பிக்பாஸ் 3 :நாள் 59 (21.08.19)


பிக்பாஸ் 3நாள் 59 (21.08.19)


“சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல”ன்னு பாட்டு போட்டார் பிக்பாஸ். கஸ்தூரிய நெனச்சு அவரு பாடுறாரு போல. இந்தப் பாட்டுக்கு அகத்திக்கீரைய அரளி விதையோட சேத்துச் சாப்பிட்ட எபெக்டல கஸ்தூரி கைய கால அசச்சதுக்குப் பேரு டான்ஸுன்னு சொல்லாலாம்னா சொல்லலாம். பசங்க குத்தி எடுத்தானுங்க. சல்பேட்டா இருந்திருந்தா கவின் இந்தப் பாட்டுக்கு இன்னும் உற்சாகமா ஆடியிருப்பான்.
தர்ஷன் எல்லாருக்கும் மிருக மிமிக்ரி சொல்லிக்குடுத்தான். “எங்க எல்லாரும் மிருங்கங்கள் மாதிரி கத்துங்க”ன்னு சொன்னதும் எல்லாரும் நாய், பூனைன்னு ஆரம்பிச்சானுங்க. ரொம்ப நாள் கழிச்சு சொந்த பாஷையில பேசிக்கிட்டா மாதிரி இருந்துச்சு. கஸ்தூரியெல்லாம் பெர்பெக்ட். சூப்பர் சேரன் சார் நாய் பாஷையிலயும் ஒர்ஸ்ட் பெர்பார்மென்ஸ் விஷயத்த தான் பேசுனாரு போல...ஏன்னா எல்லாரும் பேசி முடிச்சப்பறமும் ரொம்ப நேரமா அவரு மட்டுந்தான் குரைச்சுட்டு இருந்தாரு. ஆனா வனிதா மட்டும் வாயத் தொறக்கலையே! “நீங்கள்லாம் மிருகம் மாதிரிதாண்டா ஆனா வைல்ட் கார்டுல வந்தாலும் உண்மையாவே வைல்ட் அனிமல்டா”ன்னு உள்ளுக்குள்ள தூங்கிட்டு இருந்த அதே மிருகம் வெளியவும் தூங்கிட்டு இருந்துச்சு.
சமையக்கட்டுல வனிதா மஞ்சக்கலர்ல எதையோ சட்டில கிளறிட்டு இருந்தாங்க. அப்ப கஸ்தூரிகிட்ட....
வனி : கஸ்தூரி எங்கிட்ட என்னமோ தனியா பேசனும்னு சொன்னீங்களே? என்னன்னு சொல்லுங்க....யாருமே இல்ல இங்க. எனக்கும் ரொம்ப வசதி
கஸ் : அப்டியா ? எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கே
வனி : அப்பிடி என்னங்க அவசர வேலை?
கஸ் : என்ன இப்பிடி கேட்டுட்டீங்க? அவசர போலீஸ் 100ன்னு சொல்லும் போது அது என்ன 100 பேரு மட்டும் அவசர போலீஸ் அப்ப மத்தவங்கள்லாம் அவசரமில்லாத போலீஸான்னு கேட்டு வளர்ந்தோமா நாம? இல்லேல்ல....! பால் வண்டில அவசரம்னு போட்டிருக்கு. பால் வண்டி ட்ரைவருக்கு அவசரமா? இல்ல பாலுக்கு அவசரமான்னு தெரியுற சாத்தியம் யாருக்கு இருக்கு?
வனி : எங்கிட்ட என்ன பேசனும்னு மறந்து போச்சா? அதான் இப்பிடி அளந்துட்டு இருக்கியா?
கஸ் : ஆங்....ஞாபகம் வந்தாச்சு ! நேத்து நீங்க “நான் 3 குழந்தைக்கு மதரு, எனக்கு இல்லவே இல்ல சுகரு....இப்பவும் நான் டக்கர் பிகரு”ன்னு சொன்னீங்கள்ல......! நான் ஒண்ணு சொல்லவா?
வனி : (கரண்டிய கைல எடுத்த படி) எங்க சொல்லு பாப்போம் ?
கஸ் : கரண்டிய கீழ வைங்க.......! நீங்க 3 குழந்தைய பெத்துக்காட்டியும் நீங்க ரொம்ப அழகுதான். நீங்க குண்டெல்லாம் இல்ல.
