பிக்பாஸ் 3 : நாள் 70 (01.09.19)


பிக்பாஸ் 3நாள் 70 (01.09.19)


“இந்த வீட்டுக்குள்ள ஆண்கள் பெண்கள அடிமைப்படுத்துறதா ஒரு கேரக்டர் நம்மள படுத்தி எடுத்துட்டு இருந்துச்சு. ஆனா பாருங்க நாட்டுல நம்ம பெண்கள் எல்லாம் விளையாட்டுல தங்கப்ப தக்கமா வாங்கி குமிக்கிறாங்க. அதனால அவங்களா விரும்பாம அடிமையா இருக்க முடியாது. சரி மெசேஜ் முடிஞ்சது. உள்ள போலாம்”னு ஆண்டவர் சொன்னார்.
அகம் – அகம்
“ஏண்டா உள்ள எவனக்கேட்டாலும் ‘ஐ மேட் எ மிஸ்டேக்கு’ன்னு சொல்லிட்டே இருக்கீங்களே அப்ப நீங்க சரியா எதுவுமே பன்ணலையாடா?”ன்னு கேட்டார். இத எதுக்கு சொன்னாருன்னு ஆண்டவருக்காச்சும் தெரிஞ்சா சரி
காலர் ஆஃப் த வீக்
லாஸுக்கு – சேரன் உண்மையான பாசத்தோட இருக்காரு. ஆனா நீ அப்பிடி இருக்கியா? கவின் அவரப்பத்தி உங்கிட்ட அசிங்கமா பேசுனா கூட அல்டிமேட் காமெடியா நெனச்சு சிரிச்சிட்டு இருக்க? என்ன கணக்கு?
லாஸ் : என்னோட பாசத்த அவர மாதிரி ஒவ்வொருத்தர் கிட்டயும் போயி சொல்லி சொல்லி காமிக்க முடியாது. ‘வந்தாதான் சாப்புடுவேன்’னு அடம்பிடிக்கிற ஆளு நேத்து கூட நைசா சிக்கன நகட்டிட்டு தனியா போயிட்டாரு. ‘உன்னாலதான் ஷோவுல இருக்கேன்’றாரு. ஆனா நான் ஜெயிலுக்கு உள்ள போக மொத ஓட்ட அவருதான் குத்துறாரு. அப்பறமா ஜெயில் வாசல்ல குத்த வச்சு குமுறி குமுறி அழுகுறாரு. டாஸ்க்குல நான் அவர அப்பான்னு நெனச்சு விட்டுக் குடுத்தா அவரு என்னய மகளாப் பாக்காம வெரட்டுறாரு. ஆனா கமல் சாரப் பாத்தா சட்டுன்னு கண்ணீர் விட்டு பசப்புறாரு. ஏற்கனவே இந்த கவின் பய கரைச்சல்ல கன்பியூசன்ல இருக்கேன் இதுல இந்தப் பஞ்சாயத்து வேறயா.....ஃபோன வை....!
“சரி ரசிகர்கள் உங்கக்கிட்டயெல்லாம் கேள்வி கேக்கனுமாம். பதில் சொல்லுங்க சொங்கிகளா”ன்னார்.
# ஷெரின்
எப்பதான் கேம் விளையாடுவ?
(M V : இத எத்தனவாட்டிதான் கேப்பீங்க?) இப்ப நான் கேம்தான் விளையாடிட்டு இருக்கேன். அது உங்களுக்கு கேமா தெரியலேன்னா நான் என்ன பண்றது?
# சேரன்
கம்பேக் எப்பிடி இருக்கும்?
(M V : அடப்பாவிகளா திருமணம் படத்த எவனுமே பாக்கலையா?) நல்லாத்தான் இருக்கும். விஜய் சேதுபதி படம் குடுத்துருக்காரு.
# முகின்
எப்பிடி இங்கயே இருக்குற மாதிரியா? இல்ல மலேஷியாவுக்கு கோ பேக்கா?
(M V : ஜெயிக்கலேன்னா எப்பிடியும் போக முடியாது) இப்பிடியே இங்கன இருக்கலாம்னுதான் பாக்குறேன். தமிழ்நாடு வாழ வைக்காதா என்ன?
# லாஸ்
வந்த நோக்கம் நிறைவேறிடுச்சா? ஒழுங்கா பண்ணிட்டன்னு நெனைக்கிறியா?
