பிக்பாஸ் 3 : நாள் 87 தொடர்ச்சி & 88ம் நாள் (19.09.19)


பிக்பாஸ் 3நாள் 87 தொடர்ச்சி & 88ம் நாள் (19.09.19)


முட்டைய அடை காக்கும் டாஸ்க் தொடர்ந்துச்சு. கோழி மாதிரி முட்டை பக்கத்துலையே உக்காந்திருந்தானுங்க. ஷெரின் பிக்பாஸ் கிட்ட “அடேய் உனக்கு இன்னும் 10 நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள முடிச்சிரு இல்லேன்னா கேசமே போச்சுன்னு கேம விட்டுட்டு நான் பாட்டுக்கு போயி தூங்கிருவேன்”னு சொல்லிட்டு இருந்தாங்க. சொன்ன மாதிரி அடுத்த 10 வது நிமிஷத்துல தூங்கிட்டாங்க.
உடனே சேரன், சாண்டி & தர்ஷன் ப்ளான் பண்ணி ஷெரின் முட்டைய ஒளிச்சு வச்சுடானுங்க. எந்திரிச்சுப் பாத்த ஷெரின் “எங்கடா இங்க இருந்த முட்டையக் காணோம்?”னு கேக்க “அதெல்லாம் காக்கா தூக்கிட்டுப் போயி கால்மணி நேரமாகிடுச்சு”ன்னு சொல்ல, “ரொம்ப சந்தோஷம்”னு உள்ள போயி தூங்கிட்டாங்க. அப்பறம் ஷெரின் முட்டையையும், சாண்டி முட்டையையும் கவினும், முகினும் உடச்சுட்டானுங்க. தற்காலிகமாக டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டது. எல்லாரும் போயி பொத்துன்னு பெட்டுல விழுந்தானுங்க.
நாள் 88
“காக்கா முட்டை காக்கா முட்டை”ன்னு பாட்டு ! சிச்சுவேஷன் சாங்காமாம் ! காவலன் மாதிரி கால்கடுக்க நின்ன சேரன் சாருக்கு முதுகு லாக் ஆகிடுச்சு. பாவம் படுக்க, நிமிர கூட முடியாம நாலு பேரு தூக்கி கட்டாந்தரையில கால நீட்டி படுக்கு வைக்குற அளவு ஆகிப்போச்சு நிலமை. முட்டைக்கு ஆசைப்பட்டு முதுகு லாக் ஆகிடுச்சேன்னு பொலம்பிட்டு இருந்தார். அதுக்கப்பறம் முழுக்க சேரன் செங்குட்டுவன் ஆத்திச்சூடி அவ்வையாரா மாறி குடைய சப்போர்ட்டுக்கு வச்சு நடந்துட்டு இருந்தார்.
வெளிய தர்ஷன், முகின், சாண்டி பேசிட்டு இருந்தாங்க. முகின் “ஷெரின் சும்மா ஃபன்னுக்குதான் விளையாடுது”ன்னு சொல்ல தர்ஷனோ “ஏண்டா ஃபன்னுக்கு இப்பிடியாடா விடிய விடிய தூங்காம வெளையாடுவானுங்க....? அதெல்லாம் எல்லாம் கோல்டன் டிக்கெட்டுக்குதான் விளையாடுறானுங்க”ன்னு உண்மைய உரக்க சொல்ல, அத ஆமோதிச்சாப்ல சாண்டி.
சாண்டிய உள்ள கூப்ட்ட பிக்பாஸ் “என்ன சாண்டி டிக்கெட் டு ஃஃபினாலேவப் பத்தி என்ன நெனைக்கிற?”ன்னு கேக்க...”அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. டைரக்டா ஃபைனலுக்கு போகலாம்னா யாருக்குதான் கசக்கும்? ஜெயிக்கிறோமோ இல்லையோ சண்டை செய்யனும்”னு சொல்லிட்டு போயிட்டாப்ல.
