பிக்பாஸ் 3 : நாள் 89 தொடர்ச்சி & 90ம் நாள் (21.09.19)


பிக்பாஸ் 3நாள் 89 தொடர்ச்சி & 90ம் நாள் (21.09.19)


ஆண்டவர் எண்ட்ரி....! வந்ததும் வராததுமா “தேச ஒற்றுமைக்கு முக்கிய காரணம் தமிழர்கள், முக்காத காரணம் வடக்கத்தியானுங்க”ன்னாரு. “எப்பவுமே கெத்து தமிழு...ஹிந்திய திணிக்க நெனச்சா நீ டுமீலுன்னு சொல்ல மொழிக்காவலர்கள் இருக்காங்க. தவிர கீழடியில தோண்டிப்பாத்ததுல மூத்த குடி நம்மதான்னு தெரியவருது. அப்ப நாகரீகம் சொல்லிக்குடுத்ததே நம்மதான் புரியுதா. நம்ம காவல் தெய்வங்கள் எல்லாம் வடக்கப்பாத்து இருக்கும் ஏன் தெரியுமா? வடக்க இருந்து யாரும் வந்து இம்சை பண்ணக் கூடாதுன்னுதான். இப்பவும் நம்ம ஆளுங்க வடக்கப் பாத்துதான் நிக்குறானுங்க. அவங்க பாத்துக்குவாங்க”ன்னு சொல்லிட்டு. “ரெண்டு நாளா சைக்கிள் ஓட்டிட்டு இருக்கனுங்க வாங்க என்னன்னு போயி பாக்கலாம்”னு சொல்லிட்டு வெள்ளிகிழமை நிகழ்வுகள காட்டுனாரு.
ஏஞ்சலினா ஜோலி கெட்டப்புல இருந்த ஈமு கோழி லாஸு சைக்கிள் ஓட்டிட்டு இருந்தப்ப கேரியர்ல வச்சிருந்த அதோட துண்டு பின் டயர்ல மாட்டி சக்கரம் சுத்தல. சாண்டி கவின “சீக்கிரம் வா உன் சம்சாரத்துக்கு ஆபத்து”ன்னு சொன்னதும்....”நானிருக்கிறேன்”னு ஓடி வந்த கவின் ஷெரின் உதவியோட துண்ட எடுத்து விட, லாஸ் “ஒரு ரெண்டு நிமிஷம் நிப்பாட்டிட்டேன் ரூல்ஸ் படி அவுட்டா இல்ல இன்னும் ஓட்டட்டா?”ன்னு கேக்க, கவினோ “அவுட்டுன்னு சொல்றதுக்கு அவன் யாரு? நீ ஓட்டுறதுதான் கணக்கு செல்லம். பிடிச்சா ஓட்டு இல்ல சைக்கிள ஓரமா நிப்பாட்டி பூட்டு அவ்ளோதான்”னு சொல்ல, லாஸ் இறங்கிடுச்சு. இறங்குன ஜோருக்கு கீழ விழ அவ்ளோதான் கவினோட லிவர், கிட்னியெல்லாம் கிறுகிறுத்து போயிடுச்சு.
தடுமாறி விழுந்தவள தாவி பிடிச்ச கவின் “விழாமலே இருக்க முடியுமா”ன்னு காதலோட பாக்க, “தலை சுத்துது அப்பிடியே படுக்க வைடா பைத்தியம் புடிச்சவனே”ன்னு லாஸ் சொல்ல தரைக்கு வலிக்காம லாஸ படுக்க வச்சாப்ல கவின்.
கவின் : சைக்கிள் ஓட்டுனதுல உன் பாதம் நோவுது....எனக்கு ஏதோ ஆவுது
லாஸ் : எனக்கு வலி உயிர் போவுது....அப்பிடியே காலப்பிடிச்சு விடு...
கவின் : உனக்காக யார் கால வேணும்னாலும் பிடிப்பேன்...சொல்லு யார் கால பிடிக்கனும்?
லாஸ் : அடேய் இம்ச பிடிச்ச இலுமினாட்டியே....என் காலு வலிக்கு போயி யாரு கால பிடிக்கப் போற? என் கால அமுக்கிவிடுடா...! நானே இன்னும் ஓட்டமுடியலயேன்னு கவலையில இருக்கேன் நீ வேற...
