பிக்பாஸ் 3 : நாள் 56 தொடர்ச்சி (18.08.19)


பிக்பாஸ் 3
நாள் 56 தொடர்ச்சி (18.08.19)

மீ : பத்மா ! நாந்தான் நேத்து ஷோ பாக்கலையே ! எப்பிடி எழுதுறது? ஹாட்ஸ்டார் வேற இல்ல...
மனைவி : ஆமா இவரு எழுதுறதப் பாத்துதான் ஷோ நடத்துறாங்க....போவியா
மீ : ஒரு உதவி பண்றியா? நீதான் பாத்தியே ! என்ன நடந்துச்சுன்னு சொன்னேனா நான் நோட்ஸ் எடுத்துட்டு அப்டியே எழுதிடுறேன்....க்ரெடிட் வேணும்னா உன் பேரு போட்டுடுறேன்....
மனைவி : அப்பிடி சொல்றியா? சரி அந்த தண்ணிக் கேன கவுத்திட்டு வந்து உக்காரு....
மீ : கவுத்திட்டேன்....! ஸ்டார்ட் பண்ணு
மனைவி : என்ன.... ஆரம்பிச்சதும் கமல் வந்தாரு....என்னமோ சொன்னாரு எல்லாரும் கை தட்டுனாங்க....
மீ : இப்பிடி சொன்னா எப்பிடி? கொஞ்சம் கரெக்டா எகக்ஸ்ப்ளேயின் பண்ணு ! அவரு என்னமோ சொன்னாருன்னு சொன்னியே அது என்ன?
மனைவி : இங்க பாரு ரொம்ப நோண்டி நோண்டி கேட்டா என்னால சொல்ல முடியாது....
மீ : சரி சரி....சொல்லு...
மனைவி : உள்ள எல்லாரும் உணர்ச்சிகளுக்கு உடந்தையா இருக்காங்க அது அவங்களுக்கும் நமக்கும் நல்லதில்ல. அதனால உள்ள போயி என்னன்னு கேப்போம்....ஆனா எவிக்ஷன் இருக்குன்னு சொன்னாரு...
மீ : சூப்பர்....
மனைவி : உள்ள எல்லாரும் இருந்தாங்க.....அப்பறம் காலர் ஆப் த வீக் வந்துச்சு...! லாஸ்லியா கிட்ட “இங்க ஆடிட்டே இருக்கியே நியூஸ் வசிக்கும்போது என்ன பண்ணுவ?”ன்னு கேட்டாங்க ஒருத்தவங்க....! கேக்க எவ்வளவோ இருக்கும்போது இதையா கேப்பாங்க? நானா இருந்தா கவினும் நீயும் கல்யாணம் பண்ணிக்குவீங்களா?ன்னு கேப்பேன்....அந்த நம்பர் இருந்தா வாங்கிக் குடேன்! அப்பிடியே வனிதாவையும் நல்லா கேக்கலாம் இப்பிடி எல்லாரையும்...
மீ : பத்மா, அத விடு அங்க என்ன நடந்துச்சுன்னு மட்டும் சொல்லு...
மனைவி : பாத்தியா? என் போக்குக்குதான் சொல்லுவேன் வேணும்னா கேளு இல்லன்னா ஓடு....
மீ : சரி சொல்லு....
மனைவி : அதுக்கு லாஸ் கேமரா ரோல் ஆனதும் அடக்க ஒடுக்கமா உக்காந்துக்குவேன்னு சொல்லுச்சு...! இது ஒரு கேள்வி....அதுக்கு இது ஒரு பதில்
மீ : அப்பறம்...
மனைவி : பசங்கள கண்டிச்சாரு...! ரொம்ப பாட்டுப் பாடிட்டே இருக்கானுங்கள்ள அதுக்காக! அதுவும் எப்பவும் கக்கூஸ்லயே இருக்குறதால அங்க உக்காந்து பாடுனா அசிங்கமா பேரு வச்சுருவாங்கன்னு சொல்லி சிரிச்சாரு...
மீ : அதுக்கு பசங்க என்ன சொன்னானுங்க?
மனைவி : சரின்னு சொன்னானுங்க
மீ : ஆவ்ளோதானா?
