பிக்பாஸ் 3 : நாள் 98 (29.09.19)


பிக்பாஸ் 3நாள் 98 (29.09.19)


அபூர்வ சகோதரர்கள் “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ” கெட்டப்ல இடுப்புல கட், கழுத்துல கட்டோட வந்தார் ஆண்டவர். “பெண்கள் நாட்டின் கண்கள். அவங்கள காப்பது கடமை. அவங்க பேர்ல இருக்குற பூமியையும் காப்பாத்தனும். ப்ளாஸ்டிக்க ஒழிங்கடா ப்ளடி ஃபூல்களா”ன்னு சொன்னார். “ப்ளாஸ்டிக்கா? ப்ளானட்டா?”ன்னா அது ப்ளானட்டுதான்னு பொங்குனார். அப்பறம் அவங்க ஆஃபீஸ்லயும் ப்ளாஸ்டிக் யூஸ் பண்றதில்லையாம். “இந்த பிக்பாஸ் வீட்லயும் நெறைய ப்ளாஸ்டிக் இருக்கு”ன்னார். லாஸ் மூஞ்சிய எதுவும் சொல்றாரோன்னு பாத்தா அதில்லையாம்  பாட்டில், கிச்சன் பொருட்கள்லாம் அப்பிடி இருக்காம். அடுத்த சீசன்ல ப்ளாஸ்டிக் வேணாம்னார்.
இன்னைக்கு மட்டும் ஆண்டவர் “நானும்” அப்பிடின்ற வார்த்தைய 1420 தடவையும் “நானும் கூட” அப்பிடின்ற வார்த்தைய 1215 தடவையும் “எனக்கும்” அப்பிடின்ற வார்த்தைய 1117 தடவையும் சொன்னார். நல்ல வேலை உள்ள யாரும் கர்ப்பமா இருக்கேன்னு சொல்லல இல்லேன்னா “நானும் கூட கர்ப்பமாக இருந்த காலத்தில்”னு ஆரம்பிச்சு இருப்பாரு போல....
“சரி வாங்க உள்ள போவோம்”னு உள்ள போனார். அங்க எல்லாரும் தயாரா இருக்க, “ஷெரின் லெட்டர்ல என்ன எழுதுன? அத இவனுங்க திருடி படிச்சது உனக்கு தெரியுமா?”ன்னு கேக்க, “அதெல்லாம் தெரியும்”னு சொன்னாங்க. “சரி தர்ஷன் நீ என்ன சொல்ற?”ன்னு கேட்டார். “அது ஒரு ஸ்வீட்டான லெட்டர்”னு முடிச்சுக்கிட்டான். அப்பறம் சாண்டி சமையலப் பத்தி கலாய்ச்சுட்டு இருந்தார். “நீ போட்ட இ-தோசை எப்பிடி இருந்துச்சு?”ன்னு கேட்டார். “நல்லாதான் பண்ணேன். அன்னைக்குக் கூட குப்பைல விழுந்த கொத்தமல்லிய வச்சு புதினா ஆம்லேட் போட்டுக்குடுத்தேன்”னு சாண்டியும் கேப் விடாம உளற....நமக்குதான் நாக்கு தள்ளிருச்சு.
காலர் ஆஃப் த வீக்...! கேள்வி எதுவும் இல்ல. எல்லாருக்கும் வாழ்த்துகள்னு சொன்னார் ஒரு ரசிகர்.
அடுத்து “உள்ள இருந்து 3 பாக்ஸ எடுத்துட்டு வா”ன்னு சொல்லி மொத பாக்ஸ சாண்டிய தொறக்க சொன்னார். அதுல பைனலிஸ்ட் மெடல் இருந்தது. “அத அப்பிடியே போட்டுக்க”ன்னு சொன்னதும் தர்ஷன் கையால மாட்டிக்கிட்டாப்ல சாண்டி. அடுத்து ஷெரின கூப்ட்டு “பாக்ஸ தொற”ன்னு சொன்னதும் அது “நான் இத தர்ஷனுக்கு குடுக்குறேன்”னு சொன்னதுக்கு “ஏன் லாஸுக்கு குடுக்க மாட்டியா?”ன்னு கேக்க, “அதெல்லாம் குடுப்பேன்”னு ஷெரின் சொன்னதும் “அப்ப குடுத்துரு”ன்னு சொன்னாப்ல. லாஸுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சிதான் “ஏன் இப்பிடி நடக்குது?”ன்னு லாஸ் கேட்டதுக்கு “ஷெரின் அப்பிடித்தான் நடக்கும்...உன் புருஷன் பண்ணிட்டு போன வேலை அப்பிடி ! நங்கூரத்த நச்சுன்னு போட்டுட்டுல்ல போயிருக்கான்”ற மாதிரி சொல்லுச்சு.
அடுத்து மறுபடியும் ஷெரினயே எடுக்க சொல்லி “நீயே போட்டுக்க”ன்னு சொன்னதும் மொத்தமா எல்லாருக்கும் அதிர்ச்சி.....! எவிக்ஷன் கார்டுல தர்ஷன் பேரு.
