பிக்பாஸ் 3 : நாள் 79 (10.09.19)
பிக்பாஸ் 3நாள் 79 (10.09.19)
ரைட்டு இந்த
வாரம் முழுக்க செண்டிமெட் ஷவர தொறந்து விட்ருவானுங்க போல....! கிடைக்குற கேப்ப யூஸ்
பண்ணுவோம். ஒண்ணும் தேறலேன்னா 2 நாளைக்கு தெலுங்கு பிக்பாஸுக்கு கன்வெர்ட் ஆகிடுவோம்.
கோடான கோடி
பாட்டு பாடுச்சு. லாஸ், முகின், ஷெரின் 3 பேரும் சோப்பு போடுற டான்ஸ் ஆடுனாங்க.
பாய்ஸ் கேங்
வெளிய உக்காந்திருந்தானுங்க. “காஃபி குடிச்சுட்டா எந்திரிங்கடா எருமைகளா. போயி வேலை
வெட்டிய பாப்போம்”ன்னு லாஸ் சொல்ல, சாண்டி சிம்பு வாய்ஸ்ல லாஸ “கேப்டனான உடனே உன் நடவடிக்கை
எல்லாம் கிலோ நாலாயிரமா இருக்கே?”ன்னு கலாய்க்க லாஸ் மூஞ்சிய தூக்கிட்டு உள்ள போயிடுச்சு.
லாஸ் மூஞ்சிய தூக்குனா நம்ம கவின் எதத் தூக்குவான்னு தெரியாதா? அவனும் மூஞ்சியதான்
தூக்குனான். “சாண்டிண்ணே அங்க இங்கன்னு போயி கடைசியில என் சம்சாரத்தையே கலாய்க்கிறியே?”ன்னு
சொல்ல. “இது என்னடா கருமம்”னு சொல்லிட்டு சாண்டி லாஸ்கிட்ட போயி “புருஷனும் பொண்டாட்டியும்
ஆல் டைம் அலார்ட்டாவே இருக்கீங்க போலயே?”ன்னு சொல்லிட்டு “சாரி” கேட்டுக்கிட்டாப்ல.
அதுக்கு லாஸ் “அதெல்லாம் நீ சாரி கேட்க வோணாம்”னு சொல்லிடுச்சு
அப்பறம் லான்ல
முகின், சாண்டி & கவின்....
கவின் : (வாய்க்குள்ள
முனுமுனுத்தபடி....) சாரி லாஸ், சாரி லாஸ்...சாண்டி அண்ணே உன்னய தெரியாம சொல்லிடுச்சு
லாஸ், நீ காயப்பட்டுடாத லாஸ், என்னய காயப்படுதிராத லாஸ், நீ ஒரு ரோஜா லாஸ், உன்னய யாரும்
பறிக்க வந்தா அவங்கள காயப்படுத்தும் முள்ளு லாஸ் நான்.......
சாண்டி : என்னடா
காக்க காக்க கந்த சஷ்டி கவசமா?
கவின் : இல்ல....வேட்டையாடு
விளையாடு மஞ்சள் வெயில் மாலையிலே....! ஏண்ணே லாஸ கலாய்ச்ச?
சாண்டி : அந்த
லூஸ நான் ஏன் கலாய்க்கப் போறேன்?
கவின் : அவ
சோகத்துல இருக்காண்ணே
சாண்டி : அவ
வந்ததுல இருந்தே சோகத்துல தான் இருக்கா? ஒன்னு உன்னய நெனச்சு இல்ல அவங்கப்பன நெனச்சு
அதுவும் இல்லேன்னா அவங்கப்பன மாதிரிய நெனச்சு...ஆக மொத்தத்துல அதுக்கு ஈசியா வர ஒரே
ரியாக்சன் சோகந்தான்....
கவின் : யோவ்
நீ இப்பிடித்தான் எதையாச்சும் பண்ணி நம்மள அது பின்னால வந்து தாக்குது....கொஞ்சம் சூதானமா
இரு
சாண்டி : ஆனா
நீயெல்லாம் சூதானத்தப் பத்தி பேசுற பாரு....போதுண்டா டேய் //
இந்த வார லக்ஸுரி
பட்ஜெட் டாஸ்க். இந்த வாரம் முழுக்க இந்த வீட்டோட கண்டிரோல் பிக்பாஸ்கிட்ட இருக்குமாம்.