மனைவி : பின்ன அவனுங்க சொல்லாததையும் சேர்த்து சொல்ல நான் என்ன உன்ன மாதிரியா?
மீ : ம்ம்...ம்ம்....அடுத்து?
மனைவி : (போன் டயல் செய்தபடி....) இரு அக்கா கூப்புடுறா
மீ : நீதான டயல் பண்ற?
மனைவி : டயல் பண்ணி அவகிட்டதான பேசப்போறேன்....! எல்லாம் ஒன்ணுதான்....! ஏய் தீபா...! ஒரு மணி நேரத்துக்கு என்னய கூப்புடாத...அவருக்கு பிக்பாஸ்ல என்ன நடந்துச்சு எப்பிடி எழுதனும்னு சொல்லிட்டு இருக்கேன்....இன்னைக்கு படிச்சு பாரு நல்லா இருக்கும்....அப்டியே சித்திகிட்டையும் சொல்லிடு....! (போனை வைத்தபடி) என்ன பாக்குறீங்க? சொல்றத எழுதுங்க
மீ : சொல்லு சொல்லு
மனைவி : அடுத்து சேரன் கிட்ட “என்ன லாஸ் கிட்ட பேசுறதில்லையா? குட் நைட் சொல்றதில்லையா?ன்னு கேட்டாரு....அவரு “சண்டையெல்லாம் இல்ல சும்மா கொஞ்ச நாள் அது பசங்க கூட ஜாலியா இருக்கட்டும்”னு சொன்னாரு. அப்பா அப்பான்னு சொல்லிட்டு பசங்க கூட ஜாலியா இருக்கட்டும்னு சொல்றாரு? அப்பா இப்படியா சொல்லுவாரு? காலுல சூடு போட்டு உக்காருன்னுதான சொல்லுவாரு?
மீ : இதுல என்ன இருக்கு? இந்த ஜெனெரேஷன் பொண்ணுங்க அப்பிடித்தான் அவங்க போக்குக்கு விட்டுதான் சொல்லனும் !
மனைவி : ரொம்ப நீட்டாத....! அப்பறம் கவின் மாதிரி பசங்க கைக்குள்ளதான் போட்டுக்க பாப்பானுங்க...
மீ : சரி நீ நடந்தத மட்டும் சொல்லு....
மனைவி : அதத்தான் சொல்றோம்....! லாஸ் கிட்ட என்னன்னு கேட்டாரு அது என்னடான்னா “என்னய ஜெயிலுக்கு அனுப்பிட்டாரு”ன்னு சொல்லுது ! “இப்பிடி சொல்லிட்டதால எனக்கு கொஞ்சம் கடுப்பாகிடுச்சு.அதுனால கொஞ்ச நாள் கழிச்சு பேசுறே”ன்னு சொல்லுச்சு அதுக்காக தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா? இவரு சொல்ற எதையும் அது கேக்குறதில்ல ஆனா இது தப்பு செஞ்சதுக்கு ஜெயிலுக்கு போக சொன்னா மட்டும் இவளுக்கு பிடிக்காதாமாம் நல்ல கதையா இருக்கே?
மீ : அப்பறம்
மனைவி : அந்தாளு வந்த நாளுல இருந்து அந்தப் பொண்ண அவரு பொண்ணா நெனச்சு பேசுனா இது அவனுங்க கூட சேந்துக்கிட்டு இவர கேலி பண்ணுமாம் ஆனா இவரு மட்டும் ஒண்ணும் சொல்லக்கூடாதாம். ஆனா சேரன் கரெக்டா சொன்னாரு. அத இப்பிடி ஏத்தி விட்டதாலதான் சும்மா இருந்த லாஸ் இப்ப கொஞ்சம் சண்டையெல்லாம் போடுதுன்னு. ஆமா சேலை கட்ட சொன்னாலே ஏன் லாஸ் எப்பவும் கேரளா சாரியே கட்டுது? வேற சேலை எடுத்துட்டு வரலையோ?
மீ : அதெல்லாம் எனக்கு தெரியாதுமா? நீ அடுத்தத சொல்லு....
