பிக்பாஸ் 3 : நாள் 85 (16.09.19)


பிக்பாஸ் 3நாள் 85 (16.09.19)


“நிமிர்ந்து நில் துணிந்து செல்” பாட்டோட எழுப்புனாங்க. மோட்டிவேஷனாமாம். ஆனா இந்த ஆகாவலிங்க இன்னைக்குதான் ஆடவே இல்ல. அன்னை வனிதா இல்லாததால ஆளாளுக்கு கிச்சன்ல நின்னுக்கிட்டு சமைச்சுக்கிட்டு இருந்தானுங்க. எல்லாரும் தோசைய திருப்பிப் போடுவானுங்க. ஆனா சாண்டி தோசைக் கல்லையே திருப்பி போட்டுட்டு இருந்தாப்ல. ஸ்பெஷல் வண்டு தோசை ஒண்ணு போட்டாப்ல.
நாமினேஷன்....
பொங்கல் அன்னைக்கு பொங்கல் வச்சே ஆக்னும்ன்ற ஃபார்மாலிட்டி மாதிரி திங்கக்கிழமை ஆனா இவனுங்க நாமினேஷன தூக்கிட்டி வந்துடுறானுங்க. ஆனா இந்த தடவ நம்ம ஆட்களுக்கு பெரிய பதட்டமில்ல. உள்ள நாமினேட் பண்ணிட்டு வந்தப்பறம் கூட யார நாமினேட் பண்ணோம்னு ரொம்ப கூலா வெளிய சொல்லிட்டு திரிஞ்சானுங்க.
ஷெரின், சேரன், லாஸ் & கவின் – நாமினேஷன்
சேரன் : முகினு நான் யார நாமினேட் பண்ணேன்னு சொல்லு?
முகின் : விஜயயையும், அஜித்தையும்
சேரன் : டேய் என்னடா இது ?
முகின் : பின்ன எப்பிடியும் உங்க மாப்பிள்ளைய பண்ணி இருப்பீங்க இதெல்லாம் ஒரு கேள்வியா?
சேரன் : அப்பறம்...
முகின் : விட்டா அவனையே 10 வாட்டி பண்ணியிருப்பீங்க ஆனா வழியில்ல அதனால மாப்பிள்ளைத் தோழன் சாண்டி...
சேரன் : எப்பிடிடா இவ்வளவு கரெக்டா சொல்ற ?
முகின் : உங்க மைண்ட் வாய்ஸ்தான் ஊருக்கே கேக்குதே ! தவிர இப்போதைக்கு தமிழ்ல உங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மாப்பிள்ளைதான! //
இவனுங்கள இன்னும் கொஞ்சம் வெறியேத்த வீட்ல இருந்து வந்துட்டுப்போன வீடியோக்கள போட்டு விட்டு. “யப்பா டேய் இந்த வாரத்துல இருந்து டிக்கெட் டு ஃபினாலே ஆரம்பிக்குது. தினமும் கலையில குளிச்சு முடிச்சு ஒரு நாளைக்கு ரெண்டு டாஸ்க்குன்னு முடிச்சுட்டு பாலக் குடிச்சுட்டு தூங்குங்க”ன்னு சொல்லிட்டாப்ல. இந்த வாரம் முழுக்க நடக்குற டாஸ்க்குல யாரு ஜெயிக்குறாங்களோ அவங்க டைரக்டா ஃபைனலுக்கு போகும் கோல்டன் டிக்கெட்ட வாங்கலாம்.
அஸ் எக்ஸ்பெக்டட்......
கவின் & லாஸ்...
லாஸ் : கவிராஜன்......கவிராஜன்.....! என்ன சின்னப்பசங்க டவுசர்லயே சுச்சு போயிட்டா ஆடாம அசையாம அங்கனயே உக்காந்திருக்குறாப்ல உக்காந்திருக்க? மாப் எடுத்துட்டு வரவா?
கவின் : யாரையும் நம்ப முடியலேன்னு கமல் சார்கிட்ட சொன்னியே...? அப்ப என்னையும் நம்பலயா?
லாஸ் : உன்னய சொல்லலயே?
கவின் : என்னய சொல்லல ஆனா என்னயதான நீ நம்பல?
