பிக்பாஸ் 3 : நாள் 60 (22.08.19)
பிக்பாஸ் 3நாள் 60 (22.08.19)
“யாரு கோமாளி?”ன்னு
கேட்டு பாட்டு போட்டாரு பிக் பாஸ் பாவம் அவரே கன்ப்யூஸ் ஆகிட்டாரு போல. சாண்டி
& குரூப்பு சிறப்பா ஆடுனாங்க. கஸ்தூரி ஆடுறேன்னு அங்குட்டும் இங்குட்டும் ஓடுனாங்க.
மொக்கை ஜோக்கு
சொல்றதுல கஸ்தூரி முகினுக்கும் முப்பாட்டியாம். இத அவங்களே பெருமையா சொல்லிக்கிட்டு
காட்டு மொக்கை கதை சொல்றேன்னு “செரின் மாதிரி ஒரு பொண்ணு நாய வாக்கிங் கூட்டிட்டு போகும்போது
நாய் அடிபட்டு சாக, அதக் கொண்டு போயி ஒரு காலி சட்டிக்குள்ள போட்டு பாத்தா நெறைய நாயி
வந்துச்சாம் ‘பிகாஸ் எம்ப்ட்டி வெசெல் மேக் நாய்ஸ்’னு (வெத்துப் பாத்திரம் சத்தம் போடும்)
சொல்லிட்டு “அவ்ளோதான் சந்தோஷ் ஜோக்கு முடிஞ்சிருச்சு” ரேஞ்சுல எல்லாத்தையும் கஸ்தூரி
பாக்க, ஒருத்தனும் ரியாக்ஷன் குடுக்காம வெறிக்க வெறிக்க கஸ்தூரியப் பாத்தானுங்க. ஷெரின்
“ஓ” ன்னு அழ ஆரம்பிச்சிருச்சு. “என்னவாம்?”னு எல்லாரும் பதறிப் போயி பாத்தா கதையில
கஸ்தூரி நாய கொன்னுடுச்சாம். அதான் அழுகையாம். அழுதுட்டே உள்ள போயிடுச்சு.
கஸ்தூரிக்கு
அள்ளு இல்ல “என்னங்கடா கதையில செத்த நாயிக்கெல்லாம் நாலாம் நாள் காரியம் பண்ணுவானுங்க
போலயே. இந்த வனிதா வேற எப்ப ஆரம்பிக்குமோ?”ன்னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள வனி “ அடியே
காக்கா இதெல்லாம் ஒரு ஜோக்கா? அவ குழந்தையா நெனைக்கிற நாயக் கொன்னுட்டியேடி பாவி. இந்தப்
பாவம் உன்னய சும்மா விடுமா? சரியாதான் சொன்ன எம்ப்டி வெசெல் மேக் நாய்ஸ்னு ஆனா அந்த
வெசெலே நீதான்”னு பொருமிட்டு “ஷெரின் அழுகலேன்னாலும் அத அழுக வச்சு சமாதானப்படுத்துவோம்”னு
சொல்லிட்டு உள்ள போனாங்க.
உள்ள...
வனி : ஷெரின்
கவலப்படாத, நாய்க்கு மணிமண்டபம் கட்ட சொல்லி அமைச்சர் ஜெயக்குமார் கிட்ட கேக்கலாம்
ஷெரின் : ஒரு
நாயப் போயி கொன்னுட்டாளே.....! ஆனா நான் எதும் ஸ்டுப்பிடா நடந்துக்கிட்டேனா?
வனி : ச்சீ
ச்சீ.... எனக்கே கோவம் வருது.....நீ ஒரு ஹ்யூமன் பீயிங் உனக்கு வராதா.
ஷெரின் : பேசாமா
அவள ப்ளூ கிராஸ்ல பிடிச்சு குடுத்துரலாமா?
வனி : இரு இரு....அவள
ரெட் கிராஸ் ஆளுங்க தூக்கிட்டு போக ஒரு ப்ளான் பண்றேன்//
வெளிய கஸ்தூரி....
கஸ் : அப்பிடி
நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? காலையில கல கலன்னு சிரிக்க வைக்க ஒரு டார்க் காமெடி
சொன்னேன் அது தப்பா?
சேரன் : அதுக்காக
காமெடியே வெளிய தெரியாத அளவு டார்க்கா சொல்லக்க்கூடாது.
