பிக்பாஸ் 3 : நாள் 88 தொடர்ச்சி & 89ம் நாள் (20.09.19)
பிக்பாஸ் 3நாள் 88 தொடர்ச்சி & 89ம் நாள் (20.09.19)
அதே முட்டையப்
பாத்துக்குற டாஸ்க்....! விடிய விடிய உக்காந்திருந்தானுங்க. லாஸும், கவினும் சைடுல
பாய விரிச்சு உக்காந்து “ நம்ம முட்டைகள்ல இருந்து வரப்போறா டைனோசர் குட்டிகளுக்கு என்ன பேரு
வைக்கலாம்?”னு சீரியஸா பேசிட்டு இருக்க, இங்குட்டு தர்ஷன், முகின், சாண்டி 3 பேரும்
உக்காந்து கேம் ப்ளான் போட்டுட்டு இருந்தானுங்க...
சாண்டி வந்து
லாஸ், கவின் முன்னாடி வந்து பேச்சுக்குடுக்க, தர்ஷன் கண்ணிமைக்கும் நேரத்துல லாஸ் முட்டைய
தூக்கிப் போட்டு உடச்சுட்டான். “என்னடா முட்டைய ஒடச்சுப்புட்ட?”ன்னு லாஸ் ஆச்சர்யமா
பாக்க, கவினோ “எல்லாம் அவனுங்க ப்ளான் பண்ணதுதான் அதனாலதான் சாண்டி வந்து நம்ம கிட்ட
வந்து பேச்சுக் குடுத்து நம்மள திசை திருப்புனாப்டி”ன்னு சொன்னதும் லாஸ் அதிர்ச்சியாகிடுச்சு.
“சாண்டி துரோகின்னு தெரியும் ஆனா இப்பிடி குழுத்துரோகியா இருப்பான்னு நெனைக்கல”ன்னு
சுருக்குன்னு சொல்லிடுச்சு.
இன்னைக்கு நடந்ததோட
மொத்த விஷயமுமே சேரன் சார் சொன்ன “அவங்க ரெண்டு பேரும் அவங்கவங்கள பாத்துக்குறாங்க.
அவங்க ரெண்டுபேரும் மோட்டிவேட் பண்ணிக்கிட்டு, ஒருத்தருக்கொருத்தர் நல்லபடியா கேர்
எடுத்து பாத்துக்குறாங்க. பக்கத்துல யாரு போனாலும் பொம்மரேனியன் நாய் மாதிரி பிராண்ட
வரானுங்க. என்ன இன்னும் தனி சமையல் மட்டும் பண்ணிக்கல. ஏன்னா அந்த மூதேவிகளுக்கு சமைக்கத்
தெரியாது. மத்தபடி தனிக் குடித்தனந்தான்”ன்ற இந்த ஒன்லைனோட வெளிப்பாடுதான்.
இப்ப நேரடியா
கவின யாராச்சும் திட்டுனாலோ, குற்றம்சாட்டுனாலோ கவினுக்கு கோபமோ, சோகமோ வரதில்ல ஆனா
லாஸுக்கு பொறுக்காது. சிலம்ப எடுத்துக்கிட்டு நியாயம் கேக்க போயிடுது. இதுவே லாஸுக்கு
நடந்தா கவின் கட்டைய எடுத்துக்கிட்டு கிளம்பிடுறான்.
லாஸ் நடந்துக்குறதயெல்லாம்
வச்சு பாக்கும்போது அவங்க அப்பா ஒண்ணும் பெரிய டெரரோ இல்ல இந்தப் பொண்ணு அவரு பேச்சக்
கேட்டு நடக்குற ஆளோவெல்லம் கிடையாது போல. அன்னைக்குக் கூட அந்தாள 10 வருஷம் பாக்காததால
இருந்த பாசத்தால விட்டுடுச்சுன்னு நெனைக்கிறேன். இல்லேன்னா அன்னைக்கு அவரு கேட்ட “உன்ன
நான் அப்பிடியா வளர்த்தனன்?” அப்பிடின்ற கேள்விக்கு “அப்பிடி அப்பிடின்றியே அப்பிடின்னா
எப்பிடி?”ன்னு கவுண்டர் போட்டிருக்கும் போல.
