பிக்பாஸ் 3 : நாள் 77 தொடர்ச்சி & 78 (09.09.19)
பிக்பாஸ் 3நாள் 77 தொடர்ச்சி & 78 (09.09.19)
விருமாண்டி
வந்துட்டு போற அடுத்த நாள் இந்த கருமாண்டிங்க நமக்கு கண்டெண்டே குடுக்க மாட்டானுங்க.
இருந்தாலும் இருக்குறத வச்சு கடமைய செய்வோம்.
77ம் நாள் நைட்டு
வனி : ஆமா இங்க
என்ன நடக்குது? எனக்கு ஒன்னுமே புரியல....
ஷெரின் : எனக்குந்தான்
நீ பேசுறது என்னன்னு புரியல...? என்ன நடக்குது என்ன நடக்குதுன்னா? நீதான் இந்த வீடு
ஃபுல்லா நடந்தாமேனிக்கு இருக்க, அங்குட்டு கவின் லாஸ் கூட நடையோ நடைன்னு நடந்துட்டு
இருக்கான்....வேற என்ன நடக்குது?
வனி : கையப்
புடிச்சு இழுத்து காவாலித்தனம் பண்றவனெல்லாம் உள்ள இருக்கான் ஆனா கௌரவத்துக்கு வாழ்ந்த
மனுஷன இப்பிடி வெளிய தள்ளி கதவ சாத்திட்டீங்களேடா...ப்ளடி வோட்டர்ஸ் !
ஷெரின் : கக்கூஸும்,
லாஸும் இருக்குறாவரை கவின் கதவுக்கு அங்குட்டு போக வாய்ப்பே இல்ல...
வனி : டு பி
ஹானஸ்டா ஒன்ணு சொல்றேன். சேரன் அண்ணாவோட காலடி மண்ண கைல எடுத்து வச்சிருக்கேன். உனக்கும்
வேணும்னா சொல்லு தினமும் ரெண்டு பேரும் பூசிக்கலாம். //
உள்ள பெட்ல
படுத்தபடி வனி “என்ன எவ்வளவு அழுதாலும் கண்ணுல தண்ணி வரதே இல்ல?”ன்னு கண்ண பிதுக்கி
பிழிஞ்சு ரெண்டு சொட்டு கண்ணீர கொண்டு வந்தாங்க. ஷெரினோ “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும். எதிர்கட்சிகளின் சதியை
முறியடித்து எனக்கு உங்கள் பொன்னான ஓட்டுகளை அளித்து வெற்றி பெற செய்தமைக்கு பாதம்
பணிந்த நன்றி”ன்னு கேமராவப் பாத்து நன்றி அறிவிப்பு கூட்டம் போட்டாங்க.
சீக்ரெட் ரூமில்
சேரன் சார் புத்தர் போல புன்னகைத்துக் கொண்டிருந்தார். அங்கே அமைதி இருந்தது......
பாய்ஸ் கேங்
லான்ல படுத்துக்கிட்டு பேசிட்டு இருந்தானுங்க...
முகின் : நைனா
பேசுனத கேட்டியா? சேரன் சார்கிட்ட யாரையும் நம்பாதீங்கன்னு சொல்றான்
சாண்டி : அவன்
நைனா இல்ல மேட் இன் சைனா....
தர்ஷன் : சல்பேட்டா
உள்ள வரும்போது எல்லாரையும் வாழ்த்த வந்தேன்னு சொன்னா, அப்பறம் ஷெரினுக்காக வந்தேன்னா,
அப்பறம் பாசிட்டிவ் எனெர்ஜியா வந்தேன்றா பிராடு
கவின் : எதுக்கு
வந்தோம்ன்றத மறந்துட்டுதான் மூதேவி இப்பிடி எல்லா காரணத்தையும் சொல்லிட்டு சுத்துது.
போகும்போது அது போன வாட்டி விட்டுட்டு போன பூப்போட்ட குட்டி டவசர எடுத்துட்டு போனதப்
பாத்தேன். அதுக்காக கூட உள்ள வந்துருக்கலாம்.
வனிதா ஷெரின்
கிட்ட “கேப்டன் டாஸ்க்குல நான் கலந்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு உன்னய கோர்த்து விட்டுடுறேன்.
அதெல்லாம் பிக்பாஸ் நம்ம பய சொன்னா கேப்பான்”னு சொல்லிட்டாங்க.
நள்ளிரவு ஷெரின்
& தர்ஷன் லான்ல...
ஷெரின் : தர்ஷா....இந்த
இருட்டு, அந்த நிலா, அந்த நட்சத்திரம் இதெல்லாம் பாத்தா உனக்கு என்ன தோணுது?
தர்ஷன் : என்னய
விடு, வனிதாவுக்கு என்ன தோணுதுன்னு பாரு ! அது கனவுல நம்ம ரெண்டு பேரும் இன்னேரம் டூயட்
ஆடிட்டு இருப்போம்....
