பிக்பாஸ் 3 : நாள் 71 தொடர்ச்சி & 72 (03.09.19)


பிக்பாஸ் 3நாள் 71 தொடர்ச்சி & 72 (03.09.19)


இப்பவும் சேரன் சார் பாயிண்டு வரட்டும்னு உக்கிரமா காத்துட்டு இருந்தார்.
வெளிய பசங்களோட உக்காந்திருந்த கவின் “இது என்ன வனியா இல்ல சனியா? கேமு கேமுன்னு கதறிட்டே இருக்கு. கேமுன்றதால எல்லாரையும் தூக்கிப்போட்டு ஜங்கு புங்குன்னு குதிப்போமா? இது பாத்த பிரச்சனையும், இந்த பசங்க பாத்த பிரச்சனையும் ஒண்ணா?”ன்னு ஓங்கி குரல் குடுத்து பேசிட்டு இருந்தான். (அரை மீட்டர் உள்ள போனா அதுகிட்டயே கேட்டிருக்கலாம்). தர்ஷனும் “நாங்க ஜெயிக்கனும்னு நீங்க ஆசைதான் படுறீங்களே தவிர டாஸ்க்குல நீங்க விட்டுக்குடுக்குறது இல்ல. ஆனா போண்டா அப்பிடியே மாத்தி மாட்லாடுது”ன்னு மண்டைய சிலுப்பிக்கிட்டான்
உள்ள வனிதா, சேரன் & ஷெரின்
வனிதா : ஒரு மட்டு மரியாதை இல்லாம பேசுறானுங்க. எல்லாம் இந்த பிக்பாஸன சொல்லனும்.
உக்கிரமா காத்துட்டு இருந்த சேரன் சார் உதடு துடிக்க அந்த வார்த்தைகள வரிசைப்படுத்தி உதிர்க்க ஆரம்பிச்சாரு
சேரன் :  அத பிக்பாஸப் போயி கேக்க சொல்லு.....! அவங்க ரூல்ஸ் படிதான நீ உள்ள வந்த. அவரையே கிளாரிஃபை பண்ண சொல்லு....சீக்கிரம் போ
வனி : நல்லா எடுத்துக் குடுக்குற மேன் நீ.....! செம்ம பாயிண்டு (மைக்க கழட்டி கேமராவுல மாட்டியபடி.....) தம்பி பிக்பாஸு.... நீயா வந்து என் காலுல விழுந்து மன்னிப்பு கேக்காம அக்கா விளையாட மாட்டேண்டா.
சேரன் : அடியே அண்டாவே ! டயலாக்க மாத்திப் பேசுற...
வனி : அய்யோ ஆமால்ல....! அடேய் பிக்பாஸு இந்தப் புள்ளபூச்சிங்ககிட்ட சொல்லு நீதான் என் கைல காலுல விழுந்து உள்ள கூட்டிட்டு வந்தேன்னு...அதுவரைக்கும் நோ வெளையாட்டுடா //
வெளிய ஷெரின் – கவின் கிட்ட
ஷெரின் : ஆமா என்னய பத்தி நீ என்ன நெனச்சிட்டு இருக்க?
கவின் : நீதான் ஸ்ட்ராங்க் கண்டெஸ்டண்ட் ஆச்சே...
ஷெரின் : அப்ப தர்ஷன்?
கவின் : அவன் உன்ன விட செம்ம ஸ்ட்ராங்க் கண்டெஸ்டண்ட்
ஷெரின் : அப்ப சாண்டி ?
கவின் : அவனையெல்லாம் ஒருத்தனும் ஒண்ணுமே பண்ண முடியாது
ஷெரின் : அப்பறம் ஏண்டா என்னய நாமினேட் பண்ண?
கவின் : ஏன்னா நீதான ஷெரின்
ஷெரின் : அதுக்காக?
கவின் : சாண்டி பேரு ஷெரினா இருந்தாலே நாமினேட் பண்ணுவேன். ஆனா உன் பேரே ஷெரின் தான். அப்ப உன்னதான நாமினேட் பண்ணுவேன்!
