பிக்பாஸ் 3 : நாள் 77 (08.09.19)
பிக்பாஸ் 3நாள் 77 (08.09.19)
பெட்ரூம்ல வனி,
சேரன், தர்ஷ் & சாண்டி....
சேரன் : ஏண்டா
இந்த கக்கூஸ்ல தண்ணி வரல, டாஸ்க்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, வனிதா மூஞ்சிய பாக்க முடியலன்னு
எவ்வளவோ பிரச்சனை இருக்கு. ஆனா அத விட்டுட்டு எப்பப் பாத்தாலும் இவன் அவளா லவ் பண்றான்,
அவ இவன லவ் பண்றா, ரெண்டு பேரும் சேர்ந்து என்னய இம்சை பண்றானுங்கன்னு எப்பப் பாத்தாலும்
இந்தக் காதல் பஞ்சாயத்துதானா? என்னயெல்லாம் விட்டா பக்கம் பக்கமா புகார் சொல்லுவேன்
ஆனா எங்க பேச விடுறீங்க?
தர்ஷன் : அன்னைக்கு
இது காதலே இல்லேன்னீங்க இப்ப காதல் பிரச்சனைன்றீங்க?
சேரன் : யாரு
தர்ஷனா? சாரிப்பா இது மைண்ட் வாய்ஸ் கண்டுக்காத
வனி : இருக்குறதாலதான
பேசுறோம்....! இவனுங்க பாத்திரம் கழுவாம பாலுமகேந்திரா படம் மாதிரி சட்டையக் கழட்டி
வச்சுட்டு, உக்காந்து லவ் பண்ணுவானுங்க. நாங்க அத பட்டும் படாமையும் எடுத்து சொன்னா
எங்களயே எடுத்தெறிஞ்சு பேசுவானுங்களாம். நல்லா இருக்குடா டேய்.....
அப்பிடியே கட்
பண்ணா கக்கூஸ்ல மறுபடியும் சேரன் & வனி....
சேரன் : கமல்
சார் தான் வேலையப் பாருங்க இதப் பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டாருல விடேன்
வனி : (இத விட்டா
எனக்கு வேற வேலை என்ன இருக்கு?) அந்தாளு கிடக்காரு அவருக்கென்ன என்னயல்ல நாமினேட் பண்ணி
வெளிய அனுப்புவாங்க...! அப்பிடியே குதிச்சிக்குட்டு கத்துனா அது உண்மையான நட்பாமா?
நானெல்லாம் குதிச்சா என்ன ஆகும்னு தெரியும்ல....
சேரன் : (கொல்லைக்கு
போக வந்த எடத்துல இப்பிடி வாயக் குடுத்து தொல்லையில மாட்டிக்கிட்டேன்) நீ இன்னும் நல்லா
சிறப்பா பண்ணுமா....!
“கடுப்பேத்துறார்
மை லார்டு”ன்னு உள்ள வந்த சேரன தர்ஷனும் சாண்டியும் “என்ன சேரன் சார், காதுல சேம் ப்ளட்டா?ன்னு
கட்டையக் குடுக்க “காதுலயா? கழுத்தப் பாருடா....கடிச்சு கொதறிட்டா”ன்னு டைமிங் அடிச்சார்.
80’s படங்களின்
டான் கெட்டப்ல ஆண்டவர் அரைவல். எடுத்ததும் ஆசிரியர்கள பத்தி கேப் விடாம பேசுனார். இப்ப
இருக்குற பாடத்திட்டம் மாறனும். மனிதர்களப் பத்தி சொல்லிக்குடுக்கனும் அதனால பிக்பாஸ
பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்துல சேக்கனும்னு கேட்டுக்கிட்டார்.
ஒரு வேளை சேர்த்துட்டானுங்கன்னா
கொஸ்டீன் பேப்பர் எப்பிடி இருக்கும்?
5 மார்க்
# அபிக்கும்
ஜெயிலுக்கும் உள்ள உறவு பற்றி குறிப்பு வரைக
# கவின் கக்கூஸ்ல
இல்லாத நாட்கள் எத்தனை?
# சேரன் நாமினேட்
செய்யப்பட்ட என்ணிக்கை என்ன?