ஷெரின் : அவ
என்னமோ நாளைக்கு கேப்டன் டாஸ்க்குல கலந்துக்க மாட்டாளாம்...
தர்ஷன் : ஏன்
தொலஞ்சு போன சந்திராயன தேடப் போனுமாமா?
ஷெரின் : அவ
கேப்டனா இருந்தா பிரச்சனைகள் வருதாம்...
தர்ஷன் : இல்லேன்னா
மட்டும் அப்பிடியே சமாதான சமய சன்மார்கத்த
உருவாக்கிடுமாக்கும்.....தெள்ளவாரி சொல்றதெல்லாம் பொய்யி...! நீயாச்சு அந்த
ஹிப்போபொட்டமஸாச்சு....என்னய விடு ! //
சீக்ரெட் ரூமில்
சேரன் சார் புத்தர் போல புன்னகைத்துக் கொண்டிருந்தார். அங்கே அமைதி இருந்தது......
78ம் நாள்
“தாறுமாறு”
பாட்டோட ஆரம்பிச்சது நாள். தர்ஷன் மல்லாக்க படுத்து சிம்புவோட சைக்கிள் ஓட்டுற ஸ்டெப்ப
போட்டுட்டு இருந்தான்.
கேப்டன் டாஸ்க்.
இல்லாத சேர்ல கால அகட்டிக்கிட்டு உக்காருர பொஷிஷன்ல ரெண்டு கைலையும் கலர் தண்ணி பவுல
வச்சுக்கிட்டு நிக்கனும். யாரு பவுல்ல நெறைய தண்ணியோ அவங்க ஜெயிப்பு. (இதெல்லாம் சல்பேட்டா
இருக்குறப்ப வைக்க வேண்டிய போட்டி...!)
வனிதா நேரா
கேமராகிட்ட போயி “டேய் பிக்பாஸா எல்லாம் மாயா....எல்லாம் சாயா ! நாமினேஷன், எவிக்ஷன்
இதெல்லாம் தேவையில்லாத டிப்ரெஷன். முக்கியமா தர்ஷன். மொத்தமா எனக்கு அவர்ஷன். அக்கா
ஆல்ரெடி டயர்டு சோ இந்த போட்டியில இருந்து ரிட்டையர்டு”ன்னு சொல்லிட்டு வந்தாங்க.
என்ன சாப்ட்டாப்லயோ
பிக்பாஸுக்கு இன்னைக்கு ரோஷம் வந்து “இந்தா இடிச்சபுளி, அதெல்லாம் செல்லாது. ஒழுங்கு
மரியாதையா வந்து வெளையாடு”ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாப்ல.
“உனக்கு ஒரு
நாளைக்கு இருக்குடி”ன்னு சொல்லிட்டு வனிதா போட்டியில கலந்துக்க வந்தாங்க. பஸ்ஸர் அடிச்சதுமே
“நான் விட்டுக்குடுக்குறேன்”னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அடுத்த செகண்டே தர்ஷனும்
கண்ணாடி பவுல கீழ போட்டுட்டு போயிட்டான். லாஸுதான் இந்த லூஸுகளுக்கு இந்தவார பாஸு.
சீக்ரெட் ரூமில்
சேரன் சார் புத்தர் போல புன்னகைத்துக் கொண்டிருந்தார். அங்கே அமைதி இருந்தது......
கக்கூஸ்ல.....
லாஸ் : விட்டுக்குடுத்தா
கட்டுப்பட மாட்டா இந்த வெட்டுக்கிளின்னு உனக்கு தெரியாதாடா தர்ஷா? ஏன் விட்டுக்குடுத்த
? பயமா?
தர்ஷ் : (எட்டிப்பாக்குற
இத்துனூண்டு மூக்கையும் பேத்துரலாமா?) எனக்கு கால் வலி அதான் விட்டுட்டேன் //
சமையக்கட்டுல....
ஷெரின் : ஏன்
விட்டுக்குடுத்த? கேப்ட்டனோட டாவுன்னு சொல்லிக்கிற சந்தோசத்த நான் அனுபவிக்கக் கூடாதா?
சொல்லு
தர்ஷ் : எனக்கு
கால் வலி அதான் விட்டுட்டேன் //
லான்ல.....
முகின் : ஏண்டா
விட்டுக்குடுத்த ? நீ கேப்ட்டன்னா நான் வைஸ் கேப்ட்டனா இருந்திருப்பேன். ஏன் விட்டுக்குடுத்த
? பாசமா?
தர்ஷ் : எனக்கு
கால் வலி அதான் விட்டுட்டேன் //
ஜெயில் வாசல்ல....
தர்ஷ் : நான்
ஏன் விட்டுக்குடுத்தேன் ?
சாண்டி : அதான்
உனக்கு கால் வலியாச்சே
தர்ஷ் : அப்பாடி
ட்யூன் ஆகிட்டானுங்க //
சாவிக்கொத்த
வங்கிட்டு லாஸ் கேப்ட்டனாச்சு. “டீமெல்லாம் இல்ல எல்லா வேலையையும் எல்லாரும் செய்யுங்க.
