பிக்பாஸ் 3 : நாள் 80 (11.09.19)
பிக்பாஸ் 3நாள் 80 (11.09.19)
“ராஜாளி நீ
காலி”ன்னு யாருக்கோ சிக்னல் குடுக்குற மாதிரி பாட்டுப் பாடுனாரு பிக்பாஸ். எவனும் எந்திரிக்குற
மாதிரி தெரியல. தர்ஷனும் ஷெரினும் சமைக்கட்டுல நகட்டிட்டு இருந்தானுங்க.
பெட்ரூம்ல வனி
& லாஸ்...
லாஸ் : நெயில்
பாலீஷ்லாம் போடுவீங்களா?
வனி : ஏன் நான்
போடக்கூடாதா? கொஞ்சம் அமைதியா இருந்தா ரொம்ப ஓவரா போற மாதிரி இருக்கே? என்ன ஆரம்பிக்கனுமா?
லாஸ் : இல்ல
எப்பவுமே இப்பிடித்தான் போடுவீங்களா?
வனி : ஆமாண்டி
இப்பிடித்தான் போடுவேன் என்ன இப்ப?
லாஸ் : இல்ல
அது என்னோட நெயில் பாலீஷ். அதான் கேட்டேன். நல்லா அடுத்தவங்களோடத எடுத்து சொவத்துக்கு
பெயிண்ட் அடிக்குற மாதிரி அடிச்சிட்டு பேச்சு வேற....
வனி : ஓ உன்னோடதா
இது.....
லாஸ் : சரி,
சேரப்பா சீக்ரெட் ரூம்ல இருக்காரா?
வனி : எங்கிட்ட
கேட்டா? நானா கொண்டுபோயி உள்ள உக்கார வச்சுட்டு வந்தேன்....? ஏன் உனக்கு தோனுதா?
லாஸ் : அவரு
நைட்டு வந்துருவாப்லன்னு நெனச்சேன்
வனி : நைட்டு
வரதுக்கு அவரு என்ன நிலாவா?
லாஸ் : அப்ப
இந்த வாரம் குடும்பத்தோட உள்ள வரதுக்கு வாய்ப்பிருக்கு...
வனி : அது சரி
அவரு சொன்னமாதிரி ரெண்டு பேரும் பேசிக்கிட்டீங்களா என்ன?
லாஸ் : அவரு
சொன்ன மாதிரியும் பேசுனோம். இனிமேலாச்சும் கேம்ல ஃபோகஸ் பண்ணுவோம்னு முடிவு பண்ணிக்கிட்டோம்
வனி : ரொம்ப
சீக்கிரம் முடிவு பண்ணிட்டீங்க போல? இன்னும் 3 வாரம் இருக்கே..... ! (கேமயே ஸ்டார்ட்
பண்ணாத ரெண்டு பேரு இன்னும் உள்ள இருக்கானுங்க ஆனா ஒரு கேம் சேஞ்சர் என்னய 3 வது வாரம்
வெளிய தள்ளிட்டானுங்க கண்ட்ரி ப்ரூட்ஸ்) சரி.......மேல சொல்லு
லாஸ் : கவின்
என்னய ஃபோர்ஸ் பண்றான்னு சொன்னதெல்லாம் சுத்த லுச்சாத்தனம்....அவன் அப்பிடி சொல்லவே
இல்ல
வனி : சேரப்பாவ
பத்தி பேசுனா கவினுக்கு பிடிக்கலையா?
லாஸ் : அவங்கப்பாவ
பத்தி பேசுனாலே அவனுக்கு பிடிக்காது இதுல சேரப்பாவ பத்தி பேசுனா எப்பிடி பிடிக்கும்?
எங்க அப்பா, அம்மாகிட்ட பேசுவானாம் ஆனா சேரப்பா கூட சேர மாட்டானாம். ஹவ் ஸ்வீட் ஹி
இஸ் !
வனி : நீ சேத்து
வைக்க வேண்டியதுதான?
லாஸ் : அவிங்க
என்ன டைவர்ஸ் வாங்குன புருஷன் பொண்டாட்டியா சேத்து வைக்க? இவனுங்க பிரிஞ்சிருக்குறதால
இந்தியப் பொருளாதாரம் ஒண்ணும் பொளந்துக்காது...அப்பிடியே திரியட்டும் ரெண்டு பேரும்.....
