நட்பா?ன்னு ஊருக்குள்ள கேக்குறாங்க
கவின் : ஏய்
வாளி வாயி...! ஊரு கேக்குதா இல்ல நீ கேக்குறியா? இதெல்லாம் யாருகிட்டயும் விளக்க அவசியமில்ல
லாஸ் : என்னய
கெடுத்தான்னு நானே சொல்லல நீ ஏன் நீளமா நீட்டுற? அவங்கிட்ட என்ன தகுதின்னு கேக்க சொன்னா
லாஸ் எத்தனை மாசம்னா அவங்கிட்ட கேப்ப ?
வனி : ஆகா ஜோடியா
சுத்துப் போடுறாய்ங்க....கடைய சாத்துவோம்...!
^^^^^^^^^^^^^^^
சாண்டி
சாண்டி : நல்லா
டாஸ்க் பண்றேன். எல்லாமே நல்லாதான் பண்றேன். இதுக்கு மேல என்ன தகுதி வேணும்?
சேரன் : வரம்பு
மீறி கலாய்க்குறது தப்பில்லையா? என்னய கூட அப்பிடிதானடா பண்றீங்க?
சாண்டி : அது
என் பிறவி குணம்...தப்பு.... பிடிக்கலேன்னா மன்னிப்பு கேக்குறேனே....அவ்ளதான் பண்ண
முடியும்
வனி : அன்னைக்கு
தர்ஷனுக்கு தகுதி இருக்குன்னு சொன்ன? இன்னைக்கு உனக்கு இருக்குன்ற?
சாண்டி : அவனுக்கும்
இருக்குன்றேன். அவன் வெறித்தனம் வேற லெவல்ல இருக்கு அது உண்மைதான். அது அவனுக்கு பாராட்டு.
DSP ய அடுத்த இளையராஜான்னு கமல் சார் சொன்ன மாதிரி....புரியுதா புல்டோசரே...?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முகின்
முகின் : எனக்கு
மன தைரியம் ஜாஸ்தி அபி அழுகும் போதெல்லாம் கூடவே உக்காந்திருந்தேன் அதுல இருந்தே தெரிஞ்சிருக்கும்.
நட்புக்கு மரியாதை குடுப்பேன் அப்பறம் இன்ன பிற....
கவின் : ஷேடோவா
இருக்கியே? தனியா எதும் பண்றாப்ல இல்லயே?
முகின் : எப்பவுமே
ஒண்ணா உக்கந்திருக்கோம் அதுனால பாக்க அப்டித்தான் தெரியும். ஆனா நான் ஒரு எரிமலைக்
குழம்புன்னு யாருக்கு தெரியும்? அபிக்கு தெரியும் அதயும் அடிச்சு வெளிய அனுப்பிட்டேன்.
சேரன் : ஆனா
அன்பா இருக்குறவங்க மேலையும் கோவப்படுறியே?
முகின் : அது
என் வீக்னெஸ் ஆனா அது என் பாசிட்டிவ் கூட. என் கோவம் தெரிஞ்சு என் பக்கம் வம்பிழுக்க
வரதில்லையே யாரும். இல்லேன்னா இந்த வனிதால்லாம் என்னய நிம்மதியா வாழ விட்ருமா? இப்ப
பக்கத்துல வரும்போதே “சேர் எப்படா நம்ம மண்டயப் பொளக்கும்”னு ஒரு பயம் இருக்கும்ல
^^^^^^^^^^^^^^^^^^^^^
தர்ஷன்
தர்ஷ் : டாஸ்க்குல
நான் கில்லி, தெரியாத விஷயத்த கூட கேட்டு செய்றேன், நான் கேப்டனாகி போட்ட ரூல்தான்
அன்னன்னைக்கு பிரச்சனைய அன்னைக்கே முடிக்கனும்னு, இது வரை நான் போட்ட சண்டை மத்தவங்களுக்காகத்தான்.
அதனால எனக்கு தகுதி அதிகம்.
வனி : உன் ஆட்டிட்யூட்
சேஞ்ச் ஆகி இருக்கு குறிப்பா அக்காக்கிட்ட. அக்கான்னா அலற வேணாமா?
தர்ஷ் : எங்கிட்ட
எப்பிடி பேசுறியோ அப்பிடிதான் நானும் பேசுவேன். என் மேல சின்னக் கல்ல போட்டேன்னா நான்
பெரிய பாறையத் தூக்கி உன் தலையில போட்டு கொன்னுருவேன். ஆரம்பத்துல அக்கா அக்கான்னு
பேசுனேன் நீ என்னய மதிச்சியா? அப்பறம் நான் சவுண்டக் குடுத்ததும் சங்க அடக்குனியா!
அதான் மேட்டரு...
வனி : அப்ப
நாட்டாமை டாஸ்க்குல சாண்டிய மது தப்பா பேசுனதுக்கு நீ குரல் குடுக்கலையே?
தர்ஷ் : நான்
குடுத்தேனா இல்லையான்னு பக்கத்துல கேட்டு தெரிஞ்சுக்கோ....போறதுக்குள்ள நீ நல்லா வாங்கப்போற
புரிஞ்சுக்கோ....
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஷெரின்
ஷெரின் : ம்ம்ம்ம்.....நான்
வந்து.....ம்ம்ம்ம் என்ன சொல்றது? அது வந்து.....அதாவது எனக்கு ஏன் தகுதி இருக்குன்னா....ம்ம்ம்ம்
ஏன்னா எனக்கு தகுதி இருக்கு அதுனாலதான்.
சேரன் : சும்மா
நீ பொய் சொல்லாத.....உனக்கு அந்த தகுதியே இல்ல
ஷெரின் : ஆமா....ஆமா...!
ஆனா இப்ப ஜெயிக்கலாமான்னு யோசிக்கிறேன் பாப்போம். என்னடா தர்ஷா ?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Comments
Post a Comment