கவின் : கவலையா? உனக்கு ஒன்னு தெரியுமா? உலகத்துலேய 6 மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டுன பொண்ணுன்ற கேட்டகிரியில நீதான் ரெக்கார்டு பண்ணியிருக்க..
லாஸ் : என்னது இது ரெக்கார்டா? இதுவரை எந்தப் பொண்ணும் ஓட்டுனது இல்லையா?
கவின் : ஓட்டியிருக்காங்க! ஆனா திரிகோணமலை லாஸ்லியா மேரின்ற பேருல யாரும் ஓட்டுனதில்ல....நீதான் ஓட்டியிருக்க...! அப்ப அது ரெக்கார்டுதான?
லாஸ் : (முறைச்சபடி) நான் நல்லா ஓட்டுனேனோ இல்லையோ ஆனா நீ என்னய கேப் விடாம ஓட்டுற....! ஒழுங்கு மரியாதையா கால மட்டும் அமுக்கிவிடு...//
அப்பறம் கொஞ்ச்ச நேரத்துல முகினுக்கு தொடை கிழிய மனித ஆம்புலன்ஸ் கவின் வந்து கைத்தாங்கலா அவன தாங்கிப்பிடிச்சு கூட்டிட்டு போனாப்ல. அப்பறம் 8 மணிநேரம் கழிச்சு சாண்டி பெடல மிஸ் பண்ண, சைக்கிள்ள இருந்து இறங்கிட்டாப்ல. பின்னாடியே தர்ஷனும் இறங்க போட்டி இனிதே நிறைவடைந்தது. முடிஞ்சதும் “போராடினால் நாம் வெல்லலாம்” பாட்டப் போட தர்ஷனும், சாண்டியும் கால்வலியே இல்லாதவனுங்க மாதிரி ஒரு ஆட்டத்த போட்டாங்க.
90ம் நாள்
சைக்கிள் ரிசல்ட் வந்தது. யாரு யாரு யாருக்கு ஓட்டுனாங்க? லாஸ்- கவின், கவின்-லாஸ், சாண்டி-ஷெரின், ஷெரின்-தர்ஷ், தர்ஷ்-முகின், முகின்-சாண்டி, சேரன்-சேரன்.
கோல்டன் டிக்கெட் வின்னர் முகின்.
அப்பறம் நிப்பான் டாஸ்க். ரெண்டு டீமா பிரிஞ்சு நிப்பான் பெயிண்டுக்கு ஒரு விளம்பரத்த உருவாக்கி நடிச்சுக் காட்டனும். சேரன் நாட்டாமை. தர்ஷன் டீம் செம்ம கான்செப்ட் பிடிச்சு சூப்பரா பண்ணாங்க. அவங்கதான் வின்னுன்னு நாட்டாமை சேரன் தீர்ப்பு சொன்னார்.
முடிஞ்சதும் கண்ணக்கட்டி கூட்டிட்டு போயி ஆக்டிவிட்டி ஏரியாவுல முகின நிப்பாட்ட ஆண்டவரே வந்து தங்க டிக்கெட்ட மெடலா மாட்டிவிட்டாப்ல. “தங்க டிக்கெட் டாஸ்க்கா இருந்தாலும் உங்கிட்ட ஒரு தரம் இருந்துச்சு”ன்னு பாராட்டுனார் முகின.
அப்பறம் அகம் – அகம்
சைக்கிள் டாஸ்க்குக்காக எல்லாரையுமே பாராட்டுனாரு. “என்னப்பா சாண்டி ரெண்டு நாளா சொனங்கிப்போயி இருக்க? என்ன விஷயம்?”னு கேட்டதுக்கு, “எல்லாம் இந்த கவின் விஷயந்தான் கூட லாஸ் சொன்னது வேற கஷ்டமாகிடுச்சு அதான் டவுனாகிட்டேன்”னு சொல்ல, “நீ ரொம்பப் பண்ணாதன்னு சொன்னதுல கவின் காயப்பட்டுட்டான் போல”ன்னு கிண்டலடிக்க, கவின் “சார் கேமாதான் விளையாண்டோம் மொத முகின் இடிச்சப்ப கூட தெரியல அப்பறம் சாண்டியும் இடிச்சதுந்தான் அவ என்ன பூட்டுன கதவா ஆளாளுக்கு இடிக்கன்னு கோவமாகிட்டேன்”னு சொன்னாப்ல. “ஆனா அந்த அக்கறை தர்ஷனுக்கு அடிபட்டப்ப வரலயேப்பா?”ன்னு ஆண்டவர் கேக்க அண்டா அண்டாவ வழிஞ்சது கவினுக்கு “சரி விடு ஒரு குறும்படம் பாப்போம்”னு சொல்லிட்டு கவினும், லாஸும் பண்ண சில்றத்தனத்த காமிச்சாப்ல.