மனைவி : இரு....! நான் டீயப் போட்டுட்டு வரேன் ! நீ அதுக்குள்ள சின்னவன் பாத்ரூம்ல இருந்து கூப்டுறான் என்னன்னு பாத்துட்டு வா
மீ : பாத்துட்டு வரதுக்கு அது என்ன பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையா? கழுவி விட்டுட்டு வரனும்னு சொல்லு.....இருடா டேய் வரேன்
இடைவேளை........
மீ : கொஞ்சம் சீக்கிரம் சொல்லேன்...
மனைவி : சரியான சீன் இது. பசங்ககிட்ட “ஏண்டா சூடம் மாதிரி பத்திக்கிறீங்க?”ன்னு கேட்டதுக்கு கஸ்தூரி டக்குன்னு வத்திக்குச்சி வந்துருச்சேன்னு சொல்லிடுச்சு....! வனி மூஞ்சிய பாக்கனுமே! யப்பா....நல்லா அடி வாங்கப் போகுது கஸ்தூரி. இதுல கமல் சாரே கேட்டாரு “யாரு வத்திக்குச்சி?”ன்னு கஸ்தூரி டைரக்டாவே சொல்லிடுச்சு வனிதான்னு....
மீ : அப்டியா? அப்பறம்?
மனைவி : அப்பறம் “யாரு இந்த பேரு வச்சா?”ன்னு கேட்டாரு. தர்ஷன் தான இப்பிடி பேரு வச்சான்! ஆனா அத யாரும் சொல்லாம மழுப்பிட்டானுங்க
மீ : வனி இதுக்கு ஒண்ணும் சொல்லலியா?
மனைவி : அந்த லூச யாரும் பேசவே விடலையே. கையத்தட்டி பேச விடாம பண்றாங்க. கமல் சார் “எல்லார் கிட்டயும் கேக்குற ஆனா நீ ஏன் உள்ள வந்த?”ன்னு கேட்டதுக்கு மக்கள் என்னய மிஸ் பண்ணாங்கன்னு சொல்லுச்சு பாரு எனக்கெல்லாம் செம்ம கடுப்பு....! எப்பிடி இப்பிடி பேசுது? சரியான ஆளுப்பா...!
மீ : அப்பறம் ?
மனைவி : அப்பறம் அப்பறம்னா? இரு எனக்கு மறந்துருச்சு....யோசிச்சு சொல்றேன்....
மீ : என்னது யோசிக்கிறியா?
மனைவி : ஆமா ! இந்த குப்பைய எடுத்து வெளிய வச்சுட்டு வா...
மீ : ம்ம்ம் சரி
மனைவி : ஆங்....! மது போனதால தலைவர் போஸ்ட் காலியா இருக்குல்ல அதனால அடுத்து ரெண்டு பேருல யாரச்சும் தலைவரா இருங்கன்னு சொன்னாரு. எல்லாரும் ஷெரின சொல்லிட்டாங்க. பாவம் இப்பயாச்சும் சேரன் சார சொல்லி இருக்கலாம். ஷெரின் சந்தோசமா இருந்துச்சு. கவினும், லாஸும் சேஃப் ஆகிட்டாங்க
மீ : செம்ம....தெரிஞ்சதுதான! டீ போடுறேன்னு போன டீ எங்க ?
மனைவி : அப்பிடியா சொன்னேன்? குக்கர ஆஃப் பன்ணப் போறேன்னு சொல்லலயா? டீ வேணுமா உனக்கு?
மீ : வேணாம் நீ சொல்லு...
மனைவி : அபிதான் எவிக்ஷன். பாவம் லாஸ்தான் பயங்கரமா கதறி அழுதுச்சு. ஷெரினும். அந்த மெடல உடைப்பாங்கள்ல அத ஒடச்சுட்டு போட்டோ எடுத்துட்டு வெளிய போயிடுச்சு....ஆனா அந்த உடஞ்ச மெடல முகின் வந்து ஒட்ட வச்சு பாத்தான்....! அவனும் லவ் பண்றான் போல....!
மீ : அப்பிடியா? ப்ச்...
மனைவி : என்ன சோகமா? இருக்குறப்ப பூராம் அந்தப் பிள்ளைய அடிக்கப் போயிட்டு இப்ப என்ன நாடகமா?
