பிக்பாஸ் 3 : நாள் 87 (18.09.19)


பிக்பாஸ் 3நாள் 87 (18.09.19)


பேசாம வீடியோ லிங்க்க பேஸ்ட் பண்ணிட்டு போயிடலாம் போல. பிக்பாஸ் ஷோவ ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல போட்டுரலாம். மொத்தமும் பிசிக்கல் டாஸ்க். பூராம் டிக்கெட் டூ பினாலேல குறியா இருக்கானுங்க. அப்பவும் தோழர் கவின் லாஸ் மேல மட்டும் குறியா இருக்குறது தமிழகத்தில் பரவலா மழை பொழிவதற்கான அறிகுறி.
“வரவா வரவா உன்ன துரத்தி வரவா”ன்னு அலாரம். ஏண்டா இதெல்லாம் காலையில எழுப்புறதுக்கு போடுற பாட்டாடா? முகின் மட்டும் லாஸ தர தரன்னு இழுத்துட்டு வந்து லான்ல ஆடிட்டு இருந்தான்.
சாண்டி மேன் கதைய கேரக்டர் மாத்தி இன்னைக்கும் சொல்லிட்டிருந்தாப்ல சாண்டி. எப்ப கேட்டாலும் அத மொத தடவ கேக்குறாப்லயே மெயின்டெயின் பண்ற சேரன் சார் சிறந்த கதை சொல்லி மட்டுமில்ல. சிறந்த கதை கேக்கியும் கூட. இன்னைக்கு டவுட்டெல்லாம் கேட்டாருன்னா பாருங்களேன். உள்ளயும் வந்து பசங்ககிட்ட அதே கதைய சொல்லிட்டு “இப்ப கவினுக்கு பவர் குடுப்போம்”னு சொல்லிட்டு இருக்கும்போதே “ நீ என்ன எழவ வேணும்னாலும் குடு ஆனா மைக்க சரியா மாட்டிட்டு குடு”ன்னு செவுட்டுலேயே குடுத்தார் பிக்பாஸ்.
பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னாதாலயோ என்னமோ முகின் இன்னைக்கும் அதே ரெக்கார்ட போட்டுட்டு இருந்தான். புரியவே இல்லன்னாலும் “சின்னக் காலா இருந்தாலும் நல்ல காலா இருக்குடா”ன்ற ரேஞ்சுக்கு ஷெரின் பாராட்டிட்டு இருந்தாங்க. “ஐயா முகினு உள்ளார வாயா”ன்னு பிக்பாஸ் பாசமா முகின கூப்பிட, ஷகீலா படத்துல செகண்ட் ஹீரோ சான்ஸ் கெடச்சாப்ல ரொம்ப சந்தோஷமா உள்ள போனான் முகின். பிக்பாஸ் செல்லமா கூப்ட்டதுல சந்தோஷமா இருக்காராமாம்.
டாஸ்க் டீடெயில குடுத்து விட்டிருந்தார் பிக்பாஸ். ஆனா அதுவரைக்கும் லாஸும் கவினும் கண்லயே படல. அப்பறம் டாஸ்க்க வாசிச்சானுங்க. ஆளாளுக்கு நம்பர் வரிசைப்படி முதுகுல தெர்மாக்கோல் பந்துகள் நிரப்பப்பட்ட மூட்டைகள சுமந்துகிட்டு போட்டு வச்சிருக்குற ரவுண்டுல ஓடனும். பின்னாடி உள்ள ஆளு முன்னாடி ஓடுற ஆளு மூட்டைய காலி பண்ணனும். மூட்டை காலியான மொத ரெண்டு பேரு வெளிய போகனும். இப்பிடியே 3 ரவுண்டு. மொத ரவுண்டுலயே தம்மு இல்லாம சேரன் சார் வட்டத்துக்கு வெளிய குதிச்சுட்டார். தர்ஷன் மூட்டை காலியானதால வெளிய போயிட்டான். “கவின் மூட்டைய கிழிச்சுட்டான், ஓட்டைய பெருசாக்கிட்டான், ஓடும்போது புடிச்சு இழுத்தான்”னு ஸ்கூல் பையன் மாதிரி கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு இருந்தான் தர்ஷன். சும்மா இருந்தா கவினே சமாதானப்படுத்தி இருப்பான். கவின் சம்சாரம் உள்ளார புகுந்து “டேய் என் புருஷங்கிட்ட என்னடா பஞ்சாயத்து? அவரு தீப்பொறி திருமுகண்டா ஒரசாத”ன்னு சொல்ல, தர்ஷன் லாஸ் பக்கம் திரும்பிட்டான். விடுவானா கவின் “மச்சாஆஆஆன்னு ஆரம்பிச்சு வட்டத்தின் சுற்றளவு, விட்டம், ஓடுபாதையின் குறுக்களவு, ஓடுபவரின் எடை, மூட்டையின் சுற்றளவு”ன்னு பிசிக்ஸ் பாடம் எடுக்க ஆரம்பிச்சுட்டான். நல்லா வேளையா சாண்டி உள்ள புகுந்து சமாதானப்படுத்தி மறுபடியும் ஒண்ணாகிட்டானுங்க.
அப்பறம் ரெண்டாவது சுற்று, மூணாவது சுற்று....! இதுல முகின் முதலிடம், கவின் ரெண்டாவது இடம்.
