பிக்பாஸ் 3 : நாள் 86 (17.09.19)
பிக்பாஸ் 3நாள் 86 (17.09.19)
வர வர பிக்பாஸு
“வைடுன்னு நெனச்சா பால் உள்ள பூந்து ஸ்டெம்ப்பத் தட்டி க்ளீன் போல்டு”ன்னு ஸ்போர்ட்ஸ்
கமென்ட்ரி குடுக்குற மாதிரி ஆகிப்போச்சு. ஷூட்டிங்க் ஸ்பாட்ல சிம்புவத் தேடுற மாதிரி
இங்க கண்டெண்ட் எங்க?ன்னு தேட வேண்டியதா இருக்கு.
“எழு வேலைக்காரா
இன்றே”ன்னு பாட்டு. தர்ஷன் மட்டும் கைய கால ஆட்டிட்டு இருந்தான். அப்பறம் இந்த பைத்தியம்
பிடிச்ச கவின் ஷெரின வெறுப்பேத்துறேன்னு நம்மள படுத்திட்டு இருந்தான். என்ன பண்றது?ன்னு
பிக்பாஸே குழம்பி “ஒரு வேளை ஜெயிச்சுட்டா என்னடா பேசுவீங்க?”ன்னு கேட்டாப்ல. எல்லாரும்
ஒரே மாதிரிதான் பேசுனானுங்க. கவினும், சாண்டியும் மட்டும் “அதெல்லாம் ஜெயிச்சன்னைக்கு
என்ன வருதோ அதத்தான் பேச முடியும்”னு சொல்லிட்டானுங்க. தர்ஷன் “நான் வேற நாட்டுல இருந்து
வந்த ஆளு”ன்னு சொன்னப்ப “நீ நாடு வேறையா இருந்தாலும் என் இனமடா”ன்னு ஒரு குரல் யாருன்னு
பாத்தா நம்ம சேரன் சார். ஸ்கோர் பண்றாராமாம்.
மறுபடியும்
இந்த கவின் பய ஷெரின கடுப்படிச்சிட்டு இருந்தான். அது தர்ஷன் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணதுக்கு
அவன் பெருசா எதும் கண்டுக்கல. ரொம்ப நாளைக்கப்பறம் லாஸ் & சேரன்...
லாஸ் : சேரப்பா...
சேரன் : என்னடா
அப்பா நியாபகம் வந்துடுச்சா?
லாஸ் : நீ இங்கதான
இருக்க? அப்பறம் ஏன் நியாபகம் வரனும்?
சேரன் : நான்
அந்தப்பாவ கேட்டேன்...
லாஸ் : யப்பா
சாமி...மொத இந்த அப்பா விளையாட்ட நிப்பாட்டுங்கடா ! நான் கேக்க வந்ததே வேற...! ஆமா
நேத்து பலூன் டாஸ்க்கப்ப ஏன் சாண்டி கிட்ட போயி போதும் நிப்பாட்டுன்னு சொல்லிட்டு இருந்த?
சேரன் : அப்பிடியா
சொன்னேன்? அப்ப எதாச்சும் காரணம் இருந்திருக்கும்
லாஸ் : அன்னைக்கு
தர்ஷ் கிட்ட நான் போயிட்டா லாஸுக்கு விட்டுக் குடுன்னு சொல்லி இருக்க அது ஏன்?
சேரன் : அப்பிடியா
சொன்னேன்? அப்ப எதாச்சும் காரணம் இருந்திருக்கும்
லாஸ் : கேப்டன்
டாஸ்க்கப்ப முகின விட்டுக்குடுக்க சொல்லி சொன்னியே அது?
சேரன் : அப்பிடியா
சொன்னேன்? அப்ப எதாச்சும் காரணம் இருந்திருக்கும்
லாஸ் : எனக்கு
ஒண்ணும் அவசரமில்ல....! நீ உன்னோட எதாச்சும் காரணங்கள அப்பிடியே ஒண்ணு ரெண்டுன்னு அவ்வையார்
மாதிரி வரிசைப் படுத்தி சொல்லு பாப்போம்...!
