பிக்பாஸ் 3 : நாள் 70 தொடர்ச்சி & 71 (02.09.19)
பிக்பாஸ் 3நாள் 70 தொடர்ச்சி & 71 (02.09.19)
சட்டி சட்டியா
வந்த சிக்கன் சாப்பாட சகட்டுமேனிக்கு தின்னானுங்க. வாஷ்பேசின்ல வடை சட்டி கழுவிட்டு
இருந்த ஷெரின் கிட்ட கவின் தட்டு கழுவனும்னு சொல்லி வெளையாடிட்டு இருந்தான். பதிலுக்கு
ஷெரினும் விளையாடிட்டு இருந்தாங்க.
வெளிய லாஸ்
லான்ல படுத்துக்கிட்டு “லா லா லா”ன்னு சோக ம்யூசிக் பாடிக்கிட்டு இருந்தப்ப ஒரு குரல்.....
சேரன் : லாஸு....சாப்பிடலையா?
லாஸ் :
(M.V : ரைட்டு....இன்னைக்கு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டோம்ல. இனி என்னய எங்க பாத்தாலும்
“சாப்ட்டியா?”தான். இப்பிடித்தான் ஒரு 15 நாளா “குட் நைட்” ஓடுச்சு. இப்ப “சாப்ட்டியா
சீசன்...!) வாங்க சேரப்பா.....! பசிக்கல அதுனால பேசுவோம்
சேரன் : சாப்ட்டியா
நீ ?
லாஸ் : அது
ரைட்டு....இன்னும் 10 நிமிஷம் கழிச்சு கேட்டா போதும். நைனா எனக்கு டவுட் என்னன்னா?
வாரம் முழுக்க விருமாண்டியாட்டம் வெறப்பாதான் இருக்க ஆனா வீக்கெண்டுனா மட்டும் கமல்
சார்கிட்ட “பெத்த பொண்ணே என்னய பெப்பே”ன்னு சொல்றான்னு கேசரி கிண்டுற? ஆக்ச்சுவலா உனக்கு
என்னதான் பிரச்சனை? உண்மையிலயே பாசமா இருக்கியா? இல்ல பாசமா இருக்குறதா நீயா உன்னைய
ஏமாத்திக்கிட்டு திரியிறியா?
சேரன் : இத
அன்னைக்கே அப்பாக்கிட்ட பேசி இருக்கலாமே? கவின் பய கூட நீ கப்பல் ஓட்ட அரம்பிச்சதுல
இருந்து இந்த அப்பாவ நீ நட்டாத்துல விட்டுட்ட. ப்ளே பண்ண வந்த இடத்துல ஃப்ளேம்ஸ் போட்டு
பாத்துட்டு இருந்தா பிக்பாஸ் வீட்டுக்காகுமா சொல்லு?
லாஸ் : அந்த
ஆம்லேட்ட நான் திருப்பிப் போட்டுக்குறேன் நீ கவலைப்பட வேணாம். உன்னய ஏதாச்சும் ஹர்ட்
பண்ணி இருந்தா மறந்துரு. மத்தபடி ஒண்ணும் இல்ல.
சேரன் : சரிம்மா....!
அப்பறம்.......சாப்ட்டியா? //
சமையக்கட்டுல
லாஸ் & கவின்
லாஸ் : கவின்
சேரப்பாகிட்ட பேசுனேன்.
கவின் : எங்கூட
சேராதப்பான்னு சொல்லி இருப்பாரே! அப்பறம் என்ன அப்பாவும் பொண்ணும் பேசிக்கிட்டீங்க.
இனி நான் எதுக்கு நடுவுல. என்னய விட்டுரு பொதுவுல.
லாஸ் : நீ ஒரு
பிரிக்கினிடா...! ஏண்டா என்ன பேசுனேன்னு சொல்றதுக்குள்ள வயலின தேய்க்குற.
கவின் : என்னத்த
சொல்லி என்ன ஆகப்போகுது ? எங்கூட நீ பேசுனாதான பிரச்சனை. வெளிய போயி பேசிக்கலாம். அதுவரை
பேச வேணாம். பேசிப் பேசி பிரச்சனைதான். அதனால பேச வேணாம். பேசாம இருந்தா பாதி பிரச்சனை
இல்ல. பேசாம இருந்துதான் பாப்போம்....
லாஸ் : பேச
வேணாம் பேச வேணாம்னு எவ்வளவு பேசுறான் பாரு....! யப்பா டேய்...பேசவே வேணாம். ஆள விடு
//
லான்ல சாண்டி
& லாஸ்
சாண்டி : பையன்
என்ன சொல்றான்?