! //
பேசிட்டு இருக்கும்போதே
எல்லாரையும் ஃப்ரீஸ் சொல்லிட்டு விக்ரம் வேதா தீம் மீசிக் ஓட....! உள்ள சேரப்பா ரீ
– எண்ட்ரி !
எல்லாரும் குதூகலிக்க
கவின் மட்டும் “அதான பாத்தேன் என்னடா 2 நாளாகப் போகுதே இன்னும் காணோமேன்னு. இந்தாளு
வீட்டுக்கும் போகல....என்னய நிம்மதியா விட்டுட்டும் போகல”ன்னு மனசுல நெனச்சுக்கிட்டே
கையக் குடுத்தான்.
“இப்பிடியே
பாத்துட்டே இருந்தா எப்பிடி? அப்பிடியே அண்ணன அள்ளித்தூக்கி ஆர்ப்பாட்டம் பண்ணுங்கடா”ன்னு
அவர அலேக்கா தூக்கிட்டானுங்க.
உள்ள வந்த சேரன்
“யப்பா டேய் எல்லாரும் நல்லா வெளியாடுறீங்கடா! பாக்க ஜூ மாதிரி செம்மயா இருக்கு. அதுலயும்
வனிதா அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கும்போது....! ஆமா நீ ஏன் அழுத கழுத?”ன்னு கேக்க,
“அதுவா.....அது வந்துச்சு”ன்னு வனிதா சொல்லிட்டு இருக்கும்போதே “ஆமா யாரையும் அழக்கூடாதுன்னு
சொல்லிட்டு நீ மட்டும் ஏன் நொழுவுன?”னு சாண்டி கேட்டதும் வனி “ஆங்...நீதான் கத்துக்குடுத்த
குருநாதா அந்த டீசர்ட்ல ஒண்ணு குடு குருநாதா”ன்னு ஒரு ஆட்டம் ஆடுனாங்க. டேபிளே ஆடுச்சு.
“கவினு ஒண்ணும்
டென்ஷனாகாத நான் ஒண்ணும் ஒட்டுக்கேக்கல”ன்னு சொன்னதுந்தான் அவனுக்கு படபடத்துச்சு.
வனி, சேரன்
& ஷெரின்
சேரன் : என்ன
வனி ரொம்ப இளைச்சுட்ட?
வனி : காலையில
பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடல அதான்....! சரி உள்ள எப்பிடி ஒரே ஜாலியா?
சேரன் : ஏம்மா
லாட்ஜுக்கு போயிட்டு வந்தவங்கிட்ட கேக்குறாப்ல கேக்குற? அதெல்லாம் சும்மாதான் இருந்தேன்.
ஷெரின் : பாக்க
எப்பிடி இருந்துச்சு?
சேரன் : 10க்கு
10 ரூம், பச்சை கலர் பெயிண்டு, சிங்கிள் பெட்டு, வேளைக்கு சாப்பாடு, சுவத்துல அங்கங்க
வால் ஸ்டிக்கர், பெரிய டீவி, முக்கியமா கிழக்கு பக்க சுவத்துல பெயிண்ட் உதிர்ந்திருந்துச்சு.....
ஷெரின் : பெயிண்ட்
நிப்பான் பெயிண்டா இல்ல வேற எதுவுமா? சொங்கி....நான் கேட்டது எங்கள பாக்க நல்லா இருந்துச்சான்னு
சேரன் : ஆனா
பாய்ஸ் டீம் நல்லா விளையாடுறானுங்க. அதுவும் கவினும் லாஸும் விண்ணைத்தாண்டி வருவாயா
– 2 எடுத்துட்டு இருக்கானுங்க. வனி, எப்பிடியும் கவின் வெளிய போக மாட்டான். காய போட்ட
துணிய எல்லாம் எடுத்து பொட்டில வச்சுக்கோ.... நீதான் இந்த வாரம்.
வனி : லாஸு
கிட்ட பேசுனேன் கவினுக்கு உங்கள பிடிக்காதாமே?
சேரன் : (ம்ம்க்கும்
அவனுக்கு மட்டுமா?) எப்பிடி பிடிக்கும்? ஆனா வந்த 2வது வாரத்துல இருந்தே அவன் மேல இவளுக்கு
ஒரு கண்ணாம்....பாத்தியா கொடுமைய?
ஷெரின் : யோவ்.....என்னயா
உன் பொண்ண பத்தியே பொரணி பேசிட்டு இருக்க?
