பிக்பாஸ் 3 : நாள் 45 (07.08.19)
பிக்பாஸ் 3நாள் 45 (07.08.19)
“காசு பணம் துட்டு மணி மணி”ன்னு துள்ளளிசை பாடலோட விடியல். ரொம்ப நாளைக்கப்பறம் லாஸ்லியா ஒரு நல்ல நடனமாடி பார்வையாளர்கள உற்சாகப்படுத்துனாங்க. முகினும் சேர்ந்துக்கிட்டான். கூட அபி இல்லேன்னு நான் சொன்னாதான் ஆச்சர்யம்.
உள்ள சல்பேட்டா ஒரு பேட்டரி வீக்கான ரோபோட் பொம்மை மாதிரி விட்டு விட்டு டான்ஸ் ஆடிட்டு இருந்துச்சு. ஷெரின் எப்பவும் போல பாக்கெட்டுக்குள்ள கைய விட்டு பராக்கு பாத்துட்டு இருந்தாங்க.
கிச்சன்ல மது சாக்ஷிகிட்ட “உன்னயும், ஷெரினயும் இங்கிலீஷ்ல பேசாதன்னு பல தடவை பிக்பாஸ் சொல்லியும் அதக் கேக்காம திரியுறீங்க. அதுக்கு உனக்கும், ஷெரினுக்கும் பனிஷ்மெண்ட் தறோம். ஒழுங்கா உக்கி போடுங்க”ன்னு சொன்னாங்க. ஷெரின் “இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத”ன்னு இங்லீஷ்லயே சொன்னதும் ,மது இங்கிலீஷ் புரியாம, “ஓ அப்பிடியா, ஏதோ அவசர வேலை இருக்குன்னு சொல்றீங்க...இது எனக்கு புரியாதா? நீங்க போங்க”ன்னு சொல்லிட்டு சல்பேட்டாவ மட்டும் உக்கி போட சொன்னாங்க. சல்பேட்டாவும் சிரிச்சுக்கிட்டே உக்கி போட்டுச்சு. “இருடி.....என்னய இன்னைக்கு உக்கி போட சொல்லிட்ட நான் தாங்கிட்டேன் ஆனா இதயெல்லாம் எனக்கு போரடிக்குற அன்னைக்கு பெரிய பஞ்சாயத்தா கூட்டுவேன் அன்னைக்கு நீ தாங்க மாட்ட”ன்ற துரை சிங்கம் இருந்தாங்க சாக்ஷி.
சாண்டியும், கவினும் திருவிழாவுல அப்பா, அம்மா விட்டுட்டுப் போன வேற்று மாநில பசங்க மாதிரி திரிஞ்சானுங்க. இன்னும் சரவணன் போன சோகத்துலயும், தங்கள வழிநடத்த சரவணன் இல்லயேன்ற பயத்துலயும் தனியா உக்காந்து சித்தப்பூ ஆன்த்தம் பாடிட்டு இருந்தானுங்க. பாவமா இருக்கு இவனுங்களப் பாக்க.
கட் பண்ணா உள்ள கிச்சன்ல சல்பேட்டா சமையலுக்கு காய்கறி நறுக்கிட்டு இருந்த தர்ஷன் & முகின் கிட்ட வந்து பேசிட்டு இருந்துச்சு. நல்லா கவனிச்சுப் பாத்தா சல்பேட்டா ஒரு பொம்பள கவின்.....கேப் கெடச்சா போதும் எதாச்சும் ஒரு ஆம்பளப் பயலோடதான் பேசிட்டு இருக்கு. சரி பேசுனா சும்மா இருக்க வேண்டியதுதான இப்பிடியே அபிகிட்ட போயி “முகின் கூட ஒரு ரெண்டு மணி நேரம் பேசுனேன். அதுனால உனக்கு எதும் பிரச்சனையா பேபி?”ன்னு கேக்கும். அபிக்கு சொல்லவே வேணாம் மூக்கை சிதிக்கிட்டு முகின் கிட்ட போயி நிக்கும்...அவன் யூ டர்ன் போட்டு பர்னிச்சர உடப்பான். இது சல்பேட்டாவுக்கு ஒரு டைம்பாஸ்.
“இன்னா பண்றே?”ன்னு தர்ஷன் கிட்ட சல்பேட்டா ஆரம்பிக்க “காரக்குழம்புக்கு உருளைக்கிழங்கு கட் பண்றேன்”னு தர்ஷன் சொல்ல.....இந்த ரெண்டு வார்த்தையையும் வச்சு சல்பேட்டா “ஏ....உருளைக்கிழங்கு.....ஏ காரக்குழம்பு”ன்னு ஹிப் ஹாப் ஆதி ரேஞ்சுக்கு நாராசமா ராப் அடிச்சிட்டு இருந்தாங்க. இவ்ளோ நேரமாகியும் இன்னும் முகின் பக்கத்துல வந்து அபி நிக்காதது ஆச்சர்யந்தான்.