முகின் கிட்ட “ஷோ முடிஞ்சதும் எத மிஸ் பண்ணுவ?”ன்னு கேட்டதுக்கு “என்ன முட்டாத்தனமா கேக்குற? ஷோவதான் மிஸ் பண்ணுவேன். இந்த வீட்ட, உன்னய, பசங்கள எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்”னு சொன்னான்
“ஷெரின் எப்பிடி இருக்கு டிக்கெட் டு ஃபினாலே? ஷோ முடிஞ்சா என்னத்த மிஸ் பண்ணுவ?”ன்னு கேக்க, “ரொம்ப படுத்துறீங்கடா டேய். ஆனாலும் நல்லாத்தான் இருக்கு”. அப்பிடின்னு ஆரம்பிச்சு அவங்க அம்மா, சித்தி, நாய்குட்டின்னு போயிட்டு “ஆமா நீ என்ன கேட்ட? மறந்துபோச்சு மறுபடியும் கேளு”ன்னு சொல்ல, “உங்கிட்ட பேசுனதுக்கு என்னயத்தான் கூரை மேல கோழி மாதிரி நிக்க வைக்கனும்”னு நெனச்சுக்கிட்டு “அதுவா நீ ரொம்ப அழகாயிருக்க”ன்னு சொன்னாப்ல.
இதக் கேட்டுட்டு வெளிய வந்து ஷெரின் எல்லார்கிட்டையும் “பிக்பாஸன் என்னய ரொம்ப ஆழாயிருக்கன்னு சொல்லிட்டான்”னு குதிச்சிட்டு இருந்தாங்க.
அடுத்து 8 வது டாஸ்க்கு ! ஆளாளுக்கு ஒரு கூடை நெறைய வெள்ளைப் பந்து இருக்கும். பொதுவா நடுவுல மஞ்சப் பந்தும், செவப்பு பந்தும் இருக்கும். எல்லாரும் மஞ்சப்பந்த எடுத்துக்கலாம். அடுத்தவங்க கூடையில இருந்தும் பந்த எடுத்துக்கலாம் ஆனா செவப்பு பந்து மட்டும் மைனஸ் மார்க். அது யாரு கூடையில இருக்கோ அவங்களுக்கு மைனஸ் மார்க் வரும்.
சேரன் சார், “உன்னய நம்பி உள்ள வந்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சுட்ட. நான் முதுகு வலியில இருக்குற நேரத்துல குடுக்க வேண்டிய டாஸ்க்காடா இது? இந்த முதுகோட நான் பந்தெடுக்க போனா என் பாடிய எடுக்கதான் ஆள் வரணும். ஆனாலும் வேற வழியில்ல வந்து தொலையிறேன்”னு பிக்பாஸ அசிங்க அசிங்கமா திட்டியபடி வந்தார்.
ஆரம்பிச்ச அஞ்சு நிமிஷத்துல பிஸ்கட்ட பாத்த பக் டாக் மாதிரி அடிச்சுக்கிட்டானுங்க. அப்பறம் கொஞ்சம் ரிலாக்ஸாகிப் பாத்தா பூராம் கைல கீரலோடையும் , ரத்ததோடையும் நிக்குறானுங்க.
இருந்திருந்தாப்ல சாண்டி லாஸோட கூடையில இருந்து பந்த எடுக்க ஓடும்போது லாஸ இடிச்சு மேல விழுந்துட்டாப்ல. அவ்ளோதான் நம்ம மேம்படுத்தப்பட்ட மெண்டல் கவின் கைல நாக்குப்பூச்சி ஏற ஆரம்பிச்சது. “யோவ் சாண்டி எதுக்க பொம்பளையாள் வராங்களேன்னு பாக்குறதில்ல? அப்பிடியே பப்பரப்பான்னு பாராசூட் மாதிரி போயி மேல விழுகுற?”ன்னு பொங்க. சாண்டியோ “யப்பா டேய் பேசாம இவள கொண்டி மார்ச்சுவரி பிரிட்ஜுக்குள்ள வச்சுக்கடா அப்டியே ஃப்ரஷ்ஷா பாதுகாப்பா இருப்பா....வெளையாட்டுன்னா அப்பிடி இப்பிடி இடிபடத்தான் செய்யும் ரொம்பப் பண்ணாத”ன்னு சொல்ல, “யாரு நான் ரொம்பப் பண்றேனா? 80 நாளுல நான் என்னைக்கு ரொம்பப் பண்ணேன்?”னு கேட்டான் பாருங்க ஒரு கேள்வி....உலகமே ஒரு  நிமிஷம் நின்னு சுத்துச்சு. அப்பறம் அவன் சம்சாரம் “மாமா, அதெல்லாம் ஒண்ணுமில்ல விளையாடுங்க”ன்னு சொன்னதும் சமாதானமாகி நிக்க, முகின் ஓடிப்போயி லாஸப் பாத்து பேசிட்டு வந்தான்
செண்பகத்தம்மன் படத்துல வர செய்வினை பொம்மை மாதிரி மூஞ்சிய வச்சிருந்த லாஸப் பாத்து “என்னாச்சு எதாச்சுன்னு?” தர்ஷன் விசாரிக்க ஷெரின் “கவின் கிட்ட என்ன உன் பொண்டாட்டிய ஊரே விசாரிக்குது ? உன்னயத்தவிர”ன்னு ஏத்தி விட.....ஆட்டைய அப்பிடியே விட்டுட்டு அது கிட்ட போயி “உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்னு” பாடிட்டு இருக்க, லாஸோ “அடேய் என்னடா இது எகத்தாளம்? இது கிரவுண்டுடா ! எல்லாரும் பாக்குறங்க”ன்னு சொன்னதுக்கு “அப்ப எல்லாரையும் வெளிய அனுப்பிடலாமா”ன்னு கேக்க, “நாசமாப்போனவனே என்னய நல்லாவே இருக்க விடமாட்டியா போயி விளையாடுடா பக்கி”ன்னு சொல்லிடுச்சு.
