Posts

Showing posts from September, 2019

பிக்பாஸ் 3 : நாள் 99 (30.09.19)

பிக்பாஸ் 3 நாள் 99 (30.09.19) “மரண மாஸ்” பாட்டு போட்டாரு பிக்பாஸ். “ஆடனுமா வேணாமா?”ன்னு ஒவ்வொருத்தரா யோசனையா எந்திரிக்க, பட்டுன்னு ஒரு 4 பேரு கதவத்தொறந்து உள்ள வந்து ஆடுனானுங்க. ஒரு காலத்துல சல்பேட்டாவோட சகதி டான்ஸ் ஒரு பக்கம், டங்கா மாரி பாட்டுக்கு அபியோட அபிநயங்கள், சேரன் சாரோட சிவாஜி குத்து, மீராவோட புல்தடுக்கி டான்ஸுன்னு ஆடுகளமா இருந்த எடம்டா இது ஆனா இன்னைக்கு ஆடுறதுக்கு ஆளு இல்லாம ஜோடி நம்பர் ஒன் செட்டுல இருந்து கடன் வாங்கி நாலு டான்ஸர்ஸ கூட்டிட்டு வந்து ஆடுற நிலமை ஆகிப்போச்சு. அப்பறம் அவங்களோட சேர்ந்து நம்ம ஆளுகளும் ஆட, சிறப்பா துவங்குச்சு காலை... அப்பறம் பாதாள உலகத்துக்குள்ள பச்சிலை புடுங்க போற மாதிரி ஷெரினோட அம்மாம் பெரிய பழைய கவுனுக்குள்ள சாண்டி போனாப்ல...! சாண்டிக்கு பொம்பள வேஷம் போட்டாங்க ஷெரின். அப்ப நம்ம பிக்பாஸ் டைமிங்கா “சந்தியா உங்க மைக்க மாட்டுங்க”ன்னு சொன்னாரு. சாண்டியோட பெண்பால் சந்தியாவாம். அப்பறம் அந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு சாண்டி “ராத்திரி நேரத்து பூஜையில், மேகம் கறுக்குது, வசீகரா”ன்னு பெண்கள் பாட்டுக்கு பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தாப்ல. என்ன பண்றதுன்னு த

பிக்பாஸ் 3 : நாள் 98 (29.09.19)

பிக்பாஸ் 3 நாள் 98 (29.09.19) அபூர்வ சகோதரர்கள் “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ” கெட்டப்ல இடுப்புல கட், கழுத்துல கட்டோட வந்தார் ஆண்டவர். “பெண்கள் நாட்டின் கண்கள். அவங்கள காப்பது கடமை. அவங்க பேர்ல இருக்குற பூமியையும் காப்பாத்தனும். ப்ளாஸ்டிக்க ஒழிங்கடா ப்ளடி ஃபூல்களா”ன்னு சொன்னார். “ப்ளாஸ்டிக்கா? ப்ளானட்டா?”ன்னா அது ப்ளானட்டுதான்னு பொங்குனார். அப்பறம் அவங்க ஆஃபீஸ்லயும் ப்ளாஸ்டிக் யூஸ் பண்றதில்லையாம். “இந்த பிக்பாஸ் வீட்லயும் நெறைய ப்ளாஸ்டிக் இருக்கு”ன்னார். லாஸ் மூஞ்சிய எதுவும் சொல்றாரோன்னு பாத்தா அதில்லையாம்   பாட்டில், கிச்சன் பொருட்கள்லாம் அப்பிடி இருக்காம். அடுத்த சீசன்ல ப்ளாஸ்டிக் வேணாம்னார். இன்னைக்கு மட்டும் ஆண்டவர் “நானும்” அப்பிடின்ற வார்த்தைய 1420 தடவையும் “நானும் கூட” அப்பிடின்ற வார்த்தைய 1215 தடவையும் “எனக்கும்” அப்பிடின்ற வார்த்தைய 1117 தடவையும் சொன்னார். நல்ல வேலை உள்ள யாரும் கர்ப்பமா இருக்கேன்னு சொல்லல இல்லேன்னா “நானும் கூட கர்ப்பமாக இருந்த காலத்தில்”னு ஆரம்பிச்சு இருப்பாரு போல.... “சரி வாங்க உள்ள போவோம்”னு உள்ள போனார். அங்க எல்லாரும் தயாரா இருக்க, “ஷெரின் லெட்டர்ல