சேரன் : காரணங்கள்......!
பொற்காலத்தில் வெற்றிக்கொடி கட்டி எல்லாருக்கும் ஆட்டோகிராப் போட்டு தேசிய கீதம் பாடி
மாயக்கண்ணடியில் முகம் பார்த்து தவமாய் தவமிருந்து நான் கண்ட காரணங்கள் பொக்கிஷம்....
லாஸ் : பாரதி
கண்ணம்மாவ விட்டுட்ட? நான் உங்கிட்ட என்ன கேட்டேன் நீ என்ன சொல்லனும்? காரணம் தெரியும்,
தெரியல, மறந்துட்டேன், மறக்கல இப்பிடிதான சொல்லனும்? அத விட்டுட்டு 3 வார்த்தைக்கு
மேல பேச்சு போனாலே சொல்ல மறந்த கதை மோடுக்கு போயிடுறியே அது ஏன்?
சேரன் : அதுக்கு
எதாச்சும் காரணம் இருக்கும்.....//
சமையல் பண்றேன்ற
பேருல பசங்க அடுப்பாங்கரைய அலற விட்டுட்டு இருந்தானுங்க. எப்பிடியும் ரெண்டு நாளுல
சிலிண்டர் வெடிச்சு கவின் கருகிடுவான்னு நெனைக்கிறேன்.
அப்பறம் சாயம்
வெளுத்துப் போச்சுன்னு ஒரு டாஸ்க்கு. சீட்டுல எழுதுனதுக்கு பொருத்தமான ஆட்கள் கிட்ட
இருக்குற பீக்கர்ல கலர் பெயிண்ட ஊத்தனும்.
அழுது அனுதாபம்
தேடிக்கிற ஆளு
அடுத்தவங்க
உணர்வுகள்ள வண்டி ஓட்டுற ஆளு
தன்னையே தொலைச்ச
ஆளு
தன்னலம், தந்திரம்
நிறஞ்ச ஆளுன்னு வாக்கியங்கள்.
அதிக கலர் வாங்குற
ஆளு கடைசி பாயிண்டு. இது போதாதா? கவின் கடைசியா வந்தாப்ல. கடைசியா வரதுக்குன்னே கரடு
முரடா உழைக்குற ஓரே ஆளு நம்ம கவின் தான். ஆச்சர்யமா இதுல சாண்டி 6வது இடம்.
ஷெரின்
& சேரன்....
ஷெரின் : என்ன
சார் இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டு சங்கடப்படுத்துறானுங்க?
சேரன் : அதெல்லாம்
சரிதான்....இதெல்லாம் நமக்குள்ள அடக்கி வச்சிருக்குற கேள்வியதான் பிக்பாஸ் கேக்குறாரு
! இத நாம யூஸ் பண்ணிக்கனும்
ஷெரின் : இருந்தாலும்
எல்லாம் தெரிஞ்ச பசங்களா இருக்கானுங்க
சேரன் : அதனால
என்ன?
ஷெரின் : இல்ல......
உங்கள கூட அழுது அனுதாபம் தேடுற ஆளுன்னு எல்லாரும் கலர ஊத்திட்டானுங்களே
சேரன் : நீ
நேத்து குருநாதர் டி ஷர்ட் போடும்போதே தெரியும்....! என்னய ஓட்டுவன்னு...! போ போ அவனுங்க
கூட போயி பாட்டுப்பாடு....//
மறுபடியும்
ஷெரின வெறுப்பேத்துனான் கவின். இந்த வாட்டி கக்கூஸ் கதவு வரைக்கும் போயிட்டான். உள்ள
வேணும்னா வந்துறேன்ன்னு ஷெரின் கேட்டதும் ஓடிட்டான்.
