பிக்பாஸ் 3 : நாள் 72 தொடர்ச்சி & 73 (04.09.19)
பிக்பாஸ் 3நாள் 72 தொடர்ச்சி & 73 (04.09.19)
பெட்ரூம்ல உக்காந்திருந்த
கவின், லாஸ் & தர்ஷ்கிட்ட அபி செல்லமா விளையாடிட்டு இருந்தாங்க. “எங்கள கொஞ்சம்
மகிழ்ச்சிப்படுத்தக் கூடாதா?”ன்னு கவின் அபி கிட்ட கேக்க, “ஏண்டா நான் என்ன திண்டுக்கல்
ரீட்டாவா? குனிஞ்சு நிமிந்து ஆடி உன்னய மகிழ்ச்சிப்படுத்த? போடா டேய்”னு ஓடிட்டாங்க.
தர்ஷனோ “கெஸ்டுன்னு 1 வந்ததுக்கே கிறுகிறுன்னு இருக்கு. இந்த அழகுல 3 வந்து நிக்குது.....நிம்மதியா
இருந்தா மாதிரிதான்”னு அங்காலாய்ச்சான்.
இங்குட்டு வனி
கிட்ட சல்பேட்டா
சல்பேட்டா
: உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இந்தக் காதல், கல்யாணம், சடங்கு, காதுகுத்து எதுவுமே
ஒர்த் இல்ல....”
வனி : (கிரகம்
எந்த மேட்டருக்கு வரான்னு தெரியலயே? குத்துமதிப்பா ஆரம்பிப்போம்...) ஆமா ஆமா லாஸ் கூட
பிரண்ட்ஷிப்னு சொன்னான் ஆனா இப்ப அப்பிடி இல்ல
சல்பேட்டா
: ஒரே ஒரு நாள் டாஸ்க்குல பனிஷ்மெண்ட் வாங்கிட்டு ஒரு அரை நாள் அவன் கூட இல்லாம இருந்தேன்......அவ்வளவுதான்.
கூட்டு வைக்குற கேப்புல பந்தியில இலை மாறி உக்காந்துட்டான் பிராடுக்காரப் பய....! சரி
எத்தன மாசமாம் ? ஏதும் சொன்னாளா அவ? //
ஷெரின், சல்பேட்டா,
வனி & சேரன் (இருட்டு அறையில் முரட்டு மீட்டிங்)
சல்பேட்டா
: ஓ ஷெரின் பேபி....! உன்னப் பத்தி பாஸிட்டிவாதான் இருக்கு வெளிய. சாண்டி,என் சக்காளத்தி,
கவின் கொஞ்சம் கொஸ்டீன் மார்க்ல இருக்கானுங்க ஆனா தப்பிச்சுக்குவானுங்க போல...
வனி : என்ன
பெரிய பாஸிட்டிவோ ? எனக்கில்லாத பாஸிட்டிவா?
சல்பேட்டா
: அட செம்ம பாஸிட்டிவ் ! ஷெரினுக்கு நல்ல பேரு
வனி : இருக்கும்
இருக்கும்...இப்பிடியே தர்ஷன் கூட தாண்டியா ஆடிக்கிட்டே திரிஞ்சா நல்லா இருக்கும் பேரு
சல்பேட்டா
: இல்லையே அப்பிடி ஒன்னும் வெளிய தப்பா தெரியலயே?
வனி : (உன்னயெல்லாம்
எதுக்கு உள்ள அனுப்புனானுங்க? வந்தோமா நாலஞ்சு கண்ணி வெடிய வீசி கலவரத்த உண்டாக்குனோமான்னு
இல்லாம....) அதெல்லாம் பயங்கரமா நடக்குது....அன்னைக்கெல்லாம் சமையக்கட்டுல அவன் கூட...
சல்பேட்டா
: அவன் கூட....?