ஷெரின் : நல்லா பண்ணடா டேய்....! என்ன எழவு பேசுறான்னு வேற புரியல? எனக்கு தமிழ் தெரியாதுன்னு இவன் படுத்துற பாடு இருக்கே.... //
உள்ள பிக்பாஸ் வனிதாவ “மைக்க மாட்டிக்கிட்டு உள்ள வா”ன்னு கூப்பிட....
பிக்பாஸ் : சொல்லு சிண்டெக்ஸ் தொட்டியே....
வனி : யோவ் நீ காலுல விழுந்து கூப்ட்டதா....
பிக்பாஸ் : என்னது ?
வனி : இல்ல....இல்ல....!  மக்கள் விரும்பி கேட்டதாலதான் உள்ள என்னய கூப்ப்டீங்க அத வந்து இந்த பசங்ககிட்ட சொல்லுங்க....
பிக்பாஸ் : என்ன எங்கிட்டயேவா? ஒழுங்கா போயிரு இல்லேன்னா அசிங்க அசிங்கமா சொல்லுவேன்...
வனி : அப்ப நான் பாசம் இல்லையா?
பிக்பாஸ் : இங்க பாரு....நான் ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுறதுக்கு ஸ்டார்ட் பண்றதுக்குள்ள எந்திரிச்சு ஓடிரு....இல்லேன்னா ஃபேன உன் தலையில விழ வச்சுருவேன்.....
வனி : சேரன் நேரம் பாத்து கவுத்துட்டான். அவன் உக்கிரமா பாயிண்ட் எடுக்க காத்திருந்தது என்னய மாட்டிவிடத்தான் போல....! யோவ் டைரக்டர் பாத்துக்குறேன்யா உன்னய...! அப்பிடியே பிக்பாஸன ரெண்டு சாத்து சாத்துன மாதிரி கெத்தா வெளிய போவோம்....
பிக்பாஸ் : நீ இன்னும் போகலையா? டேய் யாருடா அங்க ? அந்த ஃபேன் நட்ட கழட்டி விடுடா...
வனி : இருங்க! பொசுக்குன்னு எந்திரிக்கிற உடம்பா இது....ம்ம்ம்ம்ம்ம்ம்.....ரைட்டு வரேன் //
வினாயகர் சதுர்த்திய முன்னிட்டு முறுக்கு சுடுற டாஸ்க்காம். வனி எல்லாருக்கும் முறுக்கு சுட்டுக் குடுத்துச்சு. ஒண்ணுமே நடக்காத மாதிரி விக்ரமன் பட வீடாட்டம் ஒண்ணு மண்ணா திரிஞ்சானுங்க. கடைசியில வனி எல்லாருக்கும் விபூதி பூசிவிட்டு ஆசீர்வாதம் பண்ணாங்க. அதுலயும் சேரனுக்கு “சரஸ்வதி நாவிலும், கையிலும் வளர்க”ன்னு காரைக்கால் அம்மையார் ஃபீல்ல எதயோ சொன்னாங்க. என்ன கன்றாவியோ?
பெட்ரூமுல ஷெரின் – வனிதா
ஷெரின் : என் கேம யாரு வெளையாடுறாங்கன்னு தெரியல....வேற யாரோ என் கேம விளையாடுறானுங்க...
வனி : (M.V : ஆகா இவ என்ன பேசுறான்னு புரியலயே...? அதனால என்ன நாம தர்ஷன பத்தி ஏத்தி விடுவோம்) அதான் நான் அன்னைக்கே சொன்னேன்....செஸ்ட விரிச்சுக் காட்டுறான், ஆர்ம்ஸ மடக்கிக் காட்டுறான்னு கவுந்துடாதன்னு......கேட்டியா?
ஷெரின் : என்னத்த சம்பந்தமில்லாம பேசுற சனியனே? அவனுங்க என் பிரண்ட்ஸு....நான் சொன்னது மக்கள...