அப்பறம் முகின்
பாட்டுப்பாட சாண்டி, கவின் தாளம் போட ஒரு கச்சேரி நடந்துச்சு. நல்லாத்தான் இருந்துச்சு.
அப்பறம் ஒரு
பேலன்ஸ் டாஸ்க்! ஒரு பக்கமா கால கயித்துக்குள்ள விட்டு ஒரு கட்டைய பேலன்ஸ் பண்ணிக்கிட்டே
அதுல சில பல கட்டைகள நிப்பாட்டி வைக்கனும். யாரு கடைசி வரைக்கும் இருக்காங்களோ அவங்க
அதிக பாயிண்டு.
இந்த தடவ சேரன்
சார் கவின முந்திக்கிட்டு மொத ஆளா கடைசி பாயிண்டுக்கு வந்தார். பின்னாடியே தர்ஷனும்.
அப்பறம் ஆளாளுக்கு வெளிய வர.....கடைசியா கவினும், முகினும் களத்துல நின்னானுங்க. கவின்
ரெண்டாவது இடம். முகின் வின்னு. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மாதிரி மேட்சுல தோத்தாலும்
கவின் மக்கள் இதயங்களை வென்றார். சகட்டுமேனிக்கு எல்லாரும் வாழ்த்துனானுங்க. சேரன்
சார் காலமுக்கி விட்டு தன் பாராட்ட தெரிவிச்சாரு. “இவ்ளோ நாளா டாவுக்காக ஒத்தக்காலுல
நின்னவன் இப்ப டாஸ்க்குக்காக ஒத்தக் காலுல நின்னு ஜெயிச்சுட்டான்”னு எல்லாருக்கும்
ஆச்சர்யம். எல்லாரும் கவினோட கான்செண்டரேஷன், வில் பவர், வெறித்தனம், திருந்திட்டான்
அப்பிடின்னல்லாம் வெளிய பேசிட்டு இருக்க.....
உள்ள லாஸுகிட்ட
கவின் “அது ஒண்ணுமில்ல நீ என் பக்கத்துல நின்னுட்டு இருந்தியா அதான் நீ நிக்கிற வரை
நிக்கலாமேன்னு உனக்கு சப்போர்ட்டா நின்னேன்”னு சொன்னதுந்தான் நாம ரீவைண்ட் பண்ணி ஓட்டிப்பாத்தா,
கடைசியா நின்னது லாஸ், கவின் & முகின். அதுல லாஸ் வெளிய போன 2வது நிமிஷம் கவினும்
அவுட்டு. அடப்பாவிப் பயலே உன்னய உசேன் போல்ட்டுக்கு நிகரா வெளிய பேசிட்டு இருக்கானுங்க
நீ என்னடான்னா அப்பவும் அந்தப் பொண்ணு நெனப்பாத்தான் இருந்திருக்க. உனக்கெல்லாம் கருட
புறாணத்துல கூட தண்டனையில்ல.
அப்பறம் மீதி
இருக்குற நேரத்துல என்ன பண்றதுன்னு புரியாமா “சரிடா டேய் உங்களுக்கு அண்ணங்கிட்ட எதாச்சும்
கேக்கனும்னாலோ, இல்ல கழுவி ஊத்தனும்னாலோ செய்யுங்கடா”ன்னு பிக்பாஸ் சொல்ல, எல்லாரும்
“நீங்க தங்கமான தங்கமுங்க, கோல்டுங்க, டைமண்டுங்க”ன்னு புகழ்ந்துட்டு, “நைட்டு புரோட்டாவும்
குருமாவும் குடுத்து விடுங்க”ன்னு கெஞ்சுனானுங்க. “அதெல்லாம் முடியாது, நைட்டு நேரத்துல
மைதா உடம்புக்கு ஆகாது. பழைய சோத்தத் தின்னுட்டு எல்லாரும் படுங்க”ன்னுட்டார் பிக்பாஸ்.
அவ்ளோதான்.
Comments
Post a Comment