பின்ன சாண்டிகிட்ட “அப்பிடி என்னடா ப்ளான் பண்ணீங்க? அதயாச்சும் சொல்லுங்கடா”ன்னு கேக்க சாண்டியோ “பாய்ஸ் டீம் ஃபைனல் போகனும் அதான் ப்ளான்”னு சொல்ல, “அப்ப சேரனும், ஷெரினும் பகவத் கீதை விக்கப் போகனுமா? என்னங்கடா உங்க நியாயம்? என்ன ஷெரினு இப்பிடி சொல்றான்?”னு கேட்டார். ஷெரினோ “இவன் சொல்லியா உள்ள இருக்கப்போறோம் மக்கள் சொல்லனும் அவ்வளவுதான்”னு ஷார்ப்பா முடிச்சுட்டாங்க.
ஆண்டவர் : லாஸ் என்னமோ பக்கத்து வீட்டு பிரச்சனை மாதிரி கதை கேட்டுட்டு இருக்க எதாச்சும் சொல்லு
லாஸ் : எனக்கு யார நம்புறதுன்னு தெரியாம இருக்கேன் சீக்கிரம் தெளிவாகிட்டு விளையா...
ஆண்டவர் : நாசமாப்போச்சு.....இந்த டயலாக்க பிக்பாஸ் போட்டிக்கு வரதுக்கு முன்னாடியே மனப்பாடம் பண்ணிட்டுதான் வந்தியா? இன்னைக்கு டாப்பிக்கே வேற....கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லு...! தெர்மாக்கோல் மூட்டை விளையாட்டுல கவின் மூட்டைய பிக்க சொன்னா நீ அவன தாண்டிப் போயி அடுத்தாளு மூட்டைய பிக்குற...ஏன்?
லாஸ் : அவன் மூட்டைய பிச்சா அவன் வெளிய போயிடுவானே...
ஆண்டவர் : நீ போனா கூடதான் அவன் வெளிய போயிடுறான்...! 7வது இடம் குடுத்ததுக்கு ஏன் எகுறுன?
லாஸ் : ஏன் என் கணவருக்கு 5வது இடம் குடுத்தா ஆகாதாமா? அதுக்குதான் என்னன்னு கேட்டேன்....
ஆண்டவர் : கேம் விளையாடும்போது கேம மட்டும் விளையாடுங்கன்னு ஆயிரந்தடவ சொல்லியாச்சு ஆனா கேக்குற மாதிரி இல்ல இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு உங்க புருஷன் பொண்டாட்டி சேட்டையெல்லாம் நிப்பாட்டிட்டு கொஞ்சம் கேம விளையாண்டுட்டு வெளிய வாங்க
கவின் : சார் பேபிய திட்டாதீங்க....
ஆண்டவர் : நாசமாப்போச்சு...! இதுக்கு மேல இவனுங்ககிட்ட பேச எனக்கு திராணியில்ல. எவிக்ஷன நாளைக்குப் பாக்கலாம்...//
பின்ன என்ன எல்லாரும் எதிர்பார்த்த சீன் தான் ! லாஸும் கவினும் மூஞ்சிய தூக்கிட்டு பக்கத்துல பக்கத்துல உக்காந்திருந்தானுங்க....! என்ன பேசிக்குவானுங்கன்னு ஊருக்கே தெரியும். அதனால பெருசா எதும் கவலைப்படாம மத்த ஆளுங்க சிக்கன சின்னாபின்னப்படுத்தி சாப்ட்டுட்டு இருந்தாங்க. அவ்ளோதான்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)