(அப்ப இவ்வளவு நாள் அவங்கிட்ட இல்லையா? பயபுள்ள ஓனர்னு பொய் சொல்லிட்டு திரிஞ்சிருக்கான்)
ஃப்ரீஸ், ரீவைண்ட், ஃபார்வர்ட், ஸ்லோ மோஷன், ரிலீஸ்னு பிக்பாஸ் சொல்லும்போதெல்லாம்
அப்பிடியே செய்யனுமாம். அப்பயே எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு குடும்ப ஆட்கள உள்ள அனுப்புற
விளையாட்டுன்னு. ரொம்ப குஷியா இருந்தானுங்க. பண்ண சேட்டைக்கு உள்ள வந்து நம்மள அசிங்கமா
கேட்டு உதைப்பானுங்களேன்னு எவனுக்கும் துளி பயமில்லாம சந்தோசமா திரிஞ்சானுங்க. சாம்பிளுக்கு
சாண்டிய ஃப்ரீஸ், ரிலீஸ் சொல்லி விளையாண்டாப்ல பிக்பாஸ்.
கொஞ்ச நேரத்துல
ஃப்ரீஸ் சொல்லி “ஆராரிராரோ” பாட்டு பாட எல்லாருக்கும் படபடப்பு முகினோட அம்மா உள்ள
வந்தாங்க. பின்னாடியே அவன் தங்கச்சியும். அப்பறம் ரொம்ப நேரத்துக்கு தாய் தங்கை பாசம்
சீரியல் ஓடுச்சு. ஒடச்ச கட்டில், ஒன் பாத்ரூம் போற கக்கூஸ், தட்டு கழுவுற சிங்க்னு
எல்லாத்தையும் சுத்தி காட்டுனான் முகின். எல்லாரும் நெகிழ்ந்தானுங்க.
இவனுங்க எல்லாத்தையும்
விட தவமாய் தவமிருந்து – 2 வ சீக்ரெட் ரூமுல லைவா அவரு ஃபேஸ் ரியாக்ஷன்ல நமக்கு காட்டிட்டு
இருந்தாரு சேரன் சார். “ஒரே ஒரு வீட்டுக்குள்ளே ஒரே ஒரு அப்பா பொண்ணு”ன்னு பின்னாடி
பாட்டுச்சத்தம் கேட்டுச்சு.
அப்பறம் ஃப்ரீஸ்
சொல்லி “நீங்க நெகிழ்ந்தது போதும்”னு சொல்லிட்டு முகின் தய், தங்கைய வெளிய அனுப்பிட்டானுங்க.
அபியோட ஈஷா
பாம்பு மோதிரம் இப்ப முகின் விரல்ல இருக்குறத எத்தனை பேர் பாத்தீங்க? நேத்து பேட்டி
குடுத்த மது கூட அபி அது போடல, இது போடலன்னு போடாததப் பத்தி சொன்னங்களே தவிர இந்த மோதிரத்த
முகின் விரல்ல போட்டத பத்தி சொல்லல. என்ன மாதிரியான சமூகத்துல வாழுறோம்?
அவங்க வெளிய
போனதும் எல்லாரும் எல்லார் குடும்பத்தப் பத்தியும் நெனச்சு ஃபீல் பண்ணானுங்க.
ஷெரின் : எங்க
அம்மா வந்தா எனக்கெல்லாம் 1 மணி நேரம் வேணும். எங்க அம்மா என்னய அந்தத் திட்டு திட்டுவாங்க.
சாண்டி : லாலா
வந்தா அப்பிடியே தூக்கிட்டு வெளிய ஓடிடுவேன்.
லாஸ் : எங்க வீட்ல இருந்து வந்தா என்னய எக்குத்தப்பா குத்தப்
போறாங்க
கவின் : எங்க
அம்மா வந்தா அவங்க மருமகளக் காட்டுவேன்
வனி : வீட்ல
இருந்து எவனாச்சும் வரட்டும் வச்சுக்குறேன் அவனுங்கள.....//
ஃபன் டாஸ்க்.
2 டீமா பிரிஞ்சு டீமுக்கு ஒருத்தரா கட்டத்துக்குள்ள இருக்குற பந்த எடுத்து அவங்க கூடைக்கு
கொண்டு போகனும். அடிச்சு நாறிக்கிட்டானுங்க. ஆனா சண்டை வரல. வனி டீம் வின்னு.