ஷெரின் : அவன்
கூட நின்னு அஞ்சாவது விசில் எப்ப வரும்னு எண்ணிட்டு இருந்தேன் அவ்வளவுதான்
வனி : ஆமா வரிசைப்படுத்தி
பாட அது என்ன குன்னக்குடி முருகனா? குக்கருதான....? அப்பிடி சோடி போட்டு என்ன எண்ண
வேண்டி இருக்கு? அவன்லாம் அன்னைக்கு என்னய கூப்ப்டு “எனக்கு குடிக்க ஷெரின் கிட்ட பாலக்
குடுத்தனுப்பு”னு கொஞ்சம் கூட கேப்டன்ற மட்டு மரியாதை இல்லாம சொல்றான்.
ஷெரின் : போண்டா
போதும் ! இவளுக்கு என் மேலயெல்லாம் அக்கறை இல்ல தர்ஷ் மேல காண்டு. பையன் மத்தவன் மாதிரி
அடங்காம இவளுக்கு அல்லய திருப்புறதுல குறியா இருக்கான். ஏதோ எங்கூட இருக்குறதால இவ
வாய்ல இருந்து இன்னும் ரத்தம் கக்கல இல்லேன்னா நம்மாளு எப்பவோ சம்பவம் பன்ணியிருப்பான்.
வனி : உன் நல்லதுக்கு
சொன்னா என்னயவேவா?
ஷெரின் : நான்
உன் நல்லதுக்கு சொல்லிட்டு இருக்கேன்.....! என்ன ப்ளட் குரூப் உனக்கு? (கோவமா எந்திருச்சு
போக.....)
சேரன் : சல்பேட்டா
நம்மள பத்தி எதுவும் ?
சல்பேட்டா
: ம்ம்ம்ம்.....உன் மருமகனப் போயி கேளு....! //
சல்பேட்டா
& ஷெரின்
சல்பேட்டா
: வனி உன் நல்லதுக்கு சொல்றான்னுதான் நெனைக்கிறேன்
ஷெரின் : நல்லா
நனைப்ப....! ஒன்ணு பண்ண விடுறாளா? கண்ணாடியில முகத்த பாத்தா கேம்ல ஃபோகஸ் பண்ணுன்றா,
கக்கூஸ் போயிட்டு 5 நிமஷம் லேட்டா வந்தா கேமுல ஃபோகஸ் இல்லேன்றா, அன்னைக்கு அவ வச்ச
சாம்பார்ல உப்பில்லன்னு சொன்னதுக்கு எனக்கு கேம்ல ஃபோகஸ் இல்லேன்றா....! ரெட் கலர்
குட்டி ஸ்கர்ட்ட போட்டாக்கூடவா கேம்ல ஃபோகஸ் இல்லேன்னு அர்த்தம்? ஒரு நாளுல ஒரு மணி
நேரம் அவங்கூட பேசுனா என்ன கொறஞ்சு போகும்? கவின்லாம் ஃபுல் போகஸா லாஸ் கூடதான் குடும்பம்
நடத்திட்டு இருக்கான். ஆனாலும் உள்ளதான் இருக்கான். வெளிய போன ஆளு இதப் பத்தி பேசலாமா?
நான் உன்னய சொல்லல சல்பேட்டா...
சல்பேட்டா
: (M.V : இதுக்கு நீ என்னயவே சொல்லி இருக்கலாம்) //
சாண்டி, கவின்,
நைனா, சல்பேட்டா உக்காந்திருக்க.....
மோகன் : அடேய்
கவினு அன்னைக்கு யாருமே தள்ளி விடாம கீழ விழுந்த பாத்தியா? அத டிவில பாத்துட்டு கண்ணீர்
கசிந்துருகிட்டேண்டா கண்ணா....! என்ன ஒரு டெடிகேஷன்?
கவின் : (M.V
: என்ன இவன் கால் தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் டீ டிக்காஷன்னுட்டு இருக்கான்.....ம்ம்ம்ம்...சம்திங்
ராங்)
சல்பேட்டா
: ( M.V : ஆங் நியாபகம் வந்துருச்சு தேங்க்ஸ் டா நைனா ) சாண்டி அன்னைக்கு பின்னாடி
வந்த ரெண்டு பேருல குறிப்பா நான் தள்ளி விட்டதா நெனச்சான்ல ஒரு ஒண்ணுமில்லாதவன் அவங்கிட்ட
சொல்லிரு பின்னாடி இருந்து தள்ளி விடுற தட்டுகெட்ட பரம்பரையில நான் பொறக்கலேன்னு...
