பிக்பாஸ் 3 : நாள் 73 தொடர்ச்சி & 74 (05.09.19)


பிக்பாஸ் 3நாள் 73 தொடர்ச்சி & 74 (05.09.19)


73ம் நாள்
ஷெரின்& தர்ஷன் வெளிய லான்ல....
ஷெரின் : என்னடா தம்பிள்ஸ் தர்ஷா நல்லா சாப்ட்டியா?
தர்ஷ் : சாப்ட்டேன்....! ஊக்கு இருந்தா குடு பல்லுல என்னமோ சிக்கி இருக்கு....
ஷெரின் : ஊக்கு மாட்டிக்க நான் என்ன உஜாலா சேலையா கட்டி இருக்கேன்....குறும்பு....! தர்ஷா....! இந்த பாண்டா என்னன்னே தெரியல 2, 3 நாளாவே சைசா ஜாடை காட்டி பேசுறா..
தர்ஷ் : நீ பொய் சொல்ற...அவ ஜாடையா என்னைக்கு பேசி இருக்கா?
ஷெரின் : அதுவும் சரிதான்....! பொழுதுக்கும் உன்னையும் என்னையும் சேத்து வச்சு பேசிட்டே இருக்கா
தர்ஷ் : அவ இன்னும் சேரனையும், பிக்பாஸையும் மட்டுந்தான் சேத்து வச்சு பேசல....
ஷெரின் : இங்க பாரு நீ யாருன்னு எனக்கு தெரியும்...நான் யாருன்னு உனக்கு தெரியும் ! நாம ரெண்டு பேரும் எப்பிடி பழகுறோம்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும் !
தர்ஷ் : ஆமா ஆமா ! நான் என்னமோ உன்னய யூஸ் பன்ணி கப்ப கொண்டு போற மாதிரி ஒரு தடவ பாண்டா பேசுச்சு, ‘நைட்டு 2 மணி வரைக்கும் பேசுறது எந்த ஊரு பிரன்ஷிப்டா?’ன்னு கமல் சார் கேட்டப்போ மாட்டுனது என்னமோ கவின் தான். ஆனா அவனுக்கு பக்கத்து சேர்ல படுத்திருந்தது நாமதான். இதெல்லாம் கொஞ்சம் எனக்கும் உறுத்துச்சு. உன் பேரு கெடக் கூடாதுன்னுதான் பாக்குறேன்.
ஷெரின் : புவர் பாய்...! அதெல்லாம் யோசிக்காத நீயும் நானும் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடுற பெஸ்ட் பிரண்ட்ஸ் அவ்ளோதான் ஓகேவா? அந்த சாக்லேட் பேப்பர விட்ரு...சப்பி சப்பி அதுல கலரே போயிடுச்சு....சாக்கி வேணும்னா எடுத்துட்டு வந்து தரேன்....//
74ம் நாள்
“தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு”ன்னு ஷெரின் மூடுக்கேத்த பாட்ட முடுக்கி விட்டாரு பிக்பாஸ்.  இதுக்கு “வலிப்பு வந்த ஒத்தக்கால் வெள்ளை கொக்கு + தரையில தவ்வும் குருட்டுத் தவளை”  இந்த ரெண்டு காம்பினேஷனையும் மிக்ஸ் பன்ணி சல்பேட்டா அறிமுகப்படுத்துன டான்ஸ் ஸ்டைல் “சல்பேட்டாபரணம்”னு பிற்கால சந்ததியினர் கத்துக்கக் கூடிய கலையா மாறும். மார்க் மை வேர்ட்ஸ்!
சமையக்கட்டுல வனி, சேரன், ஷெரின், நைனா எல்லாரும் குழுமி இருக்க...
வனி : வெசெல் வாஷிங்க் பண்ற வெங்காயம் யாரு? வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமா?
சேரன் : லாஸா இருக்கலாம்னு நெனைக்கிறேன்..
தர்ஷன் : இல்லையே அவ கக்கூஸ் க்ளீனிங்...
சேரன் : அப்ப நான் லாஸா இருக்கலாம்னு நெனைக்கல
வனி : அவள கேப்டன் நான் வர சொன்னேன்னு சொல்லுங்க...
லாஸ் உள்ள வர...
லாஸ் : என்னய குக்கிங் டீம்ல இருந்து வெசெல் வாஷிங் மாத்திட்டீங்களா?