(M V : இதுக்கு மேல நீ நெனைக்கிறததான் பண்ணனும்) நான் ஊருக்கு என்னய தெரியனும்னு வந்தேன் தெரிஞ்சுடுச்சு. இதுக்கு மேல நீ நெனைக்கிற மாதிரி இருக்கனும்னா. தலை கீழாத்தான் நிக்கனும்.
லவ்வ தவிர உங்கிட்ட என்ன கேக்குறது?
(M V : அப்பிடி ஒண்ணும் நீ கேள்வி கேட்டு கிழிக்க வேணாம்) உனக்கு எடிட்ல அப்பிடி தெரியுது. அதுக்கு நான் என்ன பண்றது? எனக்கு முக்கியமான ஆளுங்ககிட்டதான் பேச முடியும். உங்கிட்ட என்னய நல்லவளா காட்டுறது எனக்கு அவஷ்யமில்ல.
# வனி
உன் சாஃப்ட் டார்கெட் தர்ஷன் தான். வேற யார மைண்ட்ல வச்சிருக்க?
(M V : யாருடா அவ....எங்கிட்டயே இவ்வளவு தைரியாமா கேக்குறது?) அது என்ன சாஃப்ட் டார்கெட்? அதெல்லாம் டார்கெட்லாம் யாரையும் பண்ணல. சில பேருகிட்ட கேள்வி கேக்குறேன் அவ்வளவுதான்
முன்னாடி கொசுவ அடிச்சிட்டு இருந்த. இப்ப யானைகளெல்லாம் திரியுது அத அடிக்கிறது இல்லையே?
(M V : உனக்கென்ன....இவனுங்க எல்லாம் திருப்பி அடிக்கிற கேசு. நாந்தான் வாங்கனும்) சொன்னா காது குடுத்து கேக்குற ஆளுங்ககிட்டதான் சொல்ல முடியும். இவனுங்க காலு கைய எடுக்குறவனுங்க. அதான் ஒண்ணும் சொல்றதில்ல.
# கவின்
வெளிய போயி பேசிக்கலாம்னு சொல்ற அப்பிடி என்ன பேசுவ?
(M V : அத வெளிய வந்து பேசுறப்போ ஒட்டு கேளு) அதெல்லாம் ரகசியம். சொல்றதுக்கில்ல. அது இருக்கு நெறைய. உள்ளயே பேச முயற்சி பண்ணிதான் மைக்க ஆஃப் பண்ணேன். புடிச்சுட்டானுங்க.
# விட்டுக்குடுக்குற மாதிரி நடிக்கிறியோ?
(M V : நடிக்கத் தெரியாமதான இங்க வந்து குத்த வச்சிருக்கேன்) அதெல்லாம் இல்ல பசங்க ஜெயிச்சா பிரயோஜனமா இருக்கும் அதான்
# சாண்டி
லாஸ் – கவின் மேட்டர்ல எதுக்கு அவங்கள பிரிக்கிற?
(M V : பிரிச்சேன்.....நீ பாத்த?) நான் கொஞ்சம் கவனமா இருங்கடான்னுதான் சொல்றேன். பிரிக்கல்லாம் இல்ல. இதுக்கு மேல அவன் அசிங்கப்பட வேணாமேன்னுதான் சொன்னேன்.
மத்தவங்கள கலாய்க்குற ஆனா உன் பசங்கள கலாய்ச்சா உஷாரா வார்னிங் குடுக்குற ஏன்?
(M V : இவனலாம் கேள்வி கேக்கலன்னு யாரு அழுதா?) ஃபிரண்ட்ஸ் கேங்னா அப்பிடித்தான் ஆனா இத ஜாலியா எடுத்துக்கிட்டா தப்பில்ல.
# தர்ஷ்
நீ ஹீரோ மாதிரி இருக்க ஆனா ஹீரோவா இருக்க என்ன தகுதி இருக்கு உங்கிட்ட?
(M V : மூதேவி....நான் ஹீரோ மாதிரி இருக்கேன்னு நீ சொன்னதே தகுதிதான?) தப்புன்னா தட்டி கேக்குறேன். அன்புன்னா கொட்டிக் குடுக்குறேன். ஷெரின் கூட நாட்டி பண்ணுறேன். ஒரு ஹீரோ இத விட வேற என்ன பண்ணனும்?
உன் நண்பர்கள்கிட்ட அவங்க தப்ப எப்ப எடுத்து சொல்லப் போற?