பிக்பாஸ் 3 : நாள் 97 (28.09.19)

பிக்பாஸ் 3 நாள் 97 (28.09.19) அட்டகாசமான ஆடை வடிவமைப்போட ஆண்டவர் வந்தாரு. பிரிவின் துயரம் அது தரும் வருத்தம்னு அப்பிடியே அட்டானா ராகத்துல ஆரம்பிச்சு அம்சாவணி ராகத்த ஆலாபணையாக்கி காம்போதி ராகத்த தொடையில தட்டி ஆதிதாளம் போட்டு ஸ்ரீ பிரியா ராகத்துல முடிச்சார். “சரி வெள்ளிக்கிழமை இந்த ராமசாமிங்க என்ன பண்ணானுங்கன்னு ஒரு எட்டு பாத்துருவோம்”னு சொல்லிட்டு காமிச்சார். சல்மார் சைரனா கதற சம்பிரதாயத்துக்கு எல்லாரும் ஆட அப்டியே கட் பண்ணா மதியமாகிடுச்சு. புரோட்டாவும் கோழிக்கறியும் வந்துச்சு. தூங்கிட்டு இருந்த ஷெரின எழுப்பி 1”0 வினாடிகளில் புரோட்டாவை சாப்பிடுவது எப்பிடி?”ன்னு க்ளாஸ் எடுத்தாப்ல தர்ஷன். அப்பறம் லாஸுக்கு ஒரு கவர் வர, “ஆகா பிக்பாஸ் போட்டோ வந்திருச்சுடா வாங்கடா அவன் யாருன்னு பாத்துருவோம்”னு பிரிச்சா நைட்டு பிளாட்பாரத்துல தூங்குறவங்கள எரிச்சு விளையாண்ட சைக்கோ கொலைகாரன இருட்டுல தூரமா நின்னு எடுத்த மாதிரி ஒரு போட்டோ இருந்துச்சு. அதான் பிக்பாஸுன்னானுங்க. நம்பிட்டோம். அப்பறம் என்ன? ஸ்பான்சர் இண்டெகரேஷன் தான். பர்ஸ்டு ஏர்டெல். புதுசா வந்திருக்குற எக்ஸ்ட்ரீம் பாக்ஸ அறிமுகப்படுத்தி பட

பிக்பாஸ் 3 : நாள் 95 & 96 தொடர்ச்சி (27.09.19)

பிக்பாஸ் 3 நாள் 95 & 96 தொடர்ச்சி (27.09.19) “உங்களில் யார் அடுத்த அபிராமி?” போட்டி கண்டெஸ்டண்ட் மாதிரி அழுதுட்டு இருந்துச்சு லாஸ். “எனக்கு இங்க இருக்க முடியவில்லை. எனக்கு விளையாடப் பிடிக்கவில்லை. எனக்கு ஃபைனல்ஸ் போக ஆசையில்லை”ன்னு பையா பட கார்த்தி மாதிரி பாடிட்டு இருந்துச்சு. மீதி ஆட்கள் அத சுத்தி உக்காந்து ஆறுதல் சொல்லிட்டு இருந்தானுங்க. “என்னமோ போங்கடா கருகிக் கருகி என் காதல கெடுத்துட்டீங்க”ன்ற மோடுலயே உக்காந்திருந்துச்சு லாஸ். அப்பறம் சமையக்கட்டுல இருக்கும்போது “மையா மையா” பாட்டு போட்டதும் தர்ஷன் “ஐஸ்வர்யாதான் வருது”ன்னு கரெக்டா அடிச்சாப்ல. நீலக்கலர் காடாத்துணி கால் கிலோமீட்டர் வரைக்கும் நீண்ட அளவுக்கு ஒரு ட்ரெஸ்ஸு. காடாத்துணிய கட் பண்ணிட்டா அம்மணி போட்ருக்குறது 5ம் கிளாஸ் கவுனுதான். “அரே ஓ பிக்பாஸ்”னு வந்துச்சு நம்ம அரை வேக்காடு ஐஸ். வந்ததும் சாண்டி கூட ஒரு கிளப் டான்ஸ போட்டுச்சு. பின்ன எல்லாரையும் கட்டிபிடிச்சுட்டு. “நான் இந்தே தமில் நாட்டிக்கி வந்தி எனக்கி கிடச்சே நல்லே விஷயம் இந்தே பிக்பாஸ். அவரலே நா 5 படம் சைன் பண்ணியிருக்கே. இந்த லேகியத்தே சாப்ட்டதிலே இருந்து..