வனி : (M.V : இது ஒண்ணு....! ஒரு லைன்ல ஒழுங்கா போறாளா? இப்பிடி இருந்தா நம்ம யாவாரம் எப்பிடி ஓடும்?) ஓ நீ மக்கள சொல்றியா ! சரி சரி....! //
72ம் நாள்
“ரங்கு ரங்கம்மா”ன்னு ஷெரின் பாட்டப் போட்டு உற்சாகப்படுத்துனாரு பிக்பாஸு. சாண்டியும், ஷெரினும் ஆடிக்கிட்டாங்க.
சாண்டி ஸ்டார் ஹோட்டல் சீஃப் செஃப் ரேஞ்சுக்கு தோசைச் சட்டிய வச்சு வித்தை காமிக்க, “நீ டான்ஸ் மாஸ்டர்னு சொன்னாய்ங்க....ஆனா நீ புரோட்டா மாஸ்டர் போலயே?”ன்னு போகோ சேனல் கமெடிய சொல்லிட்டு சேரன் லாஸப் பாத்து “எப்பிடி என் காமெடி சென்ஸு?”ன்னு லுக்கு விட....லாஸு கையில வச்சிருந்த  கீரைய உருவிக் காமிச்சுச்சு.
லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்....!
ரெண்டு டீமா பிரிஞ்சு தலகாணி தைக்கனும். அதுக்கான பொருள் எல்லாம் வரும். போட்டி போட்டு அத எடுத்துக்கனும். சேரன், வனி, ஷெரின், தர்ஷ் / லாஸ், கவின், சாண்டி, முகின் ரெண்டு டீம். வனி & லாஸ் குவாலிட்டி செக்கர்ஸ். அப்பறம் மூணு மேஜிக் பொம்மைய குடுத்து பத்திரமா வச்சுக்க சொன்னாப்ல.
வந்த பொருள வச்சு தலகாணி செஞ்சானுங்க. அப்பறம் பஸ்ஸர் அடிச்சதும் குவாலிட்டி செக் பண்ண ஆரம்பிச்சானுங்க. வனி ஃபர்ஸ்டு குவாலிட்டி செக் பண்ணி முடிக்க, அடுத்து லாஸ் செக் பண்ண ஆரம்பிச்சாங்க. இதுல ரெண்டு டீமுக்கும் பஞ்சாயத்து வந்துச்சு. லாஸ் ரிஜெக்ட் பண்ணதப் பாத்துட்டு வனி லாஸ் டீமோட மொத்த தலகாணியையும் ரிஜெக்ட் பண்ணாங்க.
வனி ஒரு கட்டத்துல “நீங்க தலகாணி செஞ்ச அழகுக்கு எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணி இருக்கனும் பாவம் பாத்து 4 தேத்துனா ரொம்பப் பண்றியே?”ன்னு சொல்ல, லாஸோ “அப்பிடி பாவம் பாக்க நீ என்ன பன்வாரிலால் புரோகித்தா? அதெல்லாம் வேணாம் நியாயம் பாத்தா போதும்”னு சொல்ல, வனிக்கு பொசுபொசுங்க ஆரம்பிச்சது.
தர்ஷும் கவினும் காரசாரமா குவாலிட்டி செக்கிங்க பத்தி பேசிட்டு இருக்கும்போது....
வனி : அவன் என்ன அசிஸ்டெண்ட் குவாலிட்டி செக்கரா?
கவின் : நீ என்ன குவாலிட்டி குக்கரா? நான் இங்க இவங்கிட்ட பேசுனா நீ என்ன நீட்டிக்கிட்டு வர?
வனி : நான் தர்ஷன் கிட்டதான பேசுறேன் ?
கவின் : தர்ஷன் கிட்ட நீ என்னய பத்திதான பேசுன? அப்ப நான் கேக்காம நாகார்ஜுனாவா வந்து கேப்பாரு?
வனி : லாஸப் பத்தி பேசுனா நீ ஏன் பொங்குற?