சீக்ரெட் ரூம்ல
இருந்த சேரன் கிட்ட உள்ள இருக்குற திருவாத்தானுங்களுக்கு ஆளுக்கு ஒரு கேள்வி எழுதிக்
குடுன்னு சொன்னாங்க.
இத ஹவுஸ்மேட்டுகள்
கிட்ட சொன்னதும் கவினும் லாஸும் “ம்ம்க்கும் நாசமாப் போச்சு. வெளிய போனா வீட்ல பொண்டாட்டி
புள்ளைங்கக்கிட்ட பேசி சந்தோஷமா இருக்குறத விட்டுட்டு. இந்தாளு செத்தாலும் வெள்ளை கலர்
ஷெர்வானி போட்டு வந்து நம்மளுக்கு கொடச்சல் குடுப்பான் போலருக்குடோய்”னு மைண்ட்ல பேசிக்கிட்டானுங்க.
கேள்வி : ஏம்மா
லாஸு, நல்லாயிருக்கியா? அப்பா போனத நெனச்சு வருத்தப்பட்டியா? வச்சுட்டு வந்த பால்கோவா
பாக்கெட்ட எடுத்துக்கிட்டியா? அப்பா நெனப்பு வந்துச்சா?
லாஸ் : (போயி
முழுசா 2 நாள் ஆகல அதுக்குள்ள லெட்டரு) சேரப்பா நான் இங்க நல்லா இருக்கேன். உங்க மாப்பிள்ளை
என்னய நல்லா பாத்துக்குறாரு. இன்னைக்கு வெங்காயமெல்லாம் வெட்டி குடுத்தாரு. அவரு என்னய
பக்கத்துல இருந்து பாத்துக் கொல்லுறாரு. நீ எங்க இருந்தாலும் என்னய மட்டுமே பாத்துக்
கொல்லுற. என்னால நீ ஹர்ட் ஆகியிருந்தா சாரி. வெளிய வந்ததும் அவரு எடுத்துக் குடுக்குறேன்னு
சொல்லி இருக்காரு புது பட்டு சாரி. உடம்பப் பாத்துக்கோ....
கேள்வி : ஏண்டா
கவினு, அவ்ளோ சொல்லிட்டு வந்தும் அதையே பண்றியே உன்னயெல்லாம் என்னதான் பண்றது? பொழுதுக்கும்
பயந்துக்கிட்டே இருக்க முடியுமா? இப்பவே சொல்லு, இப்பவே சொல்லுன்னு கட்டாயப்படுத்துறது
நியாயமா சொல்லு?
கவின் : காலையிலதான்
பேசுனோம். இனிமே கேம் விளையாடுறப்ப மட்டும் லவ் பண்ண வேணாம்னு. நல்லா கேட்டுக்க கேம்
விளையாடுறப்போ மட்டும். மத்தபடி நான் ஒரு மாதிரி அவகிட்டயும் அவ ஒரு மாதிரி எங்கிட்டயும்
நாங்க ஒரு மாதிரி ஒவ்வொருத்தர்கிட்டயும் பலமாதிரி பேசி வச்சிருக்கோம். அத வெளிய போயி
பாத்துக்குறோம்.
கேள்வி : நான்
வந்ததுல இருந்து அமைதியா அன்னை தெரசா மாதிரி இருக்க. இத நான் உள்ள இருக்கும்போதே இருந்திருந்தா
என் மனநிலை கொஞ்சம் நல்லா இருந்துருக்கும். மறுபடியும் மை டியர் குட்டிச்சாத்தான் மோடுக்கு
போகாம மகாத்மா காந்தி மோடுக்கு வந்துட்டா நல்லா
இருக்கும்.
வனி : (நேர்ல
இல்லென்ற தைரியம் உனக்கு) இப்பிடிதான் இருக்கனும்னே எனக்கு இப்பத்தான் புரியுது. எரிமலையே
வெடிச்சு செதறுனாலும் பக்கத்துல நின்னு எழுமிச்சம்பழத்த பிழிஞ்சுட்டு இருந்த உன் ராஜதந்திரம்
புரியுது. மததவங்க மாதிரி தேவையான ஆளுகிட்ட மட்டும் பேசாம தேவியில்லாதத எல்லாம் பேசிட்டு
திரிஞ்சது தப்புதான் போல. பாப்போம் இந்த வாரம் தாங்குறேனான்னு.