(M V : சொன்னா எவன் கேப்பான்?) சொல்லனும். சொன்னா தப்பா எடுத்துக்குவாங்களோன்னு ஒரு பயம். ஆனா சொல்லிடுவேன்.
முடிஞ்சது. இதுல ஆண்டவர் குறுக்க குறுக்க புகுந்து சில டைமிங் டைனமைட் வெடிச்சார். ஆண்டவர் ஃபார் எ ரீசன்.
“சரி சில கார்டுகள குடுக்குறேன் அதுல இருக்குற வார்த்தைகள வச்சு ஒரு கதைய கோர்வையா சொல்லனும். அதுக்கு பிராக்டீஸ் பண்ணுங்க. நான் வரேன்”னு பிரேக் விட்டு போனாரு. அதே நேரம் உள்ள அண்ணன் சேரன் அன்லிமிட்டெட் பெர்பார்மன்ஸ ஸ்டார்ட் பண்ணியிருந்தாரு.
வனி : சுத்தி நடக்குற ஒண்ணும் தெரியல. கூடவே இருக்கானுங்க பக்கிக நான் டார்கெட் பண்றேன்னு போட்டுக் குடுக்குறானுங்க.
சேரன் : அடப்போம்மா....என் பொண்ணே என்னய போயா பொங்கல்னு சொல்லிடுச்சு.....
வனி : சார்....அது உங்க பொண்ணு இல்ல பொண்ணு மாதிரி. விட்டா போகும்போது உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போயி உங்க மச்சினன் பையனுக்கு கட்டி வச்சுருவீங்க போல. இவ்வளவு ஆகாது சார். கொஞ்சம் கொறைங்க.
சேரன் : எங்கிட்ட பேசியிருக்கலாமே? பசிக்குதுன்னு விட்டுட்டு சாப்ட்டேன் இது குத்தமா?
வனி : அதுக்கு பசிக்கலன்னு வரல அது ஒரு குத்தமா? நீங்களும் இத ஊரு பூராம் சொல்றது நியாயமா? அப்பாவா அது நெனச்சிருந்தா உங்க முன்னாடியே கைய கோர்த்துக்கிட்டு சுத்துமா?
சேரன் : கிளிக்கு ரெக்கை முளச்சிடுச்சு....
வனி : அது கிளி இல்ல மைனாம்மா....
சேரன் : (M V : இதுக்கு லாஸே பரவாயில்ல)
வனி : அந்த டார்கெட் கேள்வி கேட்டவ யாருன்னு கண்டுபிடிச்சு கரண்டு ஷாக் குடுக்கனும்.
மறுபடியும் ஆண்டவர். “நீங்க கேட்ட கேள்வியெல்லாம் உள்ள கத கதன்னு எரியுது. ஆனா கதை ரெடி பண்ண சொன்னேன். என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு பாப்போம்”னு உள்ள போனார்.
ஆளாளுக்கு ஆத்துனானுங்க. சேரன் வந்தார்.
ஆண்டவர் : சேரன் சொல்லுங்க உங்க கதைய
சேரன் : சார் இதுல உண்மை, பொய்னு ரெண்டு கார்டு இல்ல
ஆண்டவர் : இருக்காது. ஏன்னா அத வைக்கவே இல்ல...
சேரன் : அது இருந்தாதான் கதை சொல்ல முடியும்
ஆண்டவர் : அது இல்லாம மத்த ஆளுங்கலாம் சொன்னாங்களே?
சேரன் : எனக்கு அது இருந்தாதான் சொல்ல முடியும் சார்
ஆண்டவர் : அப்ப நீ கதை ரெடி பண்ணல
வனி : (M V : எங்கூட உக்காந்து எமோஷன ஊத்திட்டு இருந்தா எப்பிடி கதை ரெடியாகும்?)
சேரன் : நான் கதை சொல்ற மன நிலையிலையும் இல்ல சார்.
ஆண்டவர் : இவ்வளவு உணர்ச்சிவசப்பட தேவையே இல்ல. இந்த வீடு உலகம் இல்ல. என்னமோ நீங்க நெனைக்கிற மாதிரி வெளிய வெட்டியா உக்காந்து ரியாக்ட் பண்றானுங்கன்னு நெனைக்கிறீங்களா? அதெல்லாம் இல்ல.
சேரன் : இருந்தாலும் விட்டுட்டு சாப்ட்டேன்னு சொல்றது....