வனி : (Mind Voice : இவ உண்மையாவே கலாய்க்குறா....நோ டவுட்)
கஸ் : ஆனா நான் உங்கள குண்டு, அழகில்லன்னு நெனச்சு எதுவும் சொல்லல....ஆனா நான் சொன்னது உங்களுக்கு அப்பிடி தோணுதுன்னா என்ன அர்த்தம்? நீங்க குண்டு, அழகில்லேன்னு நீங்களே உங்களப் பத்தி நெனச்சுக்கிறீங்கன்னுதான அர்த்தம்?
வனி : வாடி வானரமே....! அப்ப நீ என்னய குண்டுன்னு சொல்லல....என்னய பாத்து நானே என்னய வாத்து மடச்சின்னு சொல்லிக்கிட்டேன் அப்டித்தான?
கஸ் : அத எப்பிடி என் வாயால சொல்லுவேன்....?
வனி : இங்க பாரு போன வாரம் கமல் என் மேல கான்செண்டரேட் பண்ணதால இந்த வாரம் கொஞ்சம் அமைதியா இருக்கேன்.....! ஆனா அடுத்த வாரம் நான் இப்பிடி இருக்க மாட்டேன். ரொம்ப உக்கிரமாகிடுவேன். சோ.....நீ இப்பிடியே எங்கிட்ட பேசிட்டு இருந்தேன்னா...அடுத்த புதன் கிழமை உன்னய காணோம்னு எல்லாரும் தேடிட்டு இருக்குறப்போ நீ குழம்புல கொத்திச்சுட்டு இருப்ப....ஒழுங்கா ஓடிடு!
கஸ் : அப்ப நான் உங்கிட்ட பேச வேணாம்னு நீயே சொல்றதால நான் உங்கிட்ட பேசாமாட்டேன்னு சொல்லிக்கலாமா?
வனி : நீ இன்னும் போகலயா?
இடையில சாண்டி வர..
கஸ் : நீ இன்னும் போகலயான்னு நீயே கேட்டதால நான் போறேன்
வனி : சாண்டி ஒரு ஆரஞ்சு முட்டாய் இருந்தா குடுடா....லோ சுகராகுது....தல சுத்துது....! //
ஸ்கூல் டாஸ்க் ஆரம்பம்....
சேரன் செய்யுள் சொல்லித்தர அத எல்லாரும் திருப்பி சொல்லனும். ஆத்தி சூடி சொன்னானுங்க. அப்பறம் நா பிறழ் வார்த்தைகள். டங் ட்விஸ்டர். எல்லாம் முக்கித் தக்கி சொன்னானுங்க. ஷெரின் சொன்னது சோ க்யூட். சேரன் ரெண்டு தடவ கேட்டு வாங்கி சாப்ட்டார்.
அப்பறம் பாட்டு பாட சொன்னாங்க பசங்கள. எப்பவும் போல அசால்ட்டா முஸ்தபா முஸ்தபாவ மாத்திப் பாடுனானுங்க. கஸ்தூரிய கால வாருனானுங்க. அதிசயமா சேரன வுட்டுட்டானுங்க.
பதிலுக்கு எசப்பாட்டு பாடுறேன்னு கஸ்தூரி லூசு “கருத்தவன்லாம் கலீஜாம்” பாட்ட மாத்திப் பாடுறேன்னு சொல்லிட்டு “கொய்யால”ன்னு பாடிருச்சு. சேரன் ஒரு பார்வை பாக்கவும் “அய்யாவே”ன்னு மாத்துச்சு. ஆரவக்கோளாறுல என்னைக்காச்சும் ஆண்டவரப் பாத்து “போடா போடா புண்ணாக்கு”ன்னு பாடப் போகுது.....அன்னைக்கு நாம கஸ்தூரிய பாடையில பாத்துரலாம்.
டாஸ்க் முடிஞ்சதாம் ! யப்பா டேய் போதுண்டா சாமி....! “செல்போன எடுத்து செல்ஃபி எடுக்காம கூட்டமா நின்னு குல்ஃபி எடுத்துக்கோங்க”ன்னு சொன்னாரு பிக்பாஸ்!