லாஸ் : இன்னும்
அதுவரைக்கும் போகல
சாண்டி : கருமம்....!
நான் பையன்னு சொன்னது கவின
லாஸ் : அவனா....!
அவன் கூட பேச வேணாமாம். பேசுனா பிரச்சனையாகுதாம்
சாண்டி : இதையே
இவன் இப்பதான் கண்டுபிடிக்கிறானா? சந்தோஷம்...
லாஸ் : இவன்
ஒரு பக்கம்.....எங்க அப்பன் ஒரு பக்கம் ! மாமனார் - மருமகன் சண்டை போட்டு என் தாலிய
அறுக்குறானுங்க...
சாண்டி : ம்ம்க்கும்....அது
ஒண்ணுதான் இந்த வீட்ல குறை....போ போயி தூங்கு //
நாள் 71
“ஆ முதல் ஃ
தானடா” பாட்டு. தர்ஷ், சாண்டி, முகின் 3 பேரும் அக்குவேறா ஆணிவேறா பிரிச்சிட்டிருந்தானுங்க.
சாண்டி கவின்
கிட்ட “என்னதாண்டா பண்ணப்போற?”ன்னு கேக்க, “என்னத்த பண்றது. யாருகிட்டையும் பேசுறாப்ல
இல்ல. வீட்டு நியாபகமா இருக்கு விட்டா வெளிய போகலாம்னு பாக்குறேன்”னு பாவமா சொன்னான்.
ஒப்பேத்துறதுக்கு
டாஸ்க் எதுவும் இல்லேன்னா நம்ம பிக்பாஸ் கைல இருக்குற ஓரே ஆயுதம் ஓப்பன் நாமினேஷன்.
அதுவும் வனிதாவ நாமினேட் பண்ண முடியாத வாரத்துல ஓப்பன் நாமினேஷன் பண்ண சொல்லி தன் உடல்
நிலைய பாதுகாத்துக்கிட்ட பிக்பாஸ் தான் இந்த வாரத்தின் சிறந்த பெர்ஃபார்மர். என்னா
ஒரு புத்திசாலித்தனம்.
சொல்லி வச்சா
மாதிரி எல்லாரும் கவின் & லாஸ்தான். ஆனா பாசிட்டிவ் காரணங்கள். சேரன் மட்டும் கொஞ்சம்
வித்தியாசமா முகின தூக்குனாரு. முகின் அவர தூக்குனான்.
கவின் முன்னாடி
வந்து நின்னு “ஷெரினும், சேரனும் வெற்றிகள பாத்தவங்க அதனால பசங்க ஜெயிச்சா நல்லா இருக்கும்னு
நெனைக்கிறேன்”னு சொன்னான். அதுக்கு காரணம் சொல்றேன்னு கொஞ்சம் கண் கலங்குனதும் சேரனுக்கு
சேரல....”ஆத்தாடி இவனுங்க நம்மள தெருவுக்கு அனுப்பிருவானுங்களே”ன்னு பதட்டப்பட்டு “யப்பா
டேய் கவினு....வேற ஊருக்காரன்றதாலயோ , கஷ்டப் படுறானுங்கன்றதாலையோ விட்டுக்குடுத்தா
அது வெற்றியே இல்ல. நீயும் சிம்பதி கிரியேட் பண்ற மாதிரி இருக்கு. இதுல சிக்கப்போறது
நானாத்தான் இருக்கும். சோ அப்பிடி சொல்லாதன்”னு சொன்னார். பாயிண்ட்.
ஆனா வனிக்கு
சுழி சும்மா இருக்குமா? “இதெல்லாம் ஒரு காரணமா?”ன்னு ஆரம்பிச்சு முடிக்கிறதுக்குள்ள
“கவின் எனக்கு ஷெரின பிடிக்கல அதனால நாமினேட் பண்றேன் போதுமா?”ன்னு ஒரு பொடி டப்பாவ
தூக்கி அந்த கொரில்லா மேல போட்டான். அப்பவே அதுக்கு தலை கிறுகிறுக்க ஆரம்பிச்சது.
சாண்டியும்
முன்னாடி வந்து கவினையும், லாஸையும் நாமினேட் பண்ணிட்டு அதுக்கு நட்பார்த்தமா காரணம்
சொல்லி கலங்க, வனி கண்ண உருட்ட ஆரம்பிச்சது. சாண்டி சொல்லி முடிச்சுட்டு வந்து உக்கார....
வனி : சாண்டி
இப்ப ஏன் அழுகுற ? இது ஒரு கேம்.