கவின் கூடையில இருந்து பந்துகள எடுத்து தன்னோடதுல கொட்டிக்கிச்சு ஷெரின். சிதறுன பந்துகள எடுத்து கவின் ஷெரின் கூடைக்குள்ள “இதையும் நீயே வச்சுக்கோ”ன்னு போட ஷெரினுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு. முகின் விளையாட்ட நிப்பாட்ட சொன்னதுக்கு மூதேவி சம்பந்தமில்லாம “உனக்காக நாங்க ஏன் விளையாடாம இருக்கனும்?னு கவின கேக்க, “அதத்தான் நானும் கேக்குறேன் நீங்க ஏன் கேம நிப்பாட்டுனீங்க? நான் நிப்பாட்ட சொல்லவே இல்லையே?”ன்னு கவின் கேட்டதுக்கு “விளையாட விருப்பமில்லன்னா வராதீங்கையா”ன்னு அதுவா என்னென்னமோ பேசிட்டு கூடைய எத்தி விட்டுட்டு போயிடுச்சு.
அப்பறம் கவின் தன் தரப்ப எப்பவும் போல ஒரே ஃப்ரீக்வென்ஸில பேசிட்டு இருந்தான். அப்பறம் தர்ஷன் போயி ஷெரின சோப்பு போட்டு கூட்டிட்டு வந்தான். பாக்க நல்லா இருந்துச்சு. இதத்தான் கவினும் லாஸ்கிட்ட செஞ்சான் ஆனா நாம கவினதான் திட்டுவோம்.
அப்பறம் ஷெரின் மேடம் வெளிய வந்து பிக்பாஸ்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு கூடைல அவங்க பந்த மட்டும் எடுத்துக்கிட்டு கவின் பந்த அவன் கூடைக்குள்ளயே போட்டுட்டாங்க. இந்த டாஸ்க்குல முகின் வின்னு.
சாண்டியும், கவினும் மறுபடி லாஸ இடிச்ச விஷயத்த பேசி சரி பண்ணிக்கிட்டானுங்க.
அப்பறம் மறுபடியும் முட்டை டாஸ்க்கு தொடர்ந்துச்சு. வெளிய செம்ம மழை. “கவினும், லாஸும் பேசிட்டு இருக்கானுங்க அப்டியே தூங்கிடுவானுங்க அந்த நேரத்துல அவனுங்க முட்டைய ஒடச்சிடுவோம்”னு தர்ஷனும், முகினும் ப்ளான் பண்ண “யாரு அதுக ரெண்டும் தூங்க? போங்கடா பொசகெட்டவனுங்களா அவனுங்க 5 வருஷமானாலும் இப்பிடியே பேசிட்டு இருப்பானுங்களே தவிர தூங்க மாட்டானுங்க”ன்னு சாண்டி சொன்னாப்ல. அப்பறம் சேரன் சார் “போதுண்டா நீங்களும் உங்க முட்டையும்”னு சொல்லிட்டு போயிட்டாப்ல. முகினும், தர்ஷனும் மட்டும் கொட்டுற மழையில குடையோட முட்டைய அடை காத்துட்டு இருந்தானுங்க.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)