10 மார்க்
# மோகன் கட்டிப்பிடிக்காத
ஆட்கள் யார் யார்?
# சல்பேட்டாவின்
நடன முறை எந்த சாஸ்திரியத்தை சேர்ந்தது?
# முகினால ஏற்பட்ட
ஃபர்னிச்சரின் சேதாரங்கள் எவ்வளவு?
1000 மார்க்
# வனிதா வாயின்
நீளாம், அகலம் மற்றும் விட்டம் என்ன?
# வனிதாவின்
“டூ பி ஹானஸ்ட்” என்ற பதத்தை உங்களுக்கு கூரிருந்தால் கூராய்க... //
“சரி வாங்க
சொல்லாம கொள்ளாம உள்ளார போவோம்”னு சொல்லிட்டு அகத்துக்குள்ள அமைதியா போனா அங்க சாண்டி
சைடு போஸ்ல தூங்கிட்டு இருந்தாப்ல. ஸ்க்ரீன்ல இருந்து ஆண்டவர் “சாண்டி”ன்னு குரல் குடுக்க
வாரி சுருட்டிட்டு எந்திரிச்சாப்ல. அவர ரங்கனாத சாண்டின்னு கலாச்சுட்டு காலர் ஆஃப்
த வீக்குக்கு வந்தார்
கேள்வி :
75 நாளா தின்னு, தூங்கி, காதல்கள் பண்ணியே தவிர கேப்டனாகுறதுக்கும், பெஸ்ட் பெர்ஃபார்மர்
வாங்குறரதுக்கும் எதாச்சும் பண்ணியா?
கவின் : அட
ஆமால்ல...! நமக்கு மத்த வேலையே சரியா இருந்ததால இத விட்டேன். நல்ல வேலை நியாபகப் படுத்திட்டீங்க....!
“ஆமா நளையில
இருந்து அப்பிடியே அறுத்துத் தள்ளிருவாரு”ன்னு ஆண்டவர் மைண்ட்ல சொல்லிட்டிருப்பார்.
சல்பேட்டாவ
மேல வான்னு கூப்ட்டார் ஆண்டவர்....
சல்பேட்டா
: (ஆத்தீ வலைய விரிக்கிறானுங்க. மனப்பாடம் பண்ணத அப்பிடியே ஒப்பிச்சுட்டு வந்துரனும்)
என் பேயர் சல்பேட்டா. நான் ஒரு கோல்டு மெடல் வாங்கிய பெண். இண்டியன் சிட்டிசன்.
ஆண்டவர் : என்ன
சல்பேட்டா என்ன முனுமுனுப்பு? பெரிய சல்பேட்டா வரலயா?
சல்பேட்டா
: அய்யா சாமி...! எதயாச்சும் புரியாத மாதிரி கேட்டு மூத்தர சந்துல மாட்டி விட்ராதீங்க.
இனிமே நாயக் கூட நாய்னு சொல்லமாட்டேன் சாமி
ஆண்டவர் : அதெல்லாம்
அப்பறம் பாக்கலாம் மொத உள்ள நடந்ததப் பத்தி சொல்லு
சல்பேட்டா
: என்னத்த சொல்றது? மொத இருந்த 50 நாளும் கவினோட கக்கூஸ்லயே போயிடுச்சு. சரி இந்த வாரமாச்சும்
போயி நல்லது பண்ணலாம்னு பாத்தா தப்பு தப்பா தமிழ் பேசி தமிழ்நாடே கொந்தளிக்குற அளவு
ஆகிப்போச்சு.
ஆண்டவர் : இடுக்கண்
வகுங்கால் நகுக சல்பேட்டா
சல்பேட்டா :
கன்ஃபார்மா இது எனக்குப் போடுற ஸ்கெட்சுதான்னு தெரியுது....! ஆள விடுங்க ஆண்டவரே...!
இந்தாடா கவினு “குடிகாரன் சகவாசம் குல நாசம்....ஆனா கவினோட சகவாசம் சர்வ நாசம் !” என்னய
கழட்டிவிட்டதுக்கு நன்றி....! ஆண்டவரே அப்டியே உத்தரவு வாங்கிக்கிறேன். //
ஆண்டவர் : சரி
லாஸு நைனா ஆசையா குடுத்த பச்சோந்தி அவார்ட ஆங்காரமா வீசிட்டு வந்துட்டியே ? பாவம் நைனா
நச நசத்து போயிட்டான்....! என்னடா நைனா...