வனி : பண்ண வேண்டியவங்க ஒழுங்கா பண்ணா நாங்க ஏன் மாத்துறோம்
ஷெரின் : டாஸ்க்கு பண்றதா ? இல்ல டப்பா டப்பாவா சமச்சுக் கொட்டுறதா?
வனி : டாஸ்க்கு பண்ணிகிட்டே நாங்க சமைக்கலையா? நீ மட்டும் என்ன ஓவியம்?
ஷெரின் : உனக்கு சமைக்கத் தெரியும் .....எனக்கு சமைக்கத் தெரியாது...! சும்மா என்னய தெரியாததையெல்லாம் பண்ண சொன்னேன்னா பின்னாடி சூடு வச்சுருவேன் பாத்துக்கோ....
வனி : நேத்து நைட்டெல்லாம் நீ பாட்டுக்கு சமைக்காம தர்ஷன் கூட “சன்னா மெராயா” பாடப் போயிட்ட....! பாவம் யாரும் சாப்பாடு இல்லாம சட்டிய சொரண்ட ஆரம்பிச்சுட்டானுங்க. கவின்லாம் பாவம் லவ் பண்ற ஆளு.....பசிக்கும்ல! இதெல்லாம் உனக்கு புரியல....!
ஷெரின் : பாருடா திரும்ப திரும்ப சமைக்கல சமைக்கலன்னு.....! ஆமா சமைக்கல.....நான் சமைக்க மாட்டேன் எனக்கு சமைக்க தெரியாது போதுமா?
மோகன் : வனி கண்ணா, கோவப்படாதடா....! அந்த சக்கரை டப்பாவ எடுடா...
வனி : அட இருடா....இந்தாளு வேற ! இந்தா ஷெரினு என்ன அக்காக்கிட்டயே பிரச்சனையா? ரைட்டு வா.....! எந்த தைரியத்துல இப்பிடி எகுறரன்னு தெரியும்....! (ஹஸ்க் வாய்ஸ்ல : யோவ் நைனா தர்ஷன் வரானான்னு பாத்துக்கோ. வந்தா சிக்னல் குடு...!) //
வனி , சேரன், மோகன், சாக்ஷி
வனி : என்ன பேச்சு பாத்தீங்களா? என்ன மோகா பாத்தியா?
மோகன் : பர தேவதை உன்னய இப்பிடி பாகுபாடில்லாம பேசிட்டு போறத நெனச்சு முட்டிக்கிட்டு வருது
சேரன் : அட சீக்கிரம் எந்திருச்சு போங்க.....! நான் க்ளீனிங் டீம் வேற...
மோகன் : அட நான் கண்ணீர சொன்னேங்க...!
ஸேரன் : நல்லா சொன்ன போ....
வனி : மொதல யாரும் யாரையும் சமாதானப் படுத்தாதீங்க. விட்டா அவனுங்களே சரியாகிடுவானுங்க. ஆனா சமாதனப்படுத்துறேன்னு ஏத்தி விட்டு இன்னும் அழ வைக்குறானுங்க. நானெல்லாம் அப்பிடிதான் பண்ணுவேன்.....! ஏய் இந்தா சல்பேட்டா எங்க போற?
சாக்ஷி : பேபி அழுகுறா சமாதானப்படுத்தப் போறேன்
வனி : இப்பதான் இங்க சொல்லிட்டு இருக்கேன்....! பேபி அழுகுதுன்னா சப்பு சப்புன்னு ரெண்டு அப்பு அப்பு அழுகைய நிறுத்திடும் அத விட்டுட்டு சமாதானப் படுத்த போறாளாம். போன மாசம் வரைக்கும் நீயே சமாதானம் தேடி அலஞ்ச இப்ப என்னடான்னா சமாதானம் சொல்ற சர்ச் மதராகிட்டியா? என்ன மறந்து போச்சா? கவின கூப்டவா? //
கக்கூஸ்ல ஷெரின், கவின், லாஸ்...
ஷெரின் : தோசையெல்லாம் வட்டமா இருக்கும்னே எனக்கு நேத்துதான் தெரியும். என்னடா நூடுல்ஸ் வெள்ளையா இருக்கேன்னு பாத்தா அது சேமியாவாம். இதுல என்னய “சமைக்க மாட்டேங்குற”ன்னா என்ன பண்றது? இதுல “இதுக்கு தர்ஷன் பழக்க வழக்கந்தான் காரணம்”ன்றா வாம்பைர் வனி...