கவினுக்கு சாண்டி
7வது இடம் குடுத்ததுக்கு “எங்க அத்தானுக்கு ஏண்டா 7 வது இடம் குடுத்த?”ன்னு நியாயம்
கேட்டுச்சு. சாண்டியோ “நான் ஏன் குடுத்தேன்னு எனக்கும் அவனுக்கும் தெரியும் நீ நிறுத்து”ன்னு
சொல்லிட்டாப்ல.
ஆக்ச்சுவலா
எல்லாரும் ஒண்ணா சிந்திச்சுப் பேசி போட்ட ப்ளான் இப்ப அவனுங்களுக்குள்ளயே வேலை செய்யுது
அவ்வளவுதான். இது இப்பிடிதான் முடியும். இது சாண்டி, முகின், தர்ஷனுக்கு புரியுது ஆனா
பார்ட் டைமா கேம் விளையாடுற கவினுக்கு இத ஏத்துக்க முடியல. “நான் கடைசியா இருக்கேன்னு
அதிர்ச்சியா இருக்கு”ன்றான் அடேய் சனியனே, அதுக்கு கொஞ்சமாச்சும் விளையாடனும்ல? லாஸுக்கு
மேட்சிங்க் பிளவுஸ் எடுத்துக் குடுக்குறதும், மேகி செஞ்சு தர்றதும், கக்கூஸுக்கு தண்ணி
மோந்து தரதுமா இருந்தா பாயிண்டு எங்க வரும்? லீ மெரிடியன் ஹோட்டல்ல இருந்து ஹவுஸ் கீப்பிங்க்
வேலைக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்தான் வரும்.
அதான் லாஸ்
முட்டை உடஞ்சிருச்சே அப்பறம் கவினுக்கு என்ன வேலை? கவின் தன் முட்டைய தானே உடச்சுட்டு
போயிட்டான்.
இதுல கவினோட
நடவடிக்கை ரொம்ப சிறப்பானது. புதுசா பிகர் கரெக்ட் பண்ணவனுக்கும், புதுசா கல்யாணம்
பண்ணவனுக்கும் மொத 6 மாசம் பெரிய பதட்டமான காலம். ஏன்னா பொண்ணுங்க இந்த 6 மாசத்துல
எதாச்சும் முடிவெடுத்து பையன விட்டுட்டுப் போக சான்ஸ் இருக்கு. அதுனால முடிஞ்சவரைக்கும்
அடுத்தவன அண்டவிடாம பாத்துக்குவானுங்க. மூஞ்சிய சுருக்க விட மாட்டானுங்க. நம்ம வீட்டு
ஆளுகளையே தூக்கிப் போட்டு மிதிப்பானுங்க. ஏண்டா நீயும் உன் ஆளும்/பொண்டாட்டியும் இப்பிடி
இருக்கீங்கன்னு கேட்டா ? டாக்டர் அம்பேத்கர் எழுதுன சட்டப்புத்தகம் மாதிரி இவனுங்க
இவனுங்க செயலுக்கு நியாயம் சொல்ல ஒரு மட்டப்புத்தகத்த வச்சிருப்பானுங்க. ரொம்ப நெருங்குன
நண்பர்கள்கிட்ட கூட ஒட்ட மாட்டானுங்க.
தோழர் கவின்
இதுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஆயிரம் பதட்டமும், பயமும் இருக்கட்டும். இங்க இப்பிடி
நடந்துக்க தேவையில்ல. அதுவும் வெளிய போகப்போற இந்த சில நாட்களுக்காவது சீரியஸா இல்லாம
ஜாலியாவாச்சும் விளையாண்டுட்டு போகலாம். ஷெரினும், தர்ஷனும் இதே தெள்ளவாரித்னத்ததான்
பண்றானுங்க ஆனா அதுங்களுக்கு இருக்குற நாசூக்கு கவின் ஜோடிகிட்ட கிடையாது.