எதிர்பாக்காத விக்கெட். ஏறக்குறைய அவந்தான் ஃபைனல் வின்னர்னு எல்லாருமே ஆழ்மனசுல நம்பிட்டிருந்த நேரத்துல அவன் எவிக்ட் ஆனது பேரதிர்ச்சி. கேட்டா எதிர்பாராததை எதிர்பாருங்கள்னு நமக்கே நம்பூதரி தைலம் போடுவானுங்க.
ஷெரின் அடுத்த லாஸா மாறி நின்னுச்சு. “ஓ”ன்னு அழுகை. லாஸ் வழக்கமா வெளிய போறப்போ சொல்ற டயலாக்க மறக்காம சொல்லுச்சு “நாந்தான் போகனும். நீ இருக்கனும். இது எனக்கு புரியல. இது நடக்கக்கூடாது. நாந்தான் போவேன்னு நினைச்சேன். நீ போகக்கூடாது. நீ ஃபைனலிஸ்ட்டா வரனும். இது நியாயமே இல்லே”ன்னு நாலாம் வாய்ப்பாடு சொல்ற மாதிரி சொல்லிட்டு இருந்துச்சு.
அப்பறம் தனித்தனியா எல்லாரும் ஃபீல் பண்ணிட்டு இருந்தானுங்க. சாண்டி “மெடலயெல்லாம் உடைக்க முடியாது”ன்னு கலவரம் பண்ணாப்ல. “அதெல்லாம் உடச்சுதான் ஆகனும்”னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாப்ல பிக்பாஸ். “என்னங்கடா மணமேடையில உக்காந்து தாலி கட்டப்போற நேரத்துல கையில இருந்து தாலி பறிக்கப்பட்ட அமெரிக்க மாப்பிள்ளையாகிட்டோமே”ன்னு தர்ஷுக்கும் வருத்தந்தான் ஆனா அத அவன் பெருசா வெளிய காட்டிக்கல.
அப்பறம் “சிஷ்யா”ன்னு கூப்ட்டு தர்ஷனோட கடைசி ஆசைய நிறைவேத்தி வெளிய தள்ளி கதவ சாத்துனாரு பிக்பாஸ். வெளிய வந்து ஆண்டவர் கால தொட்டு கும்பிட்டுட்டு நின்னாப்ல தர்ஷன். ஆண்டவருக்கே இது அதிர்ச்சியா இருந்ததா சொன்னார். அப்பறம் ஒரு சந்தோஷக் குறும்படம். “கப்பு ஜெயிக்க வேண்டிய ஆளு நீ ஆனா மக்களோட மனசுல கப்புன்னு உக்காந்துட்ட அதான் உண்மையான ஜெயிப்பு”ன்னு மோட்டிவேட் பண்ணார். “அப்பறம் உன் அனுபவம் என்ன?ன்னு கேட்டார். இப்பிடியே முடிஞ்ச வரைக்கும் இழுத்துட்டு பிறகு உள்ள நண்பர்கள காமிச்சார். எல்லாருக்கும் டாட்டா சொன்னான் தர்ஷன். “சரி அதான் உன் பாதை நீ போகப் போக அகண்டுகிட்டே போகட்டும் போ”ன்னு வாழ்த்தி அனுப்புனார். மக்கள் ரெண்டு பக்கமும் நின்னு அவனுக்கு கையக்குடுத்து உற்சாகமா அனுப்பி வச்சாங்க. பாகுபலி இண்டெர்வெல் சீனாட்டம் இருந்துச்சு.
அப்பறம் ஆண்டவரும் கிளம்பிட்டார். உள்ள காமிச்சாங்க. லாஸ் “ரெண்டு பேருக்கும் நேரமே சரியில்ல ஷெரினு. ரெண்டு பேரோட ஆளுகளும் வெளிய போயிட்டாங்க”ன்னு ஷெரினுக்கு சமாதனம் சொல்லிட்டு இருந்துச்சு. சாண்டியோ “ரெண்டு நாளைக்கு முன்னாடி லாஸுக்கு நீ என்ன சொன்னியோ அதான் உனக்கும். உனக்கு நீயேதான் அட்வைஸு”ன்னு சொன்னாப்ல. ஷெரின் தர்ஷன் உடைச்சுட்டுப் போன மெடல எடுத்து வச்சுக்கிட்டாங்க. அப்பறம் ஒரு லெட்டர எழுதி தர்ஷன் பெட்டிக்குள்ள வச்சு அனுப்புனாங்க. சாண்டி முகின் கிட்ட “கவின் போன கவலையே இன்னும் தீரல அதுக்குள்ள தர்ஷனும் போயிட்டான்”னு பொலம்பிட்டு இருந்தாப்ல. முகினும் முசு முசுன்னு அழுதுட்டு இருந்தான்.
ஒரு பெரிய கைய அசால்ட்டா தூக்கிட்டானுங்க. பாப்போம்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)