தங்களது குருநாதர்களப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னாங்க. நல்ல போர்ஷன் இது. வனிக்கு பி.வாசு குருவாம் ! வாட்ட மிராக்கிள் ! சூப்பர் சேரன் சார் கே.எஸ் ரவிக்குமார பத்தி சொன்னதும் அல்டி.
கஸ்தூரி கமிங்.....! அவங்க சொல்ல வந்தது ஒரு நல்ல நெகிழ்வான விஷயந்தான். ஆனா அது கேட்டவங்களுக்கு சரியா போயி சேரல. இல்லேன்னா அவங்க சொன்ன விஷயத்துக்கு எல்லாரும் கதறி அழுது ஸ்விம்மிங் பூல நெறச்சிருப்பானுங்க. சேரன் மட்டும் வாஷ் பேசின நனச்சிட்டு வந்தார். கஸ்தூரி தான் சொல்ல வந்தத நேரா போயி லெப்ட்ல திரும்பி, இம்மிடியட் ரைட் எடுத்து, மூணாவது சந்துல நாலவது ரைட்ல ஒன்னு விட்டு ஒன்னு, ரெண்டு விட்டு ரெண்டாவது கல்லு சந்துல உள்ள வீட்ல போயி முடிச்சாங்க. போதாக்குறைக்கு “வனிதா என்னய சண்டைய தடுக்காதன்னு சொல்லுது. ஆனா இதெல்லாம் சப்ப சண்டைன்னு வனிதாவுக்கு புரிய வைக்கவே யாம் இந்த திருவிளையாடலை நடத்தினோம்”னு சொல்லி முடிக்க, “இவ அடங்க மாட்டா போலருக்கே?”ன்னு வனிதா மைண்ட்ல குறிச்சுக்கிட்டாங்க.
அது என்னமோ எல்லாரும் பேசும்போது பேசுனவங்கள காட்டுனா....ஷெரின் பேசும்போது மட்டும் கேக்குறவங்கள காமிச்சாங்க. எல்லாரும் சகட்டு மேனிக்கு வாயப் பொளந்து பாத்துட்டு இருந்தானுங்க.
சரி – தப்பு, பொறுக்கித்தனம் – புனிதம், ரீல் – ரியல் இப்பிடி எது வேணும்னாலும் சொல்லிக்கலாம். ஆனா இந்த வீட்டுக்குள்ள ஒரு அருமையான லவ் வேவ்ஸ் ஓடிட்டு இருக்கு. இந்த கிறுக்கனுங்க இன்னும் சந்தோஷமா உள்ள இருக்குறதுக்கு இந்த வேவ்ஸ்தான் காரணம்னு நான் நம்புறேன். அது கவின் – லாஸ் உருவாக்குனது. நாள் முழுக்க எவ்வளவு ராவடி நடந்தாலும் சரி, அனேகமா மது கைய அறுத்திட்டு இருக்ந்த கலவரத்துல கூட கவின் லாஸ் கண்ணதான் தொடச்சு விட்டுட்டு இருந்திருப்பான். லாஸும் கவின யாரும் அண்டாம பாத்துட்டு இருந்திருக்கும். உடனே கவின் நாலு பொண்ணு கதைய தூக்கிட்டு யாரும் வர வேணாம். இது வேற !
ரெண்டு நாளா அவன் மூஞ்சிய தூக்கிட்டு இருக்கான்னு அந்தப் பொண்ணு படுற பாடு இருக்கே யப்பா....! இப்பயெல்லாம் லாஸ் கவின “வாங்க போங்க”ன்னுதான் கூப்டுறாங்க. சின்ன கேப் கிடச்சாலும் அவங்க ரெண்டு பேரும் எதாச்சும் ஒரு கேப்புல உக்காந்து பேசிக்கிறானுங்க. உண்மையாவே பாக்க இது ரொம்ப நல்லா இருக்கு. ரெண்டு பேரும் பேசிக்கும்போதும் அவங்க கண்ணுங்க ரெண்டும் அப்டியே மின்னுது. கொஞ்ச நாளைக்கு இவனுங்கள விட்டு வைங்கடா....!
பெட்ரூம்ல......
சேரன் : தர்ஷா....வா எங்க போற? வந்து இங்கன உக்காரு.....
தர்ஷ் : சொல்லுங்க சார்....?