கவின் : என்னய படுத்தாதையா உன்னய படுத்திட்டா? விடு வம்பிழுத்தாதான் அது வனிதா...
சாக்ஷி வேகமாக வந்து இவனுங்ககிட்ட இருந்து ஷெரின இழுட்டுப் போச்சு.
உள்ள ஒரு டீம் மீட்டிங் நம்ம வனிக்கா தலைமைல...
வனி : அஸ் அ கேப்டனா...டு பி ஹானஸ்டா....அல்லா மீது ஆணையா.....தேவனின் கருணையோடு.....அங்காளம்மன் அருளோடு...
முகின் : பேசிட்டே இருங்க அபிக்கு அமிர்தாஞ்சனம் தடவி விட்டுட்டு வந்துடுறேன்..
வனி : நக்கலா...இருடா காலை ஒடிச்சுப்புடுவேன் ! பிராது என்னன்னா ஷெரின் தன் கடமைல இருந்து தவறிட்டா ! நேத்து டாஸ்க்குல ஒழுங்கா எம்பிராய்டரி போடுன்னா அவன் கூட சேந்து “அம்பி”ராய்டரி போட்டுட்டு இருக்கா. சமைக்க சொன்னா சமைக்கல. என்னன்னு கேட்ட என்னய மதிக்கல. இதுக்கெல்லாம் காரணம் காதல்.
சாண்டி : இத தனியா பேசி இருக்கலாம் கூட்டம் போட்டு...
வனி : ஏன்டா பொரட்டா செஞ்சுக் குடுத்து பொரணி பேசுனா அத கேக்க வலிக்குதோ? அப்பிடி என்ன வெட்டி முறிக்கப் போற? கவினுக்கும், லாஸுக்கும் காவல் இருக்கப் போற அதான் அவனுங்களே இங்க இருக்கானுங்களே....இரு !
சேரன் : (ஹை வாய்ஸ்ல ) ஸ்டாப்பிட்....யு ஸ்டுப்பிட் ! என்ன வனி எங்களப் பாத்தா முட்டாள் மாதிரி இருக்கா? நீ மட்டுமே பேசிட்டு இருந்தா அப்ப நான் எதுக்கு? மத்தவங்கள்லாம் எதுக்கு? பைத்தியக்காரன் மாதிரி இப்பிடி சும்மா உக்காந்திருக்க முடியாது......
கவின் : (முகின சொரண்டி) முகின் சிட்டிக்கு கோவம் வருது.
வனி : ஒரு முறை முறைக்க....
சேரன் : (இன்னும் ஹை வாய்ஸ்ல) வனி சொல்றது என்னன்னா ஒழுங்கா வந்த வேலைய செய்யுங்க. அத செய்யத்தான் வந்தோம். வனி சொல்றத கேளுங்க அத செய்யத்தான் வந்தோம். மொதல லவ் பண்றத நிறுத்துங்க. (பசங்க மைண்ட் வாய்ஸ் : அத செய்யத்தான் வந்தோம்) வனி சொல்றத கேளுங்க அத செய்யத்தான் வந்தோம். வந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வெளிய உங்க வேலைய பாருங்க. வனி சொல்றத கேளுங்க அத செய்யத்தான் வந்தோம்.....பஞ்சாயத்து முடிஞ்சது கெளம்புங்க
வனி : அதான பாத்தேன்.....!
முகின் : (கவின சொரண்டி) கவினு சிட்டிக்கு வால்யூம் பட்டன எவனோ கூட்டி வச்சுட்டான் அவ்வளவுதான்! மத்தபடி கண்டெண்ட் எப்பவும் போலதான்...!
வெளிய சாக்ஷி, ஷெரின், சேரன், வனி....
சல்பேட்டா : பேபி....! வனிதாக்கா தர்ஷன் பத்தி பேசுனா ஏன் கோவப்படுற?
சேரன் : ஷெரின்...! நீ வேலையெல்லாம் நல்லாதான் பாக்குற
சல்பேட்டா : ஆமா பாக்குற....
சேரன் : நல்லா டாஸ்க் பண்ற
சல்பேட்டா : ஆமா பண்ற...