தர்ஷன் : அவ
கண்ணுல தண்ணி வந்தப்பவே உன் மூக்குல ரத்தம் வந்துருக்கும்.....தப்பிச்சுட்ட
கஸ் : நான்
வேணும்னா உள்ள போயி ஷெரின் கிட்ட சாரி கேட்டுட்டு வரேன்
எல்லாரும் கோரஸா
: யம்மா தாயே ! அப்பிடியே உக்காரு...! உள்ள வனிதா வேற இருக்கு. நீ பாட்டுக்கு எப்பவும்
போல உளற வனிதா கோவப்பட்டு உன்னய அண்டர்டேக்கர் அக்குள்ள வச்சு நெறிக்குறாப்ல நெறிச்சு
விட்ரும்...அப்டியே கூச்சண்டி....//
மறுபடியும்
உள்ள வனிதா சமச்சுட்டு இருக்கும்போது அந்தப்பக்கமா வந்த கஸ்தூரி கரெக்டா வனிதா பக்கத்துல
வந்து வாய மூடிட்டு தும்மிட்டு அப்டியே வெள்ளப்பூண்டுல கைய வைக்க,
வனி “ இந்தா,
எந்த ஸ்கூல்ல படிச்ச?
கஸ் : இங்கதான்
சென்னையில ! வீட்ல இருந்து எங்க ஸ்கூல் ரொம்ப தூரம். என் கிளாஸ் பையந்தான் அவன் சைக்கிள்ல
என்னய முன்னாடி உக்கார வச்சு ஓட்டுவான். நான் அவனுக்கு கடல பர்பி குடுப்பேன்.
வனி : நீ எந்தக்
கருமத்தையும் குடுத்துட்டுப் போ...! சுத்தம்னா என்னன்னு சொல்லிக் குடுக்கலையா உனக்கு?
கஸ் : சொல்லிக்
குடுத்தாங்க ஏன் உனக்கு சொல்லிக் குடுத்தது மறந்து போச்சா? நான் சொல்லித்தரவா?
வனி : அடியேய்....தும்மிட்டு அப்டியே கைய வைக்குற. இன்ஃபெக்ஷன்
ஆகாது?
கஸ் : நான்
தும்முன முறைய பாத்தியா? இது க்ளினிக்கலி அப்ரூவ்டு டெக்னிக் அப்டின்னா விஞ்ஞானம் உனக்கு
புரியாது. நீ சாம்பார்ல பெருங்காயம் இருக்கான்னு பாரு
வனி : மீ பெருங்காயம்....?
ம்ம்ஹூம் இது சரிப்பட்டு வராது...//
வெளிய வெர்ஸா
கார் மாதிரி வேகமா வந்த வனி அங்க உக்காந்திருந்த பசங்கக்கிட்ட “டேய், சமையல் எல்லாம்
நாசமாப் போச்சு.....! சமச்சுக்கிட்டு இருக்கேன் அப்டியே சட்டியில வந்து தும்மிட்டு
போறா. உங்க எல்லாருக்கும் இன்னைக்கு தும்மல் துவையல்தாண்டி”ன்னு சொல்லிட்டு “எங்க அந்த
ஷெரின்?”னு கேட்டுட்டு பாத்ரூம் உள்ள போனாங்க.
இந்த கேப்புல
தர்ஷன் “உள்ள போயி என்னன்னு பாக்கவா?”ன்னு கேக்க, லாஸ் “டேய் அவள நம்பி உள்ள போகாத
அப்பறம் நீ இந்த வீட்ட விட்டே வெளிய போயிடுவ”ன்னு எச்சரிச்சாங்க.
உள்ள ஷெரின்
கிட்டயும் “நீ ஆசையா சாப்புடுவியே சாம்பார். அதுல தோ தடவ தும்மிட்டா. மொதல அவ சமைக்குற
டீமே இல்ல. அவ சமச்சா அது சமையலும் இல்ல. அவ இருந்தா இனிமே சமையல் டீம்ல நான் இல்ல”ன்னு
சொல்லிட்டு இருக்கும்போதே கஸ்தூரி கக்கூஸ்க்கு வர, வனிதா வெளிய போயிடுச்சு.
ஷெரின் கஸ்தூரிக்கிட்ட
“நீங்க சமையக்கட்டு பக்கம் போகாதீங்க கஸ்தூரி. கேஸ் ஸ்டவ்வுக்கே கேர் ஆகுதாம்”னு பக்குவமா
சொன்னாங்க. ஆனா எல்லாத்தையும் கேட்டுட்டு கஸ்தூரி “ ஓரே ஒரு தக்காளி எடுத்தேன், அதுக்குத்
தகராறா?”ன்னு கேக்க, ஷெரின் “ஆகா இது என்னமோ புதுப் பஞ்சாயத்து போல”ன்னு சொல்லிட்டு
“இப்போதைக்கு அந்தப் பக்கம் போகாதீங்க”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
சேரன் கவின
கூப்ட்டாப்ல...
சேரன் : என்னடா
கவினு.....நல்லா இருக்கியா?
