பிக்பாஸ் 3 : நாள் 91 (22.09.19)
பிக்பாஸ் 3நாள் 91 (22.09.19)
ஓப்பனிங்க்
சீனே லாஸ் கன்ஃபெஷன் ரூம்ல உக்காந்திருந்துச்சு....! “யப்பா பிக்பாஸு, மெயின் டோரத்
தொறந்து விட்டேனா துணிமணிய எடுத்துக்கிட்டு தோ மினிட்ல போயிடுவேன்”னு சொல்ல, பிக்பாஸ்
“என்னாச்சு லாஸ்? வீட்டுக்காரரோட பிரச்சனையா? நான் வேணும்னா பேசவா?”ன்னு கேக்க, “போதும்டா
உங்க பொங்கலு....இதுக்கு மேல இங்க இருக்க முடியாது எவிக்ஷன்ல போயிட்டா சரி ஆனா போகலேன்னா
நீயாச்சும் கதவத் தொறந்து விட்ரு”ன்னு சொன்னாங்க. ஆனா பிக்பாஸோ “அதெல்லாம் முடியாது
! நீ வந்தப்ப எப்பிடி ஜாலியா இருந்தியோ அப்பிடி ஜாலியா இரு”ன்னு சொல்லிட்டாப்ல.
வெளிய வந்த
லாஸ் கிட்ட கவின் “என்ன கேப் புக் பண்ணித் தரேன்னு சொல்லிட்டாரா?”ன்னு சர்காஸம் பண்ண,
“இல்ல அவரு இங்கயே இருந்து சமாளின்னு சொல்லிட்டாரு”ன்னு சொன்னதும்தான் கவினுக்கு கண்ணு
நல்லா தெரிய ஆரம்பிச்சுது.
ஆண்டவர் வந்தாரு.
“நீர் மேலாண்மைக்கு மட்டும் நீட் தேர்வு இருந்திருந்தா தமிழன் மொத மார்க் வாங்கி இருப்பான்
அந்த அளவு நாம பெரிய ஆளு அதுல. ஆனா இப்ப கொஞ்சம் மறந்து போயிட்டோம் அத மறுபடியும் செய்ய
ஆரம்பிச்சுட்டா நல்லா இருக்கும்”னு கருத்து சொல்லிட்டு உள்ள போனார்.
காலர் ஆஃப்
த வீக்...! சேரனுக்கு கேள்வி !
லாஸ் கூட பேசாதன்னு
உங்க பொண்ணு சொன்னப்ப நீங்க ஒன்னும் சொல்லலையே ஏன்?
சேரன் : சொன்னேங்க...!
உங்களுக்கு காமிக்கல போல...!
மொத்தமா இன்னைக்கும்
கவின் – லாஸ் பிரச்சனைதான். ஆண்டவரும் சுத்தி சுத்தி அங்கதான் வந்து நிக்குறாப்ல. இதுங்க
ரெண்டும் சுத்தி சுத்தி ஒரே பதிலதான் சொல்லுதுங்க.
எடுத்ததும்
எவிக்ஷன் ப்ராசஸ்க்கு வந்தார் ஆண்டவர். ஷெரின் சேவ்டு. அடுத்து சாயம் வெளுத்துப் போச்சு
டாஸ்க்குக்கு வந்தாரு. “யாரு யாரு யாருக்கு எதுக்கு ஊத்துனீங்க?”ன்னு விளக்கம் கேட்டாரு.
எப்பவும் போல இதுலயும் எல்லாம் கவின்- லாஸ் பத்திதான் பேசுனாங்க. “லாஸோ நாங்க சும்மா
பேசுனாலும் இவனுங்க சுத்தி விட்டுறானுங்க”ன்னு பொலம்புச்சு. அடுத்து மறுபடியும் ஒரு
சலசலப்ப ஏற்படுத்தி கவின் சேவ்னு சொன்னாரு. மீதம் இருக்குற ரெண்டு பேரையும் தனியா ஆக்டிவிட்டி
ரூமுக்கு வர சொன்னாரு.
எல்லாருக்கும்
சொல்லிட்டு வாங்கன்னு சொன்னாரு. கவின் மட்டும் பேபி போட்ட பூனை மாதிரி லாஸு பின்னாடி
சுத்திகிட்டே “நீ துணிமணிய எடுத்து வைக்காத நீ போக மாட்ட”ன்னு சொல்லிட்டு இருந்தான்.
அப்பறம் ரெண்டு
பேரும் உள்ள போனாங்க. அங்க இருந்த கார்ட எடுத்துப் பாத்தா சேரன் சார் தான் எவிக்டட்.
லாஸுக்கு அறிவுறை சொல்லிட்டு வெளிய வந்தார். சாண்டியப் பாராடுனார். “எல்லாம் நல்லா
வெளையாடுங்க”ன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டார். ஆண்டவரும். அப்பறம் வழக்கம்போல லாஸும்
கவினும் கடலை போட ஆரம்பிச்சுட்டாங்க. அதிக வேலைப்பளு காரணமா இன்னைக்கு இவ்வளவுதான்.
வேலை இல்லான மட்டும் அப்படியே 10 பக்கத்துக்கு எழுதிடுவிக எழுதுரதுக்கு அங்க எதவது இருந்தா தானே
ReplyDelete