பிக்பாஸ் 3 : நாள் 82 தொடர்ச்சி & 83 (14.09.19)


பிக்பாஸ் 3நாள் 82 தொடர்ச்சி & 83 (14.09.19)


சொன்ன மாதிரியே நடந்துச்சா? ஆண்டவரே கண்டெண்ட் இல்லாம ஒரே கேள்விய மாத்தி மாத்தி...
மூணாம் நம்பர எப்பிடி போடுவ?
மூணுன்னு எப்பிடி எழுதுவ?
எழுதுனது மூணுன்னு எப்பிடி நிரூபிப்ப?
எழுதுன மூணு நாலுக்கு முன்னாடி வரதா? இல்ல ரெண்டுக்கு அப்பறம் வரதா?
மூணுன்னா மூணேதானா அது ஏன் நாலு இல்ல?
மூணுக்குள்ள எத்தனை 1 இருக்கு?
மூணுக்குள்ள எத்தனை 2 இருக்கு?
மூணுன்றது வட்டமா வெள்ளையா வானத்துல இருக்குறது இல்லையே?ந்னு
எபிசோட் முழுக்க இப்பிடித்தான் கேட்டுட்டு இருந்தார். இதுக்கு ஒவ்வொருத்தனும் ஒரே பதிலதான் ஃபுல் ஸ்டாப், கமா மாறாம சொல்லிட்டு இருந்தானுங்க.
இதுல எக்ஸ்ட்ரா பிட்டா லாஸோட அப்பாவுக்கு அட்வைஸ் சொல்றேன்னு கால் மேல கால் போடுறத சப்போர்ட் பண்றாப்ல நைசா கவினுக்கும் லாஸுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருங்கன்னு புரியாத மாதிரி  சொல்லிட்டார்.
அதுவும் “எதையும் மைன்ட்ல இருந்து எடுக்கல. இப்போதைக்கு தள்ளிதான் வச்சிருக்கேன்”னு சொல்லிடுச்சு. அனேகமா நாளைக்கழிச்சு நைட்டு லான்ல ஒரு மீட்டிங்க எதிர்பாக்கலாம். இதுக்கு மேல ஒரு மண்ணும் இல்ல......
இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. அதே கண்கள் சீரியல்ல மோகனான்னு ஒரு தீய சக்தி, பியான்னு ஒரு அதி சக்தி. ரெண்டுக்கும் நடக்குற போராட்டம். அதுல இருக்குற எமோஷன், காதல், அழுகைன்னு சும்மா செம்மயா இருக்கு. குறிப்பா தீய சக்தி மோகனாவுக்கு ரொம்ப பெருசா இருக்கு அதோட ஜடை.
நிமிஷத்துக்கு நிமிஷம் மாயக்கண்ணாடி சாரி மாயாஜாலம். பரபரப்புன்னு அருமையா இருக்கு. தினமும் காலையில குளிச்சு முடிச்சு சாப்பிட்டு வேலலைக்கு போற மாதிரி இவனுங்க தீய சக்தி கூட சண்டை போட்டுட்டு இருக்கானுங்க. குறிப்பா தீய சக்தி மோகனாவுக்கு ரொம்ப பெருசா இருக்கு அதோட ஜடை.
ஹீரோவும் பாக்க நல்லா இருக்கான். அடுத்த பிக்பாஸுக்கு வந்தா தர்ஷன் மாதிரி க்ளிக் ஆவான். திடீர்னு எல்லாரும் கல்லா மாறுரானுங்க. தங்க சிலையா மாறுரானுங்க. வவ்வால் ஒரு பொண்ணா மாறுது. குறிப்பா தீய சக்தி மோகனாவுக்கு ரொம்ப பெருசா இருக்கு அதோட ஜடை.
சோ இனியும் வெயிட் பண்ணாம வாங்க எல்லாரும் அதப் பாக்கலாம். ஏன்னா தீய சக்தி மோகனாவுக்கு ரொம்ப பெருசா இருக்கு அதோட ஜடை.

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)