பிக்பாஸ் 3 : நாள் 94 & 95 தொடர்ச்சி (26.09.19)

பிக்பாஸ் 3 நாள் 94 & 95 தொடர்ச்சி (26.09.19) “தல நான் ரெடி”ன்னு ஹேண்ட்ஸ் அப்போட நின்னாப்ல கவின். “என்னடா கக்கூஸ் போக ரெடின்ற மாதிரி சொல்ற? அங்கயும் நான் இல்லாம போக மாட்டியே? என்னாச்சு உனக்கு ? என்னத்த சாப்ட்டு தொலஞ்ச?”ந்னு லாஸ் சாரமாரியா சரவெடி கேள்விகள கொட்ட, இந்தப் பக்கம் சாண்டியும் டென்ஷனாகி “என்ன காமெடி பண்றியா? இப்ப எதுக்குடா சம்பந்தமில்லாம வெளிய போறேன்ற?”ன்னு கதறிட்டு இருந்தாப்ல. கவினோ ரொம்பப் பொறுமையா “ஏண்டா கேட்டதும் கையத் தூக்க நான் என்ன கேணையனா? இந்த ஆப்ஷன் வரும்னு தெரியும். இந்த ஆப்ஷன யூஸ் பண்ணனும்னு ரொம்ப முன்னாடியே முடிவு பண்ணி வச்சிருந்தேன். அதான் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்”னு சொன்னான். ஷெரின், தர்ஷன் & முகின் பெருசா எதுவும் சோகப்படல. தர்ஷன் & முகின பொறுத்தவரை ஒரு ஆள் போட்டியில இருந்து அவுட் அவ்வளவுதான். ஷெரினுக்கு இவங்க கதைய இனிமே பாக்க வேண்டியது இல்லேன்னு ஒரு ரிலீஃப் ஆனா மேடம் தர்ஷன் கூட விளையாண்டுட்டு அத மெச்சூர்டு ஹேண்டில்னு சொல்லிக்குவாங்க. ஆனா சாண்டியும் லாஸும் ரொம்பவே கலங்குனாங்க. அப்பறம் பிக்பாஸ் இன்னொருதரம் “நெஜமாத்தான் சொல்றியா?”ன்னு கேக

பிக்பாஸ் 3 : நாள் 94 (25.09.19)