ஒரு வேளை வெளிய
போனதும் மானாட மயிலாடல ரெண்டு பேரும் கண்டெஸ்டண்டா இருந்து. லாஸோட பெர்பார்மென்ஸ் நடந்துட்டு
இருக்கும்போது....
லாஸ் மையா மையா
பாட்டுக்கு ஆடிட்டு இருக்கும்போது காலு ஸ்லிப்பாகி சுளுக்கு பிடிச்சு விழ....
கவின் : மேடையில
இருந்து எகிறி குதிச்சபடி வந்து யோவ் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன பாட்டுயா போட்டிருக்க? கைய
கால உடச்சுக்குற அளவுக்கு ஆடுற மாதிரியா பாட்டுப் போடுவ?
ரம்பா : கவின்
விடுங்க சாதரண அடியாத்தான் இருக்கும்....
கவின் : யாருடா
அவ ? இங்க வா காலுல கட்டைய வச்சு சாத்துறேன் எப்பிடி இருக்கும்ன்னு பாரு...
கலா மாஸ்டர்
: டேய் கவின், அவ காலுல அடிபட்டு ஆட முடியாம சரிஞ்சு விழுந்திருக்கா நீ அழாம இருக்க?
அழுடா குமுறிக் குமுறி அழு....
கவின் : அப்புர
அப்புல நீதான் அப்பிடி அழப்போற....! டேய் லாஸுக்கு அடிபட்டது உங்களுக்கெல்லாம் ஒரு
செய்தி ஆனா எனக்கு வலிடா...
நமீதா : எல்லாம்
பிக்பாஸ் சகவாசம்....! நான் ஒரு ஆளு இருந்ததாலதான் அங்க இல்லாம இருந்துச்சு கக்கூஸ்
வாசம்....
கவின் : யாருடா
இங்க டான்ஸ் மாஸ்டர்? நான் என்னடா சொன்னேன் ? டப்பு டுப்பு டும்....டப்பு...டப்பு டுப்பு
டும் ஸ்டெப்புதானடா சொல்லிக்குடுக்க சொன்னேன் அப்பறம் ஏண்டா முட்டி போடுற ஸ்டெப்ப சொல்லிக்குடுத்த
சொங்கி....
கலா மஸ்டர்
: டேய், 5 ரூபா மூவ் வாங்கி தேச்சு விட்டா 5 நிமிஷத்துல சரி ஆகிடும்...நீ என்னாமோ சாதாரண
சுளுக்குக்கு சுப்ரமணியசாமி மாதிரி பேசிட்டு இருக்க?
கவின் : உங்களுக்குப்
புரியுதா நாங்க ஒரு ஜோன்ல இருக்கோம். ஒருத்தருக்கொருத்தர் மோட்டிவேட் பண்ணி. நாங்க
கேர் பண்ணிக்கிட்டு அது ஒரு மாதிரி ஓடிட்டு இருக்கு உங்களுக்கு தெரியுதா? அவளுக்கு
அடிபட்டா எனக்கு என்னமோ ஆவுது....! அத சரி பண்ண முடியுமான்னு தெரியல....ஆனா எனக்கு
ஒண்ணு இருக்கு அத இங்க பண்ண முடியல இருந்தாலும் நாங்க பேசி சரி பண்ணிக்குவோம்....
ரம்பா : சரி
கவின் அடுத்து உங்க பெர்பார்மென்ஸ் தான் ஆடுங்க....
கவின் : என்னது
நான் ஆடவா? லாஸே ஆட முடியாம போயிடுச்சு நான் மட்டும் எப்பிடி? இருங்க வரேன்...!
(கலா மாஸ்டர
ஓங்கி ஒரு எத்து எத்த...அது வெறிபுடிச்சு கவின் கால கடிச்சு வச்சுருச்சு.)
கவின் : இப்ப
என் காலும் போச்சு என்னால ஆட முடியாது...! என் லாஸ கூட்டிட்டுப்போன அதே வைத்தியர்கிட்ட
என்னயும் கூட்டிட்டுப் போயி அவ பக்கத்து பெட்டுல படுக்க வைங்க......