ஆண்டவர் : யப்பா சாமி.....அவங்கப்பாவே அவள தனியா விட்டுட்டு ஜாலியா இருக்காரு. ஆனா உன் பாசப் பாரசெட்டமால் இருக்கே தாங்கல. ரொம்ப நோண்டிக்கிட்டே இருக்கக் கூடாது. அவ சுதந்திரம் அவ கையில. நீ கயித்த இழுக்காத சரியா? லாஸு நீயும் ரொம்ப குழம்பிக்காத. உனக்கு தோணுறத செய்யி. மிஸ்டர் சேரன் வெளிய வந்தாச்சும் ஒழுங்கா கதை சொல்ல பாருங்க
சேரன் : வெளிய வந்து தேவர் மகன் – 2 கதை சொல்றேன்.
ஆண்டவர் : பாருடா....ம்ம்ம்ம்ம் சரி (நீ சொல்லு. நான் கேட்டாதான)
மறுபடியும் சேரன் தர்ஷ்கிட்ட அதே பொலம்பல். இந்த தடவை கவின உள்ள இழுத்துட்டாரு. “அவந்தாண்டா என் பொண்ண இன்ஃப்ளுயன்ஸ் பண்ணிட்டானு” சொன்னார்.
அப்பறம் ஆண்டவர் வந்தாரு. ஏதேதோ ட்ராமா பண்ணி, குறும்படமெல்லாம் காட்டி எவிக்ஷன் இல்லேன்னாரு. உள்ள எவனும் ரியாக்ட் பன்ணல. “ஏண்டா இப்பிடி சாத்தி வச்சா மாதிரி உக்காந்திருக்கீங்க? துள்ளி குதிச்சு கொண்டாட வேணாமா? என்னமோ போங்கடா? ஆனா அடுத்த வாரம் எவிக்ஷன் இருக்கு”ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.
கவின் 1325 வது தடவையா ஷெரின் கிட்ட தன்னிலை விளக்கம் குடுத்துட்டு இருந்தான். எடுத்து சொல்றதுல ஷெரின் கிட்ட ஷெர்லாக் ஹோம்ஸே பிச்சை வாங்கனும். அவ்வளவு அழகா பாயிண்டா பேசுனாங்க. கவினோ “நான் கல்யாணம் பண்ணாலுமே இவனுங்களுக்கு என்ன? இடையில புகுந்து ஆட்டைய கலைக்குறானுங்க”ன்னு பொலம்புனான். ஆனா சேரன் கண்டிப்பா இவனுங்க ஆட்டைய கலைக்கல. இவந்தான் ஆடு திருடு போனாப்ல கனவு கண்டுட்டு இருக்கான். சில்லி பாய்.
வனி : மறுபடியும் இவனுங்க நாமினேஷன்ல கொண்டு வந்து நிறுத்திடுவானுங்க. இவனுங்களுக்கு எதுக்கு நல்லது செய்யனும்?
சேரன் : ஏதோ 3 வாரம் தப்பிச்சேன். இந்த வாரம் வழுக்கி விழுந்துருவேன் போல
வனி : நீங்களாவது ஜெயிக்கப் பாருங்க. யாருகிட்ட தோக்குறதுன்னு ஒண்ணு இருக்குல்ல
சேரன் : (M V : ஏன் உங்கிட்ட தோத்தா ரொம்ப பெருமையா இருக்குமா எனக்கு?)
வனிதா ஒரு டைனிங் டேபிள் மாநாடு போட்டாங்க. தர்ஷன் தான் கேப்டனா இருந்த காலத்துல மாற்றங்கள் கொண்டு வந்தேன்னு சொன்னதால அத பிரேக் பண்ண இவங்களும் சில மாற்றங்கள் கொண்டு வரேன்னு சொல்றாங்க போலஉங்களுக்கு சமைச்சுக் கொட்ட நான் வரல. சோ இனிமே சமையல் வேலையில நான் சூப்பர்வைசர் வேலை மட்டுந்தான் பாப்பேன். ஆனா சொல்லிக்குடுப்பேன். நீங்களே கத்துக்கோங்க. நான் இல்லேன்னாலும் சமச்சு தின்னுங்கன்னு சொன்னாங்க. (இந்த போண்டாக்குள்ளையும் எதோ இருக்கு பாரேன்) என்ன பண்ண காத்திருக்கானுங்களோ.....பாப்போம்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)