நைனா : வேற
எந்த பரம்பரைடா கண்ணா?
சல்பேட்டா
: ஆங் பக்கிங்ஹாம் பரம்பரை......அத தெரிஞ்சு என்ன பண்ண போற ? வாய மூடு!
கவின் : (M.V
: ஓ இதுக்குதான் நைனா பாயிண்ட் எடுத்து குடுத்தானா....சரி சரி) ஆனா இங்க கொசுத்தொல்லை
தாங்கலேல சாண்டிண்ணே?
சல்பேட்டா
: (M.V : என்னயதான் ஓட்டுறான்...ஆனா உண்மையாவே கொசு வேற கடிக்குது இப்ப சொறிஞ்சா அசிங்கமாயிடுமோ?
எப்பிடி பால் போட்டாலும் கோல் போடுறான்...) //
சாண்டிகிட்ட
கவின் “அண்ணே சல்பேட்டா என் பக்கம் மட்டும் சாயாம பாத்துக்கோ....பேசுற பேச்செல்லாம்
பாத்தா மூஞ்சில முட்டையும் தக்காளியும் வாங்காம போக மாட்டா போல....சொல்லி வை”ன்னு சொல்ல,
சாண்டி “யப்பா டேய் இந்த யோசனைய கொஞ்சம் தள்ளி வை...நீ பாட்டுக்கு எதாச்சும் பண்ணி
என்னையும் தொங்க விட்டு அடி வாங்க விட்டுராத....ரெண்டு நாளு பொறு ஆண்டவர் வருவார்....அடைக்கலம்
தருவார்” னு முடிச்சான்..
73ம் நாள்
“சில்லாக்ஸ்”
பாட்டோட சில்லுன்னு ஆரம்பிச்சது காலை. சாட்சாத் அந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தே அவதாரம்
எடுத்து உள்ள வந்தது போல ஒரு நளினமான நடனத்துக்கு தயாரானாங்க சல்பேட்டா. பச்சைக்கலர்
வெட்டுக்கிளி வெடுக்கு வெடுக்குன்னு தவ்வுற மாதிரி சடக்கு சடக்குன்னு ஸ்டெப்பப் போட்டு
ஜிவ்வுன்னு ஒரு ஜிலேபரா ஆட்டம் போட்டாங்க. போடு தகிட தகிட !
உள்ள சமையக்கட்டுல
ஷெரின் “கவின் கூட கூட்டு சேர்ந்து சமைக்குறதுக்கு நான் பேசாம ஜெயிலுக்கு போயி கப்பக்கஞ்சிய
கப்பு கப்பா குடிச்சுக்குவேன். ஒழுங்கா என்னய
டீம் மாத்திவிடுறியா?”ன்னு கேக்க வனியோ “அப்பிடி உன் இஷ்டத்துக்கு மாத்திக்க இது ஒண்ணும்
மாத்துத் துணி இல்ல புரியுதா?”ன்னு சொல்லிட்டாங்க. ஷெரினோ “இந்தா பெரிய பீரோ....உங்கிட்ட
முடியுமான்னுதான் கேட்டேன் முடியாதுன்ன போ.....ஆனா இருக்குற கடுப்புல கவின் கூட கலவரம்
பண்ணிருவேன்னு தோணுது. அப்பறம் குறுக்கால வந்து கட்டைய போட்டா உன் குறுக்குல மிதிச்சு
அனுப்பிருவேன் அவ்வளவுதான் பாத்துக்கோ”ன்னு பக்குவமா பயமுறுத்துனாங்க.
வனி, சேரன்
& நைனா
வனி : சேரன்
சார் நான் அன்னைக்கு சொன்னேன்ல நீங்க ஒரு டம்மி அப்பான்னு அது வெளிய நல்ல ரீச்சாம்
வைத்தி சொல்றான்....ஹா ஹா ஹா
சேரன் : (M.V
: இவ ரீச்சுக்கு சிரிக்கிறாளா இல்ல என்ன டம்மின்னு சொன்னது ரீச்சாகுதுன்னு சிரிக்கிறாளா?)
பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லும்மா....
மோகன் : நீங்க
நா தழுதழுக்க அவகிட்ட பேசுறத மாடுலேஷன் மாறாம கவின் கிட்ட மிமிக்ரி பண்ணி சிரிக்கிறா
சார்....
சேரன் : பிள்ள
மனம் கல்லு பெத்த மனம் பித்து சார்...
மோகன் : அப்பா
அப்பான்னு கூப்ட்டுட்டு நான் வெளிய போனதும் என்னயவே கலாய்க்குறத பாத்துட்டு கட்டிப்பிடிக்கக்
கூட ஆளில்லாம கதறி அழுதுட்டேன் சார்
சேரன் : பித்து
பெத்த மனம் கல்லு பிள்ள மனம் சார்
மோகன் : என்ன
சொல்றீங்க...?
சேரன் : அந்த
கட்டைல போற கவின் பயகிட்ட இருந்து பொண்ணுங்கள காப்பாத்துங்கன்னு சொன்னா அவன வெளிய அனுப்பாம
அவன உள்ள வச்சுட்டு பொண்ணுங்கள வெளிய அனுப்பி காப்பாத்துறானுங்க இந்த கழிசடைங்க.....என்னத்த
சொல்ல ? எல்லாம் விதி......! மனம் பெத்த பித்து பிள்ள கல்லு
மோகன் : இன்னைக்கு
முழுக்க இதான் போல.....//
ஷெரின், சேரன்
& வனி
சல்பேட்டா
: வனி நம்ம நோக்கமெல்லாம் ஷெரின செஸ்ல ஒரு ஆனந்த் வைத்யநாதன், பேட்மிண்டன்ல ஒரு சிந்து
பைரவி, நாதஸ்வரம் வாசிக்கிறதுல லிடியன் நாதஸ்வரம், வுமென் கிரிக்கெட்ல ஒரு ஐஸ்வர்யா
ராஜேஷ் இப்பிடி பிக்பாஸ்ல ஒரு ஷெரின்னு ஊரே சொல்ற மாதிரி உருவாக்கனும். வா கையறுத்துக்குட்டு
சபதம் எடுத்துக்கலாம்.
வனி : ஏன் நாங்கெல்லாம்
டாக்டர்ல ஒரு ஜானி சின்ஸ் மாதிரி பிக்பாஸ்ல ஒரு கமல் மாதிரி வர மாட்டோமா? நீ வேணும்னா
ஷெரின பெரிய ஆளாக்கு இல்ல பாத்திரத்துல வடிச்சு சோறாக்கு....! எனக்கு என்ன வந்துச்சு
சல்பேட்டா
: என்ன வனி இப்பிடி சொல்ற?
வனி : அவள மொதல
தர்ஷன தண்ணி தெளிச்சு விட்டுட்டு என் கைபாமா மாற சொல்லு....அப்பறம் பாக்கலாம்
சல்பேட்டா :
என்ன சேரன் சார் நீங்க வரீங்களா கையறுத்துக்கலாம்?
சேரன் : ஏற்கனவே
என் கழுத்தறுத்துட்டு இருக்கானுங்க இதுல கைய அறுத்துக்கவா.....ஆள விடு தாயி.....//
சாண்டியும்,
கவினும் “வெளிய போன நைனா வேற மாதிரி வந்திருக்காரே”ன்னு ஃபீல் பண்ணி பேசிட்டு இருந்தானுங்க.
டாஸ்க் தொடர்ந்துச்சு.
வனி முன்ன வந்து விதிமுறைகள படிச்சாங்க. ஜெயிக்கிற டீம் ஒர்ஸ்டு பெர்ஃபார்மர செலக்ட்
பண்ணி அடுத்த வார எவிக்ஷனுக்கு அனுப்பலாமாம். இந்த காஸ்ட்யூம்ல வனி மந்திரவாதியோட செய்வினை
பொம்மை மாதிரி வெரி க்யூட்டா இருந்தாங்க.