சேரன் : இல்ல
இல்ல....கவலைல சொன்னேன். உன்னய கூடத்தான் தர்ஷன் நாமினேட் பண்ணான்.
ஷெரின் : பாரு
அப்ப கூட என் பேரதான் சொல்லி இருக்கான்....! என் ரௌடி பேபி...!
வனி : (இது
அடுத்த லூஸு) அப்ப இப்பிடி சைலண்ட் மோட் வேலைக்காகாதா? இருக்கப்போற 3 நாளும் இங்கி
பிங்கி பாங்கி போட்டு எல்லாத்தையும் தூக்கிரவா?
சேரன் : நீ
ரொம்ப குழப்பத்துல இருக்க....போ போயி எல்லாரோட பிரேக் ஃபாஸ்ட்டையும் நீயே சாப்புடு...//
வெளிய உக்காந்து
பேசிட்டு இருக்கும்போது சட்டுன்னு கதவைத்தொறந்து லாஸோட அம்மா தங்கசிங்க வந்தாங்க....
சாண்டி : லாஸோட
அம்மா, தங்கச்சிங்க...
கவின் : இல்ல
என்னோ மாமியா, கொளுந்தியாளுக....
சாண்டி : ஆனாலும்
உனக்கு ரொம்ப துணிச்சல்டா //
வந்ததும் அழுகாச்சியோட
லாஸ் அம்மாவும், தங்கச்சியும் “வந்த வேலைய விட்டுட்டு ‘வா வா வா கண்ணா வா’ன்னு பாட்டு
பாடிட்டு இருக்கியே ? இதெல்லாம் நல்லதுக்கா?”ன்னு கண்ணீரோட கழுவி ஊத்த, “விட்டுரு எல்லாத்தையும்
விட்டுரு.....எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கு வா”ன்னு அவங்க அம்மா சொன்னப்ப “அதெல்லாம்
விட்டுட்டு வர முடியாது”ன்னு அழுதுக்கிட்டே சொல்லுச்சு லாஸ்.
அப்பறம் சேரன்
சார் அவங்க அம்மாவுக்கு வணக்கம் சொன்னாரு. “ஏண்டா வேலா மூஞ்சிய இப்பிடி வச்சுருக்க?”
எக்ஸ்ப்ரெஷன்ல இருந்தார் சேரன் சார்.
மறுபடியும்
“நீ நீயா இரு”ன்னு ஆரம்பிச்சாங்க. அவங்க என்ன பேசுனாலும் “நீ நீயா இரு”ல்ல ஆரம்பிச்சு
“நீ நீயா இரு”ல்ல முடிச்சாங்க.
கவின் அங்க
எல்லார்கிட்டையும் “நான் எங்க மாமியார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்துரவா?”ன்னு
கேக்க, சேரன் அவங்கிட்ட “பொறுமை, பொறுமையா இரு இன்னும் சீன் ஆரம்பிக்கல....! வாங்குவோம்
....ஆசீர்வாதந்தான? வாங்குவோம்”னு அவன பிடிச்சு வச்சுட்டு இருந்தார்.
சட்டுன்னு “ஆனந்த
யாழை” மீட்டுனானுங்க. அப்பவே லாஸ் லவுடா அழ ஆரம்பிச்சுச்சு. லாஸ் அப்பா இன் பிக்பாஸ்
ஏரியா. கவினுக்கு ஆரம்பிச்சது டயேரியா.
வந்ததும் வராததுமா
வாசல்ல வச்சே வண்டை வண்டையா கேட்டாரு. “எல்லாத்தையும் விட்டுட்டு உள்ள வா”ன்னு சொல்லிட்டு
உள்ள போன வேகத்த பாத்தா போயி பொட்டி படுக்கைய எடுத்து வப்பாருன்னு பின்னாடியே போனா....”கேம
கேமா விளையாடு”ன்னு கையப்பிடிச்சுக்கிட்டு சொல்லிட்டு இருந்தாரு. வாட் எ டெரர் தாமு?
அப்பறம் லாஸோட
அப்பா, லாஸோட அப்பா மாதிரிக்கு வணக்கம் சொன்னாரு.
“ஏண்டா வேலா மூஞ்சிய இப்பிடி வச்சுருக்க?” எக்ஸ்ப்ரெஷன்ல இருந்தார் சேரன் சார்.
