பிக்பாஸ் 3 : நாள் 92 (23.09.19)
பிக்பாஸ் 3நாள் 92 (23.09.19)
“டசக்கு டசக்கு”
பாட்ட போட்டு எழுப்புனார் பிக்பாஸ். முகின் மட்டும் கால் வலினால ஆடல, “பாய்ஸ் டீம்தான்
ஃபைனல் போனும்”னு ஓப்பனா சொன்னதாலயோ என்னமோ ஷெரின் நாள் முழுக்கவே இவனுங்க கூட ஒட்டல.
அதனால ஆடல. மத்த எல்லாரும் ஆடுனானுங்க. தோழர் கவினும் இன்னைக்கு ஆடி விழாவ சிறப்பிச்சது
மகிழ்ச்சி.
இதுக்கும் மேல
பண்றதுக்கு ஒண்ணுமில்லாம நம்ம பிக்பாஸ் இவனுங்க நார்மலா பண்ற எல்லா வேலையையும் டாஸ்க்
அல்லது க்ளையண்ட் இண்டெகரேஷனா மாத்திட்டு இருக்காப்ல. “இன்னைக்கு மதியத்துக்கு யாரும்
சமைக்க வேணாம். சர்ப்ரைஸ் காத்திருக்கு”ன்னு சொன்னாப்ல பிக்பாஸ். அப்பறம் தர்ஷனும்,
சாண்டியும் ரெஸ்ட்லிங்க் விளையாண்டுட்டு இருந்தானுங்க. போற போக்கப் பாத்தா “சாண்டி
மூக்கு நோண்டிட்டு இருந்தார், கவின் காது கொடஞ்சுட்டு இருந்தான்”னு எழுத வச்சுருவானுங்க
போல.....
“சரி வாங்க
சும்மா உக்காந்திருக்குறதுக்கு நாமினேஷன் பண்ணலாம். இந்த ஷோவோட கடைசி நாமினேஷன் இது”ன்னு
சொல்லிட்டு லாஸ உள்ளக் கூப்ட்டாப்ல பிக்பாஸ். ஆனா யாரு வெளிய போகனும்னு சொல்லாம யார
காப்பாத்தனும்னு சொல்லனும். யாரு குறைவான வாக்குகளோ அவங்க நாமினேஷன்ல இருப்பங்களாம்.
உள்ள போனா டேபிள்ல
பவுல் நெறைய பச்ச மொளாகா. “இந்த பச்சல புடுங்கி எதுக்கு பச்ச மொளகாவ வச்சுருக்கான்னு
தெரியலயே?”ன்னு லாஸ் பவுலயே பாத்திட்டு இருக்க...
பி.பா : லாஸ்
நீங்க யார காப்பாத்தலாம்னு இருக்கீங்க?
லாஸ் : கவின்
கிட்ட இருந்து என்னயதான் காப்பாத்திக்கனும்...
பி.பா : அவன்
கிட்ட இருந்து என்னய கூடதான் காப்பாத்திக்கனும்....! என்ன பண்றது ? இதுவரை செத்தவனுங்க
எல்லாம் சேர்ந்து வந்து போட்டாலும் கூட இவ்வளவு ஓட்டு வராது ஆனா இவன் எப்பிடி இவ்வளவு
ஓட்டு வாங்குறான்னு யாருக்குமே தெரியல...! அதனால நீ வேற ஆப்ஷன் ட்ரை பண்ணு
லாஸ் : சரி
அப்ப அவன் இருக்கட்டும் நான் ஓடிடுறேன்....!
பி.பா : அவன
காப்பாத்தனும்னா ஒரு பச்ச மொளகாய எடுத்து சாப்புடு...
லாஸ் : என்ன
எழவு லாஜிக் இது? அந்த நாய காப்பாத்த நான் ஏண்டா மொளகா சாப்டனும்?
