பிக்பாஸ் 3 : நாள் 95 & 96 தொடர்ச்சி (27.09.19)


பிக்பாஸ் 3நாள் 95 & 96 தொடர்ச்சி (27.09.19)


“உங்களில் யார் அடுத்த அபிராமி?” போட்டி கண்டெஸ்டண்ட் மாதிரி அழுதுட்டு இருந்துச்சு லாஸ். “எனக்கு இங்க இருக்க முடியவில்லை. எனக்கு விளையாடப் பிடிக்கவில்லை. எனக்கு ஃபைனல்ஸ் போக ஆசையில்லை”ன்னு பையா பட கார்த்தி மாதிரி பாடிட்டு இருந்துச்சு. மீதி ஆட்கள் அத சுத்தி உக்காந்து ஆறுதல் சொல்லிட்டு இருந்தானுங்க. “என்னமோ போங்கடா கருகிக் கருகி என் காதல கெடுத்துட்டீங்க”ன்ற மோடுலயே உக்காந்திருந்துச்சு லாஸ்.
அப்பறம் சமையக்கட்டுல இருக்கும்போது “மையா மையா” பாட்டு போட்டதும் தர்ஷன் “ஐஸ்வர்யாதான் வருது”ன்னு கரெக்டா அடிச்சாப்ல. நீலக்கலர் காடாத்துணி கால் கிலோமீட்டர் வரைக்கும் நீண்ட அளவுக்கு ஒரு ட்ரெஸ்ஸு. காடாத்துணிய கட் பண்ணிட்டா அம்மணி போட்ருக்குறது 5ம் கிளாஸ் கவுனுதான். “அரே ஓ பிக்பாஸ்”னு வந்துச்சு நம்ம அரை வேக்காடு ஐஸ். வந்ததும் சாண்டி கூட ஒரு கிளப் டான்ஸ போட்டுச்சு.
பின்ன எல்லாரையும் கட்டிபிடிச்சுட்டு. “நான் இந்தே தமில் நாட்டிக்கி வந்தி எனக்கி கிடச்சே நல்லே விஷயம் இந்தே பிக்பாஸ். அவரலே நா 5 படம் சைன் பண்ணியிருக்கே. இந்த லேகியத்தே சாப்ட்டதிலே இருந்து...சாரி சாரி இந்தே பிக்பாஸ்ல இருந்ததாலே எனக்கி நல்ல வாழ்க்கே கிடச்சது. உங்களுக்கி கூட கிடைக்கும். நம்பலேன்னா இந்தா பாருங்கே என்னோட பட போஸ்டரே” அப்டின்னு அழகு தமிழ்ல பேசி அது நடிச்ச அலேகா பட போஸ்டர காமிச்சுச்சு. “இந்த படத்தோட கதே இந்த ஜெனெரேஷன் லவ்வர்ஸ் கதே... அதனாலே எல்லாரும் இதே பாருங்க”ன்னு சொல்லுச்சு.
“ஹலோ கவின் – லாஸ் கதைய கேக்குறியா? அப்பிடியே கண்ணப் புடுங்கி தின்னு புடுவேன்”னு பசங்க எல்லாரும் ஐஸப் பாத்தானுங்க. அப்பறம் அது தலைமைல ஒரு டாஸ்க். கயிறுல காலி பொட்டலத்த கோர்த்து துணி காயப்போடுற கொடியாட்டம் கட்டி இந்தப் பக்கத்துல இருந்து அந்தப் பக்கமா ஊதி ஊதி கொண்டு போகனும். தர்ஷன் ஒவ்வொரு ஊதுலையும் ஒரு பொட்டலத்த அந்தப்பக்கமா கொண்டுபோனான். அவந்தான் வின்னு.
அப்பறம் அரவேக்காடு ஐஸ கெளப்பி விட்டானுங்க. 16 வயதினிலே மயிலு ஆத்தக்கடக்குற மாதிரி காடாத்துணிய கைல தூக்கிக்கிட்டு “தூக்கு மயில், தூக்கு மயிலுன்னு” நடந்து போச்சு.