லாஸ் : உன்னய நம்பலன்னா உன்னயதான் நம்ப முடியலேன்னு சொல்லி இருப்பேனே?
கவின் : இதோ இப்ப சொல்லிட்டியே
லாஸ் : உன்னய நம்பலேன்னா உன்னயதான் நம்ப முடியலேன்னு சொல்லி இருப்பேன்னு சொன்னேன்...
கவின் : அதத்தான் சொன்னேன் சொல்லிட்டேன்னு....
லாஸ் : உன் பக்கத்துல உக்காந்தது குத்தமாடா? ஏண்டா சாவடிக்குற?
கவின் : இந்த பிக்பாஸ் வேற எல்லாத்துக்கும் ரெடியா இருன்றான் பிசிக்கலாவா இல்ல மெண்டலாவான்னு தெரியல
லாஸ் : நீ மெண்டல்தான் அதுல என்ன சந்தேகம்?
கவின் : ஆமா உன் மேல மெண்டலா இருக்கேன்....
லாஸ் : சனியனே.....! 2 நாளைக்கு முன்னதான எங்க அப்பா உன்னய துப்பிட்டும், உன் பிரெண்டு உன்னய அப்பிட்டும் போனானுங்க....! அவனோட அஞ்சு விரல்ல இன்னும் 3 விரலோட தடம் உன் கண்ணத்துலதான் இருக்கு....அதுக்குள்ள அடுத்த பிட்டுக்கு ரெடியாகிட்ட...! கோல்டன் டிக்கெட்டு, டைரக்டா ஃபைனல்னு  என்னென்னமோ சொல்றானுங்க அதுக்கு எதாச்சும் ரெடியானியா? அங்க பாரு எங்க சேரப்பாவ வெயில்ல நின்னு வென்னித்தண்ணிய குடிச்சு வெறியேத்திட்டு இருக்காரு. நீ என்னடான்னா கழனித்தண்ணிய குடிச்ச எருமை மாதிரி உக்காந்து என்னய இம்சை பண்ணிட்டு இருக்க? எப்பிடியோ போய்த்தொல....! நான் போறேன்...
கவின் : வீட்டுக்கு போறியா இல்ல விட்டுட்டு போறியா?
லாஸ் : பெரிய ஆசை அஜித்து......பரதேசி இருடா உன்னைய கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன்....//
கெண்டக்காலுல ஆளுக்கு ரெண்டு பலூன கட்டிக்கிட்டு மத்தவங்க பலூன உடைக்கனும். கடைசில யாரு பலூன் உடையலையோ அவங்க வின்னர். வேற யாரு? நம்ம எதிர்பார்த்த மாதிரி நம்ம கவின் தான்......மொத ஆளா வெளிய வந்தான். கடைசியா ஒரு 2 மணி நேரம் கழிச்சு தர்ஷனுக்கும் சாண்டிக்குமான பலத்த போட்டியில தர்ஷன் வின்னு.
அடுத்து கயிறு இழுக்கும் போட்டி....அதுலயும் தர்ஷன் டீம் வின்னு.
பின்ன அவங்க அவங்க யாரு யாரு எந்த எந்த இடத்துக்கு வருவாங்கன்னு வரிசைப்படுத்தனும். பெரும்பாலும் தர்ஷ முதல் இடத்துலையும், கவினையும், லாஸையும் கடைசி ரெண்டு இடத்துலையும் நிப்பாட்டுனானுங்க. முடிஞ்சா வீட்டுக்கு வெளியவே நிப்பாட்டுங்கடா புண்ணியமாப் போகும்.
இந்த கவினுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. இந்த ஷெரின ஒரு தடவ வெறுப்பேத்தும்போது இந்த லாஸு சிரிச்சிருச்சு அதனால அத சிரிக்க வச்சு மறுபடியும் லைனுக்கு இழுக்க ஷெரின வெறுப்பேத்துனபடி இருந்தான். இந்த லாஸு லூஸும் “மலை இப்பிடி பண்ணா நல்லா இருக்கு மலை”ன்னு பல்லக் காட்டுது. தர்ஷன் ஒரு 2 தடவ பாத்துட்டு போயிட்டான் இத. எப்பிடியும் ஒரு பிசிக்கல் டாஸ்க்குல கவின் கைய இறக்கி விட்ருவான்னு தோணுது. பாப்போம்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)