பிக்பாஸ் 3 நாள் 94 (25.09.19) அஸிஸ்டெண்ட் அட்மினுக்கும் அஸிஸ்டெண்ட் வைக்குற அளவுக்கு கொண்டு போயி விட்டுடுவானுங்க போல. பிக்பாஸ் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன் ஆகிட்டாப்ல. ஒரு காலத்துல அடிஷனல் ஷீட் வாங்கி கண்டெண்ட் எழுதுற அளவுக்கு கண்டெண்ட் குடுத்துட்டு இருந்த ஆளு இன்னைக்கு அவனுங்களோட சேர்ந்து பாட்டுப்பாடி வெளையாண்டுட்டு இருக்காப்ல. வெறித்தனம் பாட்டப் போட்டு எழுப்புனாப்ல. சாண்டி, லாஸ், முகின் ஆடுனானுங்க. அப்பறம் மன்னர் தர்ஷனுக்கு ஆங்கிலத்துல பள்ளி எழுச்சி பாடுனானுங்க. ஷெரின் குளிக்கப் போன நேரத்துல அது குப்பையில போட்ட லெட்டர எடுத்து முகின் உதவியோட ஒட்டுனான். அது தர்ஷனுக்கு எழுதுனதுதான்னு முடிவாச்சு. ஆனா தர்ஷனத் தவிர அத யாரும் படிக்கல. அப்பவே சாண்டி சொன்னாப்ல நீ படிச்சத சொல்லி மாட்டிக்காதன்னு ஆனா தர்ஷன் கேக்காம அந்த லெட்டெர்ல இருந்த ஒரு வார்த்தைய ஷெரின் கிட்ட சொல்லி மாட்டிக்கிட்டான். ஷெரின் உண்மையாவே ரொம்ப டென்ஷனாகிப்போச்சு. நான் கோவமாவும், வருத்தமாவும் இருக்கேன். ஆனா நான் அப்பிடி இல்ல. நானே உனக்கு குடுத்திருப்பேன். ஆனா என்னோட ப்ரைவசிய நீ கெடுத்துட்ட. நீ நல்லவந்தான். ஆனா நீ ரொம்ப கெட்

பிக்பாஸ் 3 : நாள் 93 (24.09.19)

பிக்பாஸ் 3 நாள் 93 (24.09.19) முன் குறிப்பு : இந்த கருமத்தை எழுத அட்மினும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் அஸிஸ்டெண்ட் அட்மின் எழுதிய பதிவு இது. “ஆல் டே ஜாலிடே”ன்னு குஷியா தொடங்குச்சு. இன்னைக்கும் ஷெரின் இவனுங்க கூட ஆடாம கக்கூஸ்ல தன்னந்தனியா தகதிமிதோம் ஆடிட்டு இருந்தாங்க. இன்னைக்கு செஃப் தர்ஷன். அவன் சமையல் செய்யுறதுக்கான பொருட்கள் வர தர்ஷன் “இன்னைக்கு எல்லாரும் விரதம்னு சொல்லிடு”ன்னு சொன்னது டைமிங். ஆனா இன்னைக்கு கொஞ்சம் உருப்படியா எதோ செஞ்சானுங்க. முடிஞ்சதும் தர்ஷும், ஷெரினும் சமையக்கட்டுல இருக்க, தர்ஷன் சிங்கள மொழியில அந்தப் பொண்ண கலாய்க்க அது “டேய் தமிழ் மொழியில எதாச்சும் சொன்னாலே எனக்கு புரியாது ஆனா இது என்ன மொழின்னே புரியலடா”ன்னு சொல்ல அங்க இருந்து லாஸ் “உன்னய சிங்கள மொழியில அசிங்க அசிங்கமா திட்டுறான்”னு சொல்லி மாட்டி விட்டுச்சு. இப்பிடியே இவனுங்க கடலைகள் தொடர்ந்துச்சு. அடுத்து ஒரு டாஸ்க். ரூம் முழுக்க பலூனா இருக்கும். அத கையால உடைக்காம உக்காந்து உடைச்சு அதுக்குள்ள இருக்குற பேர் கொண்ட சீட்ட கலெக்ட் பண்ணனும். யாரு பேரு கொண்ட சீட்டு அதிகமா சேகரிக்கப்படுதோ அவங்க வின்னு. தர்

பிக்பாஸ் 3 : நாள் 92 (23.09.19)