இனி யாரு கெஸ்ட்டு வந்தாலும். “அப்பிடியே வெளிய போஸ்டர வச்சுட்டு போயிடு” நாங்க சாப்ட்டு முடிச்சிட்டு வந்து பாத்துக்குறோம்னு சொல்லிடுவானுங்க போல.
நாள் 96
“என் பேரு மீனாகுமாரி”ன்னு ஆரம்பிச்சது. லாஸ் தெளிவாகிடுச்சு போல. எல்லாரோடையும் நல்லா குதூகலமா ஆடிட்டு இருந்துச்சு. சாண்டி தோசை சுட்டாப்ல. “மொமெண்ட் ஆஃப் த டேவ எடுங்க”ன்னு பிக்பாஸ் கேமரா ஃபோன குடுத்தாப்ல. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.
அப்பறம் எல்லாரும் ஹால்ல உக்காந்து பாட்டு பாடிட்டு இருக்க, “லாஸ் சைலன்ஸ்”னு சொல்லி “உள்ள வா”ன்னு கூப்ட்டார் பிக்பாஸ். உள்ள போயி முன்னாடி இருந்த லெட்டர எடுத்து மனப்பாடம் பண்ணிட்டு இருந்த லாஸ்கிட்ட “என்ன மனப்பாடம் பன்ணிட்டியா?”ந்னு கட்டையக்குடுத்தாரு. “சரி வேற எதுவும் சந்தேகம்?”னு கேக்க. “என்னய உங்களுக்கு பிடிக்குமா?”ன்னு லாஸ் பொசுக்குன்னு கேக்க “ஆத்தீ மறுபடியும் மொத இருந்தா?”ன்னு ஜெர்க்காகி “புடிக்கும் புடிக்கும்”னு சொல்லி அனுப்பி விட்டாப்ல பிக்பாஸ்.
வெளிய வந்து இத வெக்கத்தோட சொன்னதும் ஷெரின் “அந்த எடுவட்ட பய எங்கிட்டையும் இதயேத்தான் சொன்னான். கவினுக்கு கசினா இருப்பான் போலயே”ன்னு கோவப்பட்டுட்டு இருந்துச்சு. அப்பறம் டாஸ்க். கைல பாக்ஸிங் கிளவுஸ போட்டுக்கிட்டு தெர்மாகோல் குப்பைய கையால அள்ளி இந்தப்பக்கம் பவுல்ல நெறைக்கனும். இதுலையும் தர்ஷன் வின்னு.
பின்ன “பிரிஞ்சு போனவங்களப் பத்தி பேசுவோம்...! வெளிய போனதுல உங்களுக்கு உறவானவங்களப் பத்தி பேசுங்க”ன்னு சொன்னாப்ல. யாரு யார சொல்லுவானுங்கன்னு தெரியாதா? லாஸ் கவின பத்தி சொன்னது நல்லா இருந்தது. எனக்கு சுத்தமா பிடிக்காதவன் அப்பறமா எனக்கு ரொம்ப பிடிச்சுப்போனான்னு சொன்னது செம்ம. அந்த மேஜிக்தான எல்லாம்.
அடுத்து இன்னொரு டாஸ்க். பந்துல ஒவ்வொரு விஷயம் எழுதியிருக்கும். பந்த கண்ணக்கட்டிக்கிட்டு கோல் போஸ்ட்டுக்குள்ள அடிச்சா அந்த விஷயம் கிடைக்கும். முகின் ஹெட் மசாஜ் கேட்டான். அவனத்தவிர எல்லாரும் கோல் அடிச்சு கிரில்டு சிக்கன், புரோட்டா, சிக்கன், ஸ்பா, பிக்பாஸ் புகைப்படம்னு ஜெயிச்சானுங்க. தோத்த முகின் மிஸ் பண்ண ஹெட்மசாஜ ஷெரின் அவனுக்கு பண்ணி விட்டாங்க. அவ்ளோதான்.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)