லாஸ் : அவன்
இஷ்ட கேசத்துக்கு குடுத்தா போயி வாங்கனுமா என்ன?
ஆண்டவர் : வெளிய
வந்து பாக்கும்போது இத விட அசிங்கமா எதுனா சொன்னா என்ன பண்ணுவ? அதெல்லாம் அவ்ளோ கோவப்படக்
கூடாது...என்னடா நைனா....
வனிதா : அடுத்து
என்னயதான் சொல்லுவீங்கன்னு தெரியும். நானும் வாங்கல. கழுதப்புலிய குடுக்குறானுங்க.
ஒண்ணு கழுதைன்னு சொல்லனும் இல்ல புலின்னு சொல்லனும் இது என்ன கழுதைப்புலி? கேட்டா கோண
புத்தியாம் அத இந்த கோணவாயி சல்பேட்டா சொல்லுது....
ஆண்டவர் : உனக்கு
குடுத்து கழுதைப்புலிய கேவலப்படுத்துனது எனக்கும் சங்கடமாத்தான் இருக்கு. அது கோணபுத்தியா
இருக்குறது அதோட லஃப் ஸ்டைல்....இப்போ உனக்கு அத குடுத்துருக்கானுங்கன்னா என்ன அர்த்தம்?
கோணபுத்தி, லஃப் ஸ்டைல் எதாச்சும் புரியுதா? ம்ம்ம்ம்...கேசுவலா எடுத்துக்கோ! என்னடா
நைனா.....
வனிதா : இருடா
நைனா வெளிய வந்து இருக்கு உனக்கு....
ஆண்டவர் : அப்பறம்
நைனா....வயசுக்கு மரியாதை தரலேன்னு சங்கடப்பட்ட போல?
மோகன் : ஆமா
ஆண்டவரே...!
ஆண்டவர் : கேட்டு
வாங்க அது என்ன கேரட்டா? அதெல்லாம் தானா தர மாதிரி நடந்துக்கனும். அது உனக்கு வராது...!
வயசுக்கெல்லாம் மரியாதை தரனும்னா கடல் ஆமைக்கு தான் எல்லாரும் தரனும். எறா மாதிரி இருந்துக்கிட்டு
அவனுங்க கிட்ட எகுறுர....! அதெல்லம் தப்பு ! என்னடா நைனா....
சல்பேட்டா
: (ஆத்தீ நான் வேற நைனாவுக்கு சப்போர்ட் பண்ணேன் நம்மள கட்டங்கட்டுவானுங்க. நாமளே கேசுவலா
ஆரம்பிப்போம்) ஆண்டவரே நைனாவுக்கு நானும் சப்போர்ட் பண்ணேன் அது சரியா ? தவறா?
ஆண்டவர் : நைனா
ஒரு ஆள்னு அவன் பக்கத்துல நின்னதே தப்பு. இதுல சப்போர்ட் பண்ணது மகா பாவம். தூக்கி
போட்டுச்சுன்னா அது அதோட உரிமை....! கண்ட ஆளுகளையெல்லாம் கண்டாமேனிக்கு கதறக் கதறக்
கட்டிப்பிடிச்சு கேப்மாரித்தனம் பண்ணிட்டு, இப்ப வந்து மஞ்சப்பை நெறைய மரியாதை வேணும்னா
எப்பிடி கெடைக்கும்? என்னடா நைனா.....//
பெஸ்ட் பெர்ஃபார்மர்
விஷயத்துக்கு வந்து “யாரு பெஸ்ட் பெர்ஃபார்மர் முடிவு பண்ணா?”ன்னு கேக்க சேரனோ “4 பேரும்
முடிவு பண்ணோம்”னு சொன்னத தர்ஷனும், ஷெரினும் மறுத்தாங்க. ஆனா சேரன் வனி பக்கம் இருந்த
நியாயத்த நியாயமா விளக்குனாரு.
அப்பறம் எவிகஷன்.