பிக்பாஸ் 3 நாள் 92 (23.09.19) “டசக்கு டசக்கு” பாட்ட போட்டு எழுப்புனார் பிக்பாஸ். முகின் மட்டும் கால் வலினால ஆடல, “பாய்ஸ் டீம்தான் ஃபைனல் போனும்”னு ஓப்பனா சொன்னதாலயோ என்னமோ ஷெரின் நாள் முழுக்கவே இவனுங்க கூட ஒட்டல. அதனால ஆடல. மத்த எல்லாரும் ஆடுனானுங்க. தோழர் கவினும் இன்னைக்கு ஆடி விழாவ சிறப்பிச்சது மகிழ்ச்சி. இதுக்கும் மேல பண்றதுக்கு ஒண்ணுமில்லாம நம்ம பிக்பாஸ் இவனுங்க நார்மலா பண்ற எல்லா வேலையையும் டாஸ்க் அல்லது க்ளையண்ட் இண்டெகரேஷனா மாத்திட்டு இருக்காப்ல. “இன்னைக்கு மதியத்துக்கு யாரும் சமைக்க வேணாம். சர்ப்ரைஸ் காத்திருக்கு”ன்னு சொன்னாப்ல பிக்பாஸ். அப்பறம் தர்ஷனும், சாண்டியும் ரெஸ்ட்லிங்க் விளையாண்டுட்டு இருந்தானுங்க. போற போக்கப் பாத்தா “சாண்டி மூக்கு நோண்டிட்டு இருந்தார், கவின் காது கொடஞ்சுட்டு இருந்தான்”னு எழுத வச்சுருவானுங்க போல..... “சரி வாங்க சும்மா உக்காந்திருக்குறதுக்கு நாமினேஷன் பண்ணலாம். இந்த ஷோவோட கடைசி நாமினேஷன் இது”ன்னு சொல்லிட்டு லாஸ உள்ளக் கூப்ட்டாப்ல பிக்பாஸ். ஆனா யாரு வெளிய போகனும்னு சொல்லாம யார காப்பாத்தனும்னு சொல்லனும். யாரு குறைவான வாக்குகளோ அவங்க நாமினேஷன்ல

பிக்பாஸ் 3 : நாள் 91 (22.09.19)

பிக்பாஸ் 3 நாள் 91 (22.09.19) ஓப்பனிங்க் சீனே லாஸ் கன்ஃபெஷன் ரூம்ல உக்காந்திருந்துச்சு....! “யப்பா பிக்பாஸு, மெயின் டோரத் தொறந்து விட்டேனா துணிமணிய எடுத்துக்கிட்டு தோ மினிட்ல போயிடுவேன்”னு சொல்ல, பிக்பாஸ் “என்னாச்சு லாஸ்? வீட்டுக்காரரோட பிரச்சனையா? நான் வேணும்னா பேசவா?”ன்னு கேக்க, “போதும்டா உங்க பொங்கலு....இதுக்கு மேல இங்க இருக்க முடியாது எவிக்ஷன்ல போயிட்டா சரி ஆனா போகலேன்னா நீயாச்சும் கதவத் தொறந்து விட்ரு”ன்னு சொன்னாங்க. ஆனா பிக்பாஸோ “அதெல்லாம் முடியாது ! நீ வந்தப்ப எப்பிடி ஜாலியா இருந்தியோ அப்பிடி ஜாலியா இரு”ன்னு சொல்லிட்டாப்ல. வெளிய வந்த லாஸ் கிட்ட கவின் “என்ன கேப் புக் பண்ணித் தரேன்னு சொல்லிட்டாரா?”ன்னு சர்காஸம் பண்ண, “இல்ல அவரு இங்கயே இருந்து சமாளின்னு சொல்லிட்டாரு”ன்னு சொன்னதும்தான் கவினுக்கு கண்ணு நல்லா தெரிய ஆரம்பிச்சுது. ஆண்டவர் வந்தாரு. “நீர் மேலாண்மைக்கு மட்டும் நீட் தேர்வு இருந்திருந்தா தமிழன் மொத மார்க் வாங்கி இருப்பான் அந்த அளவு நாம பெரிய ஆளு அதுல. ஆனா இப்ப கொஞ்சம் மறந்து போயிட்டோம் அத மறுபடியும் செய்ய ஆரம்பிச்சுட்டா நல்லா இருக்கும்”னு கருத்து சொல்லிட்டு உள்ள ப

பிக்பாஸ் 3 : நாள் 89 தொடர்ச்சி & 90ம் நாள் (21.09.19)