கக்கூஸ் கழுவுறத மட்டும் தினம் ஒரு ஆளு உதவிக்கு ஒரு ஆள வச்சு செஞ்சுக்கோங்க”ன்னு சொல்லிடுச்சு.
(ஆனா அது நானும் கவினுமாத்தான் இருப்போம்னு மனசுக்குள்ள சொல்லிக்கிச்சு)
சீக்ரெட் ரூமில்
சேரன் சார் புத்தர் போல புன்னகைத்துக் கொண்டிருந்தார். அங்கே அமைதி இருந்தது......
நாமினேஷன்....
லாஸ் &
முகினத் தவிர எல்லாரும் லிஸ்டுக்கு வந்துட்டானுங்க.
விட்டுக்குடுத்தாலும்,
கண்ணீர் விட்டு கதறி அழுதாலும் மக்களுக்கு பிடிக்கும். சோ வெளிய அனுப்ப மாட்டானுங்கன்னு
வனியன் கரெக்டா தப்பா புரிஞ்சுக்கிட்டு இந்த ரெண்டு விஷயத்தையும் பண்ணிட்டு இருக்கு.
ஆனா அத யாரு பண்ணா பிடிக்கும்னு இந்த ஹம்ப்ட்டி டம்ப்ட்டிக்கு தெரியல.
ஃபன் டாஸ்க்கு
ஓன்னு...! இவனுங்களுக்கு இது ஒன்னுதான் கேடு !
ரவுண்டா உக்காந்து
பந்த மாத்திக்கிட்டே இருந்தா பாட்டு நின்னதும் பவுல்ல இருக்குற சீட்டுல இருக்குறத அப்பிடியே
செய்யனுமாம்.
கிரில்டு சிக்கன
திங்கனும், முட்டைய தலையில உடைக்கனும், ஐஸ் தண்ணிய மேல ஊத்திக்கனும், உப்பு காப்பிய
குடிக்கனும், ஐஸ் க்ரீம சாப்பிடனும், மூஞ்சிக்கு பெயிண்ட் அடிச்சுக்கனும். ஆளுக்கு
ஒண்ணா செஞ்சானுங்க.
லிவிங் ரூம்ல....
கவின் : லாஸு
ரெண்டுல மூணு போகுமா?
லாஸ் : போகாது...
கவின் : போகும்....லாஸு
மனசுக்குள்ள கவின் போவான்...
லாஸ் : மேல
சொல்லு...
கவின் : மூணுல
நாளு போகுமா?
லாஸ் : (பேருல
உள்ள எழுத்தையெல்லாம் எண்ணிப்பாத்துட்டு) போகாது
கவின் : போகும்...கவினுக்குள்ள
LOVE போகும்....
லாஸ் : எங்கப்பன்
வெளிய போன தைரியத்துல இப்பிடி பேசிட்டு இருக்க...
கவின் : உன்
காதல வாயத்தொறந்து சொல்லக்கூடாதா?
லாஸ் : என்னடா
வாய்ப்பாடு சொல்லுன்ற மாதிரி சொல்ற ? ஏற்கனவே நம்ம கதை நாறிட்டு இருக்கு...கொஞ்சம்
பொறு நம்ம மொகறைக்கெல்லாம் ஃபைனல் வரை போக வாய்ப்பே இல்ல....ஒரு வாரமோ ரெண்டு வாரமோ...!
வெளிய போயி வெவகாரத்த வச்சுக்கலாம்.
சீக்ரெட் ரூமில்
சேரன் சார் பின்னால் பற்ற வைத்த ராக்கெட் போல் புகைந்து கொண்டிருந்தார் அங்கே அமைதி
இல்லை......
“இந்த பிராடுகாரப்பயல
பாத்துகோங்க மக்களே....! கரெக்டா பிடிச்சுட்டேன். எவிக்ஷனுக்கு போகாம இருக்க ப்ளே பண்றான்”னு
புதுசா கண்டுபிடிச்ச மாதிரி பொலம்புனார். பாவம் சேரன் சார்.
“மீதி இருக்குற
சோத்துல தண்ணி ஊத்தி வச்சுருங்க. நைட்டு சாப்பாட அனுப்பி வைக்குறேன்”னு பிக்பாஸ் சொன்னதும்
பண்டாரங்க மாதிரி ஆராவரமா ஆடுனானுங்க. ரெண்டு கிரில் சிக்கன் வந்துச்சு. தின்னுட்டு
தூங்கிட்டானுங்க.....
சீக்ரெட் ரூமில்
சேரன் சார் நைட்டு நேரத்துல என்னவெல்லாம் பார்க்க நேரிடுமோ என்று கண்களை மூடிக்கொண்டு
அமர்ந்திருந்தார். அங்கே அல்லு இல்லை.
தலைவா கலக்குரிக
ReplyDelete