அப்பறம் ரெண்டாவது டாஸ்க்கு ! அவங்கவங்க உருவம் பதிச்ச பிளாக்குகள ஒரே நேரத்துல எல்லாரும் அடுக்கனும் அதே நேரம் மத்தவங்க அடுக்குனத பந்த கொண்டி எறிஞ்சு கலைக்கனும். இதுல சேரன யாரும் டார்கெட் பண்ணல. அவரு மேல பந்த கொண்டி எறியுறது மரியாதைக்குறைவுன்னு நெனச்சிருக்கலாம். அல்லது அவரு தனியா கூப்புட்டு “ஒரு மிகப் பெரிய டைரக்டர் மேல இப்பிடி பந்த கொண்டி எறிஞ்சா பாக்குற மக்கள் என்ன நெனைப்பாங்க?”ன்னு அவரு கேப்பாறேன்ற பயத்துல விட்டிருக்கலாம். தர்ஷன் மட்டும் ஒரு தடவ எறிஞ்சான். அதுக்கும் அவரு “அமாவாசை பந்து மேல படுது”ன்னு சொன்னதும் விட்டுட்டான். கடைசி வரைக்கும் காப்பாத்தி வச்சிருந்த கவின் கடைசி நேரத்துல கேர்லெஸ்ஸா போக அவனோடதையும் கலைச்சுட்டானுங்க. மொத்தமா ஷெரினையும், முகினையும் குறிவச்சு விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க. கடைசியில சேரன் சார் வின்னு. புள்ளிப்பட்டியல சரி பாத்துட்டு இருந்தானுங்க.
ஓடியாடி விளையாண்ட களைப்புல எல்லாரும் கட்டைய சாய்க்க. நைட்டு ஒரு மணிக்கு லைட்டப் போட்டு விட்டாப்ல பிக்பாஸ். நல்ல வேளைக்கு கவின் அவர் பெட்டுல தனியாத்தான் படுத்திருந்தாப்ல. ஷெரினோ “டேய் கக்கூஸ் போறவனுங்க ஏண்டா எல்லா லைட்டையும் போடுறீங்க?”ன்னு கேட்டுட்டு இருந்தாங்க. தர்ஷன பிக்பாஸ் உள்ளக் கூப்புட என்னமோ ஏதோன்னு பதறிப்போயி பாத்தா டாஸ்க்க கைல குடுத்து அனுப்பிட்டானுங்க.
ஆளுக்கு ஒரு தங்க முட்டை கார்டன் ஏரியால வைக்கப்பட்டிருக்கும். அத மத்த யாரும் உடைக்காம பாத்துக்கனும். மத்தவன் உடைக்கும்போது பாத்துட்டா உடைக்க வந்தவன் அவுட்டு. பாக்குறதுக்குள்ள உடச்சுட்டா முட்டைக்கு சொந்தக்காரன் அவுட்டு. டாஸ்க் ஆரம்பிக்குறதுக்குள்ள ஒண்ணுக்கு ரெண்டுக்கு போயிட்டு வந்துடலாம்னு ஓடுனதுல தர்ஷுக்கும், முகினுக்கும் போட்டி.
நைட்டு ஆரம்பிச்சு விடியுற வரை அப்டியே இருந்தானுங்க. ஒண்ணுக்கு ரெண்டுக்கு போக  முடியாம மொத்தமா சிரமப்பட்டானுங்க. இதுல சாண்டி ஷெரின் முட்டைய உடைக்கப் போனப்ப ஷெரின் பாத்துட்டாங்க. ஆக்ச்சுவலா அது கீழ விழும்போதுதான் பாத்தாங்க. ஆனா தர்ஷன் சாண்டிய அவுட்டுன்னுட்டான் “அப்பிடியா பாத்துட்டாங்களா?”ன்னு சாண்டி சேரன் கிட்ட கேக்கா அவரு குத்துமதிப்பா ஒரு எட்டு ஷேப்புல தலையாட்டி சமாளிச்சாப்ல. பிக்பாஸ் அவுட்டுன்னு இன்னும் சொல்லாட்டியும் சாண்டி வெளிய போயிட்டாப்ல. “நீ ஏற்கனவே லிஸ்டுல பர்ஸ்டுதான் இருக்க வேணும்னா போயி படு”ன்னு சொக்கி விழுந்த முகினுக்கு யோசனை சொல்லிட்டு இருந்தாங்க ஷெரின். அதோட முடிஞ்சது.
ஆனா இந்தப்பக்கம்.....அதி சக்தி பியா தீய சக்தி கண்ட்ரோல்ல இருந்த தன் மாமியார “ஜெய் துர்கா மாதா”ன்னு மந்திரத்த சொல்லி கைய முன்னாடி நீட்டி அதுல இருந்து வந்த அல்ட் ரா வயலட் ஒளிக்கற்றைகள் மூலமா  மாமியார 1340 மாடியில இருந்து கீழ விழ வச்சுட்டா...! ஆனாலும் அவங்கள காப்பாத்த 375 மாடிக்கிட்ட ஒரு மணிப் பிளாண்ட் கொடியில பெட்டு செஞ்சு வைக்க, அத அங்க இருந்து பாத்த தீய சக்தி அந்த கொடிய அத்து விட்டிருச்சு. இங்குட்டு பியா புருஷன் அன்ஸ் பெரிய றெக்கையோட பறந்துட்டு வந்துட்டு இருந்தான். எல்லாரையும் ஒரு தடவ க்ளோசப்ல காமிக்க, மாமியார் டொம்முன்னு கீழ விழுந்துட்டாங்க. வாட் எ டெரர்.....! அதே நேரம் ஏற்கனவே பெருசா இருந்தது இப்ப இன்னும் பெருசாகிட்டு இருந்தது தீய சக்தி மோகனாவோட.....ஜடை!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)