சேரன் : ஆனா நீ தர்ஷன் கூட அதிகம் நேரம் செலவழிக்குற மாதிரி தெரியுது
சல்பேட்டா : ஆமா தெரியுது...
ஷெரின் : யாருக்கு தெரியுது?
சேரன் : எல்லாருக்குமே...வெளியவும்
சல்பேட்டா : ஆமா வெளியவும்...
சேரன் : சல்பேட்டா ஒரு லூசு...
சல்பேட்டா : ஆமா லூசு...
வனி அப்பிடியே வந்து பக்கத்துல உக்கார....
சல்பேட்டா : பாரு அக்காவே உனக்காக இறங்கி வந்து உங்கிட்ட பேச வந்திருக்காங்க ! அவங்க கேக்குறதுக்கு பதில் சொல்லு..
வனி : தர்ஷன் கூட என்ன பழக்கம்...
ஷெரின் : அது வந்து...
சல்பேட்டா : என்ன பேபி அக்காவ எதிர்த்துப் பேசுற?
வனி : சொல்லுமா
ஷெரின் : தர்ஷனுக்கு....
சலபெட்டா : பேபி மறுபடியும் எதிர்த்துப் பேசுற?
வனி : சொல்ல மாட்டியா?
ஷெரின் : எனக்கும் அவனுக்கும்....
சல்பேட்டா : பேபி மறுபடி மறுபடி அக்காவ எதிர்த்துப் பேசுற....
ஷெரின் : ஏய் என்ன லந்தா? ரெண்டு பேரையும் கொலை பண்ணிடுவேன்
வனி : புரிஞ்சு போச்சு.....! அப்ப உனக்கும் தர்ஷனுக்கும் அஃபையர் அதாவது தொடர்பு இருக்கு.....
ஷெரின் : என்ன பேச்சு பேசிட்டடி பாண்டா? தொடர்பா ? ஏண்டி இப்பிடி கூச்சமே இல்லாம அடுத்த பொண்ண பத்தி இப்பிடி பேசுற? இனிமே இந்தப்பக்கம் வந்த சாமியாடிருவேன்......முட்டாப்.....போண்டா
அழுதுட்டே அந்தப் பக்கமா போக அங்க தர்ஷன் வந்தான்...
ஷெரின் : டேய் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்காம்டா....நீ விலகிப்போறியாம் நான் பின்னாடி வந்து உரசுறேனாம் சொல்லுடா சொங்கி அப்பிடியா பண்ணேன்?
தர்ஷ் : என்ன சிண்டெக்ஸு என்ன?
வனி : யப்பா நான் உன்னய பத்தி பேசல நீ வராத இடையில...! நான் அவளுக்கும் யாரோ தர்ஷன்னு ஒரு பையனுக்கும் தொடர்புன்னுதான் சொன்னேன்
தர்ஷ் : நாந்தான தர்ஷன்?
வனி : நான் சொன்னது யாரோ தர்ஷன்...! நீ வெறும் தர்ஷன் தான ! அதுனால நீ அவனில்லை...! வாயால மட்டும் பேசுவேன்னா வா வா வந்து என் பக்கத்துல உக்காரு
தர்ஷ் : நீ தேவையில்லாம பேசி பஞ்சாயத்த கூட்டிட்ட...! அவள அழவச்சுட்ட...! எங்கிட்ட அவள பேசமாட்டேன்னு சொல்ல வச்சுட்ட....! போதுமா இல்ல வேற எதும் இருக்கா?
வனி : இப்ப என்ன பேசிட்டேன்னு ஆளாளுக்கு பொங்கி வழியுறானுங்க? தொடர்பு இருக்குன்னு சொன்னதெல்லாம் குத்தமா என்ன? இத விட பெரிய கலவரமெல்லாம் பண்ணி இருக்கேன். இவனுங்க இதுக்கே டொங்காகுறானுங்க....மொத இவனுங்ககிட்ட சொல்லி மலையாள பிக்பாஸுக்கு போகனும் அங்கயாச்சும் ரெண்டு வெட்டுக்குத்துக்கு வழி பண்ணலாம்...//
கக்கூஸ்ல சல்பேட்டா ஷெரின் கூட...