வனிதாவுக்கு
சேரன் சீக்ரெட் ரூம்ல இருக்காறோன்ற டவுட்டு வந்துருச்சு. “அதுக்குள்ள டிவில போட மாட்டானுங்க.
இந்தாளு இங்கதான் எங்கயோ இருக்கான். மறுபடியும் உள்ள வந்தான்னா எப்பிடியாச்சும் மட்டயக்
கட்டி அடுத்த வாரம் நாமினேஷனுக்கு இழுத்துவிட்டு விளையாடலாம்”னு மைண்ட்வாய்ஸ்ல பேசிக்கிட்டே
“சேரன் அண்ணா...நீங்க எங்க இருக்கீங்க?”ன்னு அன்புள்ள ரஜினிகாந்த் பட மீனா மாதிரி கேட்டாங்க.
அவரு உள்ள வரும்போது அதே மாதிரி ஓடிப்போயி இடுப்புல ஏறி உக்காரப்போகுது அப்பறம் சேரனுக்கு
சைரன் தான்.
அடுத்த சீன்
என்னன்னு அமித் ஷாவுக்கே தெரியும்.
சாண்டிகிட்ட
கவின் ஒரு சின்ன விளக்கம் குடுத்துட்டு அப்பிடியே லாஸ் பக்கம் ஒதுங்குனான்.
கவின் : ஏம்மா
ஒரு லவ்வுன்னா ஒன்ணு உன் வீட்ல பிரச்சனை பண்ணனும் இல்ல என் வீட்டுல பிரச்சனை பண்ணனும்.
ஆனா பிக்பாஸ் வீட்ல இருக்குற இந்தாளு எதுக்கு பிரச்சனை பண்றாப்ல?
லாஸ் : இவனுங்க
நம்ம பேசுனதயெல்லாம் சரியா காமிச்சானுங்களான்னு தெரியல. நாம இன்னில இருந்தாச்சும் ஒழுங்கா
இருப்போம்னு பேசுனத மட்டும் காட்டியிருக்க மாட்டானுங்க கழிசடைங்க.
கவின் : ஏதோ
நீ அசைப்பட்டேன்னுதான் கேம் விளையாடுற வரை எதும் இல்லேன்னு சொல்லி இருக்கேன். இல்லேன்னா
அந்தாளு போனப்பயே பேரப்புள்ளைய கைல குடுத்து அனுப்பி இருப்பேன்.
லாஸ் : (ஆத்தாடி
இவன் வெறி கொண்டு இருக்கான் போலயே) இந்தாடா....கொஞ்சம் அடங்கு இன்னும் ஒரு வாரத்துல
நான் கைய அறுத்துக்கிட்டாச்சும் வெளிய போயிடுறேன்
கவின் : சீக்ரெட்
ரூம்ல இருந்தா பயந்துருவோமா? அவரு பக்கத்து ரூம்ல இருக்கும்போதே உங்கூட பல்லாங்குழி
விளையாடுவேன். வரட்டும் வரட்டும் பாத்துக்கலாம். நீ ஒண்ணும் அவருக்கு பயப்படாத...
லாஸ் : (எழவெடுத்தவனே
நான் இந்த உலகத்துலயே பயப்படுற ஒரே ஆளு நீதாண்டா....எப்ப என் கொரவளைய கடிக்கப்போறியோ
தெரியல...)
ஆனா அங்க சேரனுக்கோ
முடியல...! அனேகமா நைட்டு கதவ உடச்சு உள்ள போயிடுவாருன்னு நெனைக்கிறேன். உள்ளயெல்லாம்
போக வேணாம் அப்பவும் ரெண்டும் லான்லதான் பிசாசு மாதிரி உக்காந்து பேசிட்டிருக்கும்.
கலக்குரிக தலைவா
ReplyDelete//அவரு உள்ள வரும்போது அதே மாதிரி ஓடிப்போயி இடுப்புல ஏறி உக்காரப்போகுது அப்பறம் சேரனுக்கு சைரன் தான்.// !!!!!!!!!!!
ReplyDelete