கவின் : அண்ணே....
சேரனுக்கு பெரிய “ற” வா இல்ல சின்ன “ர” வான்னு கேட்டா....அதான் சொல்லிட்டு இருந்தேன்
வேற ஒண்ணும் பன்னல
சேரன் : அடேய்...பயப்படாதடா
! எப்பிடியோ ஊரே சாணியக் கரச்சு ஊத்தி, அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு அப்பறம் அதயே காரணமா
வச்சு என் பொண்ண கரெக்ட் பண்ணிட்ட
கவின் : இப்பிடியெல்லாம்
பேசாதீங்கண்ணே சங்கடமா இருக்கும்ல
சேரன் : உனக்கா?
கவின் : இல்ல
லாஸுக்கு ! நான் இதப் போயி அவகிட்ட சொல்லிடுவேனே...! அப்ப அவ சங்கடப்படுவால்ல?
சேரன் : யப்பா
டேய்....ஒரு லிமிட்ல இருங்க. எதா இருந்தாலும் வெளிய போயி வச்சுக்கோங்க. இவளோதாண்டா
சொல்ல வந்தேன். நீ அவகிட்ட எதுவும் மாத்தி ஊதிறாத. சரி நீ கெளம்பு....
கவின் : அதெல்லாம்
நாங்க குழந்தை மாதிரி பாத்துக்குவோம். வரட்டா...
சேரன் : சாமி
நீ வரவே வேணாம்....! எதுக்கும் லாஸக் கூப்ட்டு இந்த பாவி எதயாச்சும் சொல்றதுக்கு முன்னாடி
நாம சொல்லிருவோம் //
சேரன்
& லாஸ்
சேரன் : லாஸ்,
கவினுன்ற மூணெழுத்து மேல காதல்ன்ற மூணெழுத்து உனக்கு வர அப்பான்ற இந்த மூணெழுத்த நீ
மறந்துட்ட.
லாஸ் : ஆனா
மூணுன்னு எழுதுனா ரெண்டெழுத்துதான் கவனிச்சியா?
சேரன் : அட
ஆமா!
லாஸ் : என்ன
நோமா ? இப்ப என்ன கவின் பஞ்சாயத்தா உனக்கு? எனக்கு மொதலயாச்சும் கவின பிடிக்கும்
சேரன் : அப்ப
இப்ப பிடிக்காதா?
லாஸ் : இப்ப
ரொம்பப் பிடிக்கும்....! உலகம்லாம் என்ன பேசுனாலும் அவஷ்யமில்ல...! ஒர்ஸ்ட்டு பெர்பார்மென்ஸ்ல
ஒண்ணாவது பேரா என்னய சொல்ற நீ எங்க? உன்னய
சொல்லியாச்சும் என்னய காப்பாத்துற கவின் எங்க? அதெல்லாம் நாங்க தெளிவாத்தான் இருக்கோம்.
நீ ஃப்ரூட்டி எதும் குடிக்கிறியா? //
லாஸ் கிட்ட
கவின் சேரன் அவங்கிட்ட பேசுனத சொல்லிட்டு இருந்தான். பதிலுக்கு லாஸும் தான் சேரன் கிட்ட
“உன்னய பிடிக்கும் இப்ப ரொம்பப் பிடிக்கும்”னு சொன்னதா சொன்னாங்க.
“நான் ஒருத்தன்
இருக்கேன்டா”ன்னு காமிக்க பிக்பாஸ் “டாஸ்க்க சரியா செஞ்ச ரெண்டு பேரு யாரு?”ன்னு கேட்டதும்,
எல்லாரும் லாஸ் & சாண்டின்னு சொல்லிட்டாங்க. “வாரம் முழுக்க யாரு பெஸ்ட்டு?”ன்னு
கேட்டப்ப சேரன எல்லாரும் சொல்ல, “அப்ப நான் பாசம் இல்லையா?”ன்னு ஒரு குரல். திரும்பிப்
பாத்தா அது வனிதா.
“ஏண்டா ஒர்ஸ்ட்டு
பெர்பார்மன்ஸ்ல சொல்றதுக்கு சேரன் பேர நான் செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன். நீங்க என்னடா
அவர பெஸ்ட்டு பெர்பார்மர்னு சொல்றீங்க?”ன்னு சொன்னதும் சேரனுக்கு ஆயிராம் ஹார்ட் அட்டாக்
அட் எ டைம்ல வந்தது. “எது நடக்கக் கூடாதுன்னு வாரம் முழுக்க எல்லார்கிட்டயும் விழுந்து
விழுந்து ஆதரவு வாங்குனேனோ அதுக்கு பங்கம் வந்துடுச்சே!”ன்னு பதருனாறு.