பிக்பாஸ் 3 நாள் 89 தொடர்ச்சி & 90ம் நாள் (21.09.19) ஆண்டவர் எண்ட்ரி....! வந்ததும் வராததுமா “தேச ஒற்றுமைக்கு முக்கிய காரணம் தமிழர்கள், முக்காத காரணம் வடக்கத்தியானுங்க”ன்னாரு. “எப்பவுமே கெத்து தமிழு...ஹிந்திய திணிக்க நெனச்சா நீ டுமீலுன்னு சொல்ல மொழிக்காவலர்கள் இருக்காங்க. தவிர கீழடியில தோண்டிப்பாத்ததுல மூத்த குடி நம்மதான்னு தெரியவருது. அப்ப நாகரீகம் சொல்லிக்குடுத்ததே நம்மதான் புரியுதா. நம்ம காவல் தெய்வங்கள் எல்லாம் வடக்கப்பாத்து இருக்கும் ஏன் தெரியுமா? வடக்க இருந்து யாரும் வந்து இம்சை பண்ணக் கூடாதுன்னுதான். இப்பவும் நம்ம ஆளுங்க வடக்கப் பாத்துதான் நிக்குறானுங்க. அவங்க பாத்துக்குவாங்க”ன்னு சொல்லிட்டு. “ரெண்டு நாளா சைக்கிள் ஓட்டிட்டு இருக்கனுங்க வாங்க என்னன்னு போயி பாக்கலாம்”னு சொல்லிட்டு வெள்ளிகிழமை நிகழ்வுகள காட்டுனாரு. ஏஞ்சலினா ஜோலி கெட்டப்புல இருந்த ஈமு கோழி லாஸு சைக்கிள் ஓட்டிட்டு இருந்தப்ப கேரியர்ல வச்சிருந்த அதோட துண்டு பின் டயர்ல மாட்டி சக்கரம் சுத்தல. சாண்டி கவின “சீக்கிரம் வா உன் சம்சாரத்துக்கு ஆபத்து”ன்னு சொன்னதும்....”நானிருக்கிறேன்”னு ஓடி வந்த கவின் ஷெரின் உதவியோட

பிக்பாஸ் 3 : நாள் 88 தொடர்ச்சி & 89ம் நாள் (20.09.19)

பிக்பாஸ் 3 நாள் 88 தொடர்ச்சி & 89ம் நாள் (20.09.19) அதே முட்டையப் பாத்துக்குற டாஸ்க்....! விடிய விடிய உக்காந்திருந்தானுங்க. லாஸும், கவினும் சைடுல பாய விரிச்சு உக்காந்து “ நம்ம முட்டைகள்ல   இருந்து வரப்போறா டைனோசர் குட்டிகளுக்கு என்ன பேரு வைக்கலாம்?”னு சீரியஸா பேசிட்டு இருக்க, இங்குட்டு தர்ஷன், முகின், சாண்டி 3 பேரும் உக்காந்து கேம் ப்ளான் போட்டுட்டு இருந்தானுங்க... சாண்டி வந்து லாஸ், கவின் முன்னாடி வந்து பேச்சுக்குடுக்க, தர்ஷன் கண்ணிமைக்கும் நேரத்துல லாஸ் முட்டைய தூக்கிப் போட்டு உடச்சுட்டான். “என்னடா முட்டைய ஒடச்சுப்புட்ட?”ன்னு லாஸ் ஆச்சர்யமா பாக்க, கவினோ “எல்லாம் அவனுங்க ப்ளான் பண்ணதுதான் அதனாலதான் சாண்டி வந்து நம்ம கிட்ட வந்து பேச்சுக் குடுத்து நம்மள திசை திருப்புனாப்டி”ன்னு சொன்னதும் லாஸ் அதிர்ச்சியாகிடுச்சு. “சாண்டி துரோகின்னு தெரியும் ஆனா இப்பிடி குழுத்துரோகியா இருப்பான்னு நெனைக்கல”ன்னு சுருக்குன்னு சொல்லிடுச்சு. இன்னைக்கு நடந்ததோட மொத்த விஷயமுமே சேரன் சார் சொன்ன “அவங்க ரெண்டு பேரும் அவங்கவங்கள பாத்துக்குறாங்க. அவங்க ரெண்டுபேரும் மோட்டிவேட் பண்ணிக்கிட்டு, ஒருத்தருக்

பிக்பாஸ் 3 : நாள் 87 தொடர்ச்சி & 88ம் நாள் (19.09.19)

