பிக்பாஸ் 3 : நாள் 76 (07.09.19)


பிக்பாஸ் 3நாள் 76 (07.09.19)


இந்த அருண் பய இன்னைக்கும் டூட்டிக்கு வரல. டூ பி ஹான்ஸ்ட் பொறுப்பில்லாத அவன இந்தவாரம் நாமினேஷன் பண்றேன். அவன எவிக்ட் பண்ற பொறுப்ப மக்கள்கிட்டயே குடுக்குறேன். இன்னைக்கும் நாந்தான் எழுதப்போறேன் – அட்மின்.
ஆண்டவர் அதகளமா வந்தார். வந்ததும் வராததுமா இஸ்ரோக்கு வாழ்த்துகள் சொன்னாரு. கிண்டல் பண்றவங்க ஆண்டி – இண்டியன்னு சொன்னாரு. “அது என்ன புதூர் – மாட்டுத்தாவணி போற நல்லமணி மினி பஸ்னு நெனச்சீங்களா? மூனுக்கு போற ராக்கெட்டுடா ராஸ்கல்ஸ்”னு புரிய வச்சாரு. அப்பறம் அவரு டிவிட்டர்ல போட வேண்டியத புரியாத மாதிரி சொல்லிட்டு “சரி நிலாவுல இருந்து பூமிக்கு வருவோம். பூமியில எழவு பிக்பாஸ் வீட்டுக்கு வருவோம். வர வர வனிதா அக்கப்போறெல்லாம் அமெரிக்கா லெவெலுக்கு இருக்கு. அழுகை, சிரிப்பு, சிறுநீர் இதுக்கெல்லாம் கூட தடை போட்டுட்டு இருக்கு. அன்னைக்கு ஒரு குருவி கம்பில வந்து உக்காந்ததுக்கு அதுகிட்ட இனிமே ரெண்டு வாட்டிக்கு மேல கத்தக்குட்டாதுன்னு மெரட்டியிருக்கு. போயி என்னன்னு கேப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை இந்த சனி சாரி வனி என்ன கந்தரகோலம் பண்ணி வச்சிருக்குன்னு பாப்போம்”னு சொல்லிட்டு உள்ள போனாரு.
76ம் நாள்
சல்பேட்டா உள்ள இருக்குற அந்த பொற்காலத்த புகை போட்டு மழுங்கடிக்கிற பிக்பாஸ சந்திராயன் கூட கட்டி வச்சு அனுப்புனாதான் என்ன? அலாரத்துக்கு தலைவி அகட்டி போடுற ஆட்டத்த அப்ரூட்டா கட் பண்ணிட்டான் கட்டைல போற பிக்பாஸ்.
ஓப்போ கம்பெனிக்கு இண்டெகரேஷன். செல்ஃப் விடீயோ எடுத்து மெசேஜ் சொன்னாங்க.
அப்பறம் ஆண்டவர் வந்து அகம் வழியா அகம் போனாரு. “தங்கி, தின்னு, பொரணி பேசுனதெல்லாம் போதும் வெளிய வாங்கடா வெளாங்காதவனுங்களா”ன்னு சல்பேட்டா, நைனா, அபி 3 பேரையும் வெளிய கூப்ட்டாரு. வெளிய வந்ததும் உள்ள இருக்குறவனுங்ககிட்ட ஆரம்பிச்சாரு. “ஓப்பன் நாமினேஷன்ல சாண்டி ஏன் அழுத?”ன்னு கேக்க, “சொன்ன காரணம் கேம் ஸ்டார்டஜி ஆனா அழுகை உண்மை”ன்னு சொன்னாப்ல. “சரி அவன் அழுததுக்கு ஏன் தடை போட்ட தகரக் குண்டாவே?”ன்னு வனிகிட்ட கேசுவலா ஆரம்பிச்சாரு. அப்ப ஆரம்பிச்சவருதான் நின்னு வெளையாண்டாரு.
கேம்ப் ஃபயர் போட்டு கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும், கமெண்டுக்கும் வாம்பைர் மூஞ்சி சீஸ் ஃபயர் அடிக்க வேண்டிய அளவுக்கு பத்திக்கிட்டு எரிஞ்சுச்சு.