வனிதா விடவே
இல்லையே. “ஸ்கூல் யூனிபார்ம்ல என்னய பாத்த பல டைரக்டர்கள் இப்ப என்னய வச்சு 96 மாதிரி
996 எடுக்கலாமா?ன்னு யோசிச்சிட்டு இருக்காங்கலாம். நீங்க என்னடான்னா சேர்ல உக்காந்திருந்த
சேரன பெஸ்டுன்னு சொல்றீங்க? அப்ப ஒர்ஸ்டு பெர்பார்மென்ஸ்ல என்னய சொல்லுவீங்களாடா? சினம்
கொண்ட இந்த சிங்கத்த சிறையில அடச்சுருவீங்களாடா? சிறைய செதச்சுட்டா என்ன பண்ணுவான்
இந்த பிக்பாஸு? யோசிச்சுப் பேசுங்கடா டேய்”னு உக்கந்துட்டாங்க.
சேரனும் முன்னாடி
வந்து முடிஞ்ச வரை விளக்குனாரு. அது “போயா வெளக்கமாறு”ன்னு போயிடுச்சு.
“இந்தப் பஞ்சாயத்துல
எப்பிடியும் நாமதான் ஜெயிலு போல. நாம எதுவும் கேட்டுறக்கூடாதுன்னே இவனுங்க சண்டை போடுறாப்ல
ரூட்ட மாத்திடுறானுங்க”ன்னு புரிஞ்சுக்கிட்டாங்க கஸ்தூரி.
அப்பறம் எழுந்த
ஷெரின் “அதெல்லாம் இல்ல. சேரன், லாஸ், சாண்டி அவ்ளோதான்”னு முடிச்சிட்டாங்க.
ஜெயில காப்பாத்த
வேற வழி தெரியாத பிக்பாஸ் “இந்த வாரம் ஒர்ஸ்டு பெர்பார்மென்ஸ் இல்ல”ன்னு சொல்லி தன்ன
வனிதாகிட்ட இருந்து காப்பாத்திக்கிட்டார்.
அப்பறம் பசங்க
எல்லாரும் ஒளிஞ்சு புடிச்சு விளையாண்டானுங்க. பெட்டிக்குள்ள ஒளியுறது, குப்பத்தொட்டிக்குள்ள
ஒளியுறதுன்னு கலகலப்பா இருந்தானுங்க.
அப்பறம் ஒருத்தர
பத்தி மத்த எல்லாரும் நல்லத பத்தி மட்டும் பேசனும்னு சொல்லிட்டார் பிக் பாஸ். நெறைய
பேரு சொன்னத காமிக்கல. முக்கியமா கவினப் பத்தி சேரனும், லாஸும் சொன்னத காமிச்சாங்க.
சேரன் “கவின் நல்லவந்தான் அதுனால அவன் கெட்டவன் இல்லே”ன்னு சொல்லிக்கிட்டார். லாஸோ
“கவினப் பிடிக்கும் இப்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்”னு சொன்னாங்க. இன்னைக்கு இந்த வாக்கியத்த
ஒரே ஒரு மஞ்சக் கலர் குடையத் தவிர மத்த எல்லார்கிட்டயும் லாஸ் சொல்லிட்டாங்க. நட்புக்கு
அவன் குடுக்கும் மரியாதை. ஒரு விஷயத்த சரியா எடுத்து பேசுறதுன்னு எல்லாருமே கவின் மேல
ஒரு நல்ல அபிப்ராயத்தோடதான் இருக்கானுங்க.
அப்பறம் சாண்டி,
தர்ஷன், முகின், சேரன், லாஸ் இவங்களப் பத்தியும் மத்தவங்க சொன்னத முழுசா காமிக்கல.
எல்லாம் நல்ல படியா முடியப் நேரத்துல கஸ்தூரி சாண்டியப் பத்தி பாடுறேன்னு “நந்தவனத்திலோர்
ஆண்டி” பாட்ட “பிக்பாஸு வீட்டுல சாண்டி”னு பாடுனாங்க. கோவம் வர மாதிரி காமெடி பண்றதுல
கஸ்தூரி கலெக்டர்கிட்ட அவார்டு வாங்கி இருப்பாங்க போல.
தர்ஷன் லாஸ்கிட்ட
“சேரன் உன்னப் பத்தி கவலப்படுறாரு. சோ அவரு மனசு கோணாம நடந்துக்கோ”ன்னு சொன்னான். அதுக்கு
லாஸ் “தர்ஷ், எனக்கு கவின பிடிக்கும் இப்போ ரொம்பப் பிடிக்கும்”னு சொன்னதோட முடிஞ்சது.
Comments
Post a Comment