கவின் : நீ ஏன் எப்பப் பாத்தாலும் அவளப் பிடிச்சு தொங்குற?
வனி : சாந்தமா பேசிட்டு இருக்கும்போதே சந்திரமுகியா மாறுறா அதக் கேக்கக் கூடாதா?
லாஸ் : இந்தா....என்னய சந்திரமுகி கிந்திரமுகின்னு சொல்லிட்டு இருந்த செல்லைய திருப்பிருவேன் பாத்துக்க...
வனி : ஆங்...நான் அப்பிடித்தான் பேசுவேன்....
லாஸ் : நான் பேசவா உருளைக்கல்லு உன்னயப் பத்தி...?
வனி : நீ என்னயப்பத்தி பின்னாடி பேசுனதத்தான் நான் டீவில முன்னாடியே பாத்தேனே?
லாஸ் : எங்க நான் என்ன பேசுனேன்னு சொல்லு பாப்போம்....?
வனி : நீ வெளிய போயி பாரு....
லாஸ் : அப்ப நீ பாக்கல அப்பிடித்தான? சும்மா இப்பிடி பொய் சொல்லிட்டே திரி... (உள்ள போயாச்சு)
சேரன் : இந்தா வனிதா சும்மா சும்மா இழுத்துக்கிட்டே போகாத பிரச்சனைய...
வனி : (M.V : காலையில என்னய பிக்பாஸங்கிட்ட மாட்டி விட்ட ஆளுதான நீ....? நீ சொல்றத கேக்க மாட்டேன்) நீங்க செத்த சும்மா இருங்க....! எங்களுக்கு தெரியும்? (M.V : என்ன இன்னைக்கு ரொம்ப ரோல் ஆகுது ? எல்லாரும் எக்குத்தப்பா அடிக்குறானுங்க?)
உள்ள கவின், லாஸ் & சாண்டி
லாஸ் : நாம எதுவும் தப்பு பண்ணிட்டோமா? நியாயம் தவறிட்டோமா?
கவின் : உலகத்துல நியாயத்தின் டபுள் பெட் சைஸ் உருவம்னா அது வனிதாதான்....அதத் தவிர எவனும் நியாயவான் இல்ல....
லாஸ் : மறுபடியும் ஒண்ணையும் என்னையும் சேர்த்து பேசுறாங்க?
கவின் : அது மட்டுமா? ஊரே பேசுது ! அத விடு....! சோறு சாப்பிடுறியா? தண்ணி விட்டுரப் போகுது....//
பிக்பாஸ் பஸ்ஸர அடிச்சு....”கணக்கு சொல்லுங்கடா?”ன்னு சொன்னாரு. அப்பறம் “இன்னைக்கு இந்த டாஸ்க்கு போதும். பொம்மைகள கொண்டுபோயி கன்ஃபெஷன் ரூம்ல வைங்கடா”ன்னு சொன்னாரு. அப்பறம் அதுக்கு உயிர் வந்திருச்சுன்னு சொல்லி கதவைத் தொறந்தா....
மோகன் நைனா, அழுமூஞ்சி அபி, நம்ம சல்பேட்டா....!
“டங்கா டங்கா” பாட்டுக்கு தலைவி சல்பேட்டா நண்டுக்கால் நடனத்த ஆடிக்கிட்டு வர........ஆஹா....ஆஹா....ஆஹஹா......! (பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க.....காத்திருந்த காட்சி இன்று காணக்கிடைக்க......)
நைனாவப் பாத்ததும் பசங்க அவர அள்ளித்தூக்க “எங்கடா என் டவுசர?”ன்னு அவரு பசங்கள கலாய்ச்சது சூப்பர். ஷெரினையும், லாஸையும் அவரு கட்டிப்பிடிச்சது அன்பு ஆக்டிவிட்டின்னு எடுத்துக்கலாம். ஆனா அவரு வனிதாவ கட்டிப்பிடிக்காததையும் கவனத்தில் கொள்ளலாம்.