கலா மாஸ்டர்
: இருடா ரெண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்துல சமாதி கட்டி வைச்சு மானாட மயிலாட 187432
வது சீசன் ஃபைனல அங்க வந்து நடத்துறேன்......//
இதுல ரொம்ப
காயப்பட்டது சாண்டிதான். ரொம்ப உச்சத்துக்கு போயி கன்ஃபெஷன் ரூம் போயி ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு
அழுது “நான் வீட்டுக்குப் போறேன்”னு சொல்ற அளவு வருத்தப்பட்டாப்ல. அப்பறம் பிக்பாஸ்
அவன சிரிக்க வச்சு “கண்ணத்தொட, சிரி...இப்ப எப்பிடி இருக்கு மொகற.....கிறுக்குபயபுள்ள
போயி விளையாடு”ன்னு அனுப்பி வச்சாப்ல. சேரன் சாரும் “ஏண்டா நாந்தான் அன்னைக்கே சொன்னேனே
அவிங்க தெருப்பக்கம் யாரு போனாலும் புருஷனும் பொண்டாட்டியும் சரமாரியா தாக்குறானுங்கன்னு
கேட்டியா? இன்னைக்கு நீ வாங்கிட்ட. விடு பழகிடும்னு அவரு வாங்குன கடிகள காமிச்சாப்ல.
கவினும், சாண்டியும்
தனியா பேசுனப்ப கூட கவின் அதே மாடுலேஷன் தான் மெயிண்டெயின் பண்ணான். கடைசியா ஒண்ணும்
வேலைக்காகாம சாண்டி “சரி எப்பிடியோ கெட்டு நாசமாப் போ ஆனா என்னய மட்டும் தப்பா நெனச்சுடாத”ன்னு
சொல்லிட்டு விட்டுட்டாப்ல.
அப்பறம் ஒரு
ஃபன் டாஸ்க் ரெண்டு டீமா பிரிஞ்சு ஒரு டீம் கற்பனை உலகம்னு எதோ ஒன்னு எழுத அத அடுத்த டீம் ஆளுக வரஞ்சு காட்டி கரெக்டா சொல்லனும்.
இது என்ன எழவெடுத்த விளையாட்டுன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள கேமே முடிஞ்சு ஷெரின் டீம்
வின்னு. பரிசா பைவ் ஸ்டார் குடுத்தானுங்க.
அப்பறம் கோல்டன்
டிக்கெட்டோட கடைசி டாஸ்க். வெளிய ஸ்டாண்டு போட்ட சைக்கிள் எல்லாருக்கும் இருக்கும்
அத ஓட்டனும். ஆனா நாம ஓட்டுற சைக்கிள்ள ஒரு போட்டோ கவுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு
வேளை அது வேறொருத்தரோட போட்டோவா இருக்கலாம். கடைசியில அந்த கவுத்துன போட்டோல இருக்குற
ஆளுதான் அந்த சைக்கிள் ஓனர். சோ நாம ஓட்டி சம்பாதிச்ச பாயிண்டெல்லாம் அந்த ஓனருக்குத்தான்
போகும்.
காஸ்மிக் விதிப்படி
கவின் மொத ஆளா அவுட்டு. ஞாபகம் வருதேன்னு ஞாபகம் வருதே பாட்ட ஞாபகப்படுத்துற மாதிரி
அதே மோடுல மூஞ்சிய வச்சுக்கிட்டு சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்ச சேரன் சாரும் 2 வது மணி நேரத்துல
வெளிய வந்துட்டார். 5வது மணி நேரத்துல ஷெரின். கவின் எல்லாருக்கும் டீ போட்டு தரது,
கால் பிடிச்சு விடுறது, கக்கூஸ் கூட்டிட்டுப் போயி விடுறதுன்னு சமூக சேவை செஞ்சுட்டு
இருந்தான். அவன் இன்னும் லாஸுக்கு போயி வியர்வையை துடச்சு விடாம இருக்குறது “என்னதான்
ஆச்சு இந்த கவினுக்கு?”ன்னு நமக்கு பதட்டமா இருக்கு.
Comments
Post a Comment