பிக்பாஸ் 3 நாள் 87 தொடர்ச்சி & 88ம் நாள் (19.09.19) முட்டைய அடை காக்கும் டாஸ்க் தொடர்ந்துச்சு. கோழி மாதிரி முட்டை பக்கத்துலையே உக்காந்திருந்தானுங்க. ஷெரின் பிக்பாஸ் கிட்ட “அடேய் உனக்கு இன்னும் 10 நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள முடிச்சிரு இல்லேன்னா கேசமே போச்சுன்னு கேம விட்டுட்டு நான் பாட்டுக்கு போயி தூங்கிருவேன்”னு சொல்லிட்டு இருந்தாங்க. சொன்ன மாதிரி அடுத்த 10 வது நிமிஷத்துல தூங்கிட்டாங்க. உடனே சேரன், சாண்டி & தர்ஷன் ப்ளான் பண்ணி ஷெரின் முட்டைய ஒளிச்சு வச்சுடானுங்க. எந்திரிச்சுப் பாத்த ஷெரின் “எங்கடா இங்க இருந்த முட்டையக் காணோம்?”னு கேக்க “அதெல்லாம் காக்கா தூக்கிட்டுப் போயி கால்மணி நேரமாகிடுச்சு”ன்னு சொல்ல, “ரொம்ப சந்தோஷம்”னு உள்ள போயி தூங்கிட்டாங்க. அப்பறம் ஷெரின் முட்டையையும், சாண்டி முட்டையையும் கவினும், முகினும் உடச்சுட்டானுங்க. தற்காலிகமாக டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லாரும் போயி பொத்துன்னு பெட்டுல விழுந்தானுங்க. நாள் 88 “காக்கா முட்டை காக்கா முட்டை”ன்னு பாட்டு ! சிச்சுவேஷன் சாங்காமாம் ! காவலன் மாதிரி கால்கடுக்க நின்ன சேரன் சாருக்கு முதுகு லாக் ஆகிடுச்சு.

பிக்பாஸ் 3 : நாள் 87 (18.09.19)

பிக்பாஸ் 3 நாள் 87 (18.09.19) பேசாம வீடியோ லிங்க்க பேஸ்ட் பண்ணிட்டு போயிடலாம் போல. பிக்பாஸ் ஷோவ ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல போட்டுரலாம். மொத்தமும் பிசிக்கல் டாஸ்க். பூராம் டிக்கெட் டூ பினாலேல குறியா இருக்கானுங்க. அப்பவும் தோழர் கவின் லாஸ் மேல மட்டும் குறியா இருக்குறது தமிழகத்தில் பரவலா மழை பொழிவதற்கான அறிகுறி. “வரவா வரவா உன்ன துரத்தி வரவா”ன்னு அலாரம். ஏண்டா இதெல்லாம் காலையில எழுப்புறதுக்கு போடுற பாட்டாடா? முகின் மட்டும் லாஸ தர தரன்னு இழுத்துட்டு வந்து லான்ல ஆடிட்டு இருந்தான். சாண்டி மேன் கதைய கேரக்டர் மாத்தி இன்னைக்கும் சொல்லிட்டிருந்தாப்ல சாண்டி. எப்ப கேட்டாலும் அத மொத தடவ கேக்குறாப்லயே மெயின்டெயின் பண்ற சேரன் சார் சிறந்த கதை சொல்லி மட்டுமில்ல. சிறந்த கதை கேக்கியும் கூட. இன்னைக்கு டவுட்டெல்லாம் கேட்டாருன்னா பாருங்களேன். உள்ளயும் வந்து பசங்ககிட்ட அதே கதைய சொல்லிட்டு “இப்ப கவினுக்கு பவர் குடுப்போம்”னு சொல்லிட்டு இருக்கும்போதே “ நீ என்ன எழவ வேணும்னாலும் குடு ஆனா மைக்க சரியா மாட்டிட்டு குடு”ன்னு செவுட்டுலேயே குடுத்தார் பிக்பாஸ். பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னாதாலயோ என்னமோ முகின் இன்னை