ஆளாளுக்கு அவங்களுக்கு வேண்டிய ஆளுகள கட்டிப்பிடிச்சுக் கொண்டாடுனாங்க.
சல்பேட்டா ஷெரின தனியா தள்ளிக்கிட்டுப் போயி....!
பூக்கள் என்றால் வாசம்
அம்மா அப்பான்னா பாசம்
ஷெரின் பேபி உன்னோட நான் கொண்ட நட்புதான் என் சுவாசம்னு
இப்பிடி ஒரு கவிதைய கக்குனதும். எல்லாம் புரிஞ்ச மாதிரி ஷெரின் ரியாக்ட் பண்ணது ஒரு குட்டி ஹைக்கூ.
சல்பேட்டா : பேபி எப்பிடியாச்சும் “இந்த கலக்கப் போவது யாரு?” டைட்டில நீதான் ஜெயிக்கனும்
ஷெரின் : என்னது கலக்கப் போவது யாரா? அடியே செட்டு மாறி வந்துட்டியா? இது பிக்பாஸுல்ல?
சல்பேட்டா : (M.V : ஞே.....பேர மாத்திட்டேனா?) அதான் அதான் பிக்பாஸு டைட்டில வின் பண்ணி கலக்கப் போறது நீயா இருக்கனும்னு சொல்ல வந்தேன்..... //
சல்பேட்டா ஃபார் எ ரீசன்...!
மூணு பேரும் விருந்தாளியா வந்திருக்காங்களாம். (இப்பிடிதான் ஒண்ணு உருண்டு உள்ள வந்துச்சு. கடைசியில பாத்தா அது இங்கயே தங்கிருச்சு)
அபி லாஸ்கிட்ட போயி “எனக்கும் சல்பேட்டாவுக்குந்தான் குடுத்து வைக்கல. நீயாச்சும் புத்தியோட பொழச்சுக்கோ”ன்னு அட்வைஸ அள்ளி தெளிச்சிட்டு இருந்தாங்க. (கடைசியில அது கவினப் பத்தி இல்லையாம். டைட்டில் வின்னிங்காம். நம்ம மைண்ட் வேற எங்கயோதான போகும்)
இங்குட்டு வனிதா சல்பேட்டாக்கிட்ட....
வனி : நல்ல நேரத்துல உள்ள வந்த....! இன்னைக்கு மதியந்தான் லாஸ ரைடு எடுத்தேன்....என்னா ஷெரினு?
ஷெரின் : (மேலையும் கீழையும் பாத்தபடி) ஆமா ஆமா செம்ம ரைடு....
வனி : உன்னய ஏமாத்திட்டு அவன் எப்பிடி நல்லா இருக்கலாம்? ஷெரின வேற நாமினேட் பண்ணிட்டான். உனக்கு இப்ப வர கோவத்துக்கு அந்த பெரிய குடைய எடுத்து அவன் வயித்துல இந்தப் பக்கமா விட்டு அந்தப்பக்கமா எடுத்து, ஜெயிலுக்குள்ள போட்டு அவன் ரத்தம் கக்கி விழுந்து கிடக்குறப்போ “அவ்வ அவ்வா மனசு வலிக்குது” பாட்ட பாடனும் போல இருக்குமே ? அப்ப பண்ணிடு !
சல்பேட்டா : ஆக்ச்சுவலா எனக்கு அவ்வளவு கோவமே இல்ல....! அவன் பாட்டுக்கு அவன் வேலைய பாக்கட்டும். நான் ஷெரின ஜெயிக்க வைக்கதான் வந்தேன்.
வனி : (M.V : ம்ம்ம்ம்.....இது வேலைக்காகாது....அபிய போயி கெளப்பி விட்டு குடை பிராஜக்ட்ட சொல்லுவோம்)
மத்த மடசாம்பிராணிகள விடுங்க. காலையில அலாரத்துக்கு சல்பேட்டா சால்சா இருக்கு. இதுக்கு மேல வேற என்ன வேணும்.....! அவ்வ அவ்வா.......!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)