அழுதுட்டு இருந்த
கவின் “நான் வேணும்னா இப்பப் போயி மன்னிப்பு கேக்கவா?”ன்னு கேசுவலா ஆரம்பிக்க....மொத்த
பேரும் கோரஸா “அடேயப்பா.....செத்த சும்மாத்தான் இரேண்டா இம்சை பிடிச்சவனே”ன்னு சொன்னானுங்க.
பின்ன மொத்த
ஃபேமிலியும் பேசி சமாதானமானானுங்க. “கேம கேமா விளையாடு”ன்னு அப்பாவும்,” நீ நீயா இரு”ன்னு
அம்மாவும், “நீ நீயா இருந்து கேம கேமா விளையாடு”ன்னு தங்கச்சிகளும் மாத்தி மாத்தி இதயேத்தான்
பேசிக்கிட்டானுங்க.
அப்பறம் சேரன்
சார் லாஸ் தங்கச்சிகளுக்கு வணக்கம் சொன்னார். “ஏண்டா வேலா மூஞ்சிய இப்பிடி வச்சுருக்க?”
எக்ஸ்ப்ரெஷன்ல இருந்தார் சேரன் சார்.
“கவின் ரொம்ப
சங்கடப்படுறாப்ல...உங்ககிட்ட மன்னிப்பு கேக்கனுமாம்”னு சேரன் சார் சொல்ல, “யாரு மாப்பிள்ளையா
சாரி கவினா இருக்கட்டும் இருக்கட்டும்....ஜெயிச்சுட்டு வெளிய வாங்க பேசிக்கலாம்”னு
சொல்லிட்டாப்ல.
“அப்பறம் இந்தக்
காதல், கவினையெல்லாம் விடு கமல் சார் முன்னால காலப் போட்டு உக்காந்திருக்கியே தப்பில்லையா?
உன்ன நான் அப்பிடியா வளர்தேன்? என்ன கொடுமை இது?”னு லாஸ் அப்பா பொங்க...! “மரியாதை
மனசுல இருந்தா போதாதா? காலு, கைலயெல்லாம் இருக்கனுமா என்ன? அதே மாதிரி இந்த வெளிய பேசுறவனுங்க,
எழுதுறவனுங்கள பத்தி கவலப்படாத சரியா”ன்னு லாஸ் கேசுவல் மோடுக்கு வர, “கேம கேமா விளையாடு”ன்னு
அப்பாவும், “நீ நீயா இரு”ன்னு அம்மாவும், “நீ நீயா இருந்து கேம கேமா விளையாடு”ன்னு
தங்கச்சிகளும் அகெயின் ஆயிரத்தி எழுநூத்தி ஐம்பதாயிரம் தடவயா சொன்னாங்க.
மறுபடியும்
சேரப்பா பக்கத்துல வந்து உக்காந்தார் லாஸ் அப்பா. சேரன் சார் அவருக்கு வணக்கம் சொன்னாரு.
“ஏண்டா வேலா மூஞ்சிய இப்பிடி வச்சுருக்க?” எக்ஸ்ப்ரெஷன்ல இருந்தார் சேரன் சார்.
வெளிய திட்டீர்னு
நம்ம கவினு சாண்டிய திட்டிட்டான். “யோவ் நேரங்காலம் தெரியாம ஓட்டாத பாத்துக்கோ”ன்னு
பொங்க சாண்டி மூட் அவுட் ஆகி கக்கூஸ்லா போயி அழுதாப்ல. கவின் கக்கூஸ்ல அவன் இடத்துல
சைலண்டா வெளிய உக்காந்திருக்க, அத கண்டுக்காம வெளிய போன சாண்டி மனசு கேக்காம கவினப்
பாத்து “டேய் தனியா உக்காராத....காத்து கருப்பு வரும் பயந்துடும். வா உள்ள போலாம்”னு
கூப்ட்டது “எடுக்கவோ கோர்க்கவோ” நட்பாட்டம் பாக்க பக்காவா இருந்துச்சு.
பின்ன எல்லாரும்
ஒண்ணா உக்காந்து பேசிட்டு இருந்தானுங்க. எனெக்கென்னமோ போறதுக்குள்ள கவினுக்கும், லாஸுக்கும்
பேசி முடிச்சி, பூ வச்சுட்டு தான் போவானுங்க போல.....!
அப்பவும் சேரன்
சார் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி “ஏண்டா வேலா மூஞ்சிய இப்பிடி வச்சுருக்க?” எக்ஸ்பிரெஷன்ல
இருப்பார்.
Comments
Post a Comment