அப்பறம் தலகாணி
செஞ்சானுங்க. குவாலிட்டி செக் பண்ணானுங்க. வனி டீம் வின்னு.
கவின்
& லாஸ்
லாஸ் : என்னடா
கண்ணு கலங்க குப்புற படுத்திருக்க? எதுவும் புது பிட்டா?
கவின் : நீ
ஏன் செயற்கையா பண்ற எல்லாத்தையும்.....?
லாஸ் : ஏன்
இயற்கை செயற்கைன்னு எகனை மொகனைல பேசுற ? என்ன கவிராஜன் மோடா? ஒழுங்கா பேசித்தொல....
கவின் : ஏன்
எல்லார்கிட்டயும் வெளிய போகப் போறேன்னு சொல்ற?
லாஸ் : இது
என்ன நம்ம சொந்த வீடா? எப்பிடியும் வெளியதான போகனும்? அதான் சொன்னேன்
கவின் : அப்பிடி
சொல்லாத மனசு வலிக்குது....
லாஸ் : இவன்
ஒரு மெண்டலு....! டேய் படுத்தாத அப்பறம் எங்க அப்பாகிட்ட சொல்லிக் குடுத்துருவேன்
கவின் : நான்
எங்க அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்....//
இவனுங்கள யாராச்சும்
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சொல்லிக்குடுங்களேன்....!
உள்ள ஷெரின்
சல்பேட்டாகிட்ட “இப்பதான் இந்த கேம ஜெயிக்கனும்னு ஆசை வருது ஆனா கருமம் இது என்ன கேமுனே
தெரிய மாட்டேங்குது”ன்னு சொல்ல, சல்பேட்டா “ஆமா சேரன் – லாஸ் என்ன பஞ்சாயத்து?”ன்னு
கேட்டாங்க. “அவனுங்க அப்பா பொண்ணு பாசவலையில மீன் பிடிக்க பாத்தானுங்க ஆனா சிக்குனது
கவின். அப்பறம் என்ன வலை அந்து போச்சு. அவ்வளவுதான்”னு முடிச்சுட்டாங்க ஷெரின்
மோகன் : சேரன்
சார் அன்னைக்குக் கூட உங்க பொண்ணு நீங்க சொன்....
சேரன் : யோவ்....விடுய்யா
சும்மா வந்ததுல இருந்து என்னத்தயாவது சொல்லி அழ வச்சுட்டே இருக்க...போ உன் டவுசரக்
காணோம்னு சொன்னேல்ல அதப் போயி தேடு....//
பட்டிமன்றம்
நடத்தனும். சேம் லக்ஸுரி பட்ஜெட் டீம். நைனா, சல்பேட்டா, அபி நடுவர்கள்.
எதிர்பார்த்த
மாதிரியே கவின் டீம் வச்சு செய்யப்பட்டார்கள். இடையில சல்பேட்டாவ கவின் வம்பிழுத்தத்
தவிர ஒன்ணும் சுவாரஸ்யமில்ல. சும்மா கட்டெறும்பு கடிச்சாப்ல கய்ய முய்யன்னு கத்திட்டு
இருந்தானுங்க. வனி டீம் வின்னு.
ரொம்ப நாள்
கழிச்சு பாய்ஸ் டீம் கூட அபியும் உக்காந்து உள்ள வனி, நைனா, சல்பேட்டா பேசுறதுக்கு
டப்பிங் குடுத்துட்டு இருந்தானுங்க. செம்ம ஜாலியா, காமெடியா இருந்துச்சு.....இவனுங்க
தப்பிக்க இதுவே போதும். ஆனாலும் இந்த லைன்ல கடைசியா உக்காந்து அபி முகின் கூட முன்
ஜென்ம பந்தத்த புதுப்பிச்சுட்டு இருந்தது நம்ம கண்ணுல பட்டுச்சு.....! பாப்போம் என்ன
பண்றானுங்கன்னு.
Comments
Post a Comment