தன்னம்பிக்கையோட பேசுன முகினையும், அழகா பயந்த ஷெரினையும் காப்பாற்றப்பட்டதா சொன்னார்
ஆண்டவர்.
கவின் காப்பாறப்பட்டதா
சொன்னதும் சவக்களை வந்த தவக்களை மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டான்.
இப்ப லாஸ்
& சேரன். “வந்த வேலை முடிஞ்சது. கிடைக்க வேண்டியது கெடச்சது”ன்னு சேரன் சொன்னதும்
“அப்ப வாங்க வெளிய”ன்னு சொல்லி கூப்புட்டார் ஆண்டவர்.
வீட்ல எல்லாருக்கும்
அதிர்ச்சி...
வனி : என்ன
நடக்குது இங்க?
சேரன் : வெளிய
போயித்தான ஆகனும்!
வனி : அது தெரியுது...ஆனா
என்ன நடக்குது இங்க?
சேரன் : எதாச்சும்
தப்பு பண்ணி இருப்பேன் அதான்
வனி : அது புரியுது....ஆனா
என்ன நடக்குது இங்க?
சேரன் : ஓட்டு
போட்டுருக்க மாட்டானுங்க....
வனி : அது தெரியுது...ஆனா
என்ன நடக்குது இங்க?
சேரன் : (இவ
நம்மள அழ வைக்காம விட மாட்டா போலயே....) சரி விடு...
வனி : அது சரி
ஆனா என்ன நடக்குது இங்க? நீதிக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் ஸ்பெல்லிங் தெரியுமா
இந்த மக்களுக்கு? உங்களுக்கே இந்த நிலமைன்னா ஜாதகப்படி என் பேரே நேர்மைதான். எனக்கு
என்ன நிலமை? மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும். மக்கள் இனிமே ஓட்டுப் போடக்கூடாது.
நமக்கான ஓட்ட நாமளே போட்டுக்குற மாதிரி ஒரு சிஸ்டம் வேணும்.
சேரன் : (பாத்தியா
இவ பாட்ட ! யாரு இருந்தா நல்லா இருக்கும்?னு கேட்டதுக்கு லாஸ்னு சொல்லி 4 நிமிஷம் ஆகல
இப்ப வந்து நீதி, நியாயம்னு நின்னுகோரி பாடுறா....) சரி ஷெரினும் நீயும் அடிச்சுக்காதீங்க
கையக் குடுங்க, கட்டிப்பிடிங்க.
ஷெரின் உண்மையாவே
கலங்க. லாஸ் ஒரு கிலோ மீட்டர்ருக்கு வாய இழுத்து மவுத் ஆர்கன் வாசிச்சுச்சு. அழுகைன்னா
அழுகை அப்பிடி ஒரு அழுகை. இதப்பாத்து வனிதாவும் அழுக....என்ன எழவு கண்ணுல இருந்து தண்ணிதான்
வரல. கழ்தைப்புலி அப்பிடித்தான் அழும் போல.
பசங்ககிட்ட
அவரு மன்னிப்பு கேக்க, பசங்க அவருகிட்ட மன்னிப்பு கேக்க. ரொம்ப நெழ்ந்துருச்சு நம்மளுக்கு.
ஸ்டோர் ரூம்ல
ஃபோன வைக்க போன இடத்துல வனி கேமராவ பாத்து “ டேய் பதறுகளா என்ன லந்தா? எதோ ஓட்டுப்
போடாம சேரன வெளிய தொரத்திட்டீங்க....! எனக்கு ஓட்டுப் போடாதவன் அம்மா சிலுக்குடா”ன்னு
சாபம் விட்டுட்டு வந்துச்சு.
வெளிய வந்த
சேரன் தெளிவா இருந்தார். நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் இது அதனால நிம்மதியா வெளிய போறேன்னு
சொன்னார். சரி குறும்படம் பாருங்கன்னு சொல்றதுக்குள்ள பிக்பாஸ் அவர சீக்ரெட் ரூம் போக
சொன்னார். சீக்ரெட் ரூம்ல சேரன். வீட்டுக்குள்ள வனிதா என்கிற மோரன். பாப்போம் என்னாகுதுன்னு.
Comments
Post a Comment