சேரன் : ம்ம்ம்ம்.....சாப்ட்டியா? உன் ஆளுக்கு உடம்பு எப்பிடி இருக்கு?
தர்ஷ் : சார்....! பெஸ்ட் பெர்மார்மன்ஸ்ல உங்க பேர சொல்லிடுறேன் சார்
சேரன் : டேய் மேட்டர் அது இல்லடா....! என்ன மறுபடியும் உன் பிரண்டும், உன் தங்கச்சியும், என் பொண்ணும் மணிக்கணக்கா ஆரம்பிச்சுட்டாங்க போலயே?
தர்ஷ் : லாஸும் கவினும்னு நேரடியாவே சொல்லி இருக்கலாமே?
சேரன் : அதாண்டா.....! சரி என்னவாம் நைட்டெல்லாம் பேசுறா மாதிரி இருக்கு?
தர்ஷ் : ஆமா ஆமா....!
சேரன் : நாளைக்கு நானும் கூப்ட்டு பேசலாம்னு இருக்கேன்
தர்ஷ் : நீங்களுமா?
சேரன் : நான் லாஸ்கிட்ட பேசலாம்னு இருக்கேன்...
தர்ஷ் : அதான் அவ கூட கவின் பேசிட்டு இருக்கானே?
சேரன் : சர்தாண்டா....! கவின் கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு லாஸ் கிட்ட பேசிக்கிறேன்
தர்ஷ் : அப்ப நாளைக்கு அவங்ககிட்டயே பேசி இருக்கலாமே? எங்கிட்ட இப்ப எதுக்கு பேசிட்டு இருக்கீங்க?
சேரன் : சும்மா உன்னய கூப்டுவேனா அண்ணன்.....? நாளைக்கு.....
தர்ஷ் : சார்....! எல்லார் கைல காலுல விழுந்தாச்சும் உங்க பேரையே பெஸ்ட் பெர்பார்மர்னு சொல்ல சொல்லிடுறேன் சார்....ஆள விடுங்க சார்! அங்க ஷெரின் வெயிட்டிங் !
சேரன் : ஆங்...தெர் யூ ஆர்...! போ போயி ஷெரினுக்கு ஸ்லீப்பிங் சாங் பாடு //
வெளிய லான்ல...
வனிதா : டேய் கஸ்தூரி உங்களப் பத்தி பாட்டு பாடுச்சே ! அது என்னமோ எனக்கு உங்கள அசிங்கப்படுத்தி பாடுன மாதிரி இருந்துச்சு. முகின் உன்னய கூட அதுல எதோ கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனாப்ல இருந்துச்சு....கேட்டியா?
முகின் : இல்லயே...நல்லாதான் பாடுனாங்க
வனிதா : இல்லடா நான் நல்லா கேட்டேன்....நீ சேரக் கொண்டி அடிக்கிற அளவுக்கு ஏதோ அசிங்கமா பாடுச்சு
முகின் : (Mind Voice : இப்ப உன் பேச்சக் கேட்டு நான் அவ மண்டைய பொளக்கனும்...அவளுக்கு மண்டையில வெள்ளக் கட்டும் எனக்கும் ரெட் கார்டும் கிடைக்கனும் அதான உன் ப்ளானு.....? மயங்க மாட்டேன் இது அபி மேல சத்தியம்
சட்டுன்னு லைட்டு ஆஃப் ஆக...
வனி : என்னடா லைட்ட ஆஃப் பண்றானுங்க? என்னடா நெனச்சுட்டு இருக்கான் இந்த பிக்பாஸு? அக்கா உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன் மதிக்க மாட்டேங்குறான்....
முகின் : சரி குட் நைட் நான் தூங்கப் போறேன்.... ! நன்றி பிக்பாஸ் //
லைட் அணைஞ்சது ஆனா கவின் – லாஸ் காதல் ஜோதி இன்னும் பிரகாசமா லான்ல எரிஞ்சுட்டு இருக்கு.......
அதே நேரம் இத டீவியில பாத்துட்டு இருந்த ஒரு வீட்ல இருந்து மட்டும் விசும்பல் சத்தத்தோட ஒரு பாட்டு கேட்டுச்சு.....உங்களுக்கும் கேட்டுச்சா? கேட்டுச்சுன்னா என்ன பாட்டுன்னு கமெண்டவும்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)