பிக்பாஸ் 3 : நாள் 74 தொடர்ச்சி & 75 (06.09.19)


பிக்பாஸ் 3நாள் 74 தொடர்ச்சி & 75 (06.09.19)


முன் குறிப்பு : சம்பளக் கம்பேனியில நாளைக்கு வெள்ளன வேலை இருக்குறதால....அட்மின் எழுதுனது கீழ....! தப்பும், தவறும் இருந்தா உங்க வீட்டுப் பிள்ளையா நெனச்சு மன்னிச்சுடுங்க....
தர்ஷன் பய கவின் & சாண்டியோட பெட்ரூம்ல இருக்க, கவின் கிட்ட “சாக்ஷி கிட்ட சொல்லி ஷெரின் கிட்ட நான் தனியா பேசனும்னு சொல்லு”ன்னு சொன்னான். கவினோ “ அதுக்கு நான் தனியாதான் பேசனும். ஏண்டா சின்னப்பயலே அவகிட்ட போயி என்னய கேக்க சொல்றியே....அவதான் என்னயப் பாத்தா வண்டுருட்டான் பழம் மாதிரி உருண்டு ஓடுறாளே அவகிட்ட எப்பிடி கேக்குறது? ஃப்ரீயா விடு அதெல்லாம் சரி பண்ணிடலாம் ஷெரின”ன்னு ஆறுதல் சொன்னான்.
தர்ஷன் & ஷெரின்
தர்ஷன் : உன் கண்ணில் நீர் வழிந்தால்...
ஷெரின் : அதுக்கு வனி சனியந்தான் காரணம்
தர்ஷன் : வட கொரியா தென் கொரியா பிரிஞ்சதுக்கு காரணமே வனிதான் இதப் போயி பெருசா எடுத்துக்கிட்டு
ஷெரின் : நாம ரெண்டு பேரும் அஃபயர்ல இருக்கோம்ன்றா?
தர்ஷன் : அஃபயர் என்ன அம்பத்தூரா ? நாம இஷ்டத்துக்கு இருக்குறதுக்கு? நானும் என் காதலியும் கவலப்பட வேண்டிய விஷயத்துக்கு நீ ஏன் கவலைப்படுற?
ஷெரின் : இருந்தாலும் வனி...
தர்ஷன் : ஹனி...! டோண்ட் ஒர்ரி.....பி ஹாப்பி //
75ம் நாள்
சொப்பன சுந்தரி பாட்டு அம்சமா அலற...கம்மாக்கரை கழுதை கால மாத்தி ஆடுறாப்ல அங்கிட்டும் இங்குட்டும் அலசிட்டு இருந்துச்சு சல்பேட்டா. கூடவே ஷெரின் நெளிவு சுளிவோட இடுப்ப வளைச்சு நெளிச்சு ஆட சூப்பரா விடிஞ்சுது.
சமையக்கட்டுல வனி, சல்பேட்டா, முகின், ஷெரின் இருக்க...
மோகன் : வீட்டுக்குப் போயி பாக்குறச்சதான் தெரிஞ்சுது...
சல்பேட்டா : என்ன டவுசரக் காணோம்னா?
மோகன் : இல்ல எல்லாம் நடிக்கிறாங்கன்னு...
ஷெரின் : டேய் நைனா முகினையுமா சொல்ற? அவன் அப்பிடி இல்லையே
மோகன் : (கெத்தா) அவனுந்தான்....
முகின் கோவமா போக
மோகன் : என்ன கோவிச்சுக்கிட்டியா?
முகின் : (M.V : ஆமாண்டா இப்ப என்ன?ன்னு முறுக்கிட்டு நைனா கிட்ட வந்து) அப்பறம் எங்கிட்டயே உடசல குடுக்குற
ஷெரின் : நைனா அவன் ரெக்கார்டு தெரியும்ல? சேந்தாப்ல 4 சேர உன் தலையில உடப்பான்
மோகன் : (அல்லு கழற) இல்ல இத சொல்றது கூட அவன எங்கரேஜ் பண்றதுக்குதான்
வனி : நைனா ஒழப்புறான் ஹா ஹா ஹா..... //
 வெளிய நைனா – முகின்
மோகன் : ஏண்டா அம்பி....நைனா வெளிய போனதும் கிண்டல் பன்னேளே அது நியாயமா?
முகின் : நியாயந்தான்....
மோகன் : அப்பிடி பொசுக்குன்னு சொல்லாத...கொஞ்சம் யோசிச்சு சொல்லு
முகின் : நீ இருந்தப்ப உன்னய ஓட்டுனத விட நீ இல்லாதப்ப ஓட்டுனது கம்மிதான்
மோகன் : இருந்தாலும் நீ தடுத்திருக்கலாம்...
முகின் : முடியாது ஆனாலும் சாரி...
மோகன் : இதுக்கு மேல கேட்டா அடிப்பன்....அப்பிடியே விட்ருவோம்...//
லக்ஸுரி பட்ஜெட் பாயிண்ட் குடுத்தானுங்க ! அப்பறம் டாஸ்க்குல பெஸ்ட் பெர்மார்மென்ஸ். ஜெயிச்ச டீம்ல இருந்து தர்ஷன் & வனி. வீக்லி பெர்ஃபார்மர் லாஸ். வீக்லில கேட்டா சேரன சொல்றேன்னு சொல்லி ஏமாத்திடுச்சு வனி. ஒர்ஸ்டு பெர்ஃபார்மர் கவின். தன் கணவனுக்காக எவ்வளவோ போராடியும் கவின லாஸால காப்பாத்த முடியல.