மீ : சரி நீ மேல சொல்லு
மனைவி : அப்பறம் என்ன ? அபி எப்பவும் போல கமல் சார் கிட்ட போச்சு அதிசயமா இன்னைக்கி அது அழுகவே இல்ல....! இப்பிடி உள்ள இருந்திருந்தா வெளியவே வந்திருக்காது. அப்பறம் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போயிடுச்சு. கமலும் போயிட்டாரு
மீ : அவ்வளவுதானா?
மனைவி : இரு, மோட்டர் போட்டுட்டு வரேன்...
மீ : சீக்கிரம் வா...!
மனைவி : இரு...அப்பறம் உள்ள காமிச்சாங்க. ஷெரின தர்ஷன் அழகா பொம்ம மாதிரி ஆடி சமாதனப்படுத்துனான். ஷெரினும் சிரிச்சுச்சு. ஆமா தர்ஷன விட ஷெரினுக்கு வயசு கூடதான? அப்பறம் எப்பிடி?
மீ : அது அவனுங்க பிரச்சனை...! நீ அடுத்தத சொல்லு
மனைவி : சேரன் லாஸ்கிட்ட “எதுனாலும் அப்பகிட்ட சொல்லு. நானும் இனிமே சொல்றேன்”னு சொல்லி ரெண்டு பேரும் ஒரே அழுகை. எனக்கே எங்கப்பா ஞாபகம் வந்திருச்சு. அந்த பொன்ணுக்கு குடுக்க வேண்டிய சாக்லேட்டையெல்லாம் இன்னும் வச்சுருக்காராம்பா ! பாவம்! இத மக மகன்னு கொஞ்சுறதுக்கு இவரு சும்மா இருக்கலாம். ஆனா லாஸுக்கு இவரு மேல வேற எதோ கோவம் போல...கவின் கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு. இந்த கவின் பயலுக்கு சேரன் கூட லாஸ் பேசுறது பிடிக்கல போல...!
மீ : அவ்வளவுதானா?
மனைவி : ஆமா அவ்வளவுதான்
மீ : நீ சொன்னத வச்சு ஒண்ணுமே எழுத முடியாதே?
மனைவி : அப்ப எழுதாத....எனக்கென்ன?
மீ : நீ கரெக்டா நடந்தத எல்லாம் சொல்லிட்டியா?
மனைவி : இந்தா எந்திரி ! என்ன நக்கலா? என்னமோ எக்ஸாம்ல கேக்குற மாதிரி கேக்குற? காலையில எந்திருச்சு வேலை மெனக்கெட்டு நீ கேட்டியேன்னு உக்கந்து சொன்னா இப்ப என்னயவே ஓட்டுறியா?
மீ : அதுக்கில்லம்மா....ஒன்ணும் இல்லையேன்னு
மனைவி : ஒண்ணுமில்லன்னா கமல போயி கேளு...! இங்கப் பாரு கரெக்டா இன்னும் 15 நிமிஷத்துல மோட்டர ஆஃப் பண்ணிடு ! நான் டீ போட்டுட்டு வரேன்
மீ : அப்ப நீ இன்னும் டீ போடலயா?
மனைவி : உக்கார சொல்லி கதை கேட்டுட்டு டீ போடலயான்னா கேக்குற ?உனக்கு டீயே கிடையாது...! அப்பிடியே மதியானமும் வெளிய வாங்கிக்கோ இதுக்கு மேல என்னால அவதி அவதியா சமைக்க முடியாது!
மீ : (Mind Voice : எது நீ சொன்ன இந்த இன்ஃபர்மசனுக்கு லேட் ஆகி உன்னால எதுவும் பண்ண முடியாது.....ம்ம்ம்ம் சர்தான்)
மனைவி : அதுக்கு பேசாம ஹாட்ஸ்டார் டவுன்லோட் பண்ணு ! எனக்கும் யூஸ் ஆகும்ல
மீ : உனக்கு மட்டுந்தான் யூஸ் ஆகும் !
மனைவி : என்ன பொலம்பல்? மோட்டர ஆஃப் பண்ணியா? ஆஃப் பண்ணிட்டு வந்து டீயக் குடி......!
·         மக்களே ! என் நிலமை புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். சோ இவ்ளோதான் இன்னைக்கு.....!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)