சல்பேட்டா : பேபி சொல்றதக் கேளு ! வனி கூட சேந்துரு மூணு வேளை சாப்பாடு, காபி, டிபன், தினம் ஒரு கலவரம், பெட்ரூம்ல பொரணி, பிக்பாஸே பயந்து நடுங்குற அளவு பவர், கமல் மட்டுந்தான் லைனுக்கு வரல மத்தபடி பெரிய பிஸ்து...! என்ன சேந்துக்குறியா?
ஷெரின் : இந்த நாறப் பொழப்பு பாத்துதான் நீ வெளியவே போன....நான் என்ன “ஸ்ட்ரெயிட்டன் ஹேருக்கு” அப்பிடி இருக்கனும்?
சல்பேட்டா : விடு குரைக்கிற நாய் குரைக்கதான் செய்யும்
ஷெரின் : அது நாய் இல்ல டிச்சுப் பன்னி.....
சல்பேட்டா : அய்யோ கடவுளே நான் அக்காவ பத்தி சொல்லல....மக்கள சொன்னேன்
ஷெரின் : மக்கள ஏண்டி நாயின்னு சொன்ன?
சல்பேட்டா : ஞே....! நீ அவ காதலியப் பத்தி பேசிட்டு இருந்தியா....அவளும் மக்கள்தான அதனால அவள... அப்பிடியே... மக்கள.... அய்யோ ரோல் ஆவுதே....மாட்டிக்கிட்டேன்.....//
ஷெரினுக்கு சேரன், சல்பேட்டான்னு யாரு ஆறுதல் சொல்லியும் அடங்கல. ரொம்ப சோகத்துலையும் கோவத்துலையும் எந்திருச்சுப் போயி தர்ஷன் கிட்ட “இனிமே எனக்கும் உனக்கும் ஒண்ணும் இல்ல....நீ யரோ நான் யாரோ”ன்னு அழுதுட்டே சொல்லிட்டுப் போயிட்டாங்க.
பாய்ஸ் குரூப்போ “இது உன் பிரச்சனை ஷெரினு நாங்க வந்தா கேங் வாராகிடும்”னு ஒதுங்கிட்டானுங்க.
இந்த எபிசோட பாத்தப்பயும் சரி இத எழுதுறப்பயும் சரி....ஷெரின் அழுகை ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு. குழந்தை மாதிரி அவங்க அழுகுறது நமக்கே உறுத்துது. ஆனா இத உருவாக்குன வனிதாவோ எந்த ஒரு குற்றவுணர்ச்சியும் இல்லாம ஜாலியா வாலிபால் ஆடிட்டு இருக்கு. சல்பேட்டாவ உள்ள அனுப்பும் போதே விஷம் கக்குற ஊசியப் போட்டுதான் அனுப்பி இருக்கானுங்க போல. இவ்வளவு விஷம் பாம்புகிட்ட கூட கிடையாது. வெளிய போயி இவ்வளவு எபிசோடையும் பாத்துட்டு வந்தப்பறமும் அது வனிதாவுக்கு சப்போர்ட் பண்ண சொல்லுச்சுன்னா இந்த மூதேவிக்கு கோல்டு மெடல் குடுத்த காலேஜ்காரன் தூக்குல தொங்கலாம்.
சாரி கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்.....!
வனி : இன்னும் யாரு பேலன்ஸ்? ஆங் சேரர் இருக்கார். ஒரு வேளை வெளிய போகலேன்னா திங்கக்கிழமை பிரேக்ஃபாஸ்ட் அந்தாளுதான். இந்த லாஸும், கவினும் எங்க? சல்பேட்டா போறதுக்குள்ள கவின் மேட்டர கசக்கி விட்டோம்னா வெளிய போற சல்பேட்டாவோட நிம்மதிய கொலைச்சு அனுப்பலாம் இல்ல குறஞ்ச பச்சம் ஒரு மண்டக்கட்டு இல்லேன்னா மது மாதிரி கைல வெட்டுன்னு போட்டு அனுப்பலாம். என்னால காலையில அலாரப் பாட்டுக்கு மட்டுந்தாண்டா ஆட முடியாது.....ஆனா என் ஆட்டமே வேற...! பாக்கத்தான போற இந்த வாம்பைர் வனியோட ஆட்டத்த.....!
வத்திக்குச்சிதானுங்க பத்தவப்பேன் நானுங்க...

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)