சாண்டி : நீயெல்லாம்
இந்த வீட்டுக்கே பப்பி சேம்....உன்னயவே நாங்க பொறுத்துட்டு இருக்கோம். சும்மா இரு
வனி : ஒரு கேப்டனா
உன்னய அழக்கூடாதுன்னு சொல்றதுக்கு ரைட்ஸ் இருக்கு எனக்கு. அதான் சொல்றேன்
சாண்டி : உன்
ரைட்ஸயெல்லாம் லெஃப்ட்டுல தள்ளிருவேன்....என் பிரண்ட நாமினேட் பண்ண சோகம் எனக்கு. அதனால
என்ன உனக்கு? உன் பேச்ச நீ பேசுறாப்ல என் பேச்ச நான் பேசிக்கிறேன். நூ நோர் மூஸ்கோ.
சேரன் சார்
பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
சாண்டி இத சொல்லிட்டு
அழுதுகிட்டே வெளிய போயிட்டாப்ல. அங்க வந்த முகின் & தர்ஷ்கிட்ட “இவ என்ன லூஸா?
கேம் கேம்னு கசகசன்னுதே இத என்ன பண்றது?”ன்னு பொலம்பிட்டு இருந்தான்.
உள்ள கவின்
-வனி - லாஸ்
கவின் : இங்க
பாருங்க....என் எமோஷன நான் பேசுனா என்ன தப்பு?
வனி : மத்தவங்களுக்கு
நீ ஏன் மார்கெட்டிங் பண்ற? அப்பிடி பண்ணக்கூடாது....எப்பிடி வெளையாடனும்னு என்னயப்
பாத்து கத்துக்கோ...
லாஸ் : நேத்து
மட்டும் முன்னாடி வந்து எமோஷனலான?
வனி : அது எமோஷன்
ஸ்பீச் இல்ல....எவிக்ஷன் ஸ்பீச்...புரியுதா?
கவின் : என்
பிரண்ட்ஸ் ஜெயிக்கனும்னு நான் நெனைக்கிறதெல்லாம் தப்பில்ல...நான் அப்பிடிதான் பண்ணுவேன்
வனி : உன்னாலதான்
சல்பேட்டா வெளிய போனா சால அவ வாழ்க்கைய கெடுத்தது நீதான்....நான் பாத்தேன். இல்லேன்னா
அவ ஃபைனல் வரைக்கும் போயிருப்பா
கவின் : அவ
வெள்ளன எந்திருச்சு பாத்ரூமுக்கே போக மாட்டா....இதுல ஃபைனல் போற ஆளா அவ? வெளிய போயிட்டு வந்தா நீ சொல்றதெல்லாம் சரியாகிடுமா
என்ன?
சேரன் சார்
பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
வனி : வெளிய
போயி சும்மா இருந்த என்னய இந்த ப்ளடி ஃபூல் பிக்பாஸ் தாண்டா உள்ள கூட்டிட்டு வந்தான்.
அத ஒரு காரணமா சொல்லி நாமினேட் பண்றீங்க? என்னங்கடா நெனச்சுட்டு இருக்கீங்க? எல்லாம்
இந்த பிக்பாஸ் பண்ற தப்பு
கவின் : வெளங்காத
நீயி வேணாம்னு வெளிய அனுப்புனா மறுபடியும் நோகாம உள்ள வந்தா மக்களுக்கு வேகுமா இல்லையா?
இதுல எல்லாம் தெரிஞ்ச மாதிரி சலம்புற?
வனி : நீ வெளிய
போறதா இருந்தா போ. ஆனா சல்பேட்டாவ உள்ள கூட்டிட்டு வந்து விட்டுட்டு போ...
கவின் : எதுக்கு
அத அழவச்சு அவ்வ அவ்வா பாட வைக்கவா? அதெல்லாம் ரூல்லயே இல்ல...
சேரன் சார்
பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
லாஸ் : ஆமா
என் அனுமதி இல்லாம என்னயப் பத்தி எதுக்கு பேசுற?
வனி : அது என்
இஷ்டம்....நான் பேசுவேன்...! எல்லாம் இந்த எடப்பாடி பண்ற தப்பு
கவின் : அப்ப
நானும் என் இஷ்டத்துக்கு பேசுவேன். என் பிரட்ன்ஸ பத்தி நான் பேச உங்கிட்ட எதுக்கு கையெழுத்து
வாங்கனும்?
தர்ஷ் : நீ
மட்டும் உன் இஷ்டத்துக்கு பேசுற அவன் பேசக்கூடாதா?
ஹீரோ
என்ட்ரி.......!
