பிக்பாஸ் 3 : நாள் 94 (25.09.19)
பிக்பாஸ் 3நாள் 94 (25.09.19)
அஸிஸ்டெண்ட்
அட்மினுக்கும் அஸிஸ்டெண்ட் வைக்குற அளவுக்கு கொண்டு போயி விட்டுடுவானுங்க போல. பிக்பாஸ்
ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன் ஆகிட்டாப்ல. ஒரு காலத்துல அடிஷனல் ஷீட் வாங்கி கண்டெண்ட்
எழுதுற அளவுக்கு கண்டெண்ட் குடுத்துட்டு இருந்த ஆளு இன்னைக்கு அவனுங்களோட சேர்ந்து
பாட்டுப்பாடி வெளையாண்டுட்டு இருக்காப்ல.
வெறித்தனம்
பாட்டப் போட்டு எழுப்புனாப்ல. சாண்டி, லாஸ், முகின் ஆடுனானுங்க. அப்பறம் மன்னர் தர்ஷனுக்கு
ஆங்கிலத்துல பள்ளி எழுச்சி பாடுனானுங்க. ஷெரின் குளிக்கப் போன நேரத்துல அது குப்பையில
போட்ட லெட்டர எடுத்து முகின் உதவியோட ஒட்டுனான். அது தர்ஷனுக்கு எழுதுனதுதான்னு முடிவாச்சு.
ஆனா தர்ஷனத் தவிர அத யாரும் படிக்கல. அப்பவே சாண்டி சொன்னாப்ல நீ படிச்சத சொல்லி மாட்டிக்காதன்னு
ஆனா தர்ஷன் கேக்காம அந்த லெட்டெர்ல இருந்த ஒரு வார்த்தைய ஷெரின் கிட்ட சொல்லி மாட்டிக்கிட்டான்.
ஷெரின் உண்மையாவே
ரொம்ப டென்ஷனாகிப்போச்சு. நான் கோவமாவும், வருத்தமாவும் இருக்கேன். ஆனா நான் அப்பிடி
இல்ல. நானே உனக்கு குடுத்திருப்பேன். ஆனா என்னோட ப்ரைவசிய நீ கெடுத்துட்ட. நீ நல்லவந்தான்.
ஆனா நீ ரொம்ப கெட்டவனா இருக்க. இப்பிடி நச நசன்னு லூசு மாதிரி பேசிட்டு இருந்துச்சு.
அப்பறம் பாசுமதி
ரைஸ் குக்கிங். சாண்டிய அண்ட விடாம ஷெரினும், முகினும் சேர்ந்து என்னமோ செஞ்சாங்க.
அப்பறம் மன்னர் தர்ஷன் இருக்குறவனுங்கள கலாய்ச்சுட்டு இருந்தாப்ல.
அப்பறம் தர்ஷன்
கிட்ட இருந்து மன்னர் பதவிய புடிங்கிட்டு அவரு இனிமே மத்தவங்களுக்கு சேவை செய்யனும்னு
சொன்னாரு பிக்பாஸ்.
அப்பறம் என்னமோ
மீன வலை போட்டு பிடிக்கிற மாதிரி. வித விதமான சைஸ்ல உள்ள பந்துகள நடுவுல வச்சுட்டு
சுத்தி நின்னு வளையத்தப் போட்டு பிடிக்கனும். இதுல லாஸ் வின்னு.
கொஞ்ச நேரம்
கழிச்சு ரித்விகாவும், ஜனனி ஐய்யரும் வந்தாங்க அவங்கவங்க நடிச்ச் படத்தோட போஸ்டர ரிலீஸ்
பண்ணிட்டு போயிட்டாங்க.
பின்ன பிக்பாஸ்
எப்பிடியும் எல்லாரும் 50 லட்சம் ஜெயிக்க முடியாது. அது போக இந்த வாரம் நாமினேஷன் வேற
இருக்கு. அத்னால முன்னாடி இருக்குற பெட்டியில 5 லட்சம் இருக்கு அத எடுத்துட்டு எவனாச்சும்
வெளிய போறதா இருந்தா போகலாம்னு சொல்ல, கவின் கையத்தூக்குனாப்ல. அதோட முடிச்சிருக்கானுங்க.
ஆனாலும் ரொம்பத்தான் சோதிக்கிறீங்கடா!
Comments
Post a Comment