பி.பா : ஏன்னா
வாங்கிட்டு வந்து வச்சுட்டோம் என்ன பண்றது? அதான் இப்பிடி ஐடியா பண்ணோம்
லாஸ் : நீ கவின
விட பெரிய இம்ச....! இரு தின்னு தொலையுறேன்...//
லாஸ் சாப்ட்டு
முடிச்சுட்டு வெளிய வர, அப்டியே வரிசையா எல்லாரும் உள்ள போனாங்க. எல்லாருக்கும் பச்ச
மொளகா ட்ரீட்மெண்ட். இந்த கவின் பயலுக்கு மட்டும் பச்ச மொளகாவ சாப்பிட சொல்லாம 10 மொளகாய
அரைச்சு பின்னாடி தேச்சு விட்டிருந்தா அடுத்து வரவிருக்கும் டாஸ்க்குலயெல்லாம் முன்னாடி
வர வாய்ப்பிருந்திருக்கும். ஐடியா இல்லாத பிக்பாஸு. ஆளாளுக்கு அவனுங்களுக்கு பிடிச்ச
ஆளுங்கள காப்பாத்த மொளகா தின்னானுங்க.
பிறகு லிவிங்
ஏரியாவுக்கு கூப்ட்டு நாமினேஷன் ரிசல்ட் சொல்றேன்னு சொல்லிட்டு , “முகினத் தவிர எல்லாருமே
நாமினேஷன். அப்பறம் நான் சொன்னதப் பூராம் நீங்க அப்பிடியே நம்பிட்டீங்க”ன்னு காமெடி
பண்ணார் பிக்பாஸ். “எப்பிடி என்னய மாதிரியே நீங்களும் ஜாலியா இருந்தீங்களா?”ன்னு குறும்பா
கேக்க, இந்த செத்த காமெடிக்கும் ரோல் ஆன் த ஃப்ளோரா சிரிச்சானுங்க.
அடுத்து குக்கிங்
டாஸ்க். பாசுமதி அரிசிய வச்சு ஒரு நாளைக்கு ஒரு ஆளு செஃப்பா மாறி அவங்க சொல்றத சமைக்கனும்.
இன்னைக்கு புலாவ். செஃப் சாண்டி. மாறி மாறி கைக்கு கிடைக்குறதெல்லாம் போட்டு ஏதோ ஒரு
கன்றாவியப் பண்ணி அதுக்கு புலாவுன்னு பேரு வச்சுக்கிட்டானுங்க.
அடுத்து இந்த
வார தலைவருக்கான டாஸ்க். “முகின் ஏற்கனவே ஒரு போட்டியாளரா செலெக்டட். மீதி ரெண்டு பேர
நீங்களே பேசி முடிவு பண்ணுங்க”னு சொன்னதும் கவின் & சாண்டி தேர்வானாங்க.
3 பேரையும்
ப்ளாஸ்டர் போட்டு உடம்பு பூராம் சுத்தி மம்மி மாதிரி ஆக்கி தரையில போட்டுரனும். அவனுங்க
இந்த முக்குல இருந்து அந்த முக்குக்கு ஊர்ந்து போயி அந்த முக்குல எந்திரிச்சு நிக்கனும்.
ரொம்ப போராடி அப்பறம் முகினுக்கு ஹெல்ப் பண்ணி அவன ஜெயிக்க வச்சானுங்க. முகின் தான்
இந்த வார தலைவர்.
ஞாயித்துக்கிழமை
ஆண்டவர் தண்ணி கஷ்டத்தப் பத்தி பேசுனாருல அத புடிச்சுக்கிட்டானுங்க. குறைந்த தண்ணில
யாரு அதிகம் தொவைக்குறான்னு போட்டி. சாண்டி – லாஸ் & ஷெரின் – முகின் ரெண்டு டீம்.
கவின் & தர்ஷ் ஜட்ஜ். குற்றவாளிக்கெல்லாம் ஜட்ஜ் போஸ்ட் குடுத்து அழகு பாக்குற
மனசு இருக்கே அந்த மனசுதான் சார் கடவுள்.
சாண்டி டீம்
வின். அப்பறம்? அப்பறம் என்ன அவனுங்க தூங்கப்போயிட்டானுங்க. நான் டீவிய ஆஃப் பண்ணிட்டேன்.
Comments
Post a Comment