சமையக்கட்டுக்கு சாஞ்சாடி வந்த ஷெரின் கிட்ட நீ வரதுக்குள்ள சமையல் வேலை முடிஞ்சிடுச்சுன்னு வனி சொல்ல, அப்ப சரி சாப்பிடலாம்னு கூலா போயிடுச்சு ஷெரின்.
கக்கூஸ்ல சல்பேட்டாக் கிட்ட ஷெரின்...
ஷெரின் : போண்டா என்ன எப்பப் பாத்தாலும் பெஸ்ட் பெர்பார்மர்? அப்பிடி ஒண்ணும் கிழிக்கலையே? தச்சது பூராம் சேரன். ஆனா பேரு போண்டாவுக்கா?
சல்பேட்டா : (M.V :என்ன இவ அக்காவ இப்பிடி பேசுறா? இத காதால கேட்டதுக்காகவே கங்கைல குளிச்சு அக்காவுக்காக அமர்நாத் குகை சிவலிங்கத்துக்கு பால் காவடி எடுத்து போயிட்டு வரனும்...)
வனி வந்து கவின் கிட்ட “ஏண்டா வெசெல் வாஷிங் டீம் சமைக்குறப்ப வந்து பாத்திரம் பண்டம் கழுவித்தரனுமான்னு கேக்க மாட்டீங்களா?”ன்னு கேக்க, “நீங்க என்ன எழவ சமைக்குறீங்கன்னு சொல்லாம உங்ககிட்ட வந்து நாங்க கேக்கனுமாக்கும்?”னு பொங்க, “அத நீ ஷெரின் கிட்ட கேக்கனும் ஆனா அவ இப்ப இல்ல அதனால நான் சேரன் கிட்ட கேக்குறேன்”னு சொல்லிட்டு ஷெரின குற்றவாளியாக்கிடுச்சு.
சேரன் கக்கூஸ்ல இருந்த ஷெரின் கிட்ட பேச வர, ஷெரினோ “நீங்கதான் பெஸ்ட் பெர்ஃபார்மரா வந்திருக்கனும் ஆனா அந்த மூதேவிகிட்ட சண்டை போட விருப்பமில்ல அதான் கேக்கல சாரி”ன்னு சொல்லி சேரன நிப்பாட்டிடுச்சு.
வெளிய வனி & சல்பேட்டா...
வனி : சேரனுக்கு கைல சூடு பட்டு சூடு கை சுந்தரமாகிட்டாரு....நான் ஆயின்மெண்ட் எடுத்து பூச வந்தா அப்பிடியே பதறி சாகுறா. வேலை வெட்டி எதுவும் பாக்காம இப்பிடி நர்ஸ் வேலை பாக்க வரல யாரும்
சல்பேட்டா : நான் எப்ப சொன்னேன் நர்ஸ்னு?
வனி : இவ ஒரு இத்துப்போனவ...நான் ஷெரினப்பத்தி பேசுனேன் முண்டம்..//
அவார்டு செக்ஷன்...
மொத அவார்டு பச்சோந்தி. நைனா, சல்பேட்டா, அபி அத குடுக்க லாஸ கூப்பிட லாஸ் மேல ஏறிப்போயி அவார்ட வாங்கி அங்கயே தூக்கிப் போட்டுட்டு வந்துருச்சு....! நைனா “அதெல்லாம் இங்க தூக்கிப் போடக் கூடாது வேணும்னா குப்பைத்தொட்டியில போடு”ன்னு சொல்ல, “அப்ப உன் வாயக் காட்டு”ன்னு லாஸ் சொல்ல ஒரே கலவரம். இதுல ரொம்ப நாள் கழிச்சு அமிதாப் மாமாவுக்கு கோவம் வர அப்பிடியே சேரர் லாஸுக்காக பொங்கி வழிய, சல்பேட்டாவ லாஸு பீஸ புடுங்க......ஒரே கரச்சல். காமெடி என்னன்னா “அப்பிடியெல்லாம் ஒரு அவார்ட வாங்காம அசிங்கப்படுத்தக் கூடாது”ன்னு சொன்ன வனிதாவுக்கு கோண புத்தி கழுதைப் புலி அவார்டு குடுத்தப்ப அத வாங்க முடியாதுன்னு சொன்னப்ப தர்ஷன் “இப்ப நீ மட்டும் ஒழுங்கா?”ன்னு கேட்டு வனி வாய அடச்சான்.
நரி – சாண்டி, பசு – வனி, மின்மினிப் பூச்சி – ஷெரின், கிளி – முகின், தவளை – கவின், யானை – சேரன், கொசு – வனி, நாய் லாஸுன்னு ரெண்டாவது தடவ பாசிட்டிவ் காரணம் சொல்லிக் குடுத்தப்பயும் மரியாதையா வேணாம்னு சொல்லிட்டு வந்த்ருச்சு லாஸ்.
எல்லாம் முடிஞ்சதும் நைனா லாஸ் கிட்ட பாசத்த பொழிய பக்கத்துல வந்தப்பயும் அவர பக்கத்துல சேக்காம அப்ரூட்டா கட் பண்ணிடுச்சு லாஸ். ஆண்டவர் வருவார். வேலை முடிஞ்சு அருணும் வருவார். நன்றி நமக்கம்.
-     -  அட்மின்

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)