சேரன் சார்
பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
வனி
: (ஆத்தாடி உள்ள வந்துட்டாண்டா....! இவன் கூட சண்டை போட்டா நம்மள போட்டுருவானுங்களே
! எதுக்கும் சாஃப்ட்டா ஆரம்பிப்போம்) ஏண்டா அவன் சேரன் விட்டுக்குடுத்து நீ ஜெயிக்கனும்னு
சொல்றான். அதப்பத்தி பேசமாட்டியா?
தர்ஷ்
: அதப்பத்தியெல்லாம் பேசியாச்சு. நீ பூட்ட ஆட்டாத.....! நானும் பாத்துட்டே இருக்கேன்
ஓவரா ஊளையிடுறியே?
கவின்
: மனுஷப் பயலுகளோட பழகியிருந்தா தெரியும் ! உங்கிட்ட கையக் குடுக்க காஞ்சனா பேய் கூட
கிட்ட வராது....உனக்கு மனுஷப்பதருகளப் பத்தி என்ன தெரியும்?
வனி
: டேய் எல்லை மீறி போறீங்கடா...... எல்லாம் இந்த ட்ரம்ப்பு பண்ற தப்பு.....
சேரன் சார்
பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
தர்ஷன்
: நாங்க என்ன பேசனும் பேசக்கூடாதுன்னு எங்களுக்கு தெரியும்? நீ எங்ககிட்ட எப்பிடி பேசனும்னு
தெரிஞ்சுக்கோ....
கவின்
: இவ்வளவு பேசுற உன்னயத்தான் 3 வது வாரம் வெளிய அனுப்புனாங்க மக்கள். அதே மக்கள்தான்
எங்கள இன்னும் உள்ள வச்சிருக்காங்க. குறுக்குசால்ல குறுக்க புகுந்து வந்துட்டு....இதுல
6 மணி அலாரம் மாதிரி ஆங்காரமா கத்திட்டு இருக்க....
வனி : மக்களையே
நீங்க இன்ஃப்ளூயன்ஸ் பண்ணப் பாக்குறீங்க. சோ சேட்! மக்களாடா இவனுங்க மக்களே இல்லடா
இந்த மக்களுக்கு அறிவே இல்லடா. உங்களையெல்லாம் இன்னும் உள்ள வச்சிருக்கானுங்க. ஆனா
என்னய மட்டும் பேச விடாம ஊளையிட்டு ஊமைக்குசும்பு பண்றானுங்க. அடேய் பிக்பாஸு இனிமே
எவனும் ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்லுடா.....! என்னய வெளிய அனுப்புனப்பவே பூரா பயலுகளையும்
மருந்தடிச்சு கொன்னிருக்கனும். எல்லாம் இந்த மக்கள் பண்ற தப்பு......
சேரன் சார்
பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
தர்ஷ் : உனக்கு
ஒரு விஷயம் புரியலேன்னா பேசாம இரு....வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத.....வீடு
வேற செட்டுதான் ஒரிஜினல் இல்ல
வனி : ஏண்டா
ஒரு பெண் போராளிய, ஒரு சிங்கப்பெண்ண இப்பிடி சிறுமைப்படுத்துறீங்களே இதெல்லாம் நல்லதுக்காடா?
கவின் : இந்தா
நான் மறுபடியும் சொல்றேன்....நான் வெளியவே போனாலும் பரவாயில்ல.....! இருக்குற வரை பசங்களுக்குதான்
சப்போர்ட் பன்ணுவேன்.....நீ என்ன பன்ணுவியோ பண்ணு...!
வனி : (M.V
ரைட்டு கூட்டு சேர்ந்துட்டானுங்க.....! கவினுக்கே கலவரம் பண்ற மூடு வந்திருச்சு....சும்மா
இருந்தவன சொறிஞ்சு விட்டுட்டோம் போல....தர்ஷ் வேற கை வைக்காத பனியன போட்டுக்கிட்டு
கைய முறுக்கிட்டு வரான்.....அப்டியே சைலெண்டா சைரன ஆஃப் பண்ணுவோம்.)
லாஸ், கவின்,
முகின் & சேரன் நாமினேஷன்ல இருக்கானுங்க.
பசங்க எல்லாம்
கவின கூட்டிட்டு அந்த இடத்த விட்டு நகர்ந்தானுங்க. ஒரு வழியா அப்போதைக்கு அமைதி திரும்புச்சு.
அப்பவும் சேரன்
சார் பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
சாண்டி : பையன் என்ன சொல்றான்?
ReplyDeleteலாஸ் : இன்னும் அதுவரைக்கும் போகல
சாண்டி : கருமம்....! நான் பையன்னு சொன்னது கவின
!!!!!!!!!!