ஷெரின் அஃபயர் பஞ்சாயத்துல ஒரு கட்டத்துல அது சொன்னதுல எந்த தப்பும் இல்லன்னு சொன்னப்ப தர்ஷனும், ஷெரினும் அந்த இடத்துலயே எதிர்த்து பேச ஆண்டவர் “இதுக்கு மேல இதப் பத்தி பேசி அசிங்கப்படுத்தாத விட்ரு”ன்னு சொன்னார். “அப்ப சரி விடவேமாட்டேன்”னு ஆண்டவர் உள்ள போனதும் ஆட ஆரம்பிச்சுச்சு. ரொம்ப முத்திப்போயி கவினும், லாஸும் பண்றது காவியக் காதல் ஆனா தர்ஷன் – ஷெரின் பண்றது காஜிக் காதல்னு ரெஜிஸ்டர் பண்ணிடுச்சு. சோ சேட்.
ஆண்டவர் சல்பேட்டாவ மேடைக்கு “வாடி ராசாத்தி”னு கூப்ட்டாரு. மேல வந்த சாக்ஷிகிட்ட “ஆமா உன்னய உள்ள போயி காபி போட்டுக்குடு, டீ போட்டுக்குடுன்னு அனுப்புனா நீ ஏன் வனி பேச்சக் கேட்டு ஷெரின் கிட்ட தர்ஷன தப்பா போட்டுக்குடுத்த?”ன்னு கேக்க சல்பேட்டா “பாவிகளா காமிச்சுட்டானுங்களா? எழவெடுத்தவனுங்க எப்பன்னு காத்திட்டு இருப்பானுங்க போல”ன்னு பொலம்பிக்கிட்டே “இல்ல நான் அப்பிடி சொன்னது இப்பிடி ஆயிடுச்சு”ன்னு ஒளறுச்சு.
ஆண்டவர் : அது சரி ஏன் மக்கள நாயின்னு சொன்ன?
சல்பேட்டா : (ஆத்தீ இது வேறயா?) அப்பிடியா சொன்னேன்? ஆங்கிலத்துல யோசிச்சு தமிழ்ல சொன்னப்போ அப்பிடி ஆகியிருக்கும்
ஆண்டவர் : நீ ரெண்டுலையுமே சொன்னியே....ரெண்டுலையும் நாயின்னுதான் சொன்ன
சல்பேட்டா : நான் ஒரு இண்டியன் சிட்டிசன்...
ஆண்டவர் : அப்ப வனிதால்லாம் என்ன ஆப்பிரிக்க காட்டு சிட்டிசனா? அதுக்கு இது பதில் இல்லையே?
சல்பேட்டா : மக்கள போயி அப்பிடி சொல்லுவேனா? நம்மா என்ன சொல்றோம்னா நம்மள மக்கள் பாத்ட்டு இருக்காங்க. அவங்களுக்கு நாம என்ன சொல்னும் தெரியுது நமக்கு. சில கேர்ள்ஸ் மெசேஜ் மீ. ஐ மெசேஜ் பாய்ஸ்....அய்யோ ரொம்ப ரோல் ஆகுதே....! ஆண்டவரே விட்டுருங்க ப்ளீஸ்...//
சல்பேட்டா கிட்ட “இதுக்கு மேல இப்பிடியே பேசிட்டு திரியாத....! இது நல்லதுக்கு இல்ல”ன்னு சொன்னார். அப்பறாம் அபி & நைனாவ கூப்ட்டு “சொல்லுங்கடா உங்க கன்றாவி கருத்துகள”ன்னு சொன்னார். அபி எல்லாரையும் பத்தி நல்லா சொல்லி ஷெரின் கிட்ட “பேபி அண்டா சொல்றத நம்பாத. இங்க உன்னய யாரும் தப்பா நெனைக்கல. நீ ஜாலியா இரு”ன்னு சொன்னாங்க. நைனா வழக்கம்போல வடைய சுட்டாப்ல.
மத்த பஞ்சாயத்த நாளைக்கு பேசுவோம்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
ஏன் ஆண்டவரே..... அருணும், நானும் எழுத வேண்டியதயெல்லாம் நீங்களே பேசிட்டா அப்பறம் நாங்க என்ன பண்றது?


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)