அப்பறம் தன் கையே தனக்குதவி டாஸ்கோட ரெண்டாவது சுற்று....! கில்லர் காயின வெல்க்ரோ ட்ரெஸ்ஸு மேல ஒட்டனுமாம். கில்லர் காயின் கடைசியா யாருகிட்ட இருக்கோ அவங்க பாயிண்ட்ல இருந்து 50% காலியாகிடுமாம். வனிதா இருந்திருந்தா “இதெல்லாம் ஒரு கேமாடா?”ன்னு கேம் ஆரம்பிச்ச ஏழாவது நிமிஷம் “திஸ் இஸ் அன்ஃபேர்...கேம நிப்பாட்டுடா ப்ளடி பிக்பாஸ்”னு சொல்லி ஆட்டைய கலச்சிருப்பாங்க. இவனுங்க லூசுதான அதுனால பிக்பாஸ் சொல்லிட்டாரேன்னு மாங்கு மாங்குனு ஓடுறதுக்கு ரெடியாகிட்டானுங்க.
ரெண்டு ரெண்டு பேரா டீம் பிரிச்சானுங்க. லாஸ் & சாக்ஷி, கவின் & சேரன், மது & அபி, தர்ஷன் & சாண்டி, முகின் & ஷெரின். எருமைக் கொட்டாயில லட்சுமி வெடிய வெடிச்ச மாதிரி எல்லா எருமைங்களும் செதறி ஓடுச்சுங்க.
கவின் கையில கில்லர் காயின் அத எடுத்துக்கிட்டு ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி......மது மேல ஒட்டுனான். அத மது எடுத்துக்கிட்டு ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி.....லாஸ் மேல ஒட்டுனாங்க. அத லாஸ் எடுத்துகிட்டு ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி.....கவின் மேல ஒட்டப் போனப்போ குருதிப் புனல் படத்துல கமல் ரயில்வே ட்ராக்க தாண்டுனாப்ல கவின் ஸ்விம்மிங் பூல செம்மயா தாண்டுனான். அப்பறம் அத லாஸ் எடுத்துக்கிட்டு ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி...... தர்ஷன் மேல ஒட்டுனாங்க. அத எடுத்துக்கிட்டு தர்ஷன் ஓடல அவன் கை நீளத்துக்கு கைய நீட்டுனதுமே சேரன் சிக்குனார் அவரு மேல ஒட்டிட்டான். சல்பேட்டா பூனைய பாத்த எலி மாதிரி எதுக்கு ஓடுறோம்னே தெரியாம எங்கிட்டு எங்கிட்டோ ஓடிட்டு இருந்துச்சு. லாஸ் கால யாரோ நசிக்கிட்டானுங்க.
ஓய்வு குடுத்தானுங்க. பாயிண்ட்ல அதிகமா இருக்குற சாண்டி & தர்ஷன டார்கெட் பண்ணுவோம்னு எல்லாரும் முடிவு பண்ணானுங்க. இந்த கேப்புல பெட் ரூமுக்குள்ள ஓடிட்டு இருந்த கவின எலும்பப் பாத்த டாகி மாதிரி சல்பேட்டா விரட்ட பின்னாடியே லாஸும் வெரட்டுச்சு. கட்டில் மேல தாவ முயற்சி பண்ணி கவின் குப்பற விழுந்தான். சல்பேட்டா அப்பிடியே விட்டுட்டு ஓடிரலாம்னுதான் நெனச்சுச்சு ஆனா பின்னாடி வந்த லாஸ் பதறிப் போயி “என்னாச்சுடா எருமை?”ன்னு அக்கறையா விசாரிச்சதும் சல்பேட்டாக்குள்ள சந்திரமுகி முழிச்சிருச்சு. அதுவும் கூட சேர்ந்து அவன “ஆர் யூ ஓகே பேபி?”ன்னு கேக்க, கவின் சுதாரிச்சுக்கிட்டு “ரூமு பெட்ரூமு, நானு கவினு, கூட சல்பேட்டா, சாக்ஷி இது போதாதா ‘பிக்பாஸ் வீட்டுக்குள் கவின் செய்யும் செயலைப் பாருங்கள்’னு யூ ட்யூப் வீடியோ கேப்ஷன் போட! போதும்டி உங்க அக்கறை சக்கரயெல்லாம்”னு சொல்லி வெரட்டி விட்டுட்டான்.
கடைசியில சேரன் அவுட்டு.....அவருகிட்ட இருந்து 50% பாயிண்ட உருவிட்டானுங்க. பூராம் ஆக்சிஜென் சிலிண்டர் ஏத்துற அளவுக்கு இளைச்சுட்டு இருந்தானுங்க. இன்னும் 10 நிமிஷம் கேம் கண்டினியூ ஆகியிருந்தா சேரன பாடையில ஏத்தியிருப்பானுங்க. லாஸுக்கு அப்பா இல்லாம போயிருக்கும்.
உள்ள சோஃபால உக்காந்திருந்த கவின லாஸ் வந்து விசாரிச்சுச்சு சல்பேட்டாவும் பக்கத்துல வந்து நின்னு “இன்னா ஓகேவா?”ன்னு கேட்டத கவின் காதுலயே வாங்கிக்காம லாஸுக்கு பதில் சொல்லிட்டு இருந்தான்.
பெட்ல படுத்துக்கிட்டே கவினும் சாண்டியும்....
கவின் : அண்ணே நான் விழுந்துட்டேண்ணே...
சாண்டி : பாவி....இந்த தடவ யாருகிட்ட?
கவின் : அண்ணே நான் குப்பற விழுந்துட்டேண்ணே...
சாண்டி : ஓ அப்பிடி விழுந்துட்டியா? சித்தப்பூ இருந்திருந்தா இப்பிடி விழ விட்டிருப்பாரா உன்னய?
கவின் : அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே ?
சாண்டி : என்ன லாஸ் கூந்தல்ல இருந்து வர வாசனை இயற்கையா? செயற்கையான்னா?
கவின் : அதுவும் தான் ஆனா இப்ப வேற! குப்பற விழுந்தேன்னு சொன்னேன்ல அது நானா கால் தடுக்கி விழுந்தேனா இல்ல என்னய யாரும் தள்ளி விட்டாங்களான்னு டவுட்டு.
சாண்டி : ஏண்டா மீரா மாதிரி பேசுற? விட்டா இன்னும் 2 வாரத்துல வெளிய போயிருவ உன்ன எதுக்கு தள்ளி விடனும்?
கவின் : அண்ணே என் பின்னாடி ஓடி வந்தது சல்பேட்டாண்ணே....என்னய தள்ளி விட்ருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?
சாண்டி : சல்பேட்டா செய்யுற ஆளுதான்....சரி வெயிட் பண்ணு கண்டுபிடிப்போம்....
கவின் : அண்ணே அப்பிடியே அந்த லாஸ் “கூந்தல் மணம்” கேசையும்....
சாண்டி : உன்ன தள்ளி விட்டு கொன்னுருக்கனும்....ஒழுங்கா ஓடிடு!
டாஸ்க்கோட கடைசி ரவுண்டு....சிவப்பு கலர் தண்ணித் தொட்டிக்குள்ள இருக்குற காயின ஒவ்வொரு ஆளா எடுத்து அதுல என்ன இருக்கோ அத செய்யனும்!
அடுத்தவங்க பாயிண்ட குறைக்கிறது, அடுத்தவங்களுக்கு நம்ம பாயிண்ட குடுக்குறது இப்பிடிதான் போச்சு. கவின் காயின்ல ஒண்ணும் இல்ல “எனக்கு இதுலயும் ஒண்ணும் இல்லையா?’ன்னு அவன் கேட்டதுல இருந்தது 90’s கிட்ஸோட வலி. பெரும்பாலும் தர்ஷன் & சாண்டியதான் குறி வச்சாங்க. மதுவ மட்டும் யாரும் குறிப்பிடல அதுனால அவங்க பாயிண்ட் அப்பிடியே இருந்தா மாதிரிதான் இருந்தது.
ஆனா ரிசல்ட் சொன்னப்ப மது பாயிண்ட் கணிசமா குறைஞ்சிருந்தது. அது அவங்களுக்கு அதிர்ச்சி. அபி ரெண்டாவது இடத்துல இருந்தது அபிக்கு இன்ப அதிர்ச்சி. சல்பேட்டா முதலிடம் சோ இந்த வாரம் வெளிய போகாத பட்சத்துல அடுத்த வாரம் நாமினேஷன்ல இருக்காது. இதக் கேட்டு சல்பேட்டா முகமே மூங் தால் மாதிரி பூரிப்பா இருந்துச்சு.
லான்ல சன் பாத் பெஞ்சுல மூன் பாத் எடுத்துக்கிட்டே அபி தன்னோட “மன் கி பாத்”த சொன்னாங்க முகின் கிட்ட அதாவது “ஐ லவ் யூ”ன்னு! முகினோ “இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலயே?”ன்னு மழுப்புனான். அபியோ “உன்ன லவ் பண்ண யார் அனுமதியும்....ஏன் உன் அனுமதியே கூட தேவையில்ல”ன்னு தன் காதல் பழத்த பிழிஞ்சு ஜூஸ் போட்டுட்டு இருந்துச்சு.
உள்ள சல்பேட்டா தர்ஷன வெரட்டி விளையாட அதப்பாத்த சேரனும், மதுவும் “சல்பேட்டா மட்டும் முகின வெரட்டி வெளையாண்டிருக்கனும். அபி அம்மன் தாயி மாதிரி மாறி சல்பேட்டாவ சண்டா மாதிரி சவட்டியிருக்கும்”னு பொரணி பேசிட்டு இருந்தாங்க.
ஆண்கள் பெண்களாவும், பெண்கள் ஆண்களாவும் மாறி முன்னாடி நடந்த ஒரு சம்பவத்த நடிச்சுக் காட்டனும்னு ஒரு கன்றாவி டாஸ்க். ஒரு வழியா செஞ்சு முடிச்சானுங்க.
முடிச்சிட்டு அபி முகின் கிட்ட “மது ஒரு இரிட்டேட்டிங் ஃபெல்லோவா இருக்கு”ன்னு சொல்லிக்கிட்டு இருந